Friday, August 3, 2012

மிகுந்த அச்சத்துடன்....ஜெயமோகனுக்கு....
நித்ய சைதன்ய யதியின்  தாடி மயிற்கற்றைகளும்,  இன்ன பிற இடத்தில் முளைத்த மயிர்களும், கேரளக்  காலைப் பெருவெளியில் மின்னிய விதத்தை எழுதிய நீங்கள் இப்பொழுது சிவாவின் மரணக் குறித்து உங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறீர்கள். ஏற்கனவே சுந்தரராமாசிக்கு நூறுபக்கங்களுக்கு மேலாக உத்தரகிரியை பத்திரிக்கை எழுத முடித்த உங்களுக்கு சில பாராக்கள் எழுதுவது சாதாரணம்தான்.

சிவாவை நீங்கள் எதிர்ப்பாளாராக இருந்தாலும் மதிப்பேன் என்பதை ஒரு வித அரிப்புடன் சொல்லியிருக்கிறீர்கள். முதலில் நான் எழுதிய கடித்தத்தில் உங்களது பெற்றோரின் தற்கொலையில் எந்த இடத்தில் உங்கள் ஞானம் கொப்பளிக்கத் தொடங்கியது என எழுதியதற்கு எனக்கு மனநிலை தவறிப்போயிருப்பதாக சூசகமாக குறிப்பிடீர்கள். உங்களது தரப்பு உங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பதை விளக்க அக்கடிதம் நிரம்ப உதவி செய்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக  சிவா பற்றிய குறிப்பில் அவர் வசதியானவர் வசதியானவர் எனக் கூவிச் சொல்வதும் கடைசி வரை அண்ணன்கள் துணையிருந்தனர் என்ற வாக்கியத்திலும் வாசகருக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன என எனக்குப் புரிகிறது.

இங்குதான் எனக்கு சந்தேகம் வருகிறது. உங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் உயிர்மை புத்தகங்களில் நீங்கள் மூன்று நான்கு வருடம் தெருத்தெருவாய் ஞானப்பால் குடிக்க அலைந்தவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அது தமிழினியில் வருவதில்லை. தாங்கள்  ஞானப்பால் தேடியலைந்த கதை தமிழினி வசந்தகுமாருக்குத் தெரியாதா....

நல்லது அந்தக் கடிதத்தை சிவா எழுதவில்லை என்ற குறிப்பு கிடைத்ததும் கொந்தளிக்கும் உங்கள் புன்னகை பதில் கிடைக்கும் பட்சத்தில் எங்கு போய் தனது மூச்சை விடும் என நானறிவேன். ஆம் நண்பரே அது நினைவுப் பிழை, அதோடு எழுத்துப் பிழையும் கூட.. இதை இப்படி உங்கள் பாணியில் மிக எளிதாகத் தாண்டிச் செல்லலாமே.

சிவா உயிரோடு இருந்தபோது இவ்விளக்கங்கள் குறித்து இந்நபர்கள் சொல்லியிருக்கலாம், சிவா மறுத்திருந்தால் அதை அப்பொழுதே பதிவுசெய்திருக்கலாம்.  பிணந்தின்னிக் கழுகுகள் குறித்து அஸ்லர் எழுதிய புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். அவை காத்திருக்கும் சாகும் மனிதனின் இறுதி அசைவிற்காக. மிகப் பொறுமையுடன் காத்திருக்கும். எதிரே கிடக்கும் மனித உடலோ வேறு எந்த உடலோ அவைகளுக்குப் பிணம் தேவை.  நிதானமாய் சிறகுகளை உட்பொதிந்து இந்திய ஞானிகளைப் போல பார்வையை நாசி நுனியில் திணித்து அமர்ந்திருக்கும். உடலில் இறுதி அசைவுக்காக காத்திருக்கும். அசைவு அறுந்து தொங்கியதும் சிறகை தன் உடலை வானம் பார்க்க முடியாத அளவுக்கு விரித்துக் கொத்தியுண்ண ஆரம்பிக்கும். மிக எளிய நடையில் அக்கழுகுகள் பற்றி எழுதியுள்ளார். உங்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் படித்துப் பார்க்கலாம்.

இதற்கா இவ்வளவு கொந்தளிப்பு. இன்னும் சொல்லப் போனால் சென்னை புக்ஸ் போட்ட புத்தகத்தையே இன்னும் விடியல் சிவா போட்டார் என்றும் கூறுகிறீர்கள். அதற்கு சிவா பதிலும் எழுதினார் என்று கூறுகிறீர்கள்,  அப்படி அவர் எழுதிய கடிதத்தை இணைத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் படிப்பேன்.அப்படியானால் சிவா சென்னை புக்ஸில் வேலை செய்தாரா என்ன? நினைவுப் பிழை.

இடைச்செறுகல்;

 “ எனக்கு சட்டோபாத்தியாயா பற்றி முழுமையான ஒரு புத்தகம் படிக்கணும்னு ஆசை இருந்தது. இந்த சமயத்துலதான் ‘ what is dead,what is living in Indian philoshophy’  அப்டின்னு ஒரு தெளீவான புத்தகம் சட்டோபாத்யாயா எழுதியிருப்பதாக கரிச்சான் குஞ்சு சொன்னார். உடனே நான் கரிச்சான் குஞ்சுகிட்ட ஆர்வமா கேட்டேன், அதை மொழிபெயர்த்து தருவீங்களான்னு. உடனே செய்து தரேன் ,ஆனா எனக்கு கண் சரியா தெரியலை எனக்கு ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னார். 1000 ரூபாய் செலவு பண்ணி ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தேன்.

குணமடைந்த மூன்று மாதத்தில் எனக்கு மொழிபெயர்த்துத் தந்தார்.  வாங்கிப் படித்தபோது அந்த எழுத்துக்களை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் மார்க்ஸ் பொதியவெற்பனெல்லாம் சேர்ந்து பேசி அதை அச்சாக்க முடிவு செய்தோம்.  ஆனால் அதற்கான தொகை இல்லாததால் அச்சாக்க இயலவில்லை.

பிறகு சென்னை புக்ஸ் இதை வெளியிட்டார்கள். அதில் கரிச்சான் குஞ்சு இது மொழியாக்கப்பட்ட சூழலை விவரித்து எழுதியிருந்ததாக கேள்விப்பட்டு வாங்கிப் பார்த்தபோது அப்படியான எந்தத் தகவலும் அதில் இல்லை. உண்மையில் எங்களுக்காக எங்கள் சொந்தத்துக்காக அவர் மொழிபெயர்த்துக் கொடுத்த புத்தகம் அது.”

 பொ. வேல்சாமி - ( அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள் )

அதற்கும் மேலாக இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற புத்தகத்தை நீங்கள் படிக்கவேயில்லை என்பது நீங்கள் அவரிடம் கேட்ட கேள்வியிலேயே தெரிகிறது.  (நினைவுப்பிழைகள் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் சற்று உந்தித்தள்ளும்)மேலும் ட்ராட்ஸ்கி நூலை ஏதோ சிவாவாகவே தூக்கிக்கொடுத்ததாக விதந்தோதியிருக்கிறீர்கள், அந்நூலை நீங்களாக எடுத்தீர்களா இல்லை சிவா கொடுத்தாரா என்று அன்று  உங்களுடன் வந்த கைப்பிள்ளைகளுடன் கேட்டுப் பாருங்கள். அச்சம்பவம் குறித்து சிவா என்னிடம் சொன்னதை நான் இங்கு தெரிவித்தால் உங்கள் உடம்பில் புன்னகை செய்யும் உறுப்பு மிகவும் சிறுத்துப் போகும். 

அன்று நானும் சிவாவைச் சந்தித்தேன் சிவா அப்படிச் சிரித்து நான் பார்த்ததில்லை. அவர் சிரிப்பதற்காகவே நீங்கள் அங்கு வரவேண்டுமென நான் நினைத்துக் கொண்டேன். எனக்குத் தெரிந்து நான் கண்ட இந்துத்துவவாதிகளிலேயே சிரிக்கத் தெரிந்த இந்துத்துவவாதி நீங்கள் ஒருவர் மட்டுமே. அதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வசந்தகுமார் சிவாவுக்கும் மட்டுமல்ல உங்களுக்கும் அதிநெருக்கமான இன்னும் சொல்லப் போனால் உங்களது படைப்புகளை தேர்வு செய்வதோடு எடிட் செய்யும் அளவுக்கு ஆக நெருக்கமானவர் விஷ்ணுபுர முன்னுரையில் அருண்மொழிநங்கை சக படைப்பாளி மாதிரி நீங்கள் தமிழினியில் வெளியிட்ட அனைத்திற்கும் அவர் சக படைப்பாளிதான்.

அவரிடமும் நீங்கள் பசாசின் நூலைப் பற்றிய கருத்தைக் கேட்கலாம். நீங்கள் எனக்கு டீ வாங்கிக்கொடுத்தது போல சிவாவும் உங்களுக்கு வாங்கிக்கொடுத்திருக்கலாம், டீயுடன் ஒரு ரூபாய் மதிப்புள்ள உளுந்த வடையும் வாங்கிக்கொடுத்தீர்கள். அந்த உச்சபட்ச நெருக்கம்தான் உங்களுக்கு என்னைத் தெரியாது என்பதிலிருந்து தொடங்கி என் கவிதைகளை சொல்புதிதில் போட்டேன் என்பது வரை மிக நீண்ட புளுகை புளுக  வைத்திருக்கிறது. பின் பழசி ராஜா படத்தில் டப்பிங் எழுத நான் உங்களத் தொடர்பு கொண்டபோது டப்பிங் படத்தில் எனக்கென்ன வேலை இருக்கப் போகிறது என்று கூறியதும் பின் ஒரு வாரம் கழித்து பழசி ராசா யார் தெரியுமா என்று தமிழக மலையாள வாசகர்களுக்கு நீங்கள் வகுப்பெடுத்ததும் ஒரு துயரம்தான்.

கடிதத்தை எழுதியவர் நினைவுப்பிழையில் தன் பெயரைப் போடுவதற்குப் பதில் சிவா பெயரை போட்டுவிட்டாரோ என்னவோ. நினைவுப் பிழை.  இதெல்லாம் ஒரு விசயமா. யுரேகா யுரேகா என்று நீங்கள் கத்துவது என் செவிகளுக்குக் கேட்டாலும், அம்மணமாக நீங்கள் ஓடி வரும் காட்சியை பார்க்கக் கிட்டவில்லை.  உங்கள் கண்கூடான கடவுள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்போது உங்களது பிள்ளைகளை, செய்த பிழைகளை நினைத்துக்கொள்ளுங்கள் அதுவே இப்பொழுது உங்களுக்கு ஆகக் கடைசியில் கிடைத்த முறிமருந்து. சிவா ஞானப்பால் தேடியலைந்தார் என்று நீங்கள் குறிப்பிடாமல் விட்டதற்கு நன்றி. மேலும் யதியைப் போல சிவாவுக்கு ஞானக்குசு விடத் தெரிந்தவர் அல்ல, தன்னளவில் எங்களைப் போல குருதியும் மணமும் கொண்ட மனிதன். அவ்வளவே.

தான் விரும்பும்  கருத்தியலை சொல்பவர் என்கிற பெருவிருப்பம் மட்டுமே உங்களை எப்பொழுதும் வழிநடத்துகிறது. அதுவே நீங்கள் விரும்பிய சாமியார்களின் தாடியழகையும், அவர்கள் வசிக்கும், பின் கழிக்கும்  கழிப்பறைப் பீங்கானின் அழகையும் விவரிக்கச் சொல்லுகிறது. மற்றவர்கள் தெய்வங்கள் ஆயினும் நாசமாகத்தான் தோன்றும். அவ்வாறே ஆகுக.  நேதி நேதி அநேதி.

சிவா சாவை முன்வைத்து, இன்னும் மீள வரும் சவண்டி ஓசைகளையும் சங்குக் கூச்சல்களையும் கேட்க தயாராகவே இருக்கிறேன். எண்ணற்ற தலைவர்களையும் ஆளுமைகளும் இறப்பின் வழியா வழங்கிச் செல்வது இன்னும் நிறைய இருக்கிறது...


எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குழந்தைகள் உங்கள் வளர்ப்பில் உங்கள் வழிகாட்டலில் மேற்பார்வையில் வளர்ந்து வருகிறார்கள், அவர்கள் வாழும்  இவ்வுலகில் என் குழந்தையும் வாழ நேரிடுமோ என்கிற அச்சம் எனக்கு பெரும் பீதியைத் தருகிறது. உண்மை. மனம் கசந்து எனது அகத்தில் வருவதானாலேயே இதைச் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...