Pages

Tuesday, April 24, 2012

ஆனந்ததம்




ஆஹா...
அற்புதம்
மிதக்கும் அல்கல்
விழி விரித்த
அல்லெனச்சொல்ல 
அல்குல் ஆனந்தம்
உதித்தெழ மலரும் அல்லி
ஆனந்ததம்
ஆஹா
அற்புதம்
அம்

கூசிச்சுருங்கி பெருங்காற்றை உள்ளிழுத்து உப்பியெழும்
வைரச்சூரி
பெருங்காட்டில்
சிகைவிரிக்கும பைநாகப் படம்
தமனகவாசனைச்சுருள்
புணர்ச்சியிருளில் பொங்கிக் கசங்கி
பொசுங்கிய குங்கிலியம்
சந்தன உறுமல்
சதிர்ச்சொல்

கனாக் கண்
கண்
காணாக் கண்
கண்டுதித்த அரவச்சேர்க்கை
பித்தம்
கிழிக்கும் சித்தக் கனா

கனா.... 
காண்

மயக்கம்
மேவிப்படரும்
வழிதப்பியலையும்

கரி
துதிக்கை இழுத்துப் 
பிடி
கரியதிர
பிடியதிர
சேர்ந்ததிரும் காட்டின்
கிழக்கைக் கிழிக்கும்
திசை முயக்கப் புலரி

இணைவிழைச்சு
இணைந்தும்
இணைந்த காலையில் வியர்த்தும்
வியர்த்தலால்
உடலொலி கிளர பிரிந்தும்
பின்
காற்றின் கரங்கள் இறுகிச்சேர்க்க
விழைந்தும்
செவ்விழி நீண்டகண்டும்
பாவை
தம்
பாவைக்குள் பார்க்கும் பைத்தியச் சொல்

உடையுதறி நிழழுதறி உதித்தெழும்
பறவைக்கரசு
அலகென்ற கூர்வாளால்
அது கொத்திக் கிழிக்கும்
வீரியனின் ஒற்றை விழி

நடுகல் விதைத்து
நடுங்கல்
நடுங்குதலொலிக்கும் கொலுசுப்பறை
சன்னதம் காண் கிழவா
கிழத்தியின்
ரூபத்தில்
காண்
காணொரு சூன்யம்

அம்மா
வெனச் சொல்ல
ஆரம்பிக்கும் இடம்.

Tuesday, April 10, 2012

ராஜ சுந்தர ராஜன் அவர்களுக்கு......சாமி எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும்...




( 2 )
வசு,

எனது வேண்டுகோள் மிக எளிமையாக இருந்தது: //இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு?//

இதை இப்படியே நேசமித்ரன் வலைத்தளத்திலும் இட்டு அவரையும் வேண்டி இருந்தேன். 

அடுத்து, நீங்கள் என்னை விளித்து ஒரு பதிவு இட்டிருந்ததினால், அதை மதித்து அதிலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதில், விமர்சன எழுத்தில் ஈடுபடும் அளவுக்கு வலுவில்லை எனக்கு என்றும் எழுதி இருந்தேன். பிறகும் என்னை மொழிபெயர்க்கும் வேலைக்கும் விமர்சனத்துக்கும் தூண்டுகிறீர்கள்.

உங்கள் நூலகளையும் ரமேஷ் ப்ரேம் நூல்களையும் கட்டாயம் வாசிப்பேன். அவ்வளவுதான் என்னால் முடியும். நன்றி! வாழ்க!

( 1 )

" வலையுலகத்துல சண்டை போடுறது ஒரு விளம்பர வாய்ப்பு. அப்படித்தானா, வசுமித்ர? நேசமிதர?

ஆமா, இந்த 'மித்ர' என்பதற்கு என்ன அர்த்தமாவது இருந்துவிட்டுப் போகட்டும். The difference is between the 'வசு' and 'நேசம்'.

I call upon the knowledgeable people to help.

இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு? ”

அய்யா மேற்கண்ட 1 வரிகளுக்கும் இரண்டாவதாக நீங்கள் கத்தரித்தற்கும் இடையில் உள்ள வார்த்தைகள் வித்தியாசங்கள் ஒரு பொருட்டே இல்லையா. அய்யா...இதுதான் தாங்கள் மிக எளிமையாக கேட்டு பஞ்சாயத்துக்கு வந்த நிலைமையா...இதுதான் என்னை நேரடியாக முகஞ்சுருங்க வைத்து, அதோடு கடுப்பையும் ஏற்றிய பதிவு. இப்பொழுது கடுப்பின் அலவி சற்று அதிகம் ஏற்றுகிறது, முதலில் இது மிக மோசமாக கத்தரித்து ஒட்டிய பதில். அப்பாவித்தனமாக கேட்டேன் என்ற தோற்றத்தை இது வரவழைக்கிறது. மேற்கண்ட வார்த்தைகளின் தோரணைக்கும், இப்பொழுது நீங்கள் வெட்டி ஒட்டிய வரிகளுக்கும் உள்ள இரக்க சுபாவத்தை நீங்கள் காணலாம்.

முதலில் இது போன்ற விளம்பர யுக்திகளை நீங்கள் ஒரு வயதான எழுத்தாளராக அனுபவித்திருக்கலாம். எனக்கு அது பொருட்டில்லை. மேலும் மித்ர வார்த்தைக்கு மொழிபெயர்ப்பு குறித்து நீங்கள் சூசகமான கோக்குமாக்கு குத்தலை வைத்தீர்கள்.

அய்யா... மித்ர வார்த்தைக்கு இலக்கிய விசுவாசம் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு சிறு கேள்விக்கே மித்ர வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு வந்தீர்களே...நேசமித்ரன் இலக்கியம் தவிர்த்து எனக்கு ஆங்கிலம் தெரியாது, அதோடு ரத்தம் குடிப்பேன், பதில் சொன்னால் அடிப்பேன் என்ற வியாக்கியானத்தையெல்லாம் மிகுந்த கொண்டாடத்தோடும் வன்மத்தோடும் வைத்தார். அய்யா இதெல்லாம் உங்களுக்கு நேசத்தின் உச்சத்தை எடுத்துரைக்கும் நேசமித்ரன் அவர்களின் வார்த்தைகள்....இல்லையா....

அய்யா அவர் வைக்கும் வார்த்தைகள் என் வாழ்வில்  ஒரு சிறிய மயிரிழையைக் கூட பிடுங்கி எறிய முடியாது. ஆனால் நான் பதிலுக்கு அந்தரங்கமாக இது போன்ற ஒன்றை விமர்சனம் என்ற பெயரில் வைத்தால் நாறி விடும். நேசமித்ரன் குறைந்தபட்சம் இரண்டு நாள் சாப்பிடாது உடல் இளைக்குமளவுக்கு கேள்விகள் எனக்கிருக்கிறது. நான் பேசியது இலக்கியம் என்றே நம்பிப் பேசினேன். அவர் எனது ஆங்கிலம் தெரியாத முட்டாள் என் கவிதையை புரிந்து கொள்ள முடியாது என்றார். அபோழுதெல்லாம் மித்ர நேசம் வரிகள் குறித்து நீங்கள் இன்னும் அழுத்தமாக கேள்விகளை முன் வைப்பேன் என்றே நம்பினேன். மிக்க நன்றி அய்யா.

அவர் எழுத்து என நீங்கள் எதைச் சொல்கிறீர்கள். கோணங்கியின் பின்னொட்டான கழிவுக் குப்பையையவா அப்படிச் சொல்லுகிறீர்கள்...இல்லை அய்யா அது சந்தேகத்துக்கு இடமின்றி பெருங் குப்பைதான்... அதில் இரு வரிகளை எங்கே பிரித்து மேற்கோள் காட்டமுடியும் என்று பதிலும் சொன்னேன்.


மேலும் அறிவார்ந்தவர்களை துணைக்கழைத்தீர்கள். அய்யா நீங்கள் குறிப்பிட்ட அந்த அறிவார்ந்த சீமான்களுக்காக இப்பொழுது வரை காத்திருக்கிறேன். உங்கள் அழைப்புக்கு ஒருவரும் செவி சாய்க்காவிட்டாலும், ஒரு ஆங்கிலம் தெரியாத முட்டாளாக காத்திருப்பேன். அழையுங்கள். அவர்களுக்கும் எனது வேலைப் பளுவோடு பதில்களை முன் வைக்கிறேன்.

அய்யா நீங்கள் என்னை மதித்து பதிலளித்தனால்தான் பதில் சொன்னீர்கள், நானும் அவ்வாறே சொன்னேன்.

நீங்கள் பயணம் படிக்க நேரமில்லை என்பதாகச் சொன்னீர்கள் என்றே அப்பொழுது புரிந்து கொண்டேன். இப்பொழுது விமர்சன எழுத்தில் ஈடுபாடே இல்லை என புரிந்து கொள்கிறேன். சிறிய கேள்விகளை பெரும் உழைப்பு என்று நினைக்க வேண்டாம். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை மிகுந்த பெருமையுடன் நேசமித்ரன் அறிவித்தார். அவர் ஆசிரியராக இருக்கும் வலசை இரண்டில் வெளிவந்த அந்த டயனா கவிதை மொழிபெயர்ப்பு கவிதைக் குப்பையை முன் வைத்து எனது ஆங்கில அறிவை சோதித்துக் கொள்ள நினைத்தேன். மேலும் நீங்கள் அதை மொழி பெயர்த்தால் குறளியில் வெளியிடுவேன் என்று சொன்னேன்.

அய்யா விமர்சனத்துக்கு வராவிட்டாலும்....ஒரு மொழிபெயர்ப்பாளாராக எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்ற உரிமையில் நான் உங்களிடம் வைத்த கேள்வி அது. சோர்வு தந்திருப்பின் மன்னிக்க. மேலும் என் தளத்திலும் நேசமித்ரன் தளத்திலும் நாங்கள் அழைக்காமல் வந்தது போலவே சம்பந்தப்பட்ட மொழி பெயர்ப்பாளர் சக்திச் செல்வி யார் என நேசமித்ரனிடம் கேட்டு அவருக்கும் கேள்விகளை முன் வையுங்கள். உங்களுக்கு வேலைப் பளு என்றால் இக்கேள்வியை நான் நேசமித்ரன் அவர்களுக்கும் சக்திச் செல்விக்கும் உங்களின் வழியாக அனுப்புகிறேன். பதில் கிடைக்குமா...

மொழிபெயர்ப்பும் விமர்சனமும் வேலை என்று நீங்கள் கருதினால் இந்த விவாதத்திற்கே நுழைந்திருக்க வேண்டாமே, ஒரு வயதான எழுத்தாளராக நீங்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்கும் வேலையைச் செய்திருக்கலாம்.

என் படைப்புகளைப் படியுங்கள். ரமேஷ் பிரேம், மற்றும் ரமேஷ் பிரேதன் படைப்புகளையும், அதோடு பிரமிளின் படைப்புகளையும் மறுவாசிப்பு செய்யுங்கள். நல்ல ஆரோக்கியம் உங்களுக்குக் கிட்டட்டும். 


அன்புடன் 

வசுமித்ர. 



வசுமித்ர


Tuesday, April 3, 2012

கவிஞர் ராஜசுந்தரராஜனுக்கு....ஒரு எழுத்துக் கழிவுக் குப்பையின் வாழ்நிலையை முன்வைத்து...






வணக்கம் ராஜசுந்தரராஜன்....


உங்களது கேள்வி எனது பெயரின் பின்னொட்டான மித்ர என்ற வார்த்தைக்குள் இருக்கும் நேசத்தை விளக்குவாத எனக்கு அமைந்தது. அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. காந்தி என்ற பெயரில் எனக்கு மொடக்குடி நண்பர் உண்டு. இதுல இன்னும் விசேஷம் அவர் கோட்சேவை ரெம்ப நல்ல பையன்ப்பா...என்பார். நிற்க.

வலசை முதல் இதழ் உங்களுக்கு அச்சலாத்தி. எனக்கு அதன் தலையங்கம் உட்பட எல்லாம்.....அய்யோ...அம்மா....

அய்யா....

நேசமித்ரன் கோணங்கியை நகல் எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஒரு வேளை அது ஜெராக்ஸ் என்ற அர்த்ததில் இருந்ததானால் தாங்கள் அப்படி புரிந்து இருக்கலாம். தோழரே...நகல் என்பதற்கு மூலத்தை வாசித்த அனுபவமாவது வேண்டும் பின்னட்டை முன்னட்டை, உள்ளே பக்கங்களை முகத்துக்குக் காற்று வருவது போல் புரட்டிவிட்டு அதில் உள்ள நடையை கேணைத்தனமாக வாந்தியெடுப்பதை நகல் எனச் சொல்ல முடியாது. மேலும் எவரை நகல் செய்தால் தன் பிழைப்பு ஓடும் என்பதன் பின்னால் உள்ள அரசியல்.
2,3,வருடத்துக்குள் இலக்கியச் சங்கங்களில் தன்னை பிரதிஷ்டை செய்ய பல இலக்கியவாதிகளைக் கண்டு தோளில் கைபோட்டு, இடுப்பைப் பிடித்து போட்டோ எடுப்பதுதான் நேசமித்ரனின் இலக்கிய கிராப்ஃட். பேருந்து நிலையங்களில் லேகியம் விற்பவருக்கும் அமிதாப் பச்சனுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும். நேசமித்ரன் எனும் குருவிலேகிய விற்பனையாளர்...ஒவ்வொரு பேருந்துநிலையத்திலும் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் கைதட்டி கூவியழைத்து உண்மையில் எழுத்து வைத்தியனான கோணங்கியின் பதங்களை கூவி கூவி பாட்டிலில் அடைத்து அய்யா சாமி அம்மா சாமி என விற்பதன் மூலம் தன்னை வைத்தியனாய் நிறுவுவது...என்ன ராஜசுந்தரராஜன் இது......

