Wednesday, August 10, 2016

நரகலாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு....


குறிப்பிட்ட கேள்வியை வைத்ததும், அதுகுறித்தான விவாதங்களை கொற்றவை ரங்கநாயகம்மாவிடம் கேட்டுப் பெற்றார். விளக்கம் அறிய…


பிழை கண்டதும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியது போல், அம்பேத்கரின் பொருளாதாரப் பார்வை, காந்தியை விட மேம்பட்டது. இது அவதூறு என நிரூபித்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்போம். “மேற்கோள் தவறானது, அம்பேத்கர் பார்வை அது இல்லை, அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். அம்பேத்கரின் ஒட்டுமொத்த கருத்துமே திரிக்கப்பட்டிருக்கிறது” என்று நிரூபித்திருந்தால் அது சரியான ஒன்று.

ஆனால் காந்தியின் பொருளாதாரமும், அம்பேத்கரின் பொருளாதாரமும் கருத்தளவில், முன் வைத்த தீர்வுகளின் அடிப்படையில் முதலாளிகளின் நலன்களைத்தானே முன் வைத்தன. இது குறித்து ஒரு வரி கூட இல்லையே. அது ஏன்?

கொற்றவை மார்க்சியம் குறித்த அம்பேத்கரின் சாடல்கள் பற்றி கோபம் வரவில்லையா என உங்களைக் கேட்டிருக்கிறாரே? பதில் இருக்கிறதா?

பிறப்பின் அடிப்படையிலான சாதிய மனோபாவம் குறித்து:

ஆசானே என நீங்கள் அழைத்து போற்றும் எஸ்.வி ராஜதுரை அவர்கள் ( இவர் என்ன சாதி என்று தெரியவில்லை) புத்தரும் அவர் தம்மமும் நூலில் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்றெல்லாம் ஆய்வுகளை மிகுந்த நுண்ணிய நோக்குடன் சரி பார்த்து எழுதியிருக்கிறார் -  “புத்தரா கார்ல் மார்க்ஸா என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த “புத்தரும் அவர் தம்மமும்” நூலிலும் கூட, புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருப்பதைக் காணலாம்.”

அய்யா நரகலாளரே, புத்தரும் அவர் தம்மமும் நூலுக்கும் சோசலிசப் பொருளாதராத்துக்கும் என்னய்யா சம்பந்தம். மார்க்ஸையும் புத்தரையும் இணைப்பதா… அது எப்படி  என நீங்கள் உங்கள் ஆசானிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், “…..அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், “சாதி ஒழிப்பு” நூலில் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும், தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்த தமிழாக்கமும் கூடத் தமிழ்நாட்டிலிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோ, தலித் அரசியல் கட்சியையோ சாராத  “தலித் முரசு” ஏட்டால்தான் கொண்டுவரப்பட்டுள்ளது” (எஸ்.வி.ஆர்) இது ஆதிக்க சாதி கருத்தில்லையா?

“….இவை போகட்டும், கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் "டப்பிங்' செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதா? இந்திய மொழிகள் அனைத்திலும் அதனை "டப்பிங்' செய்து வெளியிட மத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள், பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா? ஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்பு' செய்ததாக, செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை” (எஸ்.வி.ஆர்) இவைகள் ஆதிக்க சாதி கருத்தில்லையா?

பொதுவாக தலித் இயக்கங்களைக் குறை சொல்லுபவர் மீது பிறப்படையாளத்தைச் சுட்டி ஆதிக்கசாதி என்ற ஆயுதம் தொடுக்கப்படுகிறது. அதையேதான் இப்போது நீங்களும் செய்கிறீர்கள். பொதுபுத்திக்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை.

அம்பேத்கர் சொத்துடைமை வர்க்கத்தை பகைத்துக்கொண்டு. அவர்களுக்கு எதிரான தத்துவங்களை எங்கே எழுதியிருக்கிறார் என நீங்கள்  சுட்டிக்காட்டலாம். அவரது பொருளாதாராக் கோட்பாடு எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றும், நிறுவலாம். அதுதான் விமர்சன முறை. அம்பேத்கரை படிக்காத புதிய தலைமுறைக்கு அது உதவக்கூடும் இல்லையா? தலித் மக்கள் விடுதலைக்காக நீங்கள் இதைக் கூடச் செய்ய மாட்டீர்களா?

ஆதிக்க சாதி எதை எழுதினாலும் அது தலித்துகளுக்கு எதிராகத்தான் இருக்கும் எனச் சொல்லும் நீங்கள், காலச்சுவடு காசு கண்ணன் என உங்களால் அழைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்ட பதிப்பகந்தானே சாதியை அழித்தொழித்தல் நூலை இப்பொழுது வெளியிட்டிருக்கிறது. இதன் காரணம் உளவியல் என்ன.?

அவா அம்பேத்காரை புகழ்ந்து எழுதிவிட்டால்,  அடேயப்பா…. அம்பேத்கர் யாரு.. நம்ம தலைவன்ல, என உச்சி முகர்ந்து,  புரட்சியாளாரே, ஆசானே, அறிவுஜீவியே.. என்று கொண்டாடும் நீங்கள் அம்பேத்கரை  விமர்சித்தால், அவா புத்தியே இப்டித்தான் எனச் சொல்வது முறையா. இது புரட்சிகர சுயசாதிப் புத்தியாகவே இருக்கட்டும். அது குறித்து எந்தக் கவலையும் இல்லை.

குறிப்புகள்

1 //1  ‘...தீண்டப்படாதவர்கள் தங்கள் சாதியை தாழ்வாகக் கருதவில்லை, பிராமணர்களை எட்டி உதைத்தார்கள் என்று எவரோ எழுத, உடனே அம்பேத்கர் புளகாங்கிதமடைந்து அந்தத் தகவலை பெரும் உவகையுடன் விவரித்தார்...’ என்கிறார் ரங்கநாயகம்மா ( பக்கம் 93). //

தொகுதி 14ல் பக்கம் 117- 121 ல் அம்பேத்கர் எழுதியுள்ளதை தேடிப்படிக்கலாம். அம்பேத்கரின் ஊகத்தையும் ஆராயலாம். அந்த ஊகம் என்ன. அந்த ஊகம் எந்த நிரூபணமும் இல்லாமல் அம்பேத்கரை எந்த ஊகத்தில் கொண்டு போய் நிறுத்தியது என்பதையும் சேர்த்துப் படியுங்கள்.( ஒரே ஒரு மகிழ்ச்சி ரங்கநாயகம்மாவின் புத்தகம் உங்களை அம்பேத்கரை எழுத்துக் கூட்டிப் படிக்க வைத்திருக்கிறது.) கிபி யில்தான் சாதி வந்தது, இல்லை இல்லை புத்தரின் காலத்திலேயே சாதி இருந்தது என்கிற ஆராய்ச்சிகளெல்லாம் அதில்  இருக்கிறது.

2 //இப்படி தனக்கு முந்தைய மற்றும் தன் காலத்தில் பொருட்படுத்தத்தக்கதாய் இருந்த ஆவணங்களை ஆதாரமாக கொண்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார். //

பொருட்படுத்த தக்கவர் என்பது அவரவரின் வரையறையப் பொறுத்தது. அம்பேத்கர் குறிப்பிடும் நீல் கண்ட் யாரெனத் தெரியவில்லை. சொல்ல முடியுமா. புத்தரும் அவர் தம்மமும் புத்தகத்திற்கு, அம்பேத்கர் பௌத்த ஆதாரக் குறிப்புகளை எங்கிருந்து எடுத்தார் என்று எதுவும் இல்லை. என்ன செய்யலாம்.?

3 //ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’  என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை  "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?//

எதை வைத்து கொற்றவையை ஆதிக்க சாதி புத்தி உடையவர் என்று அழைக்கிறீர்கள், அம்பேத்கரை விமர்சித்தால் ஆதிக்க சாதியாக இருக்க வேண்டும் என்கிற மந்த புத்தியில்தானே.

“பொதுவாகப் பலரும் கருத்துவதற்கு மாறாக ‘அம்பேத்கரியஅடையாளம் என்பது பாபாசாஹெப் அம்பேத்கரின் தத்துவத்திலோ, கருத்து நிலையிலோ வேர்கொண்டிருப்பதைவிட அவரது சாதி அடையாளத்திலேயே வேர் கொண்டுள்ளது என்பதுதான்.

அம்பேத்கரியர்என்பதற்கான நடைமுறைரீதியான வரையரை இதுவாகத்தான் உள்ளது; அதாவது, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் தலித்துகள் வாழும் சமுதாய வெளியொல் மேலாண்மை செலுத்தும் சாதியைச் சேர்ந்தவரே அம்பேத்கரியர்எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிராவிலுள்ள அனைத்து மஹர்களும், ஆந்திராவில் உள்ள அனைத்து மாலாக்களும், கர்நாடகாவிலுள்ள ஹொலையர்களையும், தமிழ்நாட்டிலுள்ள பறையர்களும், உத்தரபிரேதேசத்திலுள்ள சாமர்கள்/ ஜாதவ்கள் ஆகியோரும்,குஜராத்திலுள்ள வாங்கர்களும், இதுபோன்று பிற மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சாதியினரும், அவர்கள் செய்வது என்னவாக இருந்தாலும், தாமாகவே அம்பேத்கரியராக அமைந்து விடுகின்றனர்.- டெல்டும்டே.

4 //காந்தி எழுதியதை அம்பேத்கர் எழுதியதாக பொய் சொல்லி வசை பாடும் இந்த உத்தி கொற்றவையின் கட்டுரையிலும் அவர் மொழிபெயர்த்துள்ள நூலிலும் எவ்விதமாக எங்கெங்கு கையாளப்பட்டுள்ளது என்று துப்பறிந்து கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆயினும் குறைந்தபட்சம் இந்த ஒரு ஆதாரத்தையாவது அவர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதுவொன்றையும் ஆழ்ந்துப் படித்து அறிவுநாணயத்தால் விகசிக்கும் அவர் இதற்கான ஆதாரங்களை கொடுக்காமலா போவார்? காத்திருக்கிறோம். //

ரங்கநாயகம்மாவும், மொழிபெயர்த்த கொற்றவையும், நூல் பதிப்புக் குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். அதோடு, அம்பேத்கரது பொருளாதாரக் கருத்து யாருக்கு உகந்து வாய்ப்பளிக்கிறது என்பதில் எங்களுக்கு கருத்து மாறுபாடில்லை எனவும் சொல்லியிருக்கிறார்கள். இது எப்படி வசையாகும் எனத்தெரியவில்லை. ஆனால் அம்பேத்கரை நிறுவுவதற்காக நீங்கள் குறைந்தபட்சம் துப்பறிந்து மறுக்க வேண்டுமென்பது உங்கள் தார்மீகக் கடமையல்லவா?

உங்களது முதல் விமர்சனத்தில் பள்ளுப் பறை என இருந்தது இங்கு பறையர் மட்டும் உள்ளே வந்ததற்கு காரணம் என்ன ஆதவன் தீட்சண்யா. ( உங்கள் பெயரை வைத்துப் பார்க்கும் போது சூரியகுலத்தை சேர்ந்தவராக இருப்பீர்களோ எனத் தோன்றுகிறது. ஆதிக்க சாதியாகவும் தோன்றுகிறது. உடனே நரகலில் இருந்து கையை எடுத்து வேகமாக ஆட்டி, பார்த்தீர்களா. பெயர் வைக்கும் யோக்கியதை கூட எனக்கில்லை நச் சொல்லுகிறான் என நீங்கள் குதிக்கக் கூடாது )  சந்தடி சாக்கில் தன் சாதிப் பகுமானத்தைச் சுட்டிக் காட்டி தனது அடிப்பொடிகளுக்கு தம்பிகளாஅண்ணே உங்க சாதிடா..என மறைமுகச் சுட்டலா? சுயசாதி வெறியா. ( இந்த சூரிய குலப் பிறப்பின் மேன்மை என்பது மானம், ரோஷம் எக்கச்சக்கமா உடையது, சந்திர குலம் கொஞ்சம் கம்மியானது என்பன போன்ற ஆய்வுகளை அறிய அம்பேத்கரின் தொகுதிகளைப் பார்க்கவும்.)

முதலில் இந்த நூல் அம்பேத்கருக்கு செறுப்பு மாலை போட்டிருக்கிறது என சுயசாதி வெறியைத் தூண்டி விடுதல். இப்பொழுது வன்கொடுமை பிரிவு எனச் சொல்லி மிரட்டல். இது போன்ற ஒடுக்கப்பட்டோர் நலன்களை நீங்கள் எதற்கு உபயோகப்படுத்துகிறீர்கள் நரகலாளரே. ஒரு நூலை மொழிபெயர்த்தற்காக கொற்றவை சிறைக்கு செல்ல வேண்டி இருப்பின் அது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை.
  “(சாதியை ஒழிக்கும் வழி) இந்நூலை அம்பேத்கர் எழுதி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதுமட்டுமல்ல,அம்பேத்கர் லட்சோப லட்சம் மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள் ( 14.101956) நிறைவடைந்துவிட்டன.....”
இது சாதியை ஒழிக்கும் வழி நூலில் முன்னுரையாக உள்ளது.  “தலித் முரசு” ( அக்டோபர் 2007) இதழில் “சாதியை ஒழிக்கும் வழி “ என்ற நூல் முழுமையாக வெளியிடப்பட்டபோது எழுதப்பட்ட தலையங்கம்.
அம்பேத்கர் எப்படி சாதியை ஒழித்தார்? எதன் மூலம் ஒழித்தார்? என்பதை அந்தத் தலையங்கம் எந்த நோக்கத்தோடு சொல்லுகிறது என்பதையும், துணை ஆய்வாகக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.( அது பௌத்தம் என்று நான் சொல்லமாட்டேன்)
ரங்கநாயகம்மா அம்பேத்கரைத் திரிக்க வேண்டுமென்றால், அவர் எழுதிய தொகுதிகளை ஆதாரமாக, தொகுதி எண் பக்கங்களோடு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அம்பேத்கர் சொன்னதாக தன் பார்வையில்,  எதையாவது எழுதி வைத்திருக்கலாம். அப்படி வந்த ஒரு டஜன் நூல்களை நானே இங்கு எடுத்துக்காட்ட முடியும். ஆனால் அவர் நூல் தொகுதி, பக்க எண் இவற்றை சிரத்தையோடு குறிப்பிட வேண்டும். ?

நிற்க

ஆதிக்க சாதி, பெண்ணியவாதி, உதிரி மார்க்சியர், மார்க்சியத்தைத் திரிப்பவர்கள் என்ற பட்டங்கள் எல்லாம் ரங்கநாயகம்மாவின் நூலை மொழிபெயர்க்கும் முன்னமே அடைந்துவிட்டோம் நரகலாளரே. முடிந்தால் வேறு பெயரில் அழையுங்கள். எங்களுக்கு இன்னொரு பட்டப்பெயர் கிடைத்த சந்தோஷம் இருக்கும்.

உதவிய நூல்கள். 
அம்பேத்கரின் தொகுதி 14
அம்பேத்கரியர்கள் :
நெருக்கடியும் சவால்களும் ஆனந்த் டெல்டும்டே.
தமிழில்.எஸ்.வி.ராஜதுரை.
சாதியை ஒழிக்கும் வழி;
மொழிபெயர்ப்பு கார்முகில் பதிப்பகம்


No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...