Pages

Saturday, May 21, 2011

எனது நாடு எவ்வளவு சிறியது : எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ்



அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச் சண்டைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

மொழிபெயர்ப்பு
எஸ்.வி.ராஜதுரை.
வ.கீதா.

நூல்: மண்ணும் சொல்லும்.

மூன்றாம் உலகக் கவிதைகள்

1 comment:

  1. ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தின் ஆயுதம் தாங்கிய அடக்கு முறையினை விளக்கும் கவிதை அருமை.

    ReplyDelete