Pages

Tuesday, August 2, 2022

தோழர் மார்க்ஸ்க்காக - சி.சொக்கலிங்கத்தை முன்வைத்து


 

 


 

தெய்வீகத் தலைமைகளின் முகத்திற்கு நேராக வாதம் புரியவும் அவர்கள் அப்படியொன்றும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் பேசத் துணிபவர்களுக்கு இந்த உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது

-அம்பேத்கர்.

 

தோழர் சொக்கலிங்கம் எனது அம்பேத்கரும் அவரது தம்மமும் மற்றும் அம்பேத்கரியப் பார்ப்பனியம்ஆகிய இரு நூல்கள் குறித்து சில விவாதக் குறிப்புகளை வைத்திருப்பதைப் படித்தேன். முதல் கட்டமாக சொக்கலிங்கம் தோழர் ரங்கநாயகம்மாவின் நூலின் தலைப்பையே தவறாகச் சொல்கிறார். அவ்வளவு அவசரமாக தலைப்பை படித்திருக்க வேண்டியதில்லை. கொஞ்சம் நிதானத்துடனே படித்திருக்கலாம். 

 

சொக்கலிங்கத்தின் ஒட்டுமொத்த கூற்றும் மார்க்சியம் பொருளாதார நிர்ணயவாதமல்ல- அம்பேத்கரின் காலத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை - -2000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் – மண்ணுக்கேற்ற மார்க்சியம் – பௌத்தம் என்று வழக்கமான அலுத்துச் சலித்துப்போன வாதத்தையே விவாதக் குறிப்புகள்  என்ற பெயரில் வைத்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியதாகச் சொல்லப்படும் பௌத்தம் ஏன் இதையெல்லாம் ஒழித்துக்கட்டவில்லை என்று அவர் கொஞ்சம் யோசித்திருந்தால் பதில்கள் கிடைத்திருக்கும். அந்த பௌத்தத்தை அம்பேத்கர் ஏன் கையிலெடுத்தார் என்ற கேள்வியாவது கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.

 

இதுபோன்ற குழப்பங்களுக்கெல்லாம் நூலில் அத்தனை தெளிவாக பதில் இருந்தும் சொக்கலிங்கம் எதையுமே படிக்காமல் மேம்போக்காக ஒரு விவாதக் குறிப்பை எழுதியுள்ளார்.

 

அம்பேத்கர் எழுத்துக்கள் குறித்த எந்த ஆய்வும் தமிழில் இல்லை என்பதை  ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக் கொண்டிருக்கும் சொக்கலிங்கம். அது எவரை முன்வைத்து வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதைக் கூறாமல் மறைக்கிறார். அப்படியே மேற்கட்டுமானம் குறித்தும் கூறியவர் அதன் முக்கியத்துவத்தையே பண்பாட்டு அம்சமே தீர்மானிக்கிறது என்பதைப் போல குழப்பியிருக்கிறார். 

 

குறிப்பிட்டபொருளாயதச்சூழலில்  உருவான மேற்கட்டுமானங்கள் தாம் உருவான பின் சுய இயக்கக் குணாம் சத்தைப் பெற்றுவிடுகின்றன.மேற்கட்டுமானங்கள் தங்களுக்குள்  உறவையும் அடித்தளத்தின் மீது தாக்கத்தையும் ஏற்படுத்தும் வலிமை யைப் பெறுகின்றன என்பது தானே மார்க்ஸிய நிலைபாடு.   இதனை ஏங்கல்ஸே குறிப்பிடுகிறார் என்பதை வசுமித்ர கவனத்தில் கொள்ளவில்லை.வரலாற்றுச் சூழலில் அம்பேத்கரை மதிப்பிடவும் இந்து சாதி அமைப்பு குறித்த அம்பேத்கரின் அவதானிப்பிற்கு உரிய இடமளித்து பரிசீலிக்கவும்  தவறுகிறார்.” என்று குற்றச்சாட்டை வைக்கும் சொக்கலிங்கம் புத்தகத்தை முழுதாகப் படித்திருந்தால் வரலாற்றுச் சூழலில் அம்பேத்கரையும் சேர்த்து வைத்து ஆதாரங்களோடு இருப்பதைப் படித்திருப்பார். அவர் படிக்கவில்லை என்பதால். இங்கு அதை குறிப்பிட வேண்டியிருக்கிறது.

 

அம்பேத்கர் ஒரு சாமானிய எழுத்தரைப் போல்மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் - உண்மையில்இயந்திரத்தனமான பொருள்முதல்வாததின் விளைவான பொருளாதார நிர்ணயவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தோன்றிய மார்க்சியத்தை - என குற்றம் சாட்டுகிறார்மார்க்சியர்கள் மனிதர்களை வெறும் பொருளாதார விலங்குகளாகவே கருதுகின்றனர் என்கிறார். மார்க்சியம் சொல்வது இதுதான்: உற்பத்தி நடவடிக்கைகள் என்பது மனித நடவடிக்கைகளின் அடிப்படையாகும்அதனால் அவர்கள் உற்பத்தி உறவுகளாக பிணைப்புக்குள்ளாகிறார்கள்.  இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும்அதன் மேல் அரசியல்- கருத்தியல்-கலாச்சார- சமூக நிறுவனங்கள் ஆகிய மாபெரும் தூண்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. கட்டியெழுப்பப்பட்டதும்அந்த மேற்கட்டுமானமானது சுதந்திர நகர்ச்சியைப் பெற்றுவிடும். சுழற்சியில்அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தும்புதிய அடித்தளத்திற்கும்புதிய மேற்கட்டுமானத்துக்கும் இடையிலான மோதல் தொடரும். சோஷலிசத்திற்கு மாறும் கட்டம் முழுவதிலும்பல்வேறு வகையான முதலாளித்துவ அடிக்கட்டுமானங்கள் எஞ்சியிருக்கும்மாற்றத்திற்கான தொடர் முறையிலான நீடித்த  நடைமுறையுடன்பழைய மேற்கட்டுமானத்தோடு தொடர்ந்து போராட்டங்களும் நிகழும். இந்த  திட்டங்கள் பற்றி ஏதுமறியாததால்அம்பேத்கர் 1938இல் ஜனதாவில் எழுதிய ஒரு கட்டுரையில்கலாச்சாரம் மற்றும் மதமெனும் தூண்கள் பொருளாதார அடித்தளத்தின் மேல் நிலவுகிறது என்றால்அடித்தளத்தைத் தகர்கக வேண்டுமெனில்முதலில் தூண்களைத் தகர்க்க வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தையும் ஏதும் புரியாமலேயே தெரிவித்திருக்கிறார்.

 

கம்யூனிசமும்பொருளாதார அடித்தளத்தைத் தகர்க்க - மக்களின் வர்க்க உணர்வை தட்டி எழுப்பிஅரசை தகர்ப்பதற்காக அணிதிரட்டப்படும் வரை - அரசியல் பொருளாதார பரப்புரையுடன் - முதலில்மேற்கட்டுமானத்தின் மைய அரசியல் நிறுவனமான அரசை தகர்க்க வேண்டும்மதச்-சட்டங்கள்மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறது.  

 

பொருளாதார அடிக்கட்டுமானத்தை தகர்த்தால் மட்டுமே மேற்கட்டுமானத்தை முழுமையாகமுற்றிலுமாக தகர்க்க முடியும் என்றுதான் மார்க்சியம் சொல்கிறது. அடிக்கட்டுமானமே தீர்மானமகரமான சக்தி என்று மட்டுமே மாக்சியம் சொல்கிறது. ...மார்க்சியம் மனிதர்களை வெறும் பொருளாதார விலங்குகளாகக்கருவதாகச் சொல்லிஅதனை மறுக்கும்விதமாக எந்தவொரு சிவில் சமூகத்திலும் மதம் என்பது அவசியம் என்றார். அம்பேத்கரின் இந்த சிவில் சமூகம் என்பதுஹெகலின் சிவில் சமூக கருத்துருக்கு மட்டுமின்றிசமூக-அரசியல் மட்டத்தில் மதத்தின் இருப்பை முற்றிலுமாக நிராகரித்த கருத்தியல் வடிவிலான பகுத்தறிவு மனநிலையினைக் கொண்டிருந்த லோக்கேரூசோ போன்றவர்களின் சிவில் சமூக கருத்துருவுக்கும் கூட நெருக்கத்தில் இல்லை. உண்மையில்மதத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்தோதிட்டவட்டமான சூழ்நிலைகளில் மதத்தின் உருவாக்கம் குறித்த மார்க்ஸுக்கு முந்தையபுரட்சிகர பொருள்முதல்வாத பூர்ஷுவா சிந்தனையாளர்களின் சிந்தனைகளைப் பற்றி கூட அம்பேத்கர் அறிந்திருக்கவில்லை. 

 

மதம் என்பது ஏதோமனிதர்களுக்கும் மேலானதாகவழிகாட்டும் நெறியாகக் கருதினார்அதன் சமூகத் தோற்றம் குறித்த அறியாமையில் இருந்தார். இந்த விஷயத்தில் அம்பேத்கரும் காந்தியைப் போல் ஒரு பழைமைவாதியே. இந்துமதத்தை விட மேலான ஒரு மதம்தான் அவருக்குத் தேவைப்பட்டதுஅதைத்தேடி இறுதியில் 2000 வருடம் பழமை வாய்ந்த புராதன பௌத்த மதத்தைக் கண்டடைந்தார். பிராமணிய எதிர்ப்புடைய பண்டைய பொருளாயத தத்துவங்களான ஆசீவகம்லோகாயதம் அல்லது சாங்கிய மதங்களைத் தேடி அவர் செல்லவில்லை. ஏனென்றால் அவை ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் இல்லை. அம்பேத்கரின் ஆன்மீக வெறுமையேமதம் ஒன்று மட்டுமே ஆன்மீக செல்வம் எனக் கருதக் காரணம்.  மனிதர்களை வெறும் பொருளாதார விலங்கு என்று கருத்துவதற்கெல்லாம் அப்பால்மார்க்சியமானது ஆன்மீக செல்வமற்ற மனிதரை மனிதர் எனும் தகுதியைப் பூர்த்தி செய்யாத ஒருவராகவே கருதுகிறதுபெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்காகக் கூட கடுமையாக உழைத்து துன்புறும் நிலையில்ஆன்மீக செல்வம் மறுக்கப்பட்டு ஒருபுறமிருக்கமறுபுறம் ஒட்டுண்ணி வர்க்கங்களோ உழைப்பெனும் இயற்கையான மனிதப் பண்பற்றவர்களாகஆன்மீக செல்வத்தின் பேரால் காமம் மற்றும் போகத்தில் திளைக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை கடைபிடித்து வாழும் ஒரு நிலையை அனுமதிக்கும் சமூக அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கொள்கை. 

 

கலாச்சாரம்கலை-இலக்கியம்இசைதத்துவம் இவையனைத்தையும் ஆன்மீக செல்வங்கள்மனித சாரம் என்றே மார்க்சியம் கருதுகிறது. “1844 ஆண்டின் பொருளாதார மெய்யியல் கையேடு, “புனிதக் குடும்பம், ‘ஜெர்மன் தத்துவம், ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு (’க்ருண்ட்ரிஷே அவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்படவில்லை) போன்ற மார்க்ஸ்எங்கெல்ஸின் நூல்களை அவர் படித்திருந்தால், ‘மூலதனத்தில் அங்கிங்கு வரும் குறிப்புகளை அவர் படித்திருந்தால், 1950 வரை வெளிவந்த லெனின்ஸ்டாலின்மாவோகார்க்கிலுனாச்சார்ஸ்கிப்ரெக்ட்லூக்காஸ்வோரோவ்ஸ்கிவொரொன்ஸ்கி  போன்ற டஜன் கணக்கானவர்களால் இயற்றப்பட்ட மொழியியல் கோட்பாடு பற்றிய படைப்புகள்இலக்கியம்கலைஇசை மற்றும் சோஷலிச கலை இலக்கியஇசைசினிமாத் துறையில் நடந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாம் பற்றி நூற்றில் ஒரு பங்காவது அறிந்திருந்தால் மார்க்சியத்தின் ஆன்மீக செல்வம் பற்றிய அவரது பார்வை இத்தனை மேலோட்டமாக இருந்திருக்காது.” என்று விரிவாக எடுத்துரையும் முழுதாகப் படிக்காமல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகிறார். இப்படி எதையும் படிக்காமல் தான் நினைத்ததைத்தான் ஆசிரியர் சொல்கிறார் என்று சொல்லும் இந்தப் போக்கை சொக்கலிங்கமும் கைக்கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. மார்க்சியத்தைப் பின்பற்றுவர்கள் இத்தகைய குறுக்கு வழிகளை கையில் எடுக்கக் கூடாது என்பதை அன்புடன் நினைவூட்டுகிறேன்.

 

சொக்கலிங்கத்தின் கருத்துப்படி  பார்த்தோமானால் இந்துமதம்தான் இந்தியப் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது என்கிற கலாச்சார அடிப்படைவாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். அதையும் மார்க்சியத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார் போல் தெரிகிறது. அதுவும் போகவரலாற்றுச் சூழலில் அம்பேத்கரை பொருத்தமுடியும் என்ற அபத்தமான கூற்றையும் வைக்கிறார். இந்தக் கூற்று எல்லா மதாச்சாரியர்களுக்கும் பொருந்தும். மேலே இதை ஏற்கனவே எடுத்துரைத்திருக்கிறேன். இது எதையும் அறியாமல் தர்க்கப் பார்வை என்று பொத்தாம் பொதுவாக அவர் தனக்குப் பிடித்த கருத்துக்களை வெட்டி ஒட்டி விவாதக்குறிப்பை வைத்திருக்கிறார்.

 

பிரச்சினை என்னவென்றால் அம்பேத்கர் எதை எப்படி கவனத்தில் கொண்டு எதைப் பார்க்கத் தவறினார் என்பதும் மார்க்சிய அடிப்படையில் அம்பேத்கரை எப்படிப் புரிந்துகொள்வது என்பதும்தான் நூலின் அடிப்படையே. ஆனால் சொக்கலிங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பக்கங்களை புரட்டியிருக்கிறார் என்பதையும்மார்க்சிய நூலாசிரியர்களின் மதம் குறித்த பார்வைகளையும் புறந்தள்ளியிருக்கிறார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய சிந்தனைகள் வரவென்றெல்லாம் குறிப்பிடும் சொக்கலிங்கம் முதலும் முடிவுமாக மார்க்சியத்தில் போதாமைகள் உள்ளது என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். ஆனால் அந்தப் புதிய வரவுகள் என்னவென்று கூறியிருந்தால் வரவா செலவா என்று நாம் புரிந்துகொள்ள உதவியாய் இருந்திருக்கும்.

 

அம்பேத்கரும் அவரது தம்மமும் என்ற நூலில் மார்க்சிய தத்துவவாதிகளை பெரும்பான்மையாகவும் தலித் சிந்தனாவாதிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் பரிகசித்தார் என்றால் அம்பேத்கரியப் பார்ப்பனியம் என்ற  நூலில் அம்பேத்கரிய அறிஞர்களை பெரும்பான்மையாகவும் மார்க்சிய அறிஞர்களை கொஞ்சமாகவும் பரிகசிக்கிறார். இரண்டு பெரிய நூற்களிலும் காரியபூர்வ விவாதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.” என்று கூறியிருக்கிறார் சொக்கலிங்கம். அவரது காரியத்தனமான வாசிப்பால் நேர்ந்த பிழைதான் இது என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன். அதனடிப்படையில் நூலில் அவரது மார்க்சிய அறிஞர்கள் யார் என்று பட்டியலிடவும் வேண்டுகிறேன்.

 

எனது நூலில் கார்ல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொடங்கி ஜார்ஜ் தாம்சன்,தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தொடங்கிகோசாம்பி டி.டி.கோசாம்பிரொமிலா தாப்பர்ஆர்.எஸ்.சர்மாடி.என்.ஜாஇர்பான் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்களையும் மார்க்சியச் சிந்தனையாளர்களையும் வைத்துதான் அம்பேத்கரது வைதீக பௌத்தத்தையே அம்பலப்படுத்தியிருக்கிறேன். எனது நூலை மறுக்கும் முகமாக மாபெரும் சிந்தனையாளர்களையும் தத்துவவாதிகளையும் ஒரு சேர அவமானப்படுத்தியிருக்கிறார் சொக்கலிங்கம். 

 

சொக்கலிங்கம் கருதும் மார்க்சியத் தத்துவாதிகள் யாரென்று தெரியவில்லை. அவர்கள் யாரென்று சொக்கலிங்கம் சொன்னால் அது குறித்து விமர்சனங்களை வைப்பேன். ஒருவேளை அவர் முத்துமோகனை மட்டும் மார்க்சிய சிந்தனைவாதியாக கருதுகிறார் போலும். அம்பேத்கர் பேரில் ஒரு கட்டுரை எழுதி அதை அப்படியே அயோத்திதாசர் கட்டுரையிலும் அம்பேத்கர் பேரை மாற்றிப் போட்டு தன் எழுத்தை தானே திருடும் ஒருவரை  மார்க்சிய அறிஞராக சொக்கலிங்கம் நினைப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. நூலில் அதற்கான ஆதாரம்  இருந்தும் சொக்கலிங்கம் அதை மறைத்துப் பேசுகிறார். மறுப்பு இருந்தால் சொக்கலிங்கம் அது குறித்து எழுதியிருப்பார்.  மறுப்பு எழுதவில்லை. எனவே சொக்கலிங்கம் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றே படுகிறது. இதே நிலைமைகள்தான் தலித் சிந்தனைவாதிகளுக்கும். ஒருவேளை தோழர் சொக்கலிங்கத்துக்கு மார்க்ஸைவிட முத்துமோகன் மட்டுமே முக்கியமானாவராகத் தெரியலாம். கேட்டால் இவர்தான் மண்ணுக்கேற்ற மார்க்ஸ் என்றும் கூடச் சொல்லலாம். தோழர்களே.. இதுபோன்ற தனிநபர் துதிகளை கைவிட்டு மார்க்சியத்தை முன்னெடுக்கவேண்டும்.

 

மார்க்சியத்தின் போதாமையை  அடையாள அரசியலே தீர்த்து வைக்கும் என்று கூறி மார்க்சியத்தை புறம் தள்ளுகிறார் சொக்கலிங்கம். மேலதிகமாக அம்பேத்கரிடம் முழுமுற்றான ஆய்வு இருப்பதாகக் கருதும் அவர் அம்பேத்கரிடமிருந்து மார்க்சியர்கள் எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாகச் சொல்லவில்லை. 

 

சாதிய ஒழிப்பிற்குரிய சூத்திரத்தை அம்பேத்கரும் புத்தரும் முன்வைக்கவில்லை என்பதை  எனது நூலில் அங்கொரு பக்கம் இங்கொரு பக்கம் படித்ததன்  வழியாக ஒத்துக்கொண்டிருக்கிறார் சொக்கலிங்கம். இதற்கு முன் அவர் இது போன்ற கூற்றுக்களை எங்காவது வைத்திருந்தால் தோழர்கள் சுட்டலாம். 

 

அதே சமயம்  சாதி குறித்த தேடல்கள் ஆழமாக உண்டும் என்று கூறுகிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவும் நித்யானந்தாவும் ஏன் இப்பொழுது இந்துத்துவ அம்பேத்கர் நூலும்தான் சொல்கிறது. நல்லது நடந்தால் போதும் என்கிற நல்லெண்ணத்திற்கும் மார்க்சியத்திற்கும்வித்தியாசங்கள் உண்டு. இதை சொக்கலிங்கம் கருதத் தவறுகிறார். 

 

அம்பேத்கர் மதமாற்றத்தை இந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஊட்டச் செய்வதற்காகச் செய்தார் என்று அம்பேத்கரையும் கொச்சைப்படுத்துகிறார். அது குறித்தான விரிவான ஆய்வை எனது இரு புத்தகங்களும் முன்வைத்தத்தை அவர் வாசித்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட இந்த வரிகளே சான்று கூறப் போதுமானவை.

 

சொக்கலிங்கம் மழுப்பலாக மகர் என்ற சுயதளத்தில் என்று வார்த்தை விளையாட்டும் செய்கிறார். மகர் சாதி அடிப்படையில்தான் அம்பேத்கர் பௌத்த மாத மாறுதலுக்கே வருகிறார். மகர் சாதிக்குக் கீழிருக்கும் மாங்க் மற்றும் சாம்பர் சாதி குறித்து அம்பேத்கர் கவனத்தில் கொள்ளாததையும் குறிப்பிட மறுக்கிறார். பழங்குடிகள் குறித்து இருந்த அம்பேத்கரின் அற்பவாதப் பார்வை குறித்தும் நூலில் உள்ளது. அம்பேத்கரிடம் கூட பார்ப்பனியக் கேடுகள் இருந்ததாக தோழர் ஞானையா சுட்டியது உட்பட ஆதாரங்களுடனே நூலை முன்வைத்திருக்கிறேன்.

 

கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி- சாதியக் கட்சி என்று  சாதியை முன்வைத்து பேசுவது கம்யூனிஸ்டுகளா அம்பேத்கரிஸ்டுகளா என்று அவர் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். சாதிதான் எதார்த்தம் என்றால் அனைத்துச் சாதி சங்கத்தையும் அரவணைத்து கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும் என்று கூறுகிறாராசொக்கலிங்கம் கூறும் அனைத்தையும் உள்ளடக்கித்தானே இங்குள்ள பூர்ஷுவா வர்க்கக் கட்சிகள் செய்து வருகிறது. சொக்கலிங்கமும் அதையே செய்ய வேண்டும் என்கிறார். அப்படிச் செய்தால் அது அனைத்திந்தியா அண்ணா திராவிட கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்குமே ஒழிய மார்க்சியக் கட்சியாக இருக்காது.

 

தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் தெரியாமல் தனது பூர்ஷுவா வர்க்கக் கருணையோடு தலித்துகளைப் பரிதாபமாகவும் பார்க்கிறார். தோழர்களாகப் பார்க்க வேண்டியவர்களை இப்படிப் பார்த்ததன் விளைவே இன்று தலித் கட்சிகளின் பிரிவாகப் போய் முடிந்திருக்கிறது. 

 

அடையாள அரசியல்வாதிகள் மார்க்சியத்தைச் சிதைக்க வைத்திருக்கும் கருதுகோள்களையெல்லாம் மார்க்சியத்தை வளர்க்கும் கருதுகோள்களாக சொக்கலிங்கம் கருதுகிறார். இந்தத் தத்துவ ஓட்டாண்டித்தனத்தைச் சுட்டிக்காட்ட தோழர்கள் முன்வரவேண்டும்.

 

எவரையாவது விமர்சித்தால் அவர் சார்ந்திருக்கிற சாதியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டுப் போய்விடுவார்கள் என்பதே சொக்கலிங்கத்தின் முதலும் முடிவுமான பார்வையாக இருக்கிறது. அதன் விளைவு  சாதிச் சங்கத்திலும்மத அமைப்பிலும் பொறுப்பில் இருந்துகொண்டு கம்யூனிஸ்டுகளாக களமாடும் அபத்தம் நிகழ்கிறது. நூலில் அதற்கான ஆதாரம் உள்ளது. வெளியிலும் உள்ளது. ஏலவே ஹமிம் முஸ்தபா என்பவர்பொதுவெளியில் என் மீதான தனிமனித அவதூறையும்கலை இலக்கியப் பெருமன்றத்தை சாதி மன்றமாகவும் சித்தரித்தார். நான் கேள்விகளை முன்வைத்ததும் களத்தில் காண்போம் என்று சொல்லி ஓடிப்போனார். அவரிடம் நான் எந்தச் சாதி-மத அமைப்பிலும் இல்லை தோழர். எனது தத்துவம் மார்க்சியம். தாங்கள் ஏதேனும் சாதி அமைப்பிலோ மத அமைப்பிலோ இருக்கிறீர்களாதாங்கள் மார்க்சியராதனிமனித அவதூறை வைத்ததும் அல்லாமல் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் சாதி அமைப்பாகச் சொல்லும் உங்கள் அறியாமையை எப்படி புரிந்துகொள்வது. “ என்று கேட்டிருந்தேன் முஸ்தபாவின் ஓட்டம் இன்று வரை தொடர்கிறது. இதற்கு பதில் சொல்லக் கூட அவரது மார்க்சியம் கைகொடுக்கவில்லை. 

 

தோழர் சொக்கலிங்கமும் மார்க்சியம் கதைக்கு ஆகாது. அடையாள அரசியலே மண்ணுக்கான மார்க்சியம் என்று மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தியிருப்பதையே அவரது விவாதக் குறிப்பில் பார்க்க முடிகிறது. . அடிப்படையில் பொருளாதார நிர்ணயப் பார்வை என்பதை வெறும் பணத்தோடு மட்டும் தொடர்புபடுத்தும் அவரது மார்க்சிய புரிதல் கொச்சையானது. பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்னவென்று தெரியாத அவரது புரிதலின் போதாமையை மார்க்சியப் போதாமையாக முன்வைக்கிறார்.  

 

பேராசிரியர்ப் பெருந்தகைகளால் சீரழிக்கப்பட்ட- திரிக்கப்பட்ட மார்க்சியத்தையே இங்கு மார்க்சியமாக வைக்கும்  பஞ்சமில்லை. தனியார்மயமாக்கலும் உலகமயமாக்கலும் வந்த போது மார்க்சியத்தின் தத்துவத்தை சீர்குலைக்க ஏவிவிடப்பட்ட இசங்கள்தான் பெண்ணியம்அடையாள அரசியல்இருத்தலியம்அந்நியமாதல்தலித்தியம்பெருங்கதையாடல்சிறுகதையாடல் என்ற பதங்கள். இத்தனை இசங்களும் வெற்று வியாக்கியானத்தைத்தான் மார்க்சியத்தின் மீது குற்றமாகச் சுமத்தியது. மார்க்சியம் சமூக அறிவியல். அது இதைக் கணக்கில் கொள்ளாதா என்னமார்க்சிய அடிப்படையில் இதிலுள்ள அபத்தங்களை மார்க்சிய சிந்தனையாளர்களும் மறுத்திருக்கிறார்கள். திறனாய்வு செய்திருக்கிறார்கள். குறிப்பாக தேவபேரின்பன்தோதாத்ரி. திசு.நடராசன்  போன்றவர்களும் எழுதியிருக்கிறார்கள். ஒரு மார்க்சியராக இந்த வியாக்கிய குப்பைகளை எல்லாம் விளக்கி தோழர்களுக்கு மார்க்சியத்தை எடுத்துக்காட்ட வேண்டுமே ஒழிய. இந்த வியாக்கியானங்களை முன்வைத்து மார்க்சியத்தில் போதாமை இருக்கிறது என்று திரிக்கக் கூடாது. 

 

சொக்கலிங்கத்துக்கு மட்டுமல்ல முத்துமோகன் போன்றவர்களுக்குக் கூட பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்னவென்று தெரியாது. இது போன்ற குழப்பங்களும் அறியாமையும் தமிழுக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனைய இடங்களிலும் இருக்கிறது. அந்தக் குழப்பத்தில்தான் மார்க்சியத்தை புறந்தள்ளி அனைத்து அடையாள அரசியலையும், .முக்கியமாக அம்பேத்கரிய அடையாள அரசியலை உள்ளிழுக்கிறார். இப்படிப் பட்ட குழப்பத்தில் இருந்த ஒருவருக்கு பொருளாதாரா நிர்ணயவாதம் குறித்து தெளிவுபடுத்ததோழர் ரங்கநாயகம்மா கூறியிருப்பதையே அப்படியே இங்கு வைக்கிறேன். வேறு வழியில்லை. அடையாள அரசியலை முன்னெடுத்து மார்க்சியத்தைப் புறந்தள்ளுபவர்களுக்கு விளக்கமாகத்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. காலம் காலமாக வைக்கப்படும் திரிபுவாதக் குற்றச்சாட்டுக்கு இத்தகைய விரிவான விளக்கம் பதில் அளிக்கும்.

 

பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்ன?

 

மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சியம் ஒரு பொருளாதார நிர்ணயவாதம் என்கிறார்கள். மார்க்சியஆதரவாளர்களுக்கும் மார்க்சியம் குறித்து சில ஐயங்களும்சில வேற்றுமை கருத்துகளும் இருக்கிறது. மார்க்சிய எதிர்ப்பாளர்களோ அல்லது பகுதி-ஆதரவாளர்களோ அல்லது பகுதி-எதிர்ப்பாளர்களோபொருளாதாரம்என்றால் என்ன என்றோ பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்னவென்றோ கேள்விஎழுப்புவதில்லை.  ஒவ்வொருவரும் சொந்தமாக ஏதோ விளக்கங்கள் கொடுக்கின்றார்கள். எல்லோரும்மார்க்சியம் குறித்துப் பேசுவதால்நம்முடைய விவாதத்திற்கு உடனடியாகத் தொடர்புடைய மார்க்சியத்தின்சில அம்சங்களை நாம் முதலில் விவாதிப்போம். பின்னர் எதிர்கருத்துகளை ஆய்வு செய்வோம்.

 

மார்க்ஸின் வரையறைப்படி பொருளாதாரம் என்றால் என்ன? “இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவானமுடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாகமாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூகஉற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள்அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும்அதாவது அவர்களுடைய உற்பத்தியின்பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாகஅதன்உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம்அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டுஅதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயதவாழ்க்கையின் உற்பத்தி முறை சமூகஅரசியல்அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கைநிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. [அரசியல்பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – முன்னுரைமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி4, பக்.207] மார்க்ஸின்  மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து  நாம் பொருளாதார அமைப்புஎன்னும்பதத்தை கவனிக்க வேண்டும். உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம் என்பதை  உண்மை அடித்தளம்என்றுகுறிப்பிட்டு அவர் அதை பொருளாதார அமைப்பின் அடித்தளம் என்கிறார். வேறு சொற்களில் சொல்வதானால்பொருளாதார அமைப்பு (பொருளாதாரம்) என்பதே சமூகத்தின் அடித்தளம். பொருளாதாரம் என்றால் பணம் இல்லை. உற்பத்தி உறவுகளே பொருளாதார உறவுகளாகும். பணம் இல்லாத புராதனக் காலத்தில் கூடபொருளாதார உறவுகள் (உற்பத்தி உறவுகள்) நிலவின. பணத்தின் இருப்பு இன்றி உருவாகப் போகும்கம்யூனிச சமூகத்திலும் பொருளாதார உறவுகள் இருக்கும். உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளத்தைநிர்ணயிக்கிறதுமற்ற மேற்கட்டுமானங்கள் அந்த அடித்தளத்திற்கு ஏற்ற வகையில் உருவாகிறது. இதுவேஅவர் கண்டடைந்த பொதுவான முடிவு - அவரது ஆய்விற்கு ’வழிகாட்டும் கொள்கையாக அமைந்த முடிவும்இதுவே.

 

இப்போது நாம் எங்கெல்ஸின் வரையறைப்படி பொருளாதாரம் என்றால் என்னவென்று பார்ப்போம்.  (1894 இல் எங்கெல்ஸ் இதை எழுதினார். இந்தக் கட்டுரையில் பின்னர் நாம் பார்க்கப்போகும் தகவல்களுக்குதொடர்புடையது இந்த தேதி)

 

சமூக வரலாற்றை நிர்ணயிக்கின்ற அடிப்படை என்று நாங்கள் கருதுகின்ற பொருளாதார உறவுகளைஒருகுறிப்பிட்ட சமூகத்திலுள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்து தமக்குஇடையில் உற்பத்திப் பொருள்களைப் பரிவர்த்தனை செய்கின்ற (அங்கே உழைப்புப் பிரிவினை இருக்கிறதுஎன்ற அளவில்) வழி மற்றும் முறை என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

 

பொருளாதார நிலைமைகள் முடிவில் வரலாற்று வளர்ச்சியைத் தகவமைக்கின்றன என்று நாங்கள்கருதுகிறோம்.

 

இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்-அரசியல் மற்றும்சிந்தாந்த உறவுகள்-எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமானஉறவுகளாக இருக்கின்றனஅவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றனஅவை மட்டுமேஇவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்கின்றன [பி. எங்கெல்ஸ்பிரெஸ்லாவிலிருந்து வொ. போர்கியுசுக்கு எழுதிய கடிதம்மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 12,பக்.239]

 

பொருளாதார உறவுகள் என்பதில் மார்க்ஸும் எங்கெல்ஸும் உற்பத்தி உறவுகளையே குறிக்கிறார்கள். ஒரு சமூகத்தில் பல்வேறு மட்டங்கள் வெவ்வேறு விதமான செல்வாக்கைக் கொண்டிருக்கும்ஆனால்,  ஒட்டுமொத்தமாக அம்மட்டங்கள்  அனைத்தும் அடித்தளத்தின் செல்வாக்குக்கு உட்பட்டேசெயல்படும். மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் ஆய்வுகளின் சாரம் இதுவே. ஒரு சமூகத்தின் அடித்தளத்தைஉருவாக்கும் உற்பத்தி உறவுகள் உழைப்புச் சுரண்டலைக் கொண்டதாக இருந்தால்அந்த சமூகத்தின்அரசியல்அத்தகைய சுரண்டல்வாத உறவுகளை எதிர்ப்பதற்கு மாறாக நிலைத்திருக்கவே செய்யும். அந்தஅரசு (=அரசாங்கம்) உருவாக்கும் சட்டங்களும் சுரண்டலை நிலைத்திருக்கச் செய்யுமே அல்லாதுசுரண்டலை எதிர்க்காது. அத்தகையதொரு சுரண்டல் நிறைந்த சமூகத்தில் மதமானது தொழிலாளர்வர்க்கத்தை ஒரு அறியாமையில் ஆழ்த்தியிருக்குமே ஒழியதர்க்கத்தை போதிக்காது. அத்தகையதொருசமூகத்தில்கல்விகலை மற்றும் இதர துறைகள் அனைத்தும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை போற்றிவளர்க்கும்அத்தகைய குணங்களையே போதிக்கும். ஆண் பெண் உறவு மற்றும் இதர பண்பாடுகள்அனைத்தும் சுரண்டல்வாத பண்பாட்டை கட்டிக்காக்கும். சமூகத்தின் எந்த மட்டம் எந்த மட்டத்தின் மீதுதாக்கம் செலுத்தினாலும் சரிஅனைத்து மட்டங்களும் சுரண்டல்வாத உறவுகளுக்கு பொருந்தும்வகையிலேயே இருக்கும்அந்த எல்லைக்குட்பட்டே செயல்படும். 

 

அடிப்படை உறவுகள் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுபட்டதாக  நாம் கற்பனை செய்வோமாயின்பிறகு அரசியல்கல்விகலைபண்பாடு ஆகியவை பழைய முறைக்கு எதிராக மாற வேண்டும். மதம் போன்ற அம்சங்கள் முற்றிலுமாக மறைய வேண்டும். அடித்தளத்தின் இயல்புக்கு பொருந்தும் வகையில்,  மேற்கட்டுமான அம்சங்கள் உருவாகிறதுநிலைத்திருக்கிறது என்று சொல்வது தர்க்கப்பூர்வமானதே*. அடித்தளத்திற்கு ஏற்றவகையில் மேற்கட்டுமான அம்சங்கள் இருப்பது இயல்பே. அடித்தளத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டு அந்த மேற்கட்டுமான அம்சங்கள் தனித்து இருக்கிறதுசுதந்திரமாக இருக்கிறது என்று சொல்வதே தர்க்கத்திற்கு முரணானது. அவை அடித்தளத்தின் எல்லைக்குட்பட்டேஅதன் வரையறையைவிட்டு வெளியே எங்கும் நகராமலேயே தனது சுயாட்சி அதிகாரத்தை பிரயோகிக்கிறது. மேற்கட்டுமான அம்சங்களுக்கும் சுயாட்சியும்சுதந்திரமும் இருக்கும்ஆனால் அது ஒரு சிறிய மரத்தூணில் கட்டப்பட்ட கன்றுகுட்டியின் சுதந்திரம் போன்றது. கட்டப்பட்டிருக்கும் கயிறு அனுமதிக்கும் எல்லை வரை கன்றுகுட்டி சுதந்திரமாக அசையலாம்அதேபோல் ஒவ்வொரு மேற்கட்டுமான அம்சமும் அடித்தளம் அனுமதிக்கும் எல்லைவரை தன்னுடைய சுயாட்சியைப் பிரயோகிக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்கடந்த காலத்தின் தாக்கங்கள் மீதமிருக்குமேயானால்கடந்த காலத்தின் அடித்தள அமைப்பின் தாக்கமே அதற்கும் காரணம். அந்த தாக்கமே பின்வரும் காலங்களில் தொடர்கிறது. அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் தொடர்பானமார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சிந்தனைகள் எப்போதும் மாறியதில்லை. 

 

உற்பத்தி உறவுகளின் (அடிக்கட்டுமானத்தை உருவாக்கும்) தாக்கம் மேற்கட்டுமானத்தின் மீது இருக்குமாயின்நாம் அதனை உற்பத்தி உறவுகளின் நிர்ணயவாதம் என்கிறோம். அந்த உற்பத்தி உறவுகளுக்கு பொருளாதாரஉறவுகள்என்று பெயர் இருக்குமாயின்நாம் அதனை பொருளாதார உறவுகளின் நிர்ணயவாதம் என்கிறோம். அதன் சுருக்கப் பெயர் பொருளாதார நிர்ணயவாதம்இந்த பெயர் மீது நாம் எத்தகைய குறையும் காண வேண்டியதில்லை. எதுவாகினும், ‘பொருளாதார உறவுகள் எனும் அந்தப் பதத்தின் பொருள்விளக்கம்சரியானதாக இருக்க வேண்டும். அதாவது, ‘பொருளாதார உறவுகள் என்றால் உற்பத்தி உறவுகள்அதாவதுஅடிக்கட்டுமானம் என்பதன்றி வேறில்லை. மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் எனும் உண்மையைஉண்மை என்று ஒப்புக்கொள்வதில்லை. அடிக்கட்டுமானத்திற்கும்மேற்கட்டுமானத்திற்கும் அவர்கள் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. அவர்களின் பார்வையில் பொருளாதாரம் என்றால் அதுபணம் மட்டுமே. அவர்கள் பொருளாதார உறவை ‘பண உறவோடு சமன் செய்துமார்க்சியம் எப்போதும் பணக் கணக்கீட்டைக் குறித்து மட்டுமே பேசுகிறது என்கின்றனர்.  மனித நேயம்அன்பு இவை குறித்தெல்லாம் மார்க்சியத்திற்கு கவலை இல்லை என்று மார்க்சியத்தை எதிர்க்கும் அறிவுஜீவிகள் கருதுகின்றனர். மற்றொருவகையினர்மார்க்சியத்தை ஆதரிக்கும் அறிவுஜீவிகள். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்சியக் கோட்பாட்டின் அந்த அம்சத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அடிக்கட்டுமானம்தான்  மேல் கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்னும் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அடிக்கட்டுமானத்தின் எல்லைக்குட்படாமலேயே மேற்கட்டுமானத்திற்கு எல்லையற்றஅதிகாரம் இருப்பதாக அவர்கள் அனுமானிக்கின்றனர். அத்தகையதொரு அரை-ஆதரவாளர் மற்றும் அரை-எதிர்ப்பாளருக்கு உதாரணம் திரு. சையதுலு அவர்கள். சமமான உழைப்புப் பிரிவினை மூலம் சாதி ஒழிப்புஎன்னும் ஒரு கட்டுரையில் நான் மார்க்சியத்தின் அம்சங்கள் குறித்து சுருக்கமாகப் பின்வருமாறு எழுதினேன்: உற்பத்தி உறவுகள்சொத்துரிமைமுதலாளி-உழைப்பாளர் உறவுகள்உழைப்புச் சுரண்டல் மற்றும்உழைப்புப் பிரிவினை ஆகிய பல்வேறு அம்சங்களைக் கொண்டது பொருளாதாரம். உற்பத்தி உறவேசமூகத்திற்கு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கொடுத்தது. உற்பத்தி உறவுகளில் ஏற்றத்தாழ்வு நிறைந்திருப்பதால்நாம் முதலில் அதில் சமத்துவத்தை அடைய வேண்டும் (ஆந்திர ஜோதி, 10-7-2012).

 

என்னுடைய இந்தக் கண்ணோட்டத்தோடு திரு. சையதுலு முரண்படுகிறார். (ஹீதுவதம் [=பகுத்தறிவு]அக்டோபர் 2013). மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சியம் குறித்து என்ன சொல்கிறார்களோ அதற்குநிகராகவே மார்க்சியம் பற்றிய என்னுடைய கூற்றும் இருக்கிறது நானும் மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதமாகவே கருதுகிறேன்நான் புரிந்து கொண்டதுபோல் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவரது விமர்சனம். நான் சொன்னது ஏதேனும் மார்க்சியத்திற்கு எதிராக இருக்கிறதாமார்க்சிய எதிர்ப்பாளர்கள் பேசுவதையே நானும் பேசுகிறேனாஇல்லைநான் அப்படிப் பேசவில்லை. உற்பத்திஉறவுகளே ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமாகிறதுஇந்த அடிக்கட்டுமானமே மற்ற மட்டங்களை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸின் பொருளாதாரம் வரையறுக்கும் பொருளிலேயே நானும் பொருளாதரம் என்பதை விளக்கியிருக்கிறேன். உண்மையில்திரு. சையதுலு அவர்கள் மார்க்சியத்திற்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து அவரையறியாமல் அவர் என்னுடைய விளக்கத்தில் தவறு கண்டுபிடித்ததன் வாயிலாகமார்க்ஸின் விளக்கங்களிலேயே அவர் தவறு கண்டுபிடித்திருக்கிறார். சையதுலு மார்க்சிய எதிர்ப்பாளரல்ல ஏனென்றால் அவர் மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்டவர். ஆனால் மார்க்சியம் பற்றிய அவரது புரிதல் தவறாக உள்ளது. அவர் பொருளாதாரம் என்பதை   உற்பத்தி உறவுகள் என்று புரிந்து கொள்ளாமல்பணம் என்றுபுரிந்து கொண்டார். அவருடைய கட்டுரையிலிருந்து நாம் அவரது  சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

சையதுலு:  பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் பொருளாதாரம் தோன்றியது

 

இறுதி கட்டத்தில் தோன்றியது என்றால் பண அமைப்பு தோன்றியது பற்றி பொருளாகிறதே ஒழியஉற்பத்திஉறவுகளோடு பொருளாதாரத்தை ஒப்பிடுவதாகாது. அது உற்பத்தி உறவுகளாக இருந்தால்அது இடையிலோஇறுதியிலோ தோன்றியிருக்க முடியாது. அது எப்போதுமே நிலைத்திருந்த ஒன்று. 

 

சையதுலு: “….. இறுதி கட்டத்தில் தோன்றிய  பொருளாதாரத்தை நாம் அடிக்கட்டுமானம்என்றுஅழைக்கக்கூடாதுஇதனால்பொருளாதாரம் அடிக்கட்டுமானமாகாது.

 

இங்கும் பொருளாதாரம் என்றால் பணம் என்ற பொருளிலேயே அவர் குறிப்பிடுகிறார். பொருளாதாரத்தை உற்பத்தி உறவுகள் என்று கருதியிருந்தால்அவர் அது அடிக்கட்டுமானம் இல்லை என்று சொல்லியிருக்க மாட்டார். நாம் பொருளாதாரத்தை பணம் என்று புரிந்து கொண்டோமேயானால்அது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றும். 

 

பொருளாதார அமைப்பே உண்மையான அடித்தளம் என்று மார்க்ஸ் சொன்னபோதுஅவர் பணத்தைக் குறிக்கவில்லை. அவர் உற்பத்தி உறவுகளையேக் குறிக்கிறார். பொருளாதாரம் பற்றிய திரு.சையதுலுவின் புரிதல் தவறானது. இந்த தவறின் காரணமாகஅவரது மற்ற வாதங்களும் தவறான போக்கிலேயே தொடர்கிறது.

 

சையதுலு: பொருளாதாரமே அடிக்கட்டுமானம் என்றும் சிந்தனைகள்கோட்பாடுகள் அந்த அடிக்கட்டுமானத்தின் மேல் உருவாகும் மேற்கட்டுமானம் என்றும் சொல்வதற்கு…” இந்த கண்ணோட்டத்தில் அவர் குறை கண்டுபிடிக்கிறார். அடிக்கட்டுமானத்தில் இருந்துதான் மேற்கட்டுமானம் எழுகிறது என்று சொல்வது தவறுசில கம்யூனிஸ்டுகளும்ரங்கநாயகம்மாவும் அத்தவறை செய்கிறனர் என்கிறார். மேலும்அவர்கள் விஷயங்களை இயங்கியல் அடிப்படையில் புரிந்து கொள்ளாததால் அத்தவறை செய்கின்றனர் என்கிறார். கூடுதலாக, ‘பொருளாதாரமே அடிக்கட்டுமானம் என்று சொல்லும் தவறு மற்றும் இதர தவறுகள் இயங்கியல் பார்வை இல்லாததாலேயே நேர்கிறது என்பது அவரது வாதம். அடிக்கட்டுமான-மேற்கட்டுமான உறவுகளில் தவறு கண்டுபிடிப்பது என்பதுகம்யூனிஸ்டுகளிடம் தவறு கண்டுபிடிப்பதாகாதுஅது மார்க்ஸிடமே தவறு கண்டுபிடிப்பதாகும். 

 

சையதுலு: பொருளாதாரம் அடிக்கட்டுமானம் என்று சொல்வதன் பொருள்..”

 

இந்த உருவாக்கத்தில் குறை கண்டுபிடித்து பின்வருமாறு சொல்கிறார்: இதன் விளைவாகவேஅம்பேத்கரியர்களும்,பெண்ணியலாளர்களும்,  மார்க்ஸியர்களுக்கு மத்தியில் உருவானார்கள். ‘பொருளாதார உறவுகளே அடிக்கட்டுமானத்தை அமைக்கிறது எனும் அந்தத் தவறான கருத்தின் காரணமாகவே இது நடந்தது என்கிறார் சையதுலு. அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானத்தின் மீது பலமானதாக்கத்தை செலுத்துகிறது என்று சொல்வது தவறென்றால்சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு (அம்பேத்கரியர்கள்பெண்ணியலாளர்கள்) மார்க்ஸியத்திலிருந்து விலகிதனித்து நின்று தங்கள்பிரச்சினைகளை எதிர்கொள்ள முயற்சிப்பது எப்படி தவறாகும்? (இப்படிச் சொல்வதால்சாதியமைப்பு ஒருமேற்கட்டுமான பிரச்சினை என்று நான் சொல்வதாகப் பொருளில்லைஅது முற்றிலும் அடிக்கட்டுமானத்தோடுதொடர்புடையதே).

 

அடிக்கட்டுமானம் மற்றும் பொருளாதார உறவுகள் என்பதில் நாம் உற்பத்தி உறவுகளைக் குறிக்கிறோம்என்றால்மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் என்று சொல்வதில் தவறேதுமில்லை. ஆனால்மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் என்று சொல்வோர், ‘பொருளாதார அமைப்பே உண்மையானஅடித்தளம் என்னும் மார்க்சின் கருதுகோளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதுவல்லாதுஅடிக்கட்டுமானம் குறித்த மார்க்சின் கருத்தை புறக்கணித்துதங்களுடைய சொந்த பொருளை வழங்குவோர்அடிக்கட்டுமானத்தின் தாக்கத்தை தவறான கருத்து என்றே கருதுகின்றனர். இதைத்தான் திரு. சையதுலுவும் செய்கிறார். பொருளாதாரத்தை அவர் பணத்தோடு தவறாக ஒப்பிடுவதால்அது இறுதியில் தோன்றியது என்கிறார். அவர் பொருளாதாரத்தை பணம் என்று புரிந்துகொண்டதால்கம்யூனிஸ்டுகள் பணத்தை அடிக்கட்டுமானமாகக் கருதுவதாக அவர் தவறாகப் புரிந்து கொண்டார். அதனாலேயே அவர் பலமுறை நாம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானம் என்று சொல்லக்கூடாது என்று சொல்லிவந்தார். அப்படி அவர் சொன்ன இடங்கள் பல. இந்த ஒரு உதாரணமே அதற்குப் போதுமானது. சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் வர்க்கப் பிரச்சினையாகவே காண வேண்டும்வர்க்கத் தொடர்பின்றி எந்த பிரச்சினையும் தனித்திருப்பதில்லைஎன்று தனது கட்டுரையில் திரு. சையதுலு கூறுகின்றார். எல்லா சமூகப் பிரச்சினைகளும் வர்க்கத்தின் ஒருபகுதியே என்றார். இப்படி பிரச்சினைகளுக்கு சரியான காரணத்தைக் கூறிய நபர்தான்உற்பத்தி உறவுகளின் தீர்மானகரமான தாக்கத்தை மறுக்கிறார்.

 

இன்றைய கம்யூனிஸ்டுகள் தவறு செய்கின்றனர் என்பது அவரது விமர்சனத்தின் ஒரு அம்சம்: அதாவதுஒவ்வொரு பிரச்சினையையும் அவர்கள் வர்க்கப் பிரச்சினையாகக் காண்பதில்லை என்று பொருள். தலித் மற்றும் பஹுஜன் இயக்கங்கள் வர்க்கப் பார்வையற்ற இயக்கங்கள் என்பது இன்றைய கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டமாக இருக்கிறது என்கிறார்.  இங்கு திரு. சையதுலு பிரச்சினை குறித்துப் பேசுகிறாரா இல்லை இயக்கம் குறித்துப் பேசுகிறாராஅவர் பிரச்சினை குறித்துப் பேசுகிறார் என்றால், ‘ஒவ்வொரு பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையால் எழுகிறது என்று சொல்வது சரி. ஆனால் அவர் இயக்கம் குறித்து பேசுகிறார் என்றால்ஒரு இயக்கத்திற்கு வர்க்கப் பார்வை இருக்கலாம்இல்லாமலும் போகலாம். திரு. சையதுலு குறிக்கும் தலித் மற்றும் பஹுஜன் இயக்கங்கள் பூர்ஷுவா அரசாங்கத்தில் (அரசு) இடஒதுக்கீடுமற்றும் பதவிகளை இலக்காகக் கொண்டது. அதற்கு வர்க்கக் கண்ணோட்டம் இல்லை. அத்தகைய இயக்கங்களை வர்க்கப் பார்வையற்ற இயக்கங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறதுஉண்மையில்பிரச்சினைகளைத்தான் ஒருவர் வர்க்கப் பர்வையின்றி அணுகக்கூடாது. ஆனால் ஒரு சிலஇயக்கங்களைஅவர்கள் முன்னெடுக்கும் பாதையைப் பொருத்துவர்க்கப் பார்வையற்ற இயக்கங்கள் என்றுசொல்வதில் தவறேதுமில்லை. தலித்துகளும்பஹுஜன்களும் தங்கள் பிரச்சினைகளை வர்க்கப்பிரச்சினையாக கருதாது தவறு செய்கின்றனர் என்று திரு. சையதுலு விமர்சிக்கிறார். சையதுலுவின் விமர்சனத்திலேயே சரி என்று தோன்றும் ஒரு விமர்சனம் இதுவே. சையதுலுவின் வாதங்களில் வர்க்க வார்ப்பு (class stereotype) என்றொரு சொல்லாடலை நாம் பார்க்க முடிகிறது. அந்த சொல்லை நாம் முதலில் படிக்கும்போதுஅவர் அதை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது புரிவதில்லை.  மேலும் கீழும்அவரது கட்டுரையை ஒரு பத்து முறை வாசித்தால் மட்டுமே அதற்கான பொருள் புரிகிறது. அவரைப்பொறுத்தவரை வர்க்க வார்ப்பு என்பது நல்ல விஷயம். வர்க்கக் கண்ணோட்டம் மற்றும் வர்க்க அர்பணிப்பு என்று பொருள்.

 

என்னையும் திரு. சையதுலு அதைக் கொண்டு விமர்சிக்கிறார்: அவரிடமும் வர்க்க வார்ப்பு இருக்கிறதுஆனால் அது அரை-வேக்காடாக இருக்கிறதுபோதுமான வர்க்கக் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்துவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்ற ஒரு தவறான புரிதல்அவரிடம் இருக்கிறது என்கிறார். அவருடைய பார்வையில்எனக்கு வர்க்க வார்ப்புக் கண்ணோட்டம்இருக்கிறதுஆனால் அது ஒரே ஒரு அம்சத்தோடு சுருங்கிவிடுகிறது. 

 

கம்யூனிஸ்டுகள் குறித்தும் அவர் இதே விமர்சனத்தை வைக்கிறார்: பொருளாதார போராட்டமேவர்க்கப்போராட்டம் என்று இன்றைய கம்யூனிஸ்டுகள் கருதுகின்றனர் பொருளாதார போராட்டம் மற்றும் வர்க்கப்  போராட்டம் என்று ஒருவர் பேசுகையில்ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள் என்று பொருள் இல்லை. உற்பத்தி உறவுகளில் உள்ள சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தினூடே அவர்கள் பொருளாதார போராட்டத்தைப் பேசுகிறார்கள் என்றால்சுரண்டல் காரணமாக எழும் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர்களின் கோட்பாடு பேசுகிறது என்றே பொருள். பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிட்டால்…” என்று அவர்கள் சொன்னால், ‘சுரண்டல்வாத உழைப்புசார் உறவுகள் ஒழிக்கப்பட்டுவிட்டால் என்று பொருள்உழைப்புச் சுரண்டலை ஒழிப்பது என்றால்கடந்த காலத்தின் சுரண்டல்வாத உரிமைகளினால் விளைந்த (இன்றும் தொடர்கின்ற) அனைத்துப் பிரச்சினையையும் தீர்ப்பது என்று பொருள். சுரண்டலற்ற உறவுகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டம் என்றால்மேற்கட்டுமானத்தில் நிலவும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்படும் என்று பொருள். அதனால் அவர்கள் ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே காண்பதாகப்பொருளாகாது. அனைத்து அம்சங்கள்பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை உள்ளடக்கியதேபொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிட்டால் என்பதின் பொருள். 

 

அவர்கள் பார்வை அனைத்து அம்சங்களையும்பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருந்தால்சரி. நானும்அதையே சொல்கிறேன் என்று திரு. சையதுலு சொல்கிறாராஇல்லை. அவரது பார்வையில், ‘பொருளாதார உறவுகள்என்றால்உற்பத்தி உறவுகளை உள்ளடக்கிய அடிக்கட்டுமானத்தைக் குறிப்பதில்லை. உழைப்புச் சுரண்டலுக்கெதிரான போராட்டம் என்றால்அனைத்து பிரச்சினைகளுக்கும் எதிரான போராட்டத்தை அது உள்ளடக்கியது எனும் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. 

 

உண்மையில் சையதுலு சொல்ல வருவது என்னவென்றால்பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாகாது என்பதாகும்.  ஆனால் அவரேதான், ‘அடிப்படையில் அனைத்துப் பிரச்சினைகளும் வர்க்கப் பிரச்சினைகளேவர்க்கப் பிரச்சினைக்குமேல் எதுவுமில்லை என்றார். அனைத்தும் வர்க்கப் பிரச்சினை என்றால் பிறகெப்படி ஒரே ஒரு பிரச்சினைக்கெதிராக மட்டும் வர்க்கப் போராட்டம் தொடுப்பதுஏற்றத்தாழ்வுக்கு பங்களிக்கும் அனைத்து உறவுகளுக்கும் எதிராகத் தொடுக்கப்பட வேண்டாமாஅனைத்துப் பிரச்சினையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்க, மற்ற பிரச்சினைகளைத் தொடாமல் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் ஒரு கோட்பாட்டால் சரி செய்ய முடியுமாஅனைத்துப் பிரச்சினைகளுக்கும் வர்க்கத் தொடர்பு உள்ளதென்றால்வர்க்கம் மறைந்து வர்க்கமின்மை தோன்றினால்வர்க்கத்தினால் உண்டாகும் அனைத்துப் பிரச்சினைகளும் மறைந்துவிடாதாஒருவேளை வர்க்கம் மறைந்த பின்னரும்கூட ஒருசில பிரச்சினைகள் தொடரும் எனில்அவை வர்க்கத்தினால் உண்டானதல்ல என்றுதானே பொருளாகும்! சொல்லப்போனால்அனைத்துப் பிரச்சினைகளையும் களைய கம்யூனிஸ்டுகள் பணிபுரியவேண்டும் என்பது திரு. சையதுலுவின் விருப்பம். எனினும்அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகளாக இல்லாமல் முழுமையான கம்யூனிஸ்டுகளாய் இருந்தால் அவர்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் களைய நிச்சயம்உழைப்பார்கள். அவர்களுக்கு அதுபற்றி தெரியும். சையதுலுவின் பின்வரும் சொற்களைப் பாருங்கள்: மார்க்சியத்தில் போதாமை உள்ளதாஅப்படி இல்லை என்றே கருதுகிறேன். சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கு மார்க்சியம் தீர்வு சொல்கிறது. ஒருவேளை இன்றைய மார்க்சிஸ்டுகளால் அதைச்சுட்டிக்கட்ட முடியவில்லை என்றால்எதிர்கால மார்க்சிஸ்டுகள் அதைச் சரியாக சுட்டிக்காட்டுவார்கள்என்னவொரு பெருந்தன்மை! மார்க்சியத்தை இவ்வளவு புரிந்துகொண்ட ஒரு மனிதர் மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானத்திற்கும் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளாதது வியப்பில்லையா!

 

அடிக்கட்டுமானம் மாறினால் சமூகத்தின் அனைத்து தளங்களும் தாமாக மாறும் என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதாக திரு. சையதுலு விமர்சிக்கிறார். அடிக்கட்டுமானத்தில் மாற்றம் என்றால் அது உழைப்புசார் சுரண்டல் உறவுகளிலும்உழைப்புப் பிரிவினையிலும் மாற்றம் என்று பொருள். போராட்டம் இன்றி மாற்றங்கள் தாமாக நிகழ்ந்துவிடும் என்று எந்த கம்யூனிஸ்டுகளும் கூறுவதில்லை. எனினும்அடிக்கட்டுமானத்திலிருந்து விலகி நின்று எந்த ஒரு பிரச்சினையையும் தனித்து தீர்க்க முடியாது என்றே கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.  அவர்கள் அடிக்கட்டுமானத்தை கவனத்தில் கொள்ளுங்கள் என்றே கூறுகின்றனர்.

 

சையதுலு பிரச்சினைகளை இயங்கிலின் அடிப்படையில் காண வேண்டும் என்கிறார்.   ‘இயங்கியல்குறித்துபேசுவோர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.  சமூகத்தில் அடிக்கட்டுமானமும்மேற்கட்டுமானமும் முறையே வெவ்வேறு அளவிலான தாக்கத்தை கொண்டிருக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான தாக்கத்தை செலுத்துவதில்லை. ஒன்று கூட ஒன்று குறைய இருக்கும். ஆனால் அடிக்கட்டுமானம் கொண்டிருக்கும் தாக்கம் போன்று வேறு எதுவும் கொண்டிருப்பதில்லைஅடிக்கட்டுமானம் மேற்கட்டுமானமாகும் அதேபோல்மேல் கட்டுமானம் அடிக்கட்டுமானமாகும். இறுதியில் அதே பழைய அடிக்கட்டுமானமும்மேல் கட்டுமானமுமே மீதமிருக்கும். இல்லையேல்இரண்டும் சமமான தாக்கம் கொண்டிருப்பின்,  ஒன்று மற்றொன்றை பாதிப்பதில்லை. இரண்டும் முன்பு போலவே இருக்கும். ஒன்றைவிட மற்றொன்றுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்போது மட்டுமே ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்தும். இந்த சிறிய விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.     சமூகத்தில் பொருளாதார உறவுகள் நிர்ணய சக்திகளாக இருப்பதில்லை என்று கூறுவதற்காக எங்கெல்ஸின் ஆங்கில மேற்கோள் ஒன்றை திரு. சையதுலு சுட்டிக்காட்டினார். எங்கெல்ஸின் மேற்கோளுக்கு அவர் தெலுங்கு மொழிபெயர்ப்பை கொடுக்கவில்லை (தெலுங்கு இதழானது தெலுங்குமொழியில் படிக்கும் வாசகர்களுக்காகமேற்கோள் ஆங்கிலத்தில் இருந்தால் அவர்களுக்கு விவாதம் எப்படிபுரியும்புரியவில்லை என்றால் அந்தக் கட்டுரையைப் படிப்பதை அவர்கள் கைவிட்டுவிடுவார்கள்).

 

அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமான உறவுகள் குறித்து விவாதிக்கையில்மார்க்ஸும் எங்கெல்ஸும்ஒரு சமூகத்தில்ஒவ்வொரு சமூக மட்டமும் மற்றொன்றின் மீது செல்வாக்கு செலுத்தும்அதேபோல்ஒவ்வொரு மட்டமும் சுயாட்சியும் கொண்டிருக்கும்ஆனால் அனைத்து மட்டங்களும் அடிக்கட்டுமானத்தின் இயல்போடு பொருந்தக்கூடியதாய்துணையாய் இருக்குமே ஒழியஅதற்கு முரணாய் செயல்படாது. அவர்கள் இறுதியாக / முடிவாக அடிக்கட்டுமானமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று அழுத்தம்  கொடுக்கின்றனர்.  திரு. சையதுலு கொடுத்த மேற்கோளிலும் எங்கெல்ஸ் இறுதியாக இதையே சொல்லியிருக்கிறார். ஆனால்அவர் அந்த சொற்கள் மீது கவனம் செலுத்தவில்லைஅதைக் குறிப்பிடவும் இல்லை. திரு. சையதுலு குறிப்பிடாமல் விட்ட எங்கெல்ஸின் அந்த மேற்கோளில் இறுதியாக நீங்கள் இதைக்காணலாம். (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 12, பக். 208),

 

அரசியல்சட்டவியல்தத்துவஞானத் தத்துவங்கள்சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக்கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் – வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன……”

 

அதனைத் தொடரும் வாக்கியங்களிலும்அதே சிந்தனையை நாம் காணலாம். 

 

“…… மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறதுஇவற்றில் பொருளாதார நிலைமைகள்இதரவைமனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற மரபுகளும்கூட ஒரு பாத்திரத்தை – அது தீர்மானகரமானதல்ல என்றாலும் – வகிக்கின்றன.

 

அடிக்கட்டுமானத்தின் தாக்கமே தீர்மானகரமானது என்று எங்கெல்ஸ் கூறியிருந்தாலும்மேற்கட்டுமான அம்சங்களும் வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம்செலுத்துகின்றன…” என்பதை எங்கெல்ஸின் இறுதி கூற்றாக சையதுலு முன்வைக்கிறார். 

 

எங்கெல்ஸின் மேற்கோள் (திரு. சையதுலு குறிப்பிடாமல் விட்டதோடு சேர்த்து) 1890ல் எழுதப்பட்டது. 1894ல் எங்கெல்ஸ் என்ன எழுதினார் என்பதை இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கண்டோம். எங்கெல்ஸ்1890ல் எழுதியதில் ஒரு தெளிவின்மை இருப்பதாக எடுத்துக் கொண்டாலும், “இறுதியில் பொருளாதார நிலைமைகளே வரலாற்று வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று நாங்கள் (மார்க்ஸும் எங்கெல்ஸும்) கருதுகிறோம் என்று 1894இல் எழுதியதில் அவர்களது முடிவு மிகவும் தெளிவாக உள்ளது.

 

மார்க்ஸும்எங்கெல்ஸும் தங்களில் எழுத்துக்களில் முன்வைத்த அதே கோட்பாடுகளை சையதுலு புறம்தள்ளுகிறார். உழைப்புப் பிரிவினை மற்றும் மதம் பற்றி மார்க்ஸும்எங்கெல்ஸும் கூறியதை நாம்இங்கு பார்ப்போம்:

 

உழைப்புப் பிரிவினையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களானதுவெவ்வேறு சொத்துவடிவங்களேயாகும். அதாவதுஉழைப்புப் பிரிவினையில் நிலவும் (குறிப்பிட்ட – மொ.ர்) கட்டமானதுமனிதர்களுக்கிடையிலான உறவுகளையும் பொருள்கருவி மற்றும் உழைப்பின் பலன் ஆகியவற்றின்அடிப்படையில் தீர்மானிக்கிறது. (மார்க்ஸ்எங்கெல்ஸ். 1845. ஜெர்மன் சித்தாந்தம்மாஸ்கோ பதிப்பு, 1976. ஆங்கிலத்தில் பக்.38)1

 

மனிதர்களிடம் உற்பத்தி சாதன உடைமையைப் பொறுத்தோ அல்லது உழைப்பின் பலன்அபகரிக்கப்படுவதைப் பொறுத்தோ மனித உறவுகள் அமைகின்றன.யார் உழைக்கிறார்கள் என்னும் கேள்வியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். [இருப்பினும்இந்த மேற்கோளில் அக்கேள்வி இல்லை]

 

மேலும், 1850இல் மதம் குறித்து எங்கெல்ஸ் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம், “குறிப்பிட்டகாலகட்டத்தின் வர்க்கப் போராட்டமானது மதச்சாயலைக் கொண்டிருக்குமெனில் (மத அம்சங்களை – மொ.ர்)பல்வேறு வர்க்கங்களின் நலன்கள்அவசியங்கள் மற்றும் தேவைகள் ஒரு மதத்திரையின் பின் ஒளிந்துகொண்டிருக்குமெனில்,அது உண்மை நிலையை சிறிதளவே மாற்றக் கூடியதுஅது அந்தக் காலச்சூழலின் நிலைமைகளைக் கொண்டே விளக்கப்பட வேண்டும் – (எங்கெல்ஸ், 1850 ஜெர்மனியில் விவசாய யுத்தம்முன்னேற்றப் பதிப்பகம்மாஸ்கோ

 

மார்க்ஸும் எங்கெல்ஸும் பொருளாதார உறவுகள் குறித்து (அடிக்கட்டுமானம்) விரிவாக விளக்கியுள்ளனர்சையதுலும் எங்கெல்ஸின் கருதுருகளை விளக்குகையில் பொருளாதார கட்டுமானம் அடிக்கட்டுமானம்இல்லைஎன்று எங்கெல்ஸ் சொன்னதுபோல் விளக்குகிறார். இவ்வாறாகபொருளாதார அடிக்கட்டுமானத்தின் தீர்மானகரமான தாக்கத்தை அங்கீகரிக்காமல்தொடர்பற்ற வாதங்கள் மூலம் சையதுலு தனது கட்டுரையை முடித்திருக்கிறார்.

 

சாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைகளை ரங்கநாயகம்மா புறக்கணிக்கிறார் என்கிறார். இதுகுறித்து நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன்அது ஏற்றுக்கொள்ள முடியாததாகஇருப்பின்அவரவர் தம் விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

 

இங்கு நாம் முதலில் சாதியமைப்புக்கு தீர்வு தேடுகிறோம். உழைப்புசார் உறவுகள் மற்றும் உழைப்புப் பிரிவினையை மாற்றுவதன் மூலம் அது சாத்தியம் என்று மார்க்சியர்கள் விவாதிக்கின்றனர். அது தவறென்றால்சாதியப் பிரச்சினையை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரப் பிரச்சினையாகக் காண்பார்களெனில்வர்க்கத்திற்கு தெடர்பற்ற ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும். உழைப்புசார் உறவுகள் மற்றும் சொத்துரிமை பற்றிகுறிப்பிடாமல் அவர்கள் தங்கள் தீர்வுகளை வழங்கட்டும். சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் கலப்புத் திருமணம் ஒரு சரியான தீர்வுதான்.  இருப்பினும்கலப்புத் திருமணங்கள் தங்கு தடையின்றி நடக்கஒரு தீர்வைச் சொல்லுங்கள்! அது சரியாக இருக்குமெனில்நாங்கள் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்குநோயைக் குணப்படுத்தும் சரியான மருந்து வேண்டும். மறுபடியும் எங்களுக்கு நோய் வேண்டாம். எங்களுக்கு மருந்தும்ஆரோக்கியமும் வேண்டும். அத்தகையதொரு பாதையை எங்களுக்குக் காட்டுங்கள்.” என்கிறார் தோழர் ரங்கநாயகம்மா. ( விரிவான வாசிப்புக்கு- சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்(தொடரும் விவாதம்) தேர்வும் தொகுப்பும் மொழிபெயர்ப்பும்- கொற்றவை)

 

மார்க்சியத்தில் தனக்கிருக்கும் போதாமைகளை மார்க்சியத்தின் போதாமைகளாகத்தான் முத்துமோகனும் அவரைச் சார்ந்தோரும் புரிந்து வைத்திருக்கின்றனர். இது மார்க்சியமல்ல அவர்களது அறியாமையில் விளைந்த திரிபுவாதம். இந்தத் திரிபுவாதத்தைத்தான் சொக்கலிங்கமும் அப்படியே எதிரொலிக்கிறார். 

 

கவனித்துப் பார்த்தால் அம்பேத்கரிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அம்பேத்கரைச் சுற்றியே அடையாள அரசியல் செய்யும் முத்துமோகன் காந்தியிடம் இருந்து கம்யூனிஸ்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று மறந்தும் முன்மொழிய மாட்டார். இதுதான் அவரது சாதி அரசியலை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. சொக்கலிங்கமும் அது குறித்துப் பேசவில்லை. காரணம் தத்துவ அடிப்படையில் அணுகுமுறை அடிப்படையில் அவர்களது ஆய்வு இல்லைஅம்பேத்கரை வைத்து சாதிய அடிப்படையில் போய் முடிகிறது அவர்களது ஆய்வு! காந்தியிடம் மட்டுமல்லஅப்படியே மார்க்சியத்தின் போதாமைகளை பகவத்கீதையிலிருந்து கொஞ்சம்,இஸ்லாம்சீக்கியம்,கிறித்தவம் என ஏனைய மதங்களிலிருந்தெல்லாம் எடுத்தது போக தமிழ் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வள்ளளாரில் கொஞ்சம்,  முத்துராமலிங்கத்திடம் இருந்து கொஞ்சம் ஏன் அப்படியே ஜக்கிவாசுதேவிடம் இருந்துகூட எடுத்து சேர்த்துப் பிசைந்து மார்க்சியத்தின் போதாமைகளையெல்லாம் அடைத்துவிடலாம் என்பார்.

 

காந்தியை வில்லனாக்காமல் அம்பேத்கரை கதைநாயகனாக்க முடியாது என்பது போல் மார்க்சியத்தில் போதாமை இருக்கிறது என்று கூறாமல் அம்பேத்கரை உள்ளிழுக்க முடியாது என்பதுதான் அவரது எண்ணம்.

 

முதலாளித்துவ கோட்பாட்டாளர்கள் கக்கி வைப்பதையெல்லாம் மார்க்சின் போதாமையாக இங்கு கொட்டி வைத்திருக்கிறார் முத்துமோகன். உண்மையில் இது மிக மோசமானது. உதாரணத்திற்கு “ முதலாளியம் அதிகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் முதலில் சோசலிசப் புரட்சி நிகழும் என்று மார்க்ஸ் கணித்தார். முதலாளியம் அதிகம் வளர்ந்த நாடுகளில் நெருக்கடிகள் தீவிரமடைந்திருக்கும் உழைக்கும் வர்க்கம் முதிர்ச்சி அடைந்திருக்கும்கட்சி அனுபவம் பெற்றதாக இருக்கும் என்றெல்லாம் மார்க்ஸ் கருதியிருப்பார் என்று எழுதியிருக்கிறார் முத்துமோகன். இதைவிட அபத்தம் வேறு எதாவது இருக்குமா

 

மார்க்ஸ் எங்கெல்ஸ் மீது குறை கூறுவதற்காக ஏனைய முதலாளித்துவ கோட்பாட்டாளர்கள் வைக்கும் அபத்தக் கூற்றையெல்லாம் ஒரு மார்க்சியராக முன் நின்று அதை விமர்சனம் செய்யாமல்முதலாளித்துவ சிந்தனையாளாராக மாறி அடையாள அரசியலைக் கையிலெடுத்து மார்க்ஸையும் எங்கெல்ஸையும் மார்க்சியத்தையுமே கொச்சைப்படுத்துகிறார் முத்துமோகன். அதோடு மார்க்சின் இடத்தில் அல்தூசரை வைக்கிறார்.  

 

முத்துமோகன் கூறியதன் படி மார்க்ஸ் எங்கெல்ஸ் அப்படிக் கருதியது 1848 களில்ஆனால் கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் 1882 இல் என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா

 

இன்று நிலைமை எப்படி மாறிவிட்டது! ஐரோப்பியக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவின் மிகப்பெரும் விவசாயப் பொருளுற்பத்திக்குக் காரணமாக அமைந்தது. இந்த உற்பத்தி உருவாக்கிய போட்டியோ இன்று ஐரோப்பாவிலுள்ள சிறிதும் பெரிதுமான நிலவுடைமையின் அடித்தளங்களையே உலுக்கி வருகின்றது. அத்தோடுஇதுநாள்வரை நிலவிவந்தமேற்கு ஐரோப்பாவின்குறிப்பாக இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகத்தை வெகுவிரைவில் தகர்த்துவிடும் அளவுக்கு அத்தனை ஆற்றலோடும்அவ்வளவு பெரிய அளவிலும்அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறை மூலாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தக் குடியேற்றம் சாத்தியம் ஆக்கியுள்ளது. இவ்விரு நிலைமைகளும் அமெரிக்க நாட்டின் மீதே புரட்சிகரமான முறையில் எதிர்வினை ஆற்றுகின்றன. அரசியல் அமைப்பு முழுமைக்கும் அடிப்படையாக விளங்கும்விவசாயிகளின் சிறியநடுத்தர நிலவுடைமைகள்மிகப்பெரும் பண்ணைகளின் போட்டிக்குப் படிப்படியாகப் பலியாகின்றன. கூடவேதொழிலகப் பிரதேசங்களில் பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும்வியத்தகு மூலதனக் குவிப்பும் முதன்முறையாக வளர்ச்சிபெற்று வருகின்றன.

 

இப்போது ருஷ்யாவைப் பாருங்கள்! 1848 – 49 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது ஐரோப்பிய முடியரசர்கள் மட்டுமல்லஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினரும்கூடஅப்போதுதான் விழித்தெழத் தொடங்கியிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்கருஷ்யத் தலையீடுதான் ஒரே தீர்வு என நம்பினர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். இன்றைக்குஅவர் புரட்சியின் போர்க் கைதியாக காட்சினாவில் (Gatchina) இருக்கிறார்.[9] ருஷ்யாவோஐரோப்பாவில் புரட்சிகர நடவடிக்கையின் முன்னணிப் படையாகத் திகழ்கிறது.

 

வெகுவிரைவில் நிகழவிருக்கும்நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில்அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல்இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவேபாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும்புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இதுநேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமாஅல்லது அதற்கு மாறாகமேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்தஅதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?

 

இதற்குஇன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகிஇரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின்நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமைகம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்.” என்று மார்க்ஸ் மிகச் சரியாகவே கூறியிருக்கிறார். முத்துமோகனது அடையாள மார்க்சியத்துக்கும் திரிபுவாத மார்க்சியத்துக்கும் ஆசானாக  அல்தூசர் இருக்கலாம். ஆனால் எனக்கு மார்க்ஸ்தான் ஆசான். 

 

முத்துமோகனது இந்தத் திரிபுவாதத்துக்கு கைதேர்ந்த கூட்டாளி பேராசிரியர் பிரேம். இவரும் முத்துமோகனும் உரையாடி மார்க்சியத்தைக் காலி செய்யத் துடிக்கும்  லட்சணங்கள்தான்  எத்தனை எத்தனை.

 

மார்க்ஸ் இப்படித்தான் ஜெர்மனியில் இருந்து பாட்டாளி வர்க்கப் புரட்சி தொடங்கும் என்றார்பின் இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம் உலகப்புரட்சியை முன்னெடுக்கும் என்றார். இதெல்லாம் அந்தக் கால-இட-நில நடப்புகள் சார்ந்த கணிப்பு. இதில் ஆசைகளும் வெளிப்படும் என மார்க்ஸை அவமானப்படுத்துகிறார். 

 

முத்துமோகனிடம் இதைத்தான் உரையாடியிருப்பார் போலும். இதற்கெல்லாம் மேலாக “ “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை இடதுசாரிகள் எழுப்பும்போது “ முதலில் இந்திய கம்யூனிஸ்டுகளே ஒன்றுபடுங்கள் பெறவு உலகத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுங்கள் என்று வலது அரசியல் கும்பல் கேலி செய்வதை காதில் வாங்காமல் புரட்சிக்கான நெடும் பயணத்தைத் தொடர்ந்தாலும் சற்று ஓய்வான நேரத்தில் அதைப் பற்றி சிறிது உரையாடுவதிலும் தவறில்லை என்கிறார் பேராசிரியர் பிரேம்.

 

மார்க்ஸையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இதைவிட மோசமாக யாரும் சித்தரித்துவிட முடியாது. இது குறித்து முத்துமோகனும் சொக்கலிங்கமும் தங்களது அடையாள அரசியலை வைத்து விளக்குவார்களாஇல்லை மார்க்சியத்தை முன்வைத்தா?

 

 

இத்தகைய கோமாளித்தனங்கள் குறித்து நாம் கூறவேண்டுமென்றால் வலது சாரி கும்பல் மட்டுமல்ல இன்னும் ஏனைய கும்பல்களும் சாதியை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் உட்சாதி வெறியை ஒழியுங்கள்என்று கூறுவதை காதில் வாங்காமல் சுய சாதி வெறியை மட்டும் அம்பேத்கரியமாக வெளிப்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்களே அதை எப்பொழுது ஒழிப்பீர்கள் என்று நாமும் கேட்கலாம்தானே. 

 

முத்துமோகன் தன்னை மார்க்சிய அறிஞர் என்று மற்றவர்கள் அழைப்பதை ஏற்கும் முன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையாவது கொஞ்சம் கவனமாகப் படித்துப்பார்த்தால் நல்லது. தோழர்களே முதலாளித்துவ கோட்பாடுகளையெல்லாம் மார்க்சியத்தில் கலக்க முடியாது. அப்படிக் கலக்க நினைத்தவர்கள் ஓடிப்போன வரலாறுகள் ஏகத்துக்கும் இருக்கிறது. 

 

மார்க்சியத்தின் போதாமைகளை மார்க்சியமே சரிசெய்யும். அதனால்தான் அதை சமூக விஞ்ஞானம் என்று சொல்கிறோம். அடையாள அரசியலை முன்னெடுப்பதும் பூர்ஷுவா வர்க்கக் கருணையை மார்க்சியமாகக் கொள்வதும் மார்க்சியத்துக்கே கேட்டை விளைவிக்கும். 

 

அம்பேத்கரைப் பற்றிச் சொல்ல வரும்போது அவரது தனிப்பட்ட துயரங்களைத்தான் முதலில் பேச வேண்டும். தனிமனிதராய் இருக்கும்போதும்அவ்வகையில் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் போதும் நமது சுயமரியாதையில் விழும் வசைகளும்காத்திரமான முகச்சுளிப்புகளும் நம்மை இன்னும் ஆழமான சிக்கலுக்குள் இழுத்துக்கொண்டு செல்லும் வல்லமையுடையவையாக இருக்கின்றன.

 

அம்பேத்கரின் ஒரு நாள் வாழ்க்கையை நம்மால் இந்த நிலைமையில் வாழ்ந்து கடக்க முடியாது. அறிவின் துணை கொண்டு சமூகத்தில் பயணிக்கும்போது வரும் அவமானங்களை எதிர்கொள்ளும் துணிச்சலை இவரைப் போன்றவர்கள் எங்கு கண்டுபிடித்திருப்பார்கள்தமக்கு நேர்ந்த துக்கத்தை சமூகத் துக்கமாய்சமூக அவமானமாய் புரிந்துகொண்டதிலிருந்துதான் அவர்களது பயணம் தொடங்கியிருக்கிறது. அம்பேத்கரின் பயணம் நீண்ட தூரம் போராட்டத்தோடு பயணித்து இறுதியில் மனச்சோர்வோடு நிறுவனமயமான ஆன்மீக பவுத்தத்தின் பாதையில் முடிவடைகிறது.

 

ஒரு மனிதனை மதத்தின் பேரிலும்சாதியின் பேரிலும்கடந்த காலத்தின் பேரிலும் எந்த நிர்த்தாட்சண்யமும் இன்றி நிராகரித்த சமூகத்தின் முன்அவன் கலகத்தை நோக்கி நடைபோடுவதில் என்ன குறை இருக்க முடியும்அதேபொழுதுதன்னை நிராகரித்த மதத்தை சர்வத்திற்குமான தீர்வென எடுத்துக்கொள்ளும் போதும்விவாதிக்கும் போதும் நாம் இடைமறிக்க வேண்டியதிருக்கிறது. அம்பேத்கர் கலகக்காரர்தான். அதே சமயம் நிறுவனமயமான ஆன்மீக பவுத்தமதவாதியும் கூட. அம்பேத்கர் விவாதங்களின் நாயகன்தான். அப்பொழுதும்இப்பொழுதும். அதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. துயரம் தோய்ந்த முகங்களுக்கு மத்தியில் அறிவாயுதத்தை நீட்டுகையில்அல்லது அவ்வாயுதத்தை பட்டை தீட்டுகையில்அது பாயும் இடங்களை முன்னமே எதிர்நோக்கித்தான் தீட்டப்படக்கூடும்.

 

அதே சமயம் அனைத்தையும் உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்ய முடியாது. சமூகப் பகைவர்களைக் கண்டுகொண்ட நாம்நமது வேதனைகளைப் புரிந்துகொண்டு நம்மோடு இணைந்து போராடத் தயாராக இருக்கின்ற தோழமைகளையும் கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றுசேர்வதற்கான புள்ளிகளை அடையாளம் கண்டும்அதேசமயம் விமர்சனக் கண்ணோடும் அவர்களோடு உரையாட வேண்டும். தனிமனித வேதனையை நாம் தனிமனிதனின் பக்கம் திருப்பும் போதுஅது தனிமனிதப் பிரச்சினைகளோடு முடிந்துவிடுகிறது. அதை சமூகத்தின் பக்கம் திருப்பும் போது அதற்கான தீர்வுகளையும் பொதுமைப்படுத்த வேண்டும். போராட்ட வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

 

அம்பேத்கர் இரண்டையும் செய்திருக்கிறார். சில சமயம் நம்பிக்கைகளோடுஇன்னும் சில சமயம் அவநம்பிக்கைகளோடு. ஒரு தலைவனை விமர்சிப்பதென்பது அவனது அவநம்பிக்கைகளையும் சேர்த்து விமர்சிப்பதுதான். மாறாக தலைமையைப் பிழை செய்யாத திருவுருவாக மாற்றிதெய்வீக இடத்திற்கு நகர்த்துவது என்பதுஅந்தத் தலைவனுக்கு நாம் செய்யும் முதலும் கடைசியுமான துரோகம். அந்த துரோகத்தை அவனது பெயரிலேயே செய்துஇதுவே நம் தலைவனது லட்சியம் என்று கூறுகிற போது அதற்கான நோக்கங்களை நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

 

அம்பேத்கர் மனிதனாய்ப் பிறந்துஇருந்துகற்றலின் மூலமும்போராடுதலின் மூலமும்ஒன்று சேர்த்தலின் மூலமும் அறிவுஜீவியாய்போராட்டக்காரராய்தலைவராய்த் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அவ்வகையில் அவர் சந்தித்த தோல்வியையும்போராட்டங்களையும் அவரது பார்வையையும் விமர்சிப்பதென்பது அம்பேத்கரை அவமதிப்பதல்ல. அவரை மதிப்பிடுவதுஅதோடு அப்பாதை சென்றடையும் இடத்தை அடையாளம் காட்டுவது ஆகும். மாறாக அம்பேத்கரைத் திருவுருவாக்கி நிலைத்த சிலையாக மாற்றுவது யாருக்குப் பயன்படும்அம்பேத்கரையே விமர்சிப்பதா என்ற கேள்விக்குப் பின் இருக்கும் மூட நம்பிக்கைஅம்பேத்கரை தெய்வீக ஸ்தானத்துக்கு ஏற்றும்போது நாம் சனாதனிகளின் பார்வையையே கடன் வாங்குகிறோம் என்கிற தன்னுணர்வு இல்லாது போகிறது. சனாதனிகள் அவ்விதம்தானே அம்பேத்கரை எதிர்கொண்டார்கள்வேதத்தைப் பழிப்பதாசாதியை மறுப்பதாஇதுதானே அவர்களது என்றும் மாறாத விவாதிக்க முடியாதவிவாதிக்கக் கூடாத பிறப்பிடங்கள்மாறாக நாமும் அத்தகைய தன்மையைக் கொண்டாடும் போதுஇது உண்மையில் யாருடைய விளையாட்டுயாருக்கான விளையாட்டை நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்?” இதுவும் எனது நூலில் உள்ளதுதான். விவாதக் குறிப்பு எழுதும் முன் சொக்கலிங்கம் இதையாவது வாசித்திருக்கலாம்.

 

தோழர்களே... முதலும் முடிவுமாய் நாம் சொல்வது ஒன்றுதான். அம்பேத்கரின் கனவுகளையும் லட்சியங்களையும் நோக்கங்களையும் கம்யூனிஸ்டுகளாக நாம்தான் தூக்கிச் சுமக்க வேண்டும். அதை நிறைவேற்றவும் வேண்டும். ஆனால் அதை அம்பேத்கர் காட்டிய வழியில் செய்ய முடியாது. அதற்கு அம்பேத்கர் காட்டிய வழியும் பிழையானது. அம்பேத்கரது கனவுகளை நனவாக்க வேண்டுமெனில் மார்க்சியத்தைத்தான் நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும். அதுதான் வழியும் காட்டும். 

 

தோழர்களே...

மார்க்சியம் கற்போம்அடையாள அரசியலைபிழைப்புவாத மார்க்சியர்களை அம்பலப்படுத்துவோம்.

 

உரையாடல் தொடரும்...

 

கேள்விகள்:

 

1.    மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதில் இவர்கள் வைக்கும் வேலைத்திட்டம் என்ன

 

2.    மார்க்சியத்தில் போதாமையாக இருப்பது என்ன?

 

3.    மார்க்சியம் இறுகிப்போயுள்ள சித்தாந்தமா?

 

4.    அனைத்துக்கும் நெகிழ்ந்து கொடுக்கும் பிழைப்புவாதமா?

 

5.    அடையாள அரசியலின் தத்துவப் பின்புலம் என்ன?

 

6.    அது யாருடைய அடையாளத்தை பிரதானமாக முன்னெடுக்கும்?

 

7.   மார்க்சியத்தில் அடையாள அரசியலை கலக்க வேண்டுமென்று சொல்கிற போது,  

 

       அம்பேத்கரிய அடையாள அரசியல் காந்திய அடையாள அரசியல் தங்களுக்குள் 

 

        கலக்குமா?

 

8.  ஒரு அடையாள அரசியல் இன்னொரு அடையாள அரசியலை மறுக்குமாஇல்லை அதை தன்னுள் கலக்குமா?

 

9.   சாதி ஒழிப்புக்கு அடையாள அரசியல் வைக்கும் வேலைத்திட்டம் என்ன?

 

10.  அடையாள அரசியலிலிருந்து மார்க்ஸ்க்கு இவர்கள் என்ன கற்றுக்கொடுப்பார்கள்.

 

11.   அடையாள அரசியல் பொருள்முதல்வாதமாகருத்து முதல்வாதமா?

 

12.     அடையாள அரசியல் எந்த வர்க்கத்தை முன்னெடுக்கும்?

 

 

 

இறுதியாக 

அன்பும் பண்பும் கொண்ட 

தோழர் சொக்கலிங்கத்துக்கு..

 

ரங்கநாயகம்மா நூலான புத்தர் போதாதுஅம்பேத்கர் போதாதுமார்க்ஸ் தேவை என்ற நூல் கொற்றவை மொழிபெயர்ப்பில் தமிழில் வந்தபோது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தும் அந்த நூல் குறித்த எந்த விமர்சனமும் வரவில்லை மாறாக அவதூறுகளும் எச்சரிப்புகளும் தான் வந்தன என கூறுகிறார். அம்பேத்கர் எழுத்துகள் குறித்த எந்த ஆய்வு நூலும் தமிழில் இல்லை என்கிறார்.” என்று கூறியிருக்கிறீர்கள். (எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டிருந்தாலும் எப்படித் திரித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லும் பதிலை வைத்து விளக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.) போதாது என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

 

எனது கேள்வி ஒன்றுதான்.

அம்பேத்கர் குறித்து ஆவணப்பூர்வமாக இதுவரை வந்த நூல்களையும்ரங்கநாயகம்மா நூலுக்கும் எனது நூல்களுக்கும் மறுப்பாக வந்த நூல்களை நீங்கள் பட்டியலிடவேண்டும். அதே போல் விவாதக் குறிப்புக்காக நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து பேசுவதை விடுத்து நூல்களை முழுமையாகப் படித்து மறுப்பு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.  அதோடு எந்த நம்பிக்கையும் இல்லாத கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதி ஒழிப்பு என்ற லட்சியத்தை கருக்கொண்ட சமூக அரசியல் போராட்டத் திசைகள் நோக்கித் திருப்பி இருப்பதே மாபெரும் அரசியல் இல்லையா?” என்றும் கேட்டிருக்கிறார். அம்பேத்கர் சாதி ஒழிப்பு லட்சியமாக இறுதியில் சென்று சேர்ந்தது வைதீக பௌத்தத்தை உருவாக்கி அதற்கு மாறுவதுதான். இதுதான் நீங்கள் கருதும் மாபெரும் அரசியலாஆச்சரியமாக இருக்கிறது. 

 

 

உங்கள் விளக்கங்களுக்காகக் காத்திருக்கிறேன். 

நூல்களை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள். 

உரையாடலாம்...

ஓம் மனி பத்மாயி.

 

 

நன்றி 

வணக்கம்

 

அன்புடனும் முத்தங்களுடனும்

வசுமித்ர. 

 

No comments:

Post a Comment