நேசமித்ரன் எழுத்துக்கள் வெறும் கழிவுக் குப்பை. மறுசுழற்சிக்குக்கூட உதவாத குப்பையே நேசமித்ரனின் எழுத்துக்கள். எந்த வரிகளையும் மேற்கோள் காட்டாதபடி வீசி நாறிக்கிடக்கும் பெருங்கிடங்கு. நீங்கள் வாசித்த எனது 2,3,கவிதைகளிலாவது பிரேம் ரமேஷ் சாயல் இருந்தால் விளக்கலாம். வாசித்தறிந்த தகவல்களை  கவிதைகளாகத் தொகுக்கிறார் நேசமித்ரன்...என்று கூறியிருக்கிறீர்கள். உண்மையில் அதுவும் அப்படி இல்லை அய்யா...அதன் பேர் வாசித்தவைகள் அல்ல....வாந்தியை விழுங்குவது. அஃதே.
கோணங்கியின் மீதுள்ள அன்பும் மதிப்பும்தான் அவரை என்னை விமர்சிக்கச் சொல்லும் தைரியத்தையும், அதே சமயம் போலி நகல் குப்பைகளையும் கழித்துக் கட்டச் சொல்கிறது. என் வாசிப்பைப் பொருத்தவரை அறுத்து வெட்டி ஒட்ட முடியா நமது காலத்தின் மகத்தான புனைவுக் கவிஞன் கோணங்கி.

கதிரைவேற் பிள்ளை, அபிதாம சிந்தாமணி ,சூடாமணி பிங்கலம் திவாகரம், போன்ற நிகண்டுகளையும், அறிவியல் கலைச் சொற்களையும், பின் கோணங்கியின் புத்தகங்களையும் இன்னும் ரைட்டர்ஸ் கைடு, டூரிஸ்டர் கைடுகளையும் அருகே வைத்துக் கொண்டு இணைச் சொற்களை கோணங்கி போல் எழுதுவதாக தன்னைக் கற்பித்துக் கொண்டு கோணங்கியை முழு நிர்வாணமாக்கி கதறக் கதற வன்புணர்ச்சி செய்வது. அதை விடக் கொடுமை, தான் செய்த வன்புணர்ச்சியை விமர்சனம் என அவரையே கேட்க வைப்பது. அதைவிட வன்முறையின் உச்சம் (அது பொருக்கமாட்டாமல்தான் கூட்டத்தில் ஆதிரன் நீ கோணங்கியின் பின்னொட்டு என உங்களது பாணியில் நாசூக்காகச் சொன்னார். நான் கொஞ்சம் காத்திரமாகத்தான் சொன்னேன். )நிலைமை எவ்வளவு மோசம் பாருங்கள். நான் நேரடியாக விவாதத்திற்கு வருகிறேன். கோணாங்கியை ஓரளவுக்கு வாசித்தவன் நான். அதுகுறித்த விமர்சனங்களையும் எனது பதிவில் வைத்துள்ளேன். அது குறித்தும் நேசமித்ரனிடம் உரையாட காத்திருக்கிறேன். நான் பேசும்போது மொங்கா மொங்கா என்று முகத்தில் குத்திவிடும் அபாயம் உள்ளதால் நேசமித்ரன் என்னிடம் பேசமுடியாமல் இருப்பதாக புகார் வைத்திருக்கிறார். ஒரு வேளை எனைக் குத்த வைத்து என்னை இலக்கியவாதி லிஸ்டில் இருந்து தூக்கிவிடலாம் என நினைக்கிறாரோ என்னவோ. அய்யா என் கவிதை வேறு, மூக்கில் குத்தும் நான் வேறு. அவர் என்னுடன் உரையாட விரும்பினால் உங்களை வைத்தே மத்தியஸ்தம் பண்ணலாம். நிச்சயமாக மூக்கில் குத்தமாட்டேன். இளைஞர்களின் உடல் வன்முறையை முதியவர்கள் காணும் போது ஏற்படும் மன வன்முறையை என்னால் நிகழ்த்த முடியாது.

மேலும் வாசித்தறிந்த தகவல்களை கிராப்ட் மூலம் பெருங்கவியாக மாற்றலாம் அய்யா. ஏன் சொல்கிறேனென்றால். அறிவை ஐரோப்பா மூவகையாகவும், இந்திய வேத அறிவு மூவகையாகவும், பௌத்தம் மூவகையைச் சொன்னாலும் அதில் இரண்டை இறுதியில் விலக்குவதாயும் இருக்கிறது. பார்ப்பது ( பிரதியட்சம்.... வாசிப்பது)கேட்பது(ஸ்ருதி ), ஊகம் (அனுமானம்)இது போன்ற முறைகளின் மூலமாகவே அறிவும் அனுபவங்களும் பகிரப்படுகிறது. அப்படியிருக்கையில் கிராப்ஃட் என்பதும் ஒரு தொழிநுட்பம்தான் ஆனால் நேசமித்ரன் தன்னை ஒரு இலக்கியவாதியாக அறியச் செய்யும் முயற்சியில்தான் அவரது கிராப்ஃட் அதாவது அரசியல் இருக்கிறதே ஒழிய படைப்பில் அது எதுவும் இல்லை.

நடந்த உரையாடல்களை நீங்கள் வாசித்தறிந்திருந்தால் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் எனது அனைத்து கேள்விகளுக்கும் கையப் பிடிச்சு இழுத்தியா பாணியில் பதிலாகவே அவர் வைத்தார். கேள்விக்கு பதில் என்ற எளிய வகையை அடித்து மூக்கை உடைப்பாய் என்று முன் வைத்தார்.இதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர் பூக்கோ... சாக்கோ.. தெரிதா...தெர்தா..என எழுதுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. எல்லா பொறணிகளையும் பேசிவிட்டு பேசவே இல்லை என்ற அவரது பெருங்கருணை எனக்கு உண்மையில் அச்சத்தையே ஊட்டுகிறது. ஆனால் இவ்வச்சம் எனக்கு புதிதல்ல.
நேசமித்ரன் வாசித்தறிந்த கிராப்ஃட்....என்று நீங்கள் சொல்வதுதான் பெருங்கொடுமை. அப்படி அவர் வாசித்து விதந்தோதிய கவிதைகள் ஏதேனும் உண்டா..அல்லது விமர்சனங்கள்...எதுவும் இல்லை. அவர் என்னை விதந்தோதி எழுதிய சிற்சில வரிகளும் ஆஹோ ஓஹோ வகையாறா ரசிகத் தொட்டியைச் சேர்ந்தவைகள்தான். புதிதாக எழுத வருபவர்களை நேரடியாக இல்லாமல் சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். அவர் புதிதாக எழுத வரவில்லை...புதி புதிதாக கழிவுக் குப்பைகளைத் தள்ளவே வந்திருக்கிறார். உங்கள் கருணை எனக்கு வாய்க்காவிட்டாலும், குறைந்த பட்சம் வளரும் படைப்பாளி வளர்ந்த படைப்பாளி பாதி வளர்ந்த படைப்பாளி என்ற பேதங்களில் எனக்கு உவப்பில்லை. ஒரு விமர்சனத்தை தாங்கமுடியாத இளம் படைப்பாளி எப்படி நாளை ஆகப் பெரிய விசயங்களை கையாளமுடியும்.

வளரும் படைப்பாளிகளை விமர்சித்தால் மனம் கோணும்...அப்படியா!. அய்யா... அது உண்மை இல்லை. வயதான படைப்பாளிகளை விமர்சித்தால் இங்கு சகலமும் அல்லவா கோணுகிறது. வன்மமும் வெற்றுக் கூச்சலும் தங்களது கால்களை அவமானகரமாக விரித்து நாற்காலிகளில் அமர்கிறது. என்ன செய்யமுடியும். படித்தேன் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இளையமனம் முதிய மனம் என்ற பேதமெல்லாம் எனக்கில்லை. என்னுடைய கவிதைகளுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் என் கவிதைகள் உங்களை கிறங்கடித்திருக்கிறது என நான் பொருள் கொள்ளலாமா...அவைகளில் ரமேஷ் பிரேம் பாதிப்பு அல்லது பிரேமிள் பாதிப்பு உண்டா..

ரமேஷ்-பிரேதன் எழுத்துக்கள் குறித்து நீங்கள் வைத்த வாதம் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இப்பொழுது அவர்களை நீங்கள் ஒரு முறை மறுவாசிப்புச் செய்யலாம். மேலும் அவர்கள் இருவரும் கவிதைகள் கட்டுரைகள், மற்றும் தத்துவத்தை கேள்விகேட்டல் என பழவகைகளில் தங்களது எழுத்துக்களை முன் வைத்தவர். பிரேமிள் கவிதைகளை முன் வைத்து ஒட்டுமொத்த ரமேஷ் பிரேதன் எழுத்துக்களை நீங்கள் வகைப் படுத்துவது. நீங்கள் பிரேமிளையும், ரமேஷ் பிரேமையும் இப்பொழுது மறுவாசிப்புச் செய்வதன் மூலம் அது தவறென உணரமுடியும். அவ்வளவே. அவர்கள் மூவருக்கும் படைப்பு ஒற்றுமைகளிலோ,படைப்புக்களிலோ எந்த சம்பந்தமும் இல்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் அவர்கள் தன்னளவில் படைப்பாளிகள். நிற்க.


மேலும் உங்கள் வாயிலாக இரண்டாவது வலசையில் மொழிபெயர்ப்புச் செய்த சக்திச் செல்வியின் டயானாக் கவிதை குறித்த உங்களது அபிப்ராயத்தைச் சொன்னால் மூணாவது இதழ் இன்னும் கொஞ்சம் தேறும் இல்லையா. அய்யா.... கயவாளித்தனத்தை தேர்ச்சி என்றால் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. சம்பந்தப்பட்ட கவிதையை வாசித்தவனாக நான் மொழிபெயர்ப்பாளருக்கு வைக்கும் முடிபு இதுதான் இவ்வளவு கேவலமான மொழிபெயர்ப்பைச் செய்வதற்க்கு உங்களுக்கு தைரியம் ஊட்டியது யார்....ஆரம்பத்தில் இருந்தேவா இல்லை இடையிலேயா...

மூலப் பிரதி 
மொட்டைப் பிரதி 
குட்டைப் பிரதி...
கார்லோஸ்...
பூக்கோ...
ஜிங்கிலுஸ்சுலதான்....
மங்குலுவஸ்தான்...
யஸ்கா பாரூட்வி....
என பல பெயர்களை வாந்தியெடுக்கும் நேசமித்ரன்... புகைரத பயணச்சீட்டில் உள்ள ஆங்கிலத்தைக் கூட வாசிக்கத் தெரியாதென என்னைச் சொன்ன நேசமித்ரன்... இக்கவிதையை தனது இதழில் அச்சேற்றியிருப்பது அவரது கோங்கில அறிவையும் அதன் பின்னாலுள்ள டோங்கில அரசியலையும் ஓரளவுக்கு எனக்குச் சொல்லுகிறது.

வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் அலைந்து திரிந்ததால் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் நிச்சயம் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன் என் பொருட்டாவது அக்கவிதையை தாங்கள் எனக்கு மொழிபெயர்த்து உதவினால் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்பதோடு நான் நண்பர்களோடு நடத்தும் குறளி இதழில் அச்சேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். எனக்கிந்த உதவியைச் செய்யுங்கள்.
உங்கள் விளம்பர மோகம் பற்றி நான் கூறியது உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பெருங்காயாமாகியிருந்தால் இன்னுமொரு மன்னிப்பு. நீங்கள் நேரடியாகவே தம்பி எனது படைப்புக்களை படி எனச் சொல்லலாம். என்ன படித்துவிட்டுப் பேசுவேன். அவ்வளவே.

வெளி நாடுகளில் இருந்ததால் சமகால படைப்புக்களை வாசிக்கமுடியவில்லை என நீங்கள் நேரடியாகச் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இங்கு நிகழ்காலத்திலும் எதையும் படிக்காது ஜும்புல்லிக்கா பறவை ஏகிக் கூர் நுனி தனிதமன் ஜெல்லி ஜவ்வுடு பரவல்தான் இலக்கியவாதி மனமாக தன்னை நினைத்துக்கொள்கிறது.

அய்யா இறுதியாக மறுபடியும் நான் கூறுவது ஒன்றுதான் எனது கேள்விகளுக்கு நேசமித்ரன் பதில் சொல்லாத காரணம் நான் நடுமூக்கில் நச்சுன்னு குத்துவேன் என்பதால்தான். இல்லையென்றால் அவர் நிறைய பதில்களைச் சொல்லியிருப்பார் என்ற தோற்றப் போலியையும் வாந்தியெடுக்கிறார். போதாக் குறைக்கு தன் எழுத்துக்கள் சொற்செட்டு அடர்த்தி என்றெல்லாம் சொல்லும் போது எனக்கு அளவிடமுடியா கடுப்பு வருகிறது. அகராதியில் ஒரு சொல்லுக்கு பல சொற்செட்டுகள் உண்டு அதற்கெல்லாம் நேசமித்ரன்தான் காரணமா. அயோக்கியத்தனத்தின் உச்சமில்லையா இது.

செநெல் கீறி முளைக்கா
வன்நிலத்தில் தூவிக் கிறங்க
அசோக் பைரில்லம் தெளிச்சூரிய நிழல்.

இவ்வகையானவை எல்லாம்  கவிதையா அய்யா....

அய்யா...நேசமித்ரனின் வார்த்தைகளில் உள்ள மாற்று உளவியலைமுன் வைத்து உரையாடினால் இவ்வளவு மோசமாக எழுதினால் எவனும் அடிப்பானோ என்ற ஒரு உள்ளுணர்வு பயம்தான் என நினைக்கிறேன்.
அய்யா முகவீதியையும் நாடோடித் தடத்தையும் நான் வாசிக்க எண்ணியதுண்டு. மேலும் அத்தொகுதிகளில் வசந்த குமாரின் நேர்த்தியான அட்டைப் படங்கள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்புத்தகங்களை வாங்கலாமென்றால் திருவாளர் நேசமித்ரன் தொந்தரவு செய்துவிடுகிறார். உங்களது கவிதை பற்றின ஒரு பார்வையை ஒளிக்குறிப்புகள் என அவரது தள முகப்பில் இட்டது உங்கள் மீதான வாசிப்பை என்னைத் தள்ளிப் போடச் செய்தது. அது தவறுதான். மாற்றிக்கொள்கிறேன். 

மேலும் இதில் நேசமித்ரனுக்கும் பங்குண்டு...அவரது பிளாக் முகப்பில் சே குவேரா படத்தைப் போட்டு ஒரு வாசகத்தைச் சே சொன்னதாக சொல்லியிருந்தார். “ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால் நீ என் தோழன்”, அய்யா உண்மையில் இது நேசமித்ரனின் வார்த்தைகள் ஆனால் அதைச் சே படத்தைப் போட்டு மொழிபெயர்ப்பென்ற பெருங்கேவலத்தைச் செய்திருந்தார். எனது புகை ரத பயணச்சீட்டை ஆங்கிலத்தில் வாசிக்கமுடியாத அறிவுதான் சே அப்படிச் சொல்லியிருக்கமாட்டாரே...அவரு துப்பாக்கி தூக்குற ஆளாச்சேன்னு ஆங்கில அறிவு மற்றும் அதன் சீவியான நேசமித்ரனிடம் அது நடுங்குவாயானால் இல்லை பொங்கினாயானால்....எனக் கேட்டேன். ஒரு சிறு நன்றியுடன் உடனே நடுங்குவாயானால் பொங்குவாயானால் என மாற்றம் நிகழ்ந்தது. சேர்ந்தாற்போல் ஒரு நாலு வார்த்தையை அதன் தத்துவப் பின்புலத்தோடு பெயர்க்க முடியாத ஒரு மண்ணாந்த்தை என் ஆங்கில அறிவைக் கேள்வி கேட்பது எனக்கு மிகுந்த அவமானத்தை தருகிறது. காலனியாதிக்க மலத்தையும் மக்கிய குப்பைகளையும் அதுவும் வெறு பெயர்களாய் எழுதி மதிக்கிற போக்குக்களை என்னால் மரியாதை கொடுத்து விளிக்கமுடியாதய்யா. எனக்கு ஆங்கிலம் சொல்லித் தர வெ.ஶ்ரீராம், சா,தேவதாஸ், குப்புசாமி மற்றும் கொற்றவை இருக்கிறார். மேலும் இதுவரை வாசித்து வந்த என் வாசக அறிவு ஒரு படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.

அய்யா என் வார்த்தைகளில் உள்ள தவறுகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் மிக்க மகிழ்வேன். மேலும் இளைய மூத்த என்ற பதங்களில் எனக்கு உவப்பில்லை. காலந்தாழ்த்தி பிறந்ததனால் நான் என்ன செய்யமுடியும். காலத்தைக் குறை கூற முடியாதில்லையா. நாம் குறிப்பதோ மனிதக் காலம்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை பொருட்படுத்தி பதில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. அதேபோல் இக்கடிதத்தில் நான் வைத்திருக்கும் கேள்விகளையும் தங்கள் பார்வையில் விளக்கினால் என்னால் உரையாடமுடியும். 

ஆனால்...அய்யா.... எனது எந்தக் கேள்விக்கும் பதில் வைக்காது அரைவேக்காட்டுத் தனமாய் அடிப்பேன் எனப் பயந்து ஓடியதாகச் சொன்ன நேசமித்ரனுக்குச் சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது... அடிக்கமாட்டேன்...வாங்க பழகலாம் என்பது உட்பட...அதே காத்திருப்புடன்...

எனது தொகுதிகள்

1 ஆகவே... நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன.
2 கள்ளக்காதல். ( ஆதிரனோடு சேர்ந்து) 
3 நித்ரா நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி.
4 எர்னெஸ்த்தோ செ கெபாராவைக் கொலை செய்தல்.
அய்யா இவைகளை நீங்கள் காசு கொடுத்து கூட வாங்கவேண்டாம். உங்கள் மேல் உள்ள ப்ரியத்தால் இதை இலவசமாகவே அனுப்பி வைக்கிறேன், விலாசத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். ஆனால் அதே ப்ரியத்தோடு உங்கள் கவிதை பற்றி கொட்டை எழுத்தில் தனது பக்கத்தில் பதிந்திருக்கும் நேசமித்ரன் எனும் ஒரு எழுத்தாளக் கழிவுக் குப்பைக்கு விமர்சனமாக எழுதி அனுப்புங்கள். சம்பந்தப் பட்ட தொகுதிகளில் ரமேஷ் பிரேம் பாதிப்பிருந்தால் உடனே சுட்டுங்கள்.ஏனெனில் உடனே என் எழுத்தை நான் மறுபடி வாசிக்க வேண்டும். அல்லது எழுதுவதை நிறுத்த வேண்டும். அதோடு நான் வைத்த வலசைகுதிரையை பற்றின கேள்விகளுக்கு அவரை பதிலளிக்கச் சொல்லுங்கள்...அதில் முதல் கேள்வி சக்தி செல்வி மொழிபெயர்த்ததாகச் சொல்லப்படும் டப்பா மொழிப்யர்ப்பு பற்றியும்...மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளையும் இணைக்கச் சொல்லுங்கள். டயானா பற்றிய குறிப்பிருந்தது...டயானாவைச் சீரழித்தவர் பற்றின குறிப்பும் எனக்குத் தேவை...

உங்களை நம்பி காத்திருக்கும்
வசுமித்ர.


Sunday, April 1, 2012

வணக்கம். ராஜ சுந்தரராஜன்....





 வணக்கம் அய்யா....

உங்கள் பெயரில் ராஜாவும் சுந்தரமும் பின் ஒரு ராஜாவும் இருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இது எனக்கு எந்த வேறுபாட்டையும் தரவில்லை. நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். நேசமித்ரன் எனக்கு வைத்த வசைகள் எளிய தமிழில் இருந்தது எனக்கு மகிழ்ச்சி. மேலும் இவ்வகை எழுத்து முறையையும் அவருக்கு நான்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் கோணங்கியையும் காப்பாற்றியிருக்கிறேன். இனி அவர் எழுதப்போகும் எழுத்துக்கள் குறித்து ஆர்வமாக உள்ளேன்.மிகச்சிறந்த முறையில் வாசகர்களையும் காப்பாற்றியிருக்கிறேன். என்னால் தொண்டு செய்து மாளவில்லை.

அன்பு ராஜ சுந்தரராஜன்... ரமேஷ் பிரேம் படைப்புகளை நீங்கள் படித்திருக்கும் பட்சத்தில் என் படைப்பு குறித்து நீங்கள் தாரளமாக விசாரிக்கலாம் .கோணங்கியின் கழிவுக்குப்பை என்றதும் நேசமித்ரனுக்கு  வந்த பதட்டத்தில்  “டீச்சர் கிள்ளி வைக்கிறான்” என்ற ஒப்பீட்டைப் போல்தான் இது. நீங்கள் அறிவுஜீவிகளை துணைக்கழைப்பதால் அவர்களின் தொடர்பு குறித்தும்  யோசித்திருப்பீர்கள். ஏதேனும் ஒரு அறிவு ஜீவி என் படைப்புக்கும் பிரேம் ரமேஷ் படைப்புகளுக்கும் உள்ள காப்பி...அல்லது ஒற்றுமை...அல்லது ஜெராக்ஸ் என்று நிரூபித்தால் எனக்கு உபயோகமாய் இருக்கும். மேலும் இதற்கு நீங்கள்தான் துணை செய்யவேண்டும்.   

