Pages

Tuesday, March 5, 2013

சே குவேரா விற்பனைக்கு.. இங்கு அணுகவும்.





சே குவேராவின் புத்தக உரிமை மூவரிடம் இருக்கிறது.

1.  அலைடா மார்ச்( சேவின் வாழ்நாள் தோழி).

2 . சே ஸ்டடி செண்டர்.

3. ஓசியன் பிரஸ்.

இவர்களிடம் மட்டுமே  இதுவரை சே புத்தக உரிமைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் காந்தி கண்ணதாசன் அவர்கள்  சே குவேராவின் எழுத்துக்கள் புகைப்படங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையாளாராக அறிவித்திருக்கிறார். மேற்கண்ட விளம்பரம் அதை உறுதியும் செய்திருக்கிறது. உலகறிந்த புரட்சியாளனின் எழுத்துக்களும், அவரது உருவப்படமும் இப்படித் தனி நபர்ச் சொத்தாய் மாறுவது மிகவும் வருந்தத்தக்கது. நம் காலத்து அவலமும் கூட.


எனக்குத் தெரிந்து இதுவரை சே குவேராவின் புத்தகங்களை பதிப்பித்த எண்ணற்ற பதிப்பகங்கள் அதை மலிவு விலையில் வைத்தே விற்கிறது. அதோடு நில்லாது, ஏதேனும் ஒரு இடதுசாரி இயக்கத்தோடு தொடர்பில் உள்ள பதிப்பகங்கள், மற்றும் இடதுசாரிச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்களாலேயே மொழிபெயர்க்கப்பட்டும் வந்திருக்கிறது ( கிழக்கு  உயிர்மை பதிப்பகங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உண்மையில் அது ஒரு அவலம், அவலம் மட்டுமே)

சே குவேரா இன்று நல்ல விற்பனையாகிற உருவம், மற்றும் எழுத்து என்ற அளவில் அவர் உருவம் தாங்கிய ஆடைகளை அணிந்தும் வருகிறார்கள்.

கண்ணதாசன் பதிப்பகம், பதிப்பக உரிமை சார்ந்து அவர்கள் வெளியிடுவது அவர்களின் சட்டப்படியான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்  அவரது புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு, நல்ல மொழிபெயர்ப்போடு தந்தால் தாராளமாக வரவேற்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சே வின் படங்கள் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே உரிமை என்ற சொத்துப் பத்திரத்தோடும், எச்சரிக்கை அறிவிப்பை முன் வைத்து வருவது என்பது சேவின் புத்தகங்களை வியாபார நோக்கத்தோடு அணுகுவதாகவே எனக்குப் படுகிறது.

என்ன செய்யப் போகிறோம், அல்லது என்ன செய்ய வேண்டும். இது விசயமாக தோழர் அலைடா மார்ச் அவர்களையும், மற்றும் சே ஸ்டடி செண்டர், ஓசியன் புக்ஸ் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தோழர்கள் ஏதேனும் செய்யலாம் என நினைக்கிறேன். தோழர்கள் ஒன்று கூடினால் மட்டுமே இது சாத்தியம். 

பதிப்பக உரிமையின், பதிப்பக காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சே குவேரா ஒரு விற்பனைப் பொருளாகத் தெரியலாம் ஆனால் தோழர்களே சே நமக்கு அப்படிப்பட்டவரா என்ன….


சிறுகுறிப்பு; சேவின் புகைப்படத்தை நீங்கள் உடையில் அணிந்தால், அல்லது கண்ணாதாசன் பதிப்பக அனுமதியின்றி, அவரது படம் உங்களது வீட்டில் இருந்தால்  அது கடும் தண்டனைக்குரிய குற்றம்.  யாருக்கேனும் பரிசளித்தா, ல் நீங்கள் கைது செய்யப்படலாம்.



............
..........
மேலும் 
ச்சே வைக் கொல்வது எளிதல்ல
அவனைக் கொல்வதற்குமுன் வரலாற்றைக் 
கொலை செய்யவேண்டும்
தத்துவத்தைக் கொலை செய்ய வேண்டும்
..........
.........






3 comments:

  1. சிறு குறிப்பு : பயமா இருக்கு !

    ReplyDelete
  2. விளம்பரத்தில் உள்ள 3 ஆங்கில நூல்களில் பதிப்புரிமை இல்லை, யார் வேண்டுமானாலும் மொழிபெயர்த்து வெளியிடட்டலாம் என்று இல்லாத போது கண்ணதாசன் பதிப்பகம் சட்டப்படி பதிப்புரிமை பெற்றுள்ளார்கள் என்றால் அதை சட்டரீதியாக அணுக வேண்டும்.முடியுமானால் அதை செய்யுங்கள். யார் யாரோ சே யின் புகைப்படங்களையும்,எழுத்துகளையும் இலவசமாக பயன்படுத்த
    பதிப்புரிமை பெற்றவர்கள் எதற்காக அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. விளம்பரத்தில் உள்ள 3 ஆங்கில நூல்களில் பதிப்புரிமை இல்லை, யார் வேண்டுமானாலும் மொழிபெயர்த்து வெளியிடட்டலாம் என்று இல்லாத போது கண்ணதாசன் பதிப்பகம் சட்டப்படி பதிப்புரிமை பெற்றுள்ளார்கள் என்றால் அதை சட்டரீதியாக அணுக வேண்டும்.முடியுமானால் அதை செய்யுங்கள். யார் யாரோ சே யின் புகைப்படங்களையும்,எழுத்துகளையும் இலவசமாக பயன்படுத்த
    பதிப்புரிமை பெற்றவர்கள் எதற்காக அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete