Pages

Sunday, April 1, 2012

நேசமித்ரன்.....வாங்க பழகலாம்....




வணக்கம் நேசமித்ரன் உங்கள் போலிப் பூனைக் குட்டிகள் வெளி வந்துள்ளதால் நீங்கள் அடையும் பதட்டத்தை நான் மிகவும் ஆனந்தத்துடன் பார்க்கிறேன். என் கவிதைகளைப் படித்து  நீங்கள் நெக்குருகி எழுதிய வார்த்தைகளை கூகுள் பஸ்ஸில் ஆதாரமாக எடுத்துப் போட்டும் உங்களுக்கு புத்தி வரவில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.

புத்தகச் சந்தையில் அண்ணே என்ன புத்தகம் படிக்கலாம் சொல்லுங்கண்ணே.. உங்க லிஸ்ட காட்டமாட்டேன்னு சொல்லுறீங்களே எனக் கெஞ்சியதை...உண்மையில் கெஞ்சவே செய்தீர்கள். கோனங்கி பற்றிய பதிவுக்கு ஏண்ணே அவரப் போயி பாவத்த என்றீர்கள் அப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் கோணங்கியை வெறும் ஆள்காட்டி அரசியலுக்காக மட்டுந்தான் பேசுகிறீர்கள் என்று..

நண்பரே எனது ஆங்கில அறிவை எனது படைப்புகளில் காட்ட வேண்டுமா வேண்டாமா என்பது என் வரையிலான புரிதல். நீங்கள் சுயமாக மொழிபெயர்த்த ஒன்றை சுட்டினால் மிக்க மகிழ்ச்சியோடு படிப்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக நானாக உங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. நைஜீரியாவிலிருந்து பல இடங்களிலிருந்து நீங்கள்தான் அழைப்பு விடுத்தீர்கள். உங்களது கைபேசி பில்லை சரி பார்க்கலாம்.

நான் பிரேம் ரமேஷின் எந்திரம் என்றால் நிரூப்பீயுங்கள் நண்பரே. அதைவிட்டுக் கழுதைக் கூச்சல் எதற்கு.

வலசை குறித்து என் அபிப்ராயம் ஒரு பொருட்டேயில்லை என்பதிலிருந்து தொடங்குகிறது உங்களது கோமாளித்தனம். நீங்களாக தேடி வந்து வலசையைக் கொடுத்ததும்...முதல் வலசை குறித்து கிட்டத்தட்ட அண்ணே அண்ணே என விளக்கம் கொடுத்ததையும் புளுகு என்றே சொல்லிக்கொள்ளுங்கள். உண்மையில் கோணங்கி பற்றி நேரடியாக அவரிடம் சொல்ல எந்த வார்த்தைகளுமில்லை. நீங்கள் கோணங்கியை எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கோணங்கிக்குத் தெரியும் நேசமித்ரன். ஜல்லியடிப்புகளை இலக்கியம் என்று கூவாதீர்கள்.

வாசகன், படைப்பாளி.. வார்த்தைகளை எங்கு கற்றீர்கள் முதலில் படைப்பாளிக்கும் ஜெராக்ஸ் மெஷினுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் படைப்பாளி என்றால் கோணங்கியை என்னவென்று சொல்லுங்கள். கோணங்கி குறித்து யவனிகா குறித்து மட்டும்தான் நீங்கள் கருத்துச் சொன்னீர்களா இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணே நீங்க சொல்றதுதாண்னே இங்க எவனும் வாசிக்க மாட்டாய்ங்குறேண்ணே...என்ன வழிசல் இது நேசமித்ரன்? இந்த வார்த்தைகள் ஞாபகமில்லையா. ஒன்று மட்டும் உறுதி இப்பொழுது வரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஒரு இலக்கியவாதியாய் பதில் தராது. அய்யோ அம்மா காட்டிக் கொடுக்கிறானே என்ற உங்கள் வயிற்றெரிச்சல் என்னையே பதட்டப்படவைக்கிறது.

