Wednesday, October 19, 2016

சி.பி.ஐ.(எம்) குறித்து மார்க்சிய தீர்க்க்க்க்க்க்கதரிசி அ.மார்க்ஸ்....




மேற்கு வங்க சி.பி.எம் குண்டர்கள் வன்புணர்ச்சி செய்ததை சி.பி.எம்.மின் மார்க்சிய தீர்க்கதரிசி! அ.மார்க்ஸ் அம்பலப்படுத்தியதை முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர்கள் செய்யும் 'பிற' வேலைகளை மார்க்சிய அறிஞராக! மாறி அம்பலப்படுத்துவதைப் பார்க்கலாம்.




“மேற்குவங்கத்தில் ஏதேனும் ஒரு காவல் நிலையம் அல்லது அரசு அலுவலகத்திற்கு சென்றால் அங்கே அந்த அதிகாரியை மட்டுமல்ல உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எந்த அரசு நலத்திட்டங்களையும் அவர்களே பொறுப்பேற்றுச் செயல்படுத்துவர். லஞ்சம், ஊழல்,கட்டப்பஞ்சாயத்து,வன்முறை போலிசுடன் சேர்ந்து எதிர்க் கட்சியினரைத் தாக்குதல் என நாம் கற்பனை செய்ய இயலாத அளவிற்குக் காடையர்களாக(‘ஹெர்மெட்’) அங்கு சி.பி.எம்.தொ(கு)ண்டர்கள் உலவுகின்றனர்."

"அவர்களது மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ.யில் இருந்தால்தான் படித்து முடித்தபின் வேலை வாங்கமுடியும். சிங்கூர்ப் பிரச்சினையின் போது மேற்குவங்க எஸ்.எஃப்.ஐ. தலைவர், “மக்களுக்கு இழப்பு இழப்பு என்கிறீர்களே, டாட்டாவுக்கு ஏற்படுள்ள இழப்பு பற்றி யாராவது கவலைப்படுகிறீர்களா?” எனக் கேட்டதை சுமித்சர்கார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியது இங்கு நினைவிற்குரியது."


"மேற்குவங்க அரசு மேற்கொண்டதாகச் சொல்லப்படும் நலத்திட்டங்கள் பெரும்பாலும் சி.பி.எம். தொண்டர்களையே சென்றடைந்தது. வெறும் 1500 ரூபாய் கட்சி ஊதியம் பெறும் முழுநேர ஊழியர்கள் வேறு வகைகளில் சம்பாதித்துச் சொகுசாக வாழ்ந்ததை சுதித் சர்க்கார்,சைபால் விஷ்ணு உட்படப் பலரும் குறிப்பிடுகின்றனர். கடும் வறுமை, சோறும் குடிநீரும்கூட இல்லாத சூழல்- இவற்றிற்கு மத்தியில் பவிசுடன் நிமிர்ந்து நிற்கும் பளபளப்பான கட்சி அலுவலங்களும் ஊழியர்களின் வீடுகளும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாத ஆபாசத்துடன் துருத்தி நின்றன."

"மக்களுக்கும் சி.பி.எம். ஊழியர்களுக்கும் இடைவெளி மிகுந்ததை மாவோயிஸ்டுகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். லால்கர் பகுதியில் அனுஷ்பாண்டே என்கிற சி.பி.எம்.ஊழியரின் வீடு சமீபத்தில் மக்கள் திரளால் தாக்கி நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.பி.எம்.கட்சி இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இது குறித்த செய்தியைத்தான் வெளியிட முடிந்ததே தவிர, அந்த வீட்டின் படத்தை வெளியிடவில்லை.”"

“ இன்னொரு பக்கம் புத்ததேவ் பட்டாச்சார்யா டெல்லிக்கு காவடி எடுத்தார். படைகளை அனுப்ப வேண்டும் என்றார். கள்ளப் புன்னகையுடன் வேடிக்கை பார்த்து வந்த மன்மோகன் - சோனியா-கும்பல் இரு நிபந்தனைகளுடன் படைகளை அனுப்பியது. மாவோயிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் தடைசெய்ய வேண்டும் என்பது ஒன்று. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை வெறுமனே மத்திய அரசின் இராணுவ நடவடிக்கையாக அன்றி மத்திய - மாநில அரசுகளின் இராணுவ போலிஸ் கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றது.”


-       அ.மார்க்ஸ்.

மேலும் "பெண்கள், பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லோரும் தாக்கப்பட்டனர். சாட்டை அடிக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாயினர்" என்பதை தீர்க்கதரிசனமாக உரைத்தவரை மார்க்சிய அறிஞர்!, மார்க்சிய தீர்க்கதரிசி என சிபிஎம், மற்றும் தமுஎகச சிராஜுதீன் சொல்லுவதை ஆட்சேபிக்கமுடியாது. கூடிய விரைவில் இதை SFI  ம் இதைச் சொல்லுமென ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

‘மார்க்சிய தீர்க்கதிரிசி’! அ.மார்க்ஸின் ‘தீர்(த்த)க்க தரிசனங்கள்’!


 தீர்க்க தரிசனங்களும் தீர்த்த தரிசனங்களும்





“திரிபுவாதத்துடன் சமரசம் செய்துகொண்ட பின் இந்த ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் தொடர்ந்து ‘தாய்’ போன்ற நாவல்களையே மாதிரியாகக் கொண்டதாலும் இவர்களுக்கும், இவர்கள் சார்ந்த இயக்கத்திற்கும் புரட்சிகர நடைமுறை இல்லாமல் போனதாலும், திரிபுவாதத்தின் விளைவாக இவர்களது மனச்சாட்சி பிளவுண்டு போனதாலும், இவர்கள் படைத்த ‘சோஷலிச எதார்த்தவாத ஃபார்முலா’ நாவல்கள் (பஞ்சும் பசியும், மலரும் சருகும், தாகம்) உயிரற்றுச் செத்தே பிறந்தன. புரட்சிகர எழுத்துக்கள் அனைத்துமே கலை நியாயமற்றவை, வரட்டுத்தனமானவை என மார்க்சிய எதிரிகளால் தூற்றப்படுவதற்கும் இவை உதவி புரிந்தன.”

“எந்த வித ‘ரிஸ்க்’கும் இல்லாமல், அறையில் மார்க்ஸ் - லெனின் படத்தை மாட்டிக்கொண்டு, கட்சிப் பத்திரிகைகளைச் சந்தா கொடுத்து வாங்கிக்கொண்டு, மாதாமாதம் ஏதோ கொஞ்சம்  கட்சிக்குக் கொடுத்துவிட்டு, வரதட்சணை வாங்கிச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ‘லோன்’ போட்டு வீடு கட்டிக்கொண்டு, பிள்ளைகளை ஆங்கில வழிக் கான்வெண்ட்களில் சேர்த்துக்கொண்டு, எங்காவது நடக்கும் உண்ணாவிரதப் போராட்டங்களில் வாழ்த்துரை வழங்குவது ஒன்றையே புரட்சிகரப் பணியாக செய்து தானும் ஒரு புரட்சியாளன் என்கிற ஆத்ம திருப்தியுடன் ஒரு மத்திய தர வர்க்கக் கலாச்சாரம் இன்று திரிபுவாத அமைப்புக்களுக்குள் உருவாகியுள்ளது.”

“இந்தக் காலச்சாரத்தின் தூல வெளிப்பாடாக இன்று வெளிப்பட்டுள்ளது ‘தோழர்’, ‘தாய்’ மாதிரி சோஷலிச எதார்வாத பார்முலாக்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அரசியல் களத்தில் கிஞ்சித்தும் வெட்கமே இல்லாமல் திரிபுவாதத்தைக் கிரீடமாய்ச் சூட்டிக்கொண்டதைப் போல இதே கலாச்சாரத் தளத்திலும் திரிபுவாதம் தயக்கமற்று வெளிப்படத் துவங்கியுள்ளது.”

ராமசாமியும் அப்படி நினைத்துச் சுய இன்பக் களிப்பில் மிதந்தால் பின்னால் அவர் வருத்தப்பட நேரிடும்

“அசட்டுப் புரட்சி உணர்ச்சி தனுஷ்கோடியாருக்கு ரெம்பத்தான் தலைக்கேறிக் கிடக்கிறது. பிரெஞ்சு கோஷ்டியுடன் கதாநாயகன் மழையில் நனைந்துகொண்டு வருவதைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.”

“சாலையில் அந்த அந்தி நேரத்தில் மழையில் நனைந்து கொண்டு ஓடுகிற அனுபவம் மிகச் சுகமானதாக இருந்தது. ஆணும் பெண்ணும் இப்படி மழையில் நனைவது என்பது எவ்வளவு இனிமையான அனுபவமாக இருக்கிறது. ஷோசலிச லட்சியத்திற்காக இப்படி நாடு,மொழி, இனம் கடந்து அறிவாளிகளும் தொழிலாளிகளும் இணைந்து போரிடவேண்டும்.”

“நல்லவேளை இணைந்து மழையில் நனையவேண்டும் என்று எழுதாமல் போனாரே. இதென்ன குடிகாரனின் உளறல் போலிருக்கிறதே என்கிறீர்களா? இதுவும் ஒரு போதைதான். திரிபுவாத போதை. சுயவிமர்சனப் பார்வையுடன் தனுஷ்கோடி ராமசாமி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. மாறாக புரட்சிகர நாவல் எழுதிவிட்டதாக மீசையை விடைத்துக்கொண்டு திரிய முற்பட்டால் நாம் ஒரே ஒரு வார்த்தைதான் சொல விரும்புகின்றோம்.”

“அசடு.”

- அ.மார்க்ஸ்


மேலும் தமுஎகசவின் தற்போதைய மார்க்சிய அறிஞரான! எஸ்.வி.ஆர் நூல்கள் குறித்தும் ‘மார்க்சிய தீர்க்கதரிசி’ எழுதியிருக்கிறார்.

“பெரியாருக்கும் காந்திக்கும் உள்ள உறவையும் கூட ரெம்பவும் balanced ஆக அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வகையில் கீதா- ராஜதுரை நூற்களின் போதாமை இங்கே சுட்டிக்காடப் படவேண்டிய ஒன்று. பழைய தமிழ் சினிமாக்களைப் போல ஒரு கதாநாயகன் இவர்களுக்கு எதிராக ஒரு வில்லன், துணைவில்லன் என்பதாக 1925-1947 - கால அரசியலை நாம் பார்த்துவிட இயலாது. பெரியார் கதாநாயகன், அம்பேத்கர் துணை கதாநாயகன், காந்தி முதன்மை வில்லன், கம்யூனிஸ்டுகள் துணைவில்லன்கள் என்கிற ரீதியில் கீதா- ராஜதுரையின் கதையாடல் அமைந்துள்ளது.”

“அல்தூசரைப் பற்றிய ராஜதுரையின் புத்தகமெல்லாம் படு அபத்தம்”

“காலச்சுவடு ‘தமிழ் இனி’ கும்பமேளா நடத்தியபோது நிறப்பிரிகை மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தது. அமைதியான முறையில் அரங்கத்திற்கு வெளியே துண்டறிக்கை விநியோகித்துத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை அரங்கில் கண்டித்த ஒரே நபர் ராஜதுரைதான் என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். நிறப்பிரிகைக்கு எதிராக அன்று ராஜதுரையைக் காலச்சுவடு நிறுத்தியதை காலம் மறக்காது”

இதுதான் இந்நாளைய மார்க்சிய அறிஞரான! எஸ்.வி.ஆர் குறித்து எதிர்கால மார்க்சிய தீர்க்கதரிசி சொன்னவைகள் இவைகள்.


இந்த ‘மார்க்சிய தீர்க்கதரிசியும்’!, நாளைய ‘மார்க்சிய அறிஞருமான’! அ.மார்க்ஸ் சி.பி.எம் குண்டர்கள் குறித்தும், எஸ்.எஃப்.ஐ தலைவர்கள் குறித்தும் தீர்க்க தரிசனத்தோடு எழுதியது தொடரும்.....

சிபிஎம் கட்சியும், தமுஎகசவும் அ. மார்க்ஸை தங்களது அமைப்பின் மார்க்சிய அறிஞராகவும்! மார்க்சிய தீர்க்கதரியாகவும்! மாற்றும் வேலையை, பாரதி புத்தகாலய மேலாளர் சிராஜுதினுக்குக் கொடுத்திருக்கிறது போல.! இப்பணியை திறம்படச் செய்யும் அன்னாரின் பணியை நாம் முகநூலில் காணலாம்.





Tuesday, October 18, 2016

மொழிபெயர்ப்பாளர் தோழர் கி.இலக்குவன் (சிபிஎம்) அவர்களுக்கு.....



//ரங்கநாயகம்மா புத்தகம் குறித்து பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு செய்தியை பகிர விரும்புகிறேன் ஓராண்டுக்கு முன்னால் இந்த   
புத்தகத்தை தமிழாக்கம் செய்து தருமாறு அலைகள் வெளியீட்டகம்   பதிப்பாளர் நண்பர் பெ,நா,சிவம் எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அந்த புத்தகத்தை முழுவதுமாகப்படித்தேன் அதில் அம்பேத்காரைப்பற்றி விருப்பு வெறுப்பின்றி மதிப்பீடு செய்வதற்கு பதிலாக அவரைமட்டம் தட்டும் நோக்கத்துடனேயே அது எழுதப்பட்டதாகத் தோன்றியதால் அதனை மொழி பெயர்க்க விருப்பமில்லை என்று சிவம் அவர்களிடம் தெரிவித்து விட்டேன் அவரும் அதை ஏற்றுகொண்டு தமிழில் அதனை வெளியிடும் முடிவையே கைவிட்டு விட்டார்//// - கி.இலக்குவன்


இதுகுறித்து தோழர் சிவத்திடம் பேசியபிறகு நான் வைத்த குறிப்பிற்குப் பின் 
பின் நீங்கள் எனக்கு விளக்கம் கொடுத்திருக்கும் பதில்

//எனது தரப்பிலிருந்து புரட்டல் எதுவுமில்லை என்பதை புரிய வைப்பதற்காக மேலும் ஒரு செய்தியை எனது பகிர்வில் இணைக்க விரும்புகிறேன் அதனை மொழி பெயர்க்க விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டு புத்தகத்தை திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று தொலைபேசி மூலம் தெரிவித்தேன் அதற்கு திருப்பி அனுப்ப வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்து விட்டார் அந்த புத்தகம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது இதிலிருந்து நான் கூறிய கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று புரிந்து கொண்டேன் அவர் வெளியிடாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்//- கி.இலக்குவன்

ஆனால் நீங்கள் இந்தப் பதிலை இன்னும் அங்கு சொல்லவில்லை.

தேனியில் எஸ்.வி.ஆருக்கு மார்க்சிய அறிஞர் பட்டத்தை தமுஎகச கொடுத்தது குறித்தும், அங்கு நான் வைத்த கருத்துக்கு என்னை தமுஎகச வெளியே தள்ளியதும், பின் அது குறித்த அனுபவங்களை எழுதி, எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பினேன். அதைத் தொடர்ந்து தமுஎகச குண்டர்களான வெண்புறா சரவணன் மிகவும் மோசமான மொழியில் நடந்ததைத் திரித்து ஒரு பதிவு எழுதினார். அதைக் கருப்புக் கருணா பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில் என்னை நாய் என்கிற அளவில் நக்கலும் நையாண்டியுமாக வைத்து நடந்த உரையாடலையும் படித்திருப்பீர்கள். அந்தப் பதிவின் கீழ்தான் உங்களது இந்த விளக்கத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். இதன் மூலம் ஒரு அவதூறுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நீங்களும் வினை புரிந்திருக்கிறீர்கள்.

நூல் வந்து நான்கு மாதங்கள் ஆகி, மூன்றாம் பதிப்பும்  கண்டும் விட்டது. கடுமையான விவாதங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் உங்கள் குறிப்பை வைக்காத நீங்கள், தேனியில் நடந்த விசயத்தை தமுஎகச குண்டர்கள் திரித்து நையாண்டி செய்கிற குறிப்பிட்ட  அந்தப் பதிவில் வைக்க வேண்டிய அவசியம் என்ன.

நானும் சிபிஎம் என்கிற சக தோழமையா?
_இல்லை,.. நீங்கள் உங்கள் குறிப்பில் சொன்னது போல் நூல் அம்பேத்கரை மட்டம் தட்டுகிறதா?
தட்டியிருந்தால் எங்கு என்ன விளக்கங்களில் தட்டியிருக்கிறது?

நூல் வந்து இத்தனை மாதங்களாகியும், உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நூலைப் படிக்காமலேயே அவதூறுகள் செய்ததை அறிந்த நீங்கள், இதுவரை எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. அது ஏன்?

இதையெல்லாம் செய்யாமல், உங்கள் சிபிஎம் குண்டர்களுக்கும், தமுஎகச குண்டர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் அந்தக் குறிப்பை அங்கு வைத்துள்ளீர்கள். இதன் மூலம் வாசகர்களுக்கு, ரங்கநாயகம்மா நூல் அம்பேத்கரை மட்டம் தட்டுகிறது என்ற உங்களது தட்டையான பார்வையின் கீழ் ஒற்றைக் குறிப்பாக வைத்து, நூலைப் புறந்தள்ளுமாறு ஒரு குறிப்பைவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். உடனே ஆஹா பார்த்தீர்களா! எங்கள் ஆள் அப்பொழுதே இப்படிச் சொல்லியிருக்கிறார் என உங்கள் கருத்தை எடுத்து குண்டர்கள் சிலாகித்து இன்னும் எலி பூனை விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.

தோழர்...நீங்கள் கலந்து கொண்ட அந்த அவதூறில், தமுஎகச சிபிஎம் குண்டர்கள் யாரேனும் ரங்கநாயகம்மாவின் நூல் குறித்துப் பேசியிருக்கிறார்களா? அவர்கள் படித்து விட்டுத்தான் பேசியிருக்கிறார்களா, என்பதை ஒரு மொழிபெயர்ப்பாளாராகவும், அவதூறில் பங்கு கொண்டவராகவும் நீங்கள் சொல்லலாம். இல்லையேல். தமுஎசக வின் குண்டர்களின் அவதூறு கும்மியில் நீங்களும் உங்கள் பங்குக்கான கைதட்டலை வைத்துச் சென்றுள்ளீர்கள் என்பதே என் இறுதி எண்ணமாக இருக்கும்.

மேலும் அந்த அமைப்பில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு சில கேள்விகளை வைக்கிறேன்.

1. எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞரா?

2.மார்க்சிய அறிஞர் என்றால் மார்க்சியத்துக்கு அவர் அளித்த பங்களிப்புகள் என்ன?

3. ரங்கநாயகம்மா அம்பேத்கரின் எழுத்துக்களை மேற்கோள்காட்டியே விவாதமும் விமர்சனமும் செய்கிறார். இதில் மட்டம் தட்ட என்ன இருக்கிறது. எப்படி மட்டம் தட்டியிருக்கிறார் என்பதை திறனாய்வாக  வைப்பீர்களா லக்குவன்.

4. வர்க்க அரசியல் பார்வையிலிருந்து அம்பேத்கரை எப்படி விமர்சிப்பீர்கள். முன்பு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அம்பேத்கர் பற்றி வைத்த விமர்சனங்கள் என்ன?அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் எதனை அடிப்படையாகக் கொண்டது?

5. அடையாள அரசியலை ஏற்றுக்கொள்வீர்களா?

6. சாதி ஒழிப்புக்கு அம்பேத்கரிடம் தீர்வு இருக்கிறதா?

7. அம்பேத்கரின் பொருளாதாரம் குறித்து உங்கள் பார்வை என்ன?




இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...