அறிவு ஜீவிகளை உதவிக்கு அழைக்கும் உங்களது நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் நான் கட்டப்பஞ்சாயத்துக்கு  ஆள் திரட்டுபவன் அல்ல. பாடிகார்ட் முனிஸ்வரர்களை நான் அறவே வெறுக்கிறேன். வார்த்தைகளை விட வேறு வன்முறை அஸ்திரம் இருந்தால் சொல்லுங்கள்.

எனது விளம்பரப் ப்ரியம் குறித்து தாங்கள் அறிந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும் இங்கு உங்கள் விளம்பரத்தை பதிவு செய்வதையும் நான் புரிந்து கொள்கிறேன். பல இலக்கியங்கூட்டங்களுக்கு போனவன் அதாக்கும் அப்டியாக்கும் என்று மார் தட்டி நின்ற நேசமித்ரன் முன் நின்று இதை விமர்சியுங்கள். நீங்கள் அப்படி நிறைய கூட்டங்களில் பங்கேற்றிருப்பின், அது விளம்பரம் வேண்டாது அக்கூட்டங்களுக்கு நீங்கள் செய்த உதவியாகவே நினைக்கிறேன். நிற்க.

நீங்கள் என் கவிதைகளைப் படித்ததுண்டா ராஜ சுந்தரராஜன். நான் கோணங்கியைப் படித்திருக்கிறேன். நீங்கள் கோனங்கியைப் படித்திருந்தால் நேசமித்ரனின் படைப்புகள் என்று சொல்லும் அந்த கழிவுக் குப்பை குறித்து விவாதிக்கலாம். நான் மிகுந்த தைரியத்தோடு உள்ளேன். மேலும், பேச ஒரு ஆள் கிடைப்பது கூடுதல் பலமில்லையா...

நேசமித்ரனின் ஆரம்ப கட்ட எளிய வரிகள் கொண்ட சில கவிதைகளைத் தவிர, அவர் கோணங்கியை கொலைக்குத்து குத்தத் தொடங்கியது முதல், வலசை முதல் தலையங்கத்திலிருந்து... கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவன் ( பொம்மைக்கும் அதுவும் கார்டூன் பொம்மைக்கும் டப்பிங் ) என்ற கழிவு வரை தொடங்கி...வலசை ரெண்டில் க்ளெனன் மீன்கள் முதற்கொண்டு இப்போது கோணங்கி குறித்து அவர் எழுதியிருக்கும் அனைத்து வரிகளும் கோணங்கியை நுகர்ந்து பார்த்து வாசம் பிடிபடாமல் கழிவாய் இறக்கி வைத்தவையே....ஒட்டுமொத்தமாக அவை ஆகச்சிறந்த கழிவென்பதால் இரண்டு வரிகளைக் கூட தரம் பிரிக்கமுடியவில்லை.
விரிவாக உரையாடலாம்.

என் கவிதைகளை நீங்கள் படித்திருந்தால் அது குறித்து நான் பேச நிறைய இருக்கிறது.

அதோடு நேசமித்ரன் எழுத்துக்கள் கழிவுக் குப்பையல்ல என்றால் அது குறித்தும் விமர்சனம் செய்து, உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சிறு குறிப்பு; எனக்கு ஆங்கிலம் தெரியாது என்ற நேசமித்ரனின் அகந்தையை வரவேற்கிறேன். ஆங்கிலம் தெரிந்தவன்தான் சிற்றிலக்கியவாதி என்றால், அவன் எழுதுவதுதான் கவிதையென்றால்...ஆங்கில அகராதி, அறிவியல் அகராதியும் கவிதையே...நிகண்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்...

நான் நிறைய கேள்விகளை வைத்த பின்னும் அதை எதுவுமே கவனிக்காது மேற்கோள்களை  நான் வைப்பதாக தாங்கள் சொல்வது உங்கள் மீது எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணுகிறது.

மேலும் வலசை இரண்டாவது இதழில் பக்கம் 190 ல் புலனுறுதல் - எல். டயனா என்ற பெயரும்...ஆசிரியர் பற்றிய  குறிப்பில்  கீழே டயானா என்றும் குறிக்கப்பட்ட ஒரு கவிஞரின் மொழி பெயர்ப்பு உள்ளது.

அய்யா...அதை மொழிபெயர்த்தது...ஆங்கிலம் மற்றும் சீனம் ஜப்பான் மலேசியா சிங்கப்பூர்களில் எல்லா இடங்களிலும் கோபால் பல்பொட்டி போல் கிடைக்கும் ஆங்கிலம் அறிந்த சக்தி செல்வி அவர்கள். அது  அவர்கள்  மொழிபெயர்த்ததுதானா  என்று கேட்டுச் சொல்லுங்கள். ( ஏனென்றால் மார்க்குவெஸ் சிறப்பிதழ் என் கைவசம் இல்லை. நேசமித்ரனிடம் இருக்கலாம்.) 

What It’s Like

Do you know what it’s like,

To look in the mirror and not see you,

To feel that you are someone else,

To feel that you have the wrong body.



Do you know what it’s like,

To be not able to tell your parents,

To be not able to tell your bothers and sisters,

To be not able to tell your friends.



Do you know what it’s like,

To be asked how was your weekend,

To fear hearing your name shouted on the street,

To fear going out to the store as yourself.



Do you know what it’s like,

To realize that you still have lipstick on when you hand the teller your check,

To realize that you still have some nail polish on when you reach for a cup of coffee,

To realize that you still have a barrette in your hair at the store.



Do you know what it’s like,

To be transsexual.


அய்யா இதுதான் அந்த ஆங்கிலக் கவிதை. உங்களுக்கு ஆங்கில அறிவு இருக்கும் பட்சத்தில் இதை மொழிபெயர்ப்பதோடு, சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளருக்கும், எவ்வித விளம்பரமில்லாமல் உதவ வேண்டும் என மிகுந்த கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு தலையங்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்று வயதான எழுத்தாளரான உங்களுக்குத் தெரியும். அவர் எழுதிய தலையங்கம் குறித்தும் பேச அன்போடு காத்திருக்கிறேன். அய்யா நான் கோணங்கியின் கழிவுக் குப்பை என்று நேசமித்ரனின் எழுத்துக்களைச் சொன்னேன். அதை இல்லையென்று நீங்கள் நிரூபிக்கலாம். மேற்கோள்களை வேறு காட்டவேண்டுமா... ஒட்டுமொத்தக் கழிவில் நான் சிறந்த கழிவைப் பிரிக்கும் வேலையைப் பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று தாங்கள் அறியாததா.

அய்யா.... நீங்கள் அழைத்த அறிவு ஜீவிகளின் பட்டியலில் கோணங்கி இருந்தால் இது குறித்து அவரையே கேட்கலாம். என் படைப்புகள் குறித்து ரமேஷ் பிரேதன் விமர்சனமே செய்திருக்கிறார். அப்படியென்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியனே கண்டு பிடிக்கமுடியாத ஒன்றை நேசமித்ரன் கண்டு பிடித்திருக்கிறாரா நண்பரே.

அதையும் விளக்குங்கள்.

குறிப்பு;  தயவு செய்து அவரை இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு, அடிக்கிறேன்... பிடிக்கிறேன்... ரத்தம்... வன்முறை, ரத்தப்பலி, ( குறைந்த பட்ச வசையில் கூட மனுஷ்யபுத்திரனையும் காப்பியடித்து அவருக்கும் உலை வைக்கும் காரியம் அது) உட்டாலக்கடி பம்பா...விட்டாலக்கடி ஜிம்பா என்று எழுதி இதையும் சொற்செட்டு என்று அவர் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

காத்திருக்கிறேன்.

என் கவிதைகள் குறித்து உங்களது விமர்சனம் என்ன....உதவுங்கள்.


நேசமித்ரன்.....வாங்க பழகலாம்....




வணக்கம் நேசமித்ரன் உங்கள் போலிப் பூனைக் குட்டிகள் வெளி வந்துள்ளதால் நீங்கள் அடையும் பதட்டத்தை நான் மிகவும் ஆனந்தத்துடன் பார்க்கிறேன். என் கவிதைகளைப் படித்து  நீங்கள் நெக்குருகி எழுதிய வார்த்தைகளை கூகுள் பஸ்ஸில் ஆதாரமாக எடுத்துப் போட்டும் உங்களுக்கு புத்தி வரவில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.

புத்தகச் சந்தையில் அண்ணே என்ன புத்தகம் படிக்கலாம் சொல்லுங்கண்ணே.. உங்க லிஸ்ட காட்டமாட்டேன்னு சொல்லுறீங்களே எனக் கெஞ்சியதை...உண்மையில் கெஞ்சவே செய்தீர்கள். கோனங்கி பற்றிய பதிவுக்கு ஏண்ணே அவரப் போயி பாவத்த என்றீர்கள் அப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் கோணங்கியை வெறும் ஆள்காட்டி அரசியலுக்காக மட்டுந்தான் பேசுகிறீர்கள் என்று..

நண்பரே எனது ஆங்கில அறிவை எனது படைப்புகளில் காட்ட வேண்டுமா வேண்டாமா என்பது என் வரையிலான புரிதல். நீங்கள் சுயமாக மொழிபெயர்த்த ஒன்றை சுட்டினால் மிக்க மகிழ்ச்சியோடு படிப்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக நானாக உங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. நைஜீரியாவிலிருந்து பல இடங்களிலிருந்து நீங்கள்தான் அழைப்பு விடுத்தீர்கள். உங்களது கைபேசி பில்லை சரி பார்க்கலாம்.

நான் பிரேம் ரமேஷின் எந்திரம் என்றால் நிரூப்பீயுங்கள் நண்பரே. அதைவிட்டுக் கழுதைக் கூச்சல் எதற்கு.

வலசை குறித்து என் அபிப்ராயம் ஒரு பொருட்டேயில்லை என்பதிலிருந்து தொடங்குகிறது உங்களது கோமாளித்தனம். நீங்களாக தேடி வந்து வலசையைக் கொடுத்ததும்...முதல் வலசை குறித்து கிட்டத்தட்ட அண்ணே அண்ணே என விளக்கம் கொடுத்ததையும் புளுகு என்றே சொல்லிக்கொள்ளுங்கள். உண்மையில் கோணங்கி பற்றி நேரடியாக அவரிடம் சொல்ல எந்த வார்த்தைகளுமில்லை. நீங்கள் கோணங்கியை எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கோணங்கிக்குத் தெரியும் நேசமித்ரன். ஜல்லியடிப்புகளை இலக்கியம் என்று கூவாதீர்கள்.

வாசகன், படைப்பாளி.. வார்த்தைகளை எங்கு கற்றீர்கள் முதலில் படைப்பாளிக்கும் ஜெராக்ஸ் மெஷினுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் படைப்பாளி என்றால் கோணங்கியை என்னவென்று சொல்லுங்கள். கோணங்கி குறித்து யவனிகா குறித்து மட்டும்தான் நீங்கள் கருத்துச் சொன்னீர்களா இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணே நீங்க சொல்றதுதாண்னே இங்க எவனும் வாசிக்க மாட்டாய்ங்குறேண்ணே...என்ன வழிசல் இது நேசமித்ரன்? இந்த வார்த்தைகள் ஞாபகமில்லையா. ஒன்று மட்டும் உறுதி இப்பொழுது வரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஒரு இலக்கியவாதியாய் பதில் தராது. அய்யோ அம்மா காட்டிக் கொடுக்கிறானே என்ற உங்கள் வயிற்றெரிச்சல் என்னையே பதட்டப்படவைக்கிறது.

அன்பரே புத்தகச் சந்தையில் இருந்த வன்முறை குறித்துப் பேசும் நீங்கள் என் வாழ்வில் நடந்த வன்முறையை மயிரளவு கூட அறிந்திருக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். வன்முறை, அரசியல், பிரதி எல்லாம் சும்மா வார்த்தைகள் இல்லை. படித்துவிட்டு வா தம்பி எழுத்துக்களை உருப்போட்டு ஊற்றிக்கொடுத்து இலக்கியம் வளர்க்காதே. ஒரு சாதரண சண்டையை கோணங்கி மொழியைக் காப்பிடடிக்கிறீர்கள் என்று சொன்னவுடன்.. வன்முறை எனப் பதிவு செய்யுய்ம் உங்கள் புத்தியை என்ன சொல்வது. உண்மையில் வன்முறை என்றால் என்ன தெரியுமா படைப்பு ரீதியாக ஒரு எழுத்தாளனை காப்பியடித்து அவனை கதறக் கதற வன்புணர்ச்சி செய்வது. வலிமையற்ரவர்களின் மேல் வலிமையுள்ளவர்கள் செய்யும் உடல் அதிகாரம் அது. அந்த சண்டை குறித்து அருகில் இருந்த லஷ்மி சரவணக்குமார் மிகத் தெளிவாக பதில் எழுதியிருந்தார்...கணேசகுமார் அருகில் இருந்தார். சந்திரா இருந்தார். நீங்கள் எங்கே பதுங்கி பம்மி ஓடி விட்டீர்களோ. உண்மை தெரியுமா சங்கரிடம் இப்பொழுதும் புன்னகை செய்கிறேன் பதிலுக்கு இன்னும் தெளிவான புன்னகையைப் பதிலாகப் பெறுகிறேன். இந்த இலக்கியவாதிகள் குறித்து அவர்களின் ஆசாபாசங்கள் குறித்தெல்லாம் தெரியாத நீங்கள் உங்கள் இளித்த புன்னகையுடன் உள்ள புகைப்படங்களைக் கேட்டுப் பாருங்கள். இதில் பல இலக்கியக் கூட்டத்திற்கு சென்றாராம்...என்ன செய்தீர்கள் அங்கு வேடிக்கை பார்த்தீர்களா நேசமித்திரன். தம்பி விமர்சனம் செய்தால் அடிப்பேன் என்று ஒருவர் கோபத்தில் பேசியது வன்முறை இல்லை...இல்லையா...தம்பி அது எங்கள் பிரச்சினை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்களைப் பஞ்சாயத்துக்கு இதில் யாரும் கூப்பிடவில்லையே. உங்கள் படைப்புகள் குப்பை என்றதும் சண்டைய வன்முறை எனும் உங்கள் கூட்டாஞ் சோறு அறிவு மகிழ்ச்சியடைய வைக்கிறது. நீங்கள் ஏதேனும் சிற்றிலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தகவல் தெரிவியுங்கள். வாழ்த்துக்கள். உங்கள் பத்திரிக்கையில் நீங்கள் எதையும் சொல்லிவிட்டுப் போங்கள் அது உங்கள் அதிகாரம். உங்கள் கழிப்பறை ஆனால் உங்கள் கழிப்பறையில் கோனங்கியைத் தப்பாக பேண்டு வைப்பது எதனால் என்று ஒரு வாசகனாக நான் கேட்பேன். வாசகன் எழுத்தாளனிடம் அதிகாரம் செலுத்தக்கூடாதென்ற வார்த்தையெல்லாம் எங்கு படித்தீர்கள். அய்யோ...அய்யோ...தம்பி இந்த அதிகாரமெல்லாம் பார்த்து பல வருடங்களாயிற்று.