அன்பரே புத்தகச் சந்தையில் இருந்த வன்முறை குறித்துப் பேசும் நீங்கள் என் வாழ்வில் நடந்த வன்முறையை மயிரளவு கூட அறிந்திருக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். வன்முறை, அரசியல், பிரதி எல்லாம் சும்மா வார்த்தைகள் இல்லை. படித்துவிட்டு வா தம்பி எழுத்துக்களை உருப்போட்டு ஊற்றிக்கொடுத்து இலக்கியம் வளர்க்காதே. ஒரு சாதரண சண்டையை கோணங்கி மொழியைக் காப்பிடடிக்கிறீர்கள் என்று சொன்னவுடன்.. வன்முறை எனப் பதிவு செய்யுய்ம் உங்கள் புத்தியை என்ன சொல்வது. உண்மையில் வன்முறை என்றால் என்ன தெரியுமா படைப்பு ரீதியாக ஒரு எழுத்தாளனை காப்பியடித்து அவனை கதறக் கதற வன்புணர்ச்சி செய்வது. வலிமையற்ரவர்களின் மேல் வலிமையுள்ளவர்கள் செய்யும் உடல் அதிகாரம் அது. அந்த சண்டை குறித்து அருகில் இருந்த லஷ்மி சரவணக்குமார் மிகத் தெளிவாக பதில் எழுதியிருந்தார்...கணேசகுமார் அருகில் இருந்தார். சந்திரா இருந்தார். நீங்கள் எங்கே பதுங்கி பம்மி ஓடி விட்டீர்களோ. உண்மை தெரியுமா சங்கரிடம் இப்பொழுதும் புன்னகை செய்கிறேன் பதிலுக்கு இன்னும் தெளிவான புன்னகையைப் பதிலாகப் பெறுகிறேன். இந்த இலக்கியவாதிகள் குறித்து அவர்களின் ஆசாபாசங்கள் குறித்தெல்லாம் தெரியாத நீங்கள் உங்கள் இளித்த புன்னகையுடன் உள்ள புகைப்படங்களைக் கேட்டுப் பாருங்கள். இதில் பல இலக்கியக் கூட்டத்திற்கு சென்றாராம்...என்ன செய்தீர்கள் அங்கு வேடிக்கை பார்த்தீர்களா நேசமித்திரன். தம்பி விமர்சனம் செய்தால் அடிப்பேன் என்று ஒருவர் கோபத்தில் பேசியது வன்முறை இல்லை...இல்லையா...தம்பி அது எங்கள் பிரச்சினை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்களைப் பஞ்சாயத்துக்கு இதில் யாரும் கூப்பிடவில்லையே. உங்கள் படைப்புகள் குப்பை என்றதும் சண்டைய வன்முறை எனும் உங்கள் கூட்டாஞ் சோறு அறிவு மகிழ்ச்சியடைய வைக்கிறது. நீங்கள் ஏதேனும் சிற்றிலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தகவல் தெரிவியுங்கள். வாழ்த்துக்கள். உங்கள் பத்திரிக்கையில் நீங்கள் எதையும் சொல்லிவிட்டுப் போங்கள் அது உங்கள் அதிகாரம். உங்கள் கழிப்பறை ஆனால் உங்கள் கழிப்பறையில் கோனங்கியைத் தப்பாக பேண்டு வைப்பது எதனால் என்று ஒரு வாசகனாக நான் கேட்பேன். வாசகன் எழுத்தாளனிடம் அதிகாரம் செலுத்தக்கூடாதென்ற வார்த்தையெல்லாம் எங்கு படித்தீர்கள். அய்யோ...அய்யோ...தம்பி இந்த அதிகாரமெல்லாம் பார்த்து பல வருடங்களாயிற்று.

போவோர் வருவோரிடம் நான் புலம்பவில்லை நேசமித்ரன் நீங்கள்தான் வலசை.. கோணங்கி.. கோணங்கி எனக் கூவியதோடு என் கையைப் பிடித்து இழுத்து அண்ணே புத்தகம் அண்ணே புத்தகம் எனக் கெஞ்சினீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஒரு பொறணி மாறியிடமும் பொய் சொல்லியிடமும்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

தனி மனித தாக்குதல் என்றாலே அர்த்தம் தெரியாத நீங்கள் என்னிடம் பேசுவது மிகுந்த அவமான உணர்ச்சியைத் தருகிறது. மறுபடி மறுபடி நீங்கள் எழுதியதை படைப்புகள் எனவும் நீங்கள் படைப்பாளி எனவும் சொல்கிறீர்கள் அப்படியென்றால் உண்மையான படைப்புக்கும் உண்மையான ஒரு படைப்பாளிக்கும் என்ன வித்தியாசம், சரி அய்யா உங்கள் கோணங்கியையே சொல்லச் சொல்லுங்கள் இல்லை யவனிகாவைப் பேசச் சொல்லுங்கள் உங்கள் காப்பிக் குப்பை உண்மையில் படைப்புதானென்று...விவாதிக்கக் காத்திருக்கிறேன்.

