Monday, March 12, 2012

நீதித்துறையிலும் முகமூடிகள்!- வழக்கறிஞர். பொ.இரத்தினம்.
"  நான் தலித் என்பதால் மற்ற சாதி நீதிபதிகள் என்னை 2009லிருந்தே அவமானப்படுத்தி வருகிறார்கள். மற்ற தலித் நீதிபதிகளையும் அவமானப்படுத்துகிறார்கள். எனக்குத் தன்மானம் இருப்பதால் நான் புகார் செய்துள்ளேன். விசாரணையின்போது மட்டுமே என்னை அவமானப்படுத்திய நீதிபதிகளின் பெயரைச் சொல்லுவேன்."

- உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சி.எஸ்.கர்ணன்.

" தலித் மக்களுக்கு துரோகத்தை மட்டும் செய்யத்தெரிந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி என்பதை அவரது வார்த்தைகளே அம்பலப்படுத்துகின்றன. இவரைப் போன்ற படித்த தலித்துகளில் ஒரு பகுதியினர் விடுதலைக்காகப் போராடும் தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறார்கள். ஆதிக்க சாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கிச் சுகம் காணுகிறார்கள்."

- வழக்கறிஞர். பொ.இரத்தினம்.தன் மகன் யஸ்வந்த்ராவுக்கு டாக்டர் அம்பேத்கர் எழுதிய கடிதத்திலிருந்து....


........உனது செயல் முற்றிலும் கண்ணியமற்றதாக உள்ளது. பல நூறு ரூபாய்கள் நீ கையாடல் செய்துள்ளாய்; பல்வேறு வாய்ப்புகள் உனக்கு வழங்கப்பட்ட போதும் நீ உன்னை சரி செய்துகொள்ளவில்லை. .....நான் தற்போது கூறியுள்ள கடைசியும் இறுதியுமான அறிவுரையின்படி நீ செயல்பட்டுள்ளதாக எனக்கு செய்தி வரவில்லையெனில், உன்னை அச்சகத்திலிருந்து வெளியேற்றவும், இந்த எச்சரிக்கையை மீறியதற்காக உன் மீது வழக்குத் தொடரவும் நான் தயங்கமாட்டேன்.


-இப்படிக்கு
பி.ஆர் அம்பேத்கர்.
23 பிப்ரவரி 1956

உயர் நீதி மன்ற நீதிபதி திரு.சி.எஸ் கர்ணன் அவர்களின் சேவைகள்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சென்னகரம்பட்டி என்ற கிராமம் மேலவளவு கிராமத்திற்கு அருகில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 5.7. 1992 அன்று இரவு சுமார் 10.30 மணி அளவில், பேருந்தை வழிமறித்து அதில் பயணம் செய்த சென்னகரம்பட்டி தலித் மக்களை பேருந்திலிருந்து வெளியில் இழுத்துப் போட்டனர் ஆதிக்கசாதியினர். அம்மாசி மற்றும் வேலு என்ற தலித்களை ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.

( சென்னகரம்பட்டி கொலைவழக்கு பற்றி மேலும் அறிய....
சென்னகரம்பட்டி கொலை வழக்கு.
வழக்கறிஞர் பொ.ரத்தினம்
விடியல் பதிப்பகம். )


4.8.2008 அன்று கரூர் சிறப்பு நீதிமன்றனம் குற்றம் சாட்டப்பட்ட 28 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. தண்டிக்கப்பட்ட 26 பேரும் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தனர் . இந்த மேல் முறையீட்டில், இரு சாட்சிகள் பாதிக்கப்பட்டோர் தரப்பாக சேத்து விசாரிக்க வேண்டி மனு செய்தனர். இரு நீதிபதிகள் அமர்வில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் திரு. பி.முருகேசன் மற்றும் திரு.சி.எஸ்.கர்ணன் மனுவை விசாரித்தனர். பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கறிஞ்அர் பொ.ரத்தினம் வாதிட்டார். மேல் முறையீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞ்அர் கே.ஜெகநாதன் வாதிட்டார். 17 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்ட மேலவளவு வழக்கில், மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் சாட்சிகள் சார்பில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள்அ வேண்டி போட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த உத்தரவு நகலும், சென்னகரம்பட்டி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தியத் தலைமை நீதிமன்றம் J.K. Iinternational( 2001) 3.S.C.C.462 என்ற வழக்கில், குற்ற வழக்கில் விசாரணையின்போது தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட்ஓர் மனுச் செய்தால், தவறாமல் அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்த மனுதாரரை இரு தரப்பாக நிலுவையில் உள்ள வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும், அவருக்கு தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்புத் தரவேண்டும்" என பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதன் அடிப்படையில்தான், வழக்கில் சாட்சிகளாக இருந்த இருவர், மனுச் செய்தனர். நீதிபது பி.முருகேசன் மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் கூடுதலாக இவரிடம் அமைந்திருந்ததது. இவர் மூத்த நீதிபதியாவார். சி.எஸ். கர்ணன் இளைய நீதிபதியாவார். வழக்கறிஞர்களது வாதம் நடந்து கொண்டிருக்கும் போது, மூத்த நீதிபதி திரு. முருகேசனிடம் மனுவைத் தள்ளுபடி செய்வோம் என நீதிபதி கர்ணன் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். மேல் முறையீட்டாளர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தலைமை நீதிமன்ற தீர்ப்பில், பாதிக்கப்பட்ட்ஓர் அரசி வழக்கறிஞர்களுக்கு துணையாக மட்டுமே செயல்படலாம் என தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என திரித்து வாதிட்டார். இதனை ஆதரித்தே அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதிட்டார்.


அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ளவே நீதிபதி கர்ணன் மூத்த நீதிபதியிடம் தொடர்ந்து வற்புறுத்தினார். தொடர் வற்புறுத்தலால் நொந்து போன மூத்த நீதிபதி திரு.பி.முருகேசன் தலைமை நீதிமன்ற தீர்ப்புக்கு முகமூடி போட்டு, பாதிக்கப்பட்டோர்  சார்பிலான மனுதாரர்கள் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இந்த மேல் முறையீட்டில் செயல்படத்தான் தலைமை நீதிமன்ற தீர்ப்பு சொல்லியுள்ளது; மனுதாரர் மேல் முறையீட்டில தன்னை ஒரு தரப்பக சேர்க்கக் கோருவதற்கு தலைமை நீதிமன்ற தீர்ப்பு வகை செய்யவில்லை என தலைகீழாக மாற்றி தீர்ப்பைக் கொடுத்தனர். இப்படி நீதிபதி கர்ணன் அவ்வப்போது தலித் மக்கள் முதுகில் குத்தும் ஆதிக்கச் செயலை தயக்கமற்று செய்துள்ளார்.

இந்த மேல் முறையீட்டை, இறுதியாக நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் நீதிபதி திரு. துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். 7.7.2010 ல் தீர்ப்புச் சொன்ன மூத்த நீதிபதி சொக்கலிங்கம், அதிர்ச்சி தரும்படியாக 22 பேரை விடுதலை செய்து சரித்திரம் படைத்துள்ளார். இவர் மீது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் செல்லாக் காசாகிவிட்டது. சென்னகரம்பட்டி தலித் மக்கள் இந்தியத் தலைமை நீதிபதிக்கும் இந்த அதிர்ச்சி தரும் தீர்ப்புக்கு முன்பே, தங்கள் வழக்கில் நீதிபதிகள் சிலர் ஆதிக்கப் போக்கில் நீதிக்கு தீங்கு செய்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி முறையிட்டனர். அதுவும் கிணற்றில் போட்ட கல்லாகிப் போனது.

இப்படித் தன்மானமற்ற போக்கை அவ்வப்போது சில நீதிபதிகள் திறமையாக வளர்த்த வரலாறு, பரபரப்பான துப்பறியும் நாவலைப் போல பதிவாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வீராசாமி , கண்ணதாசன், பி.டி.தினகரன், தற்போது சி.எஸ்.கர்ணன் என நீதித் துறையின் முகமூடிகள் கிழிந்து கொண்டே வருகின்றன.


நீதித்துறையிலும் முகமூடிகள்!

தொகுத்து வெளியிடுபவர்
வழக்கறிஞர் பொ.இரத்தினம்.
9443458118
சமூக நீதி வழக்கறிஞர்கள் நடுவம்.
எண் ; 540, ..நகர், மதுரை- 625020

No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...