Pages

Wednesday, March 2, 2011

குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும், சிறுமி நேயாவின் நெடுநல் வாடையும்.



1

அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா...குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே....

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டுச் சொல்லித்தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.

No comments:

Post a Comment