Monday, April 7, 2014

லஷ்மி சரவணக்குமாரைக் கட்டிக்கப் போற பெண், மற்றும் லஷ்மிசரவணக்குமாரால் வாழ்நாள் தோழர் என அறிவிக்கப்பட்ட கார்க்கி அவர்களுக்கு..

//இந்த இடத்துல லஷ்மின்னு இல்ல, வேற யார் இருந்தாலும் எனக்கு கோவம் வந்திருக்கும் ண்ணா... ஆனா லஷ்மிங்கறதால தான் அந்த ஸ்டேடஸ் போட்டேன்அதற்கு தான் ண்ணா முதல்லயே சொல்லியிருந்தேன். எனக்கு எந்தவொரு பிரச்சனையும் தெரியாதுன்னு. ஒருவேளை நான் அப்போ அவனோட இருந்திருந்தா, கண்டிப்பாக எதிர்ப்பு சொல்லியிருப்பேன். ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னுஇனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு//

என்பதோடு பொது வெளியில் பதில் சொல்லுங்கள் எனச் சொன்னீர்கள். நான் பொதுவெளியில்தான் உரையாடுகிறேன்.. உரையாடியபடியே இருக்கிறேன். உங்கள் உரையாடலுக்காக காத்திருக்கிறேன்....உரையாடலம் வாங்க.....

Sunday, April 6, 2014

பத்துமணிப் போராளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் விதமாக....


உளவியல் குறிப்பு. 1

வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளையில் இறந்தகால மரபு ஒரு பேய்க்கனவைப் போல் அழுத்திக்கொண்டிருக்கிறது.
-லூயி போனாபார்ட்டின் பதினெட்டாம் புரூமோர்.


பேச்சை விரும்புகிறவனாக நான் இருக்கிறேன். புண்ணைக் கீறி சீழைப் பிதுக்கியெடுப்பது போல் சில வார்த்தைகள் என்னிடம் உண்டு. என்ன செய்யமுடியும், செலுத்தப்பட்டவைகளை வெளியே எடுப்பதென்பது நலமான செயல். அவைகள் உடலிலேயா தங்கி மூளையை துருப்பிடிக்கச் செய்யும் கரியை தன்னகத்தே கொண்டிருக்கலாம். அனுமதிக்கக் கூடாது. நான் சிந்திப்பதென்பது வசைகளை ஆராய்வதற்கல்ல. ஆனால் அவை எழுதவற்கான உளவியல் முனைப்பு அவர்களுக்கு எங்கு தொடங்கியது என்பதுதான்.

உள்ளொதுங்கிய அல்லது விடைத்த, மற்றும் புடைத்த உறுப்புக்களின் மேல் கொள்ளும் அவா நிரம்பியவர்கள், காமத்தை நேரடியாக தங்கள் மூளையில் ஒரு கையால் திணிக்கிறார்கள். அதேசமயம் ஆர்வமும் ஆச்சரியம் கொள்ளும்படியாக தங்களது இடதுகையால் அவ்வுறுப்புக்களை, அன்பின் பெயரால் தங்களது பிரியமானவர்களின் வாய்களில் திணிப்பதோடு, தங்கள் வாய்களிலும் திணித்துக்கொண்டு அலைவதேன் என்ற கேள்வியை முன் வைத்து நகர விரும்புகிறேன்.
துளைகளையும், ஒரு துண்டுச் சதைகளின் மீதும் அளவற்ற அவர்களது அவாவின் உந்தலில் அதை சோதனை செய்யும் ஒரு உறுப்பாய் மாற்றி பரிசோதனைக் கூட மேஜையில் வைக்கிறார்கள்.  அவர்கள் நிகழ்த்தும் பரிசோதனைக் கூடத்தில் அவர்களே ஒரு பரிசோதனை உயிராய் இருக்க அவர்களை சம்மதிக்காச் செய்யாத கருத்து எதுவாக இருக்கும். இதன் நோக்கம் இதுவென்று தெரிந்தும், விருப்பத்தை அறிவித்து மினுங்கும் கண்களோடு தங்கள் வாயை அருகே கொண்டு சென்று தங்களது விருப்பத்தையும் கழுத்தின் கீழ் தொங்கும் இரும்புச் சங்கிலியையும் அவர்கள் வசம் ஒப்படைக்கும் மனப்போக்கையும் காண்கிறேன்.

எனது 35 வருட வாழ்க்கையில் உறவுகளைச் சீர்படுத்துவதில் நிலைபேறவடைது குறித்து  நான் கண்டுணர்ந்தது ஒன்றேதான்.
பத்திருபது வருடங்கள்...  உண்டு, உறங்கிய, ஆணையோ பெண்ணையோ இன்னும் குறிப்பாக தான் மெய்யுறு புணர்ச்சியை நிகழ்த்திய அவ்வுடலின் புணர்ச்சிக்கு மிக உகந்த உறுப்பை, பரிசோதனைக் கூடத்தில் கண்ணைக் கூசசெய்யும் விளக்கின் கீழ், அறுக்கப்பட்ட சதையாய் ஒருவன் வைப்பதும், அதை ஆவலோடு காயம்பட்ட மிருகத்தின் விழிகளால், எச்சிலூற கவனிக்கும் ஏனையோருக்கும் நான் சொல்வது ஒன்றேதான். இருப்பின் பிரச்சினை காரணமாக சுயத்தையே முழுக்க சந்தேகