Thursday, August 11, 2011

ரூபாயியத்- ஒமர்கய்யாம்





மது அருந்துகிறேன் நிறைய, மண்ணுக்கடியில் நான் போன பிறகு
மண்ணிலிருந்து வெளிப்படும் அதன் மணம்;
ஒரு குடிகாரன் எனது மண்ணின் மேல் நடந்தால்,
எனது உடலிலிருந்து வரும் வாசனையே அவனுக்குத் தலைக்கேறும்படி  போதையூட்டும்.

- 79

எவ்வளவு காலம் கைதிகளாக இருக்கப்போகிறோம் சலிப்புதட்டும் அறிவிடம்?
நாம் இங்கு நூற்றாண்டுகள் இருந்தாலென்ன, ஒரு நாள் மட்டும் இருந்தாலென்ன?
கிண்ணத்தில் மதுவை ஊற்று, நாமெல்லாம்
குயவனின் கடையில் மதுக்கிண்ணங்களாய் உருமாறுமுன்.

- 197

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒருவருக்குக் கிடைப்பதெல்லாம் ரொட்டி ஒன்றும்
உடைந்த குடத்திலிருந்து ஒரு சொட்டு குளிர்ந்த நீரும் என்றால்,
உன்னைவிடக் கீழே இருப்பவர்களுக்கு நீ ஏன் ஏவல்புரிய வேண்டும்?
உன்னை ஒத்தவர்களுக்கு நீ ஏவல்புரிய வேண்டிய கட்டாயம் என்ன?

- 185




ஆங்கிலம் வழி தமிழில் 
தங்க.ஜெயராமன்
ஆசை

க்ரியா பதிப்பகம். 


0 comments:

Post a Comment