போவோர் வருவோரிடம் நான் புலம்பவில்லை நேசமித்ரன் நீங்கள்தான் வலசை.. கோணங்கி.. கோணங்கி எனக் கூவியதோடு என் கையைப் பிடித்து இழுத்து அண்ணே புத்தகம் அண்ணே புத்தகம் எனக் கெஞ்சினீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஒரு பொறணி மாறியிடமும் பொய் சொல்லியிடமும்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

தனி மனித தாக்குதல் என்றாலே அர்த்தம் தெரியாத நீங்கள் என்னிடம் பேசுவது மிகுந்த அவமான உணர்ச்சியைத் தருகிறது. மறுபடி மறுபடி நீங்கள் எழுதியதை படைப்புகள் எனவும் நீங்கள் படைப்பாளி எனவும் சொல்கிறீர்கள் அப்படியென்றால் உண்மையான படைப்புக்கும் உண்மையான ஒரு படைப்பாளிக்கும் என்ன வித்தியாசம், சரி அய்யா உங்கள் கோணங்கியையே சொல்லச் சொல்லுங்கள் இல்லை யவனிகாவைப் பேசச் சொல்லுங்கள் உங்கள் காப்பிக் குப்பை உண்மையில் படைப்புதானென்று...விவாதிக்கக் காத்திருக்கிறேன்.

நேரடியாக உரையாட ஒருவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் இடைநீக்கம் செய்யும் நீங்கள் ஒரு மகாத்மா நேசமித்ரன். உங்கள் அன்பு நானறிந்ததே....நான் மிரட்டல் விடுத்தேன் என்று தாமதமாக புரிந்து கொண்ட உங்கள் ஜெராக்ஸ் மனதை உணர்ந்து கொண்டேன், அய்யோ சாமி அடிக்க வர்றான் என கைப்பிள்ளை போல் கூவாதீர்கள் நேசமித்திரன் வெறும் குப்பைகளை எழுதும் உங்கள் பரிதாப கோலம் சிரிப்பை வரவழைக்கிறது. வேண்டுமென்றால் பாடி கார்டுகளை வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இலக்கியத்தோடு கராத்தே பயிற்சியும் தெரியும் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. அது குறித்து பேச எனக்கு ஒன்றுமேயில்லை.

அப்புறம் ஆபாசம் அறுவெறுப்பெல்லாம் உங்களுக்கு இப்பொழுதுதான் வருகிறது அதோடு வாந்தியும். எனக்கு முதல் கடிதத்திலேயே இவை உட்பட இன்னும் எல்லாம் வந்துவிட்டது நேசமித்ரன். ஆனாலும் இந்த வன்முறையாளன் உங்களிடம் பேசவே நினைக்கிறான். அன்பின் உருவான நீங்கள் என்னை முகப் புத்தகத்திலிருந்து விலக்கம் செய்கிறீர்கள், உங்கள் விளக்கக் குப்பையை இடுகையிட்டும் தகவல் சொல்லவில்லை மிக்க மகிழ்ச்சி.

எனது இலக்கியம் ரத்தத்தால் ஆனது மட்டுமல்ல என் குசுவாலும் ஆனதுதான் நண்பரே...அது என் குருதி.. என் குசு. அந்தத் திமிர் எனக்கு எப்பொழுதும் உண்டு நண்பனே. ஆனால் கோனங்கியை உறிஞ்சியெடுத்து வாந்தியெடுக்கும் நீங்கள் என் மேல் செலுத்தும் விமர்சன அதிகாரத்தை மெச்சி உச்சி முகர்கிறேன்இறுதியாக நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான் நேசமித்ரன். அன்று உங்கள் கோணங்கி மீதான விமர்சனமே கோணங்கியை ஜல்லியடித்தது என விவாதித்த அனைவரிடமும் வாதிடத் தயாராய் இருக்கிறேன் நீங்கள் கோணங்கியின் கழிவுக் குப்பையே. அதில் எந்த மாற்றமும் இல்லை.

….சிந்தியது போக....என்னிடம் சிந்துவதற்கு எனக்கு இன்னும் குருதி இருக்கிறது. ஆனால் உங்களை போன்ற ஒரு போண்டா மணிக்கு...அதை....ச்சே....ச்சே...என்ன இது நேசமித்ரன்....காமெடி பண்ணாதீங்க....உங்களைப் போன்ற ஒருவரை....எப்படி...

பாதுகாப்பெல்லாம் வேண்டாம். நேசமித்ரன். பேசக் கூப்பிட்டாலே வன்முறை எனும் உங்கள் மனத்தை மதித்து காத்திருக்கிறேன். உங்கள் வாதம் இப்படித் திரும்பும் என்பதும் நான் அறிந்ததே. அதனால்தான் நான் ஆட்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

காத்திருக்கிறேன்.

சாமி உண்மை தெரிஞ்சாகணும் சாமி என்ற வசனத்தைக் கூடவாய்யா ஒரு மனிசன் காப்பியடிப்பான்....

மிகுந்த காதலுடன்.....

குறிப்பு வலசை இரண்டாவது இதழ் பக்கம் 190 இல் சக்திச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்பு உள்ளது. அது உண்மையில் சக்திச் செல்வி மொழிபெயர்த்ததுதானா.. 

த்தூ...

இந்த இலக்கியப் பணிக்கு வேறு பெயர் நேசமித்ரன்....இன்னும் உரையாடும் பேரன்புடன்....