நேரடியாக உரையாட ஒருவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் இடைநீக்கம் செய்யும் நீங்கள் ஒரு மகாத்மா நேசமித்ரன். உங்கள் அன்பு நானறிந்ததே....நான் மிரட்டல் விடுத்தேன் என்று தாமதமாக புரிந்து கொண்ட உங்கள் ஜெராக்ஸ் மனதை உணர்ந்து கொண்டேன், அய்யோ சாமி அடிக்க வர்றான் என கைப்பிள்ளை போல் கூவாதீர்கள் நேசமித்திரன் வெறும் குப்பைகளை எழுதும் உங்கள் பரிதாப கோலம் சிரிப்பை வரவழைக்கிறது. வேண்டுமென்றால் பாடி கார்டுகளை வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இலக்கியத்தோடு கராத்தே பயிற்சியும் தெரியும் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. அது குறித்து பேச எனக்கு ஒன்றுமேயில்லை.

அப்புறம் ஆபாசம் அறுவெறுப்பெல்லாம் உங்களுக்கு இப்பொழுதுதான் வருகிறது அதோடு வாந்தியும். எனக்கு முதல் கடிதத்திலேயே இவை உட்பட இன்னும் எல்லாம் வந்துவிட்டது நேசமித்ரன். ஆனாலும் இந்த வன்முறையாளன் உங்களிடம் பேசவே நினைக்கிறான். அன்பின் உருவான நீங்கள் என்னை முகப் புத்தகத்திலிருந்து விலக்கம் செய்கிறீர்கள், உங்கள் விளக்கக் குப்பையை இடுகையிட்டும் தகவல் சொல்லவில்லை மிக்க மகிழ்ச்சி.

எனது இலக்கியம் ரத்தத்தால் ஆனது மட்டுமல்ல என் குசுவாலும் ஆனதுதான் நண்பரே...அது என் குருதி.. என் குசு. அந்தத் திமிர் எனக்கு எப்பொழுதும் உண்டு நண்பனே. ஆனால் கோனங்கியை உறிஞ்சியெடுத்து வாந்தியெடுக்கும் நீங்கள் என் மேல் செலுத்தும் விமர்சன அதிகாரத்தை மெச்சி உச்சி முகர்கிறேன்இறுதியாக நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான் நேசமித்ரன். அன்று உங்கள் கோணங்கி மீதான விமர்சனமே கோணங்கியை ஜல்லியடித்தது என விவாதித்த அனைவரிடமும் வாதிடத் தயாராய் இருக்கிறேன் நீங்கள் கோணங்கியின் கழிவுக் குப்பையே. அதில் எந்த மாற்றமும் இல்லை.

….சிந்தியது போக....என்னிடம் சிந்துவதற்கு எனக்கு இன்னும் குருதி இருக்கிறது. ஆனால் உங்களை போன்ற ஒரு போண்டா மணிக்கு...அதை....ச்சே....ச்சே...என்ன இது நேசமித்ரன்....காமெடி பண்ணாதீங்க....உங்களைப் போன்ற ஒருவரை....எப்படி...

பாதுகாப்பெல்லாம் வேண்டாம். நேசமித்ரன். பேசக் கூப்பிட்டாலே வன்முறை எனும் உங்கள் மனத்தை மதித்து காத்திருக்கிறேன். உங்கள் வாதம் இப்படித் திரும்பும் என்பதும் நான் அறிந்ததே. அதனால்தான் நான் ஆட்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

காத்திருக்கிறேன்.

சாமி உண்மை தெரிஞ்சாகணும் சாமி என்ற வசனத்தைக் கூடவாய்யா ஒரு மனிசன் காப்பியடிப்பான்....

மிகுந்த காதலுடன்.....

குறிப்பு வலசை இரண்டாவது இதழ் பக்கம் 190 இல் சக்திச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்பு உள்ளது. அது உண்மையில் சக்திச் செல்வி மொழிபெயர்த்ததுதானா.. 

த்தூ...

இந்த இலக்கியப் பணிக்கு வேறு பெயர் நேசமித்ரன்....இன்னும் உரையாடும் பேரன்புடன்....

5 comments:

  1. வலையுலகத்துல சண்டை போடுறது ஒரு விளம்பர வாய்ப்பு. அப்படித்தானா, வசுமித்ர? நேசமிதர?

    ஆமா, இந்த 'மித்ர' என்பதற்கு என்ன அர்த்தமாவது இருந்துவிட்டுப் போகட்டும். The difference is between the 'வசு' and 'நேசம்'.

    I call upon the knowledgeable people to help.

    இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு?

    ReplyDelete
  2. நண்பா, வணக்கம். நலமா? உங்களை போன்றவர்களை 'நண்பா' என்று அழைப்பதில் பெருமிதம் கொள்பவன் நான். உங்களின் எழுத்துகளின் மூலமாகவே உங்களை அணுகியவன் என்பதை நீங்கள் அறிவிர்கள். எனக்கும் இது போன்ற கசப்பான/புளிப்பான அனுபவம் உண்டு. தனிப்பட்ட வாழ்வில் மட்டுமில்லாது இலக்கிய படைப்பாளர் இடத்திலும் இந்த அனுபவம் எனக்குண்டு. ஆரமபத்தில் மிகவும் மனவேதனைபட்டு தூக்கம் இழந்த நாட்கள் ஏராளம். போக போக பழக்கி கொண்டேன் என்னை. உங்களின் எழுத்துகளையும் சங்கரின் எழுத்துகளையும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. தப்பும் தவறாகவும் விஷயம் கேள்விப்பட்ட போது நான் அடைந்த வேதனை சொல்லிமாளாது நண்பா. வாசகனை பற்றி உங்களுடைய புரிதல் தன் எனக்கும். எந்த ஒரு 'ஒலக' இலக்கியத்தையும் என்னால் காறி துப்பி தூக்கி எறிய உரிமை உண்டு. ஏனென்றால் "நான் வாசகன்". போகட்டும். உங்களின் மீது அக்கறை கொண்ட சக நண்பனாக உங்களுக்கு நான் சொல்லவதெல்லாம் ''கோபம் விடுங்கள்''. ஒருவரின் கோபத்தால் அவரின் உடலும் மனமும் தான் கெடும்.

    ReplyDelete
  3. டைட்டில் ‘வாராய்.. நீ வாராய்...’ என்றிருந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? :-)

    என்னையும் பழக கூப்பிட்டுடாதீங்க. சும்மா வேடிக்கை பார்க்குற வழிப்போக்கன் நான்...

    ReplyDelete
  4. வணக்கம் யுவகிருஷ்ணா...வாராய் வராய் நல்ல தேர்வுதான். ஆனால் நான் அடித்துவிடுவேன் என்ற பயத்தால் நேசமித்திரன் என்னிடம் பேசவில்லை என்கிறார். நீங்கள் குறிப்பிட்ட பாடலின் இறுதியில் மலையில் இருந்து உருட்டியல்லவா விடுவார்கள். இது வேறு வம்பா...நாம் பழகிக்கொண்டுதான் இருக்கிறோம் யுவகிருஷ்ணா...

    ReplyDelete
  5. வணக்கம் வேல் கண்ணன்...அந்த புளிப்பான மற்றும் கசப்பான அனுபவங்களை பதிவு செய்யுங்கள். பதிவிலக்கியம்தான் நான் செய்தது. எவ்வளவு வரவேற்பு. எனக்கு எந்த கோபமும் இல்லை வேல் கண்ணன். படைப்பு சார்ந்து பேசுகையில் நான் அடிப்பேன் என்கிற எதிர்பார்ப்போடு நேசமித்ரன் எனக்கு பதில் வைத்தார். மேற்கொண்டு பிளாக் செய்தார்...நான் எவ்வளவு அன்போடு என்கருத்துக்களை முன் வைக்கிறேன்...சங்கருக்கும் எனக்கும் நடந்ததில் ஏன் நடந்தது என்று இருவரும் பேசிக்கொண்டோம். அதை ஒரு வியாதி போல் பரப்புரை செய்கிறவர்கள் நம் நண்பர்களே. என்ன செய்வது.

    நான் கோபிக்காமல் இருந்ததால்தான் வேல் கண்ணன் மருத்துவமனையில் படுத்தேன். ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு சற்று விரிவாக எழுத நேர்ந்ததால் பதில் தர தாமதமாகிவிட்டது. நீங்களும் யுவாவும் தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்.

    ReplyDelete