Monday, January 16, 2012

மனுஷ்யபுத்திரன் வாசகர்கள் இருவரை முன் வைத்து.....அன்புடன்......
ரவிச்சந்திரன் ரமணிக்கும், காயத்ரி கார்த்திக் அவர்களுக்கும்....

மிகுந்த மனமகிழ்வுடன் எழுதும் கடிதம் இது. மனுஷ்யபுத்திரனுக்கு நீங்கள் வாசகர்களாக இருப்பதில் நான் மகிழ்கிறேன்,


ரவிச்சந்திரன் ரமணிக்கு....

மனுஷ்யபுத்திரன் மேல் நீங்கள் காட்டும் பாசம் என்னை நெகிழவைக்கிறது. ஆச்சாரியார் கூறிவிட்டால் மறுப்பேது என்ற உங்களது அனுபவம் வியக்கத்தக்கது.

அய்யா ஒரு சண்டையில் கண்ணுக்குத் தெரிந்ததைத்தான் கடிக்க முடியும் என்ற உங்கள் பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நடந்தது என்னவென்று தங்களுக்கு ஒரு சதம் கூடத் தெரியாது என்பதை நான் உறுதியாகவே கூறுகிறேன். ஏனெனில் மனுஷ்யபுத்திரனுக்கே அது தெரியாது. அதோடு தாங்கள் சண்டடையிடும்பொழுது கண்ணுக்குத் தெரியாத எந்த அந்தரங்கத்தை குறிவைத்து கடிப்பீர்கள். அல்லது எப்படி எங்கு கடிக்க வேண்டும் என்று விளக்கினால் எனக்கு உபயோகமாக இருக்கும். அது எனக்கும் மட்டுமல்ல தங்களது குழந்தைகளுக்கும், தங்களது உற்ற உறவுகளுக்கும் ஆகப்பெரிய உதவியாக இருக்கும். எனெனில் இந்தக் காலத்தில் கடிக்கக் கொடுப்பவர் வெறுமனே விரலை நீட்டிக் கடிக்கக் காண்பிப்பதில்லை.

உங்களது நக்கலில் ஒளிந்திருக்கும் கண்ணுக்கு முன் காட்டமுடியாத உறுப்புகள் எனக்கு மட்டுமல்ல தாங்களுக்கும், தங்களைச் சார்ந்தோருக்கும், இன்னும் மனுஷ்யபுத்திரனுக்கும், இன்னும் அவரை வாசிக்கும் அனைவருக்கும் இருக்கிறது. உடை உடுத்தி அதை மறைத்தாலும் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவார்கள். இந்த சம்பவத்தோடு மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை நீங்கள் வாசிக்கும் மனநிலையை நான் இப்பொழுது வியக்கிறேன்.


காயத்ரி கார்த்திக் அவர்களுக்கு...


என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்னை மனநோயாளி என்று அழைத்ததன் மூலம், உங்களை நீங்கள் சுய நினைவோடு உள்ள ஆத்மா என்று அறிவித்திருக்கிறீர்கள். மனநோயாளியாக ஒருவர் இல்லை எனும் பட்சத்தில் உங்களது சுயநினைவை எதில் பிரதியெடுப்பீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை ஆழ்ந்த சுயநினைவோடு வாசிக்கும் தாங்கள், ஒரு தனிமனிதனை ஒருவர் குற்றம் சாட்டியதும் எந்த விபரமும் தெரியாமல் மனநோயாளிக்கு கவிதை எப்படி புரியும் என்ற கேள்விக்குறிகளோடு இணைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதற்கு மனுஷ்ய புத்திரன் அமைதியோடு இருக்கிறார். அம்மா...மனநோயாளிகள் குறித்து மனுஷ்யபுத்திரனுக்கு நிறையத் தெரிந்திருக்கும் அதை அவரிடம் கேளுங்கள். எனெனில் அவர் எழுதிய முக்காலே மூணுவீசம் கவிதைகள் அந்த நிலையில்தால் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டு :

" நான் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் தீவிரமான உணர்ச்சிகளின் வேட்டை நாயாகச் செலுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். வேட்டையாடும் போது வேட்டை நாய்க்கு கருணை காட்டக் கூடாது.........

.......சொற்களின் வழியே நிகழ்த்திய இந்த ஓட்டம் மட்டுமே பைத்திய நிலையிலிருந்தும் தன்னைத்தானே அழித்துக்கொள்வதற்கான தீவிர விருப்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றியது

தொடர்ந்து வாசிக்க......... அதீதத்தின் ருசி..பக்கம் 7

தோழி..... மேற்சொன்ன இவ்வார்த்தைகளை தட்டையாக பெயர்த்தால் மனுஷ்ய புத்திரன் ஒரு வேட்டை நாய். தற்கொலை செய்வதிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள கவிதைகள் எழுதி வருகிறார். உண்மையைச் சொன்னால், இதே காரணத்தை மேற்குலக கவிகள் வெவ்வேறு வார்த்தைகளில் எடுத்து வைத்துள்ளனர். ஆனால் எனக்குத் தெரிந்து சங்க இலக்கிய கவிகள் தற்கொலையிலிருந்து தப்பித்துக்கொள்ள எழுதியவை என்றும் எங்கும் சொல்லவில்லை. அவர்களுக்கு வாழ்தல் என்பது வேறு.


ஒரு மனநோயாளி என்பவன் தன்னளவில் காயம் பட்டவன் அல்ல, உங்களைப் போல், இன்னும் என்னைப்போல் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் அவன் மூளையில் திணித்த எண்ணற்ற கருத்துக்களின் விளைச்சல்தான் அது. ஒரு மனநோயாளியை சமூகத்திலிருந்து பிரிப்பது ஆபத்தானது. இன்னும் சொல்லப் போனால் பைத்தியக்காரர்கள் என்ற பதத்தைக் கண்டித்து மனநோயாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதில் உளவியல் சார் பத்திரிக்கைகளுக்கு இணையாக சிறு பத்திரிக்கைகளுக்குண்டு.

மேலும், நாமே ஒருவனைக் குற்றவாளியாக்கிவிட்டு நீதிபதிகளின் சிம்மாசனத்தில் எளிதாக அமர்வது இன்னும் ஆபத்தானது. உங்களைப் போன்றவர்கள் மனுய புத்திரனை வாசிப்பது என்பது, ஒரு ஊனமனாவர் கவிதை எழுதுகிறார்..... தன்னம்பிக்கை ஊட்டி அவருக்கு ஆதரவுகாட்டுவோம் என்ற மனநிலையை மட்டுமே, முன் வைத்துவாசிக்கக் கூடியதோ என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வார்த்தைகளின் உளவியல் இதையே எனக்குக் காட்டுகிறது. இந்த மனநோயாளியின் கவிதை வாசிப்பு வேறு தளத்தில் என்பதையும் விளக்க ஆசைப்படுகிறேன். மேற்கொண்டு அறிய, ஜெயமோகனின் கவிதை விமர்சனம் நிகழ்வில் நடந்தைவைகளை நீங்கள் மனுஷ்யபுத்திரனிடமே கேட்டுக்கொள்ளலாம்.

நானும் ஒரு குறைந்த அளவில் கவிதை எழுதுகிறவன்தான். ஆனால் தற்கொலையைச் சாந்தப்படுத்திக்கொள்ள அல்ல. நீங்கள் மனுஷ்ய புத்திரனிடம் இன்னும் தெளிவாகக் கேட்கலாம். அவரது தேர்வில் வெளிவந்த கவிதைப் புத்தகங்களில் இருக்கும், அனைத்து கவிதைகளும் தற்கொலையைச் சாந்தப்படுத்தத்தானாவென்று. மேலும் கவிஞரிடம் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு முகப்புத்தகம் உதவியிருக்கிறது. முன்பு அப்படியில்லை. எல்லாமே கடிதங்களால் நிரம்பப்பெற்றிருக்கும். மேலும் கடிதம் எழுதுவது போல் மிகுந்த நுண்ணிப்பான மன கவனத்தை தட்டச்சு செய்கையில் உணரமுடியாது. வாசகர்கள் என்கிற சொற்றொடர்களோடு, கவிஞன் இன்னும் சேர்த்து வாசிக்க நிறைய இருக்கிறது என்றுணர்த்திய உங்கள் இருவருக்கும் என் அன்பு.1 comment:

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...