Tuesday, October 25, 2011

ததாகன்




கேள் ததாகா...

முற்றும் 
வெளியில் 
அவிழ்த்து வீசப்பட்டவன் நீ

பற்றியெறியும் யோனிச்சுடரொளியில் 
நீ காண்பதென்ன...
பிறப்பு
துக்கம்
முடிவற்ற சாவு

சொல் ததாகா...
ஏக்கத்தின் பெருந்தீ 
மின்னும் தன் வாயால் உண்பது எது

கேள் ததாகா...
முத்தங்களை இறைத்து பெற்றதும்
உதடுகளையிறுக மூடி அடைந்ததும் எது

அப்படித்தான் ததாகா
மௌனத்தை புசித்தாய்

வெந்து தணியும் காமத்தின் ஆகிருதியைக் கண்டதுண்டா நீ

சொல் ததாகா...
காமத்தின் நீள அகலத்தை
அதன்
கடைசி மௌனத்தை
இறுதியான முனகலை
எம்மொழியில்
பெயர்ப்பாய்
செவிகள் பூத்து விடைத்துக் காத்திருக்கிறேன் ததாகா

ஆனால்....
சித்தார்த்தனே
அளவுகுறைந்த பதிலென இதை நானுனக்குச் சொல்கிறேன்

அடைவதற்கு உனக்கு ஞானமிருந்ததது 
தாதாகனே
யசோரைக்கோ
இழப்பதற்கு மௌனமும்
இல்லை

சித்தார்த்தனுக்கும்
புத்தனுக்கும்
இடையில்
சதையுதறி அமர்ந்த நின் திருக்கோலத்தில்
ஆசனத்தின் மத்தியில்
துவளுமுன் குறியை அழைக்க பெயரில்லை
பொருளில்லை


நிச்சலனம்
மாக்கடல்
சாவமைதி.


5 comments:

  1. 'அடைவதற்கு உனக்கு ஞானமிருந்ததது
    தாதாகனே
    யசோரைக்கோ
    இழப்பதற்கு மௌனமும்
    இல்லை'

    -சிந்தனையைக் கிளறும் வரிகள். நன்றி!

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. பயங்கரமான புத்த பக்தன் போல இருக்கிறது. it is long back i have visited ur blog
    happy deepavali !!

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete