Pages

Friday, March 30, 2012

காமத் துறைவனின் கடுஞ்சொல் கேளீர்....



நிச்சலனம் கிழித்தயிருள் மேவி
பித்துப்பிதிருடைத்துத் உடல்கதவைச் சிதறடித்துத்
திறக்கும் பெருந்தாழ்ப்பாள்
கொன்றழித்து புதிருறங்கும் மயிர் வனம்
சித்தம்தனை சிதறவிடும் பைத்தியக் கூச்சல்
கண்களைக்கீறி வளரும் பயிர்விளைச்சல்
முப்போகம் விளைவிக்கும் ஊழிச்சொல்
விரல்களை துளையிடும் ஊதல்
நகங்கள் வழி குருதிபாயும் பெரியாழின் கூர் நரம்பு
மிரளும் கண்பாவை சுவேதன ஒளிப்பரவல்
கைக்கும் வியர்வையில்
துவர்த்தல் வாடை
கிளர்ந்தெழும் காழ்த்தல்
திரளும் தித்தித்தல்
கறுகும் கார்த்தல்
இறுதியில் கசியும் சதைத் துவர்த்தல்
சங்கதனைப் புதைக்கும் வெண்சுடலை
சூதனின் இறுதிச்சொல்
முட்டும் முடிவுறா தசாங்கம்
நித்திலக் குழியூரும் வெண்நஞ்சு
தாவரயோனிமீதேரும் பசலைக்கொடி
பச்சிளம் சிசு
பெருங்களிற்றுவட்டமேங்கும்
எரியின் வட்டம்
புகைச்சுருள் விசனம்
நாடோடி துயிலும் ஆலத்தின் வேர்
இறுகும் கண்ணின் கைப்பு
யாளியுறங்கும் நிசித்தாலாட்டு
பேய்களைக்கொன்று குலவையிடும்
உயிர்ச் சொல்
தாமிரபரணி
ததாகயோனி
சிற்றெழில் உறையும் வதனம்

சொல்
அஃது பெரும்பிழை
உயிர்
இதுவும் அது

நீலகேசி
தாம்பூலவல்லி
சக்கரவாளக்கோட்டம்

கடவுள் மறுத்த சொல்
காமம் பெருந்தீனி
தெறிக்கும் மூளைச் சிதறல்
நிணமொழுகும் கனா
நான்
நீ

தலைகீழ் யோனி
விழி அவி.


ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணர வேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம்
கைகள்....
சம்போ மகா தேவா
சம்போகம்.

No comments:

Post a Comment