Tuesday, May 22, 2012

கவிஞன்.....................





1

ஊளமூக்கன்சிந்திப்போட்டசளிபோலக் கிடக்கும்
வெண்பொங்கல்
நோய்வந்த பூனையின்கிளுகிளுகித்த பீபோல இருக்கும்
சக்கரைப்பொங்கல்
சௌரியமாயிருந்து வழித்துநக்கி
தீட்டுக்காக்கும் நீ
சூண்டிப்பேசாதே
ஆட்டம்வந்தால் அறுத்துத்தள்ளுவேன்
ரணத்தில்முளைத்தவள் ரணதேவதை
அவளுக்குவேண்டியது குருதிபூசை
பூசணிக்காயை வெட்டி தோலைசெதுக்கியெடுத்து
சின்னச்சின்னத் துண்டுகளாக்கி சோப்புத்தண்ணியில் முக்கி
உனதுகுண்டிக்குள் சொருவிக்கொள்
மலமாவது ஒழுங்காப்போகும்.





அவள் எனக்குப் பசி தீர்த்தவள்
நீ காமம் தீர்த்தவள்

எருமைபோல வளர்ந்த நான்
அவளுக்கு குழந்தை

எனக்கு என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்

பற்றியெரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு
மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒரு வார்த்தை சொல்

சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்.

காட்டாளன்.
                                                ஒடக்கு
கவிதைத் தொகுதிகள்

என்.டி.ராஜ்குமார்.

2 comments:

  1. மொழிபெயர்ப்பிலும் சாதித்திருக்கிறார்.அய்யப்பன் மற்றும் பவித்ரன் தீக்குன்னி கவிதைத் தொகுப்புகளை அற்புதமாகத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்!

    ReplyDelete
  2. நிச்சயம் தோழரே....அதையும் படித்திருக்கிறேன். புது எழுத்து வெளியீடுகளில் அதை மறக்க முடியுமா...புது எழுத்து வெளியீடுகளில் அது ஒரு பதக்கமல்லவா...

    ReplyDelete