
1
யசோதரையை
சித்தார்த்தன் புணர்ந்தான்
புத்தனை
புணர்கிறது தனிமை
சம்போ மஹாதேவா....
தவமெனப்படுவது
காமத்தின் ஓய்வு
ஓய்வெனப்படுவது
புணர்ந்ததின் களைப்பு.
2
புணர மறுத்து
இமை மயிர்கள் தரை புரள
தவஞ்செய்த
புத்தனின் கைகளில் வந்து வீழ்ந்தது
முற்றிப்பழுத்த யோனிப்பழம்.
3
குறிமடக்கி
அமரும் புத்தனின் விழிகளில் படர்கிறது
யோனியின் ரேகை.
4
எருமையைப் புணரும்
காமத்தின் முகத்தில்
எமனின் விழிகள்.
5
சங்கை அறுக்கும்
காமத்தின் விரல்களில்
தசைகளைத் தானமிட்டேன்
தானத்தை மறுத்த காமம்
பிடுங்கியது தன்னை
என்னிடமிருந்து.

6
நிதானத்தின் விழிகளில் படரும்
காமத்தை
நிதானமாய்ப் பார்க்கும்
நிதானத்தின் குறியில்
நிதானமின்றி வழியும் காமம்
நிதானத்தின்
காதில் கூவியது
நிதானம்
நிதானம்...
7
இரவுக்குள் திமிறும் குறியை
பகலில் கொலை செய்கிறேன்
இரவில் ஆகிறது
உடலே குறியாய்.
8
தவமெனப்படுவது
யோனியின் வெறுமை
அவ்வெறுமையைப் புணரும்
சூன்யக்குறி.
9
இமைக்குள் ஊறும்
நீர்ன் கரங்கள் இசைக்கிறது சோகத்தை
படகோட்டி நதியை கரையேற்றுகிறான்
பெண்ணுடல் சாந்தமுறுகிறது
ஒரு முனிவன் காடேகுகிறான்.
தனிமை வலிய புண்களுடன் குகைக்குத் திரும்புகிறது
நக்கியுண்கிறது வலியின் ருசியை
விழிகளின் நாவால்.
10
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர் வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை
தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்துவீழ்கிறது
அண்டத்தின் இடியொலி
கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்
சம்போ மஹாதேவா...
சம்போகம்.

11
குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கையில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு.
12
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்ல கால்வைக்கிறது
வரைபடத்தின் தலை வரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்.
13
கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்.
14
தனிமையை
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்.
15
கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்.

16
கட்டளையை
யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்...
எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது.
17
தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு
சலித்த காமத்தில்
இறப்பின் ருசி.
18
தின்னத்தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெறிகிறது
எரிப்பின் மிச்சத்தில்
இறுதியாய் வீசப்படும்
என்
முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை நீர்க்கரத்தால் வாரிச் சுருட்டும்
விதி வலியது கண்ணே.
19
அம்மா...
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி
பசி மிகுந்த வெறியோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி
அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசிமிகுந்த குருதிச்சூட்டொடு
முன்னொரு காலத்தில்
கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்
அம்மா......
20
கண்ணீராய்
வழியும் காமத்தை
மிருகமாய்
நக்கிக்குடிக்கிறேன்
குருதிவாசம் சதையெங்கும் பரவுகிறது
சகி
உன் மௌனத்தின் தனத்திலிருந்து
ஓர்நாள்
என் கவிதையை உறிஞ்சி எடுப்பேன்.

21
இப்
பூமியைக் கவ்விப்பிடிக்கும்
என் குருதியில் தெறிக்கிறது
உன் குருதி வாசம்
கண்ணிமைக்கும் சூரியனின்
உடலெங்கும் பற்கடிகள்
நிகழ்கிறது
ஒரு
தற்கொலை.
22உனதொரு
நிதம்ப மலரில்
எனதிரு வண்டின் கண்கள்.
3 comments:
blog-il padika kavithaikal veroru unnatha thalaththil virikirathu.
புத்தனை புணரும் எழுத்து .., புதியதோர் பெளத்தத்தை நோக்கி.வாழ்த்துக்கள் வசு.
கண்ணீராய் வழியும் காமத்தை மிருகமாய் நக்கி குடிக்கிறேன் குருதிவாசம் சதையெங்கும் பரவுகிறது.
அருமை,,,,,
Post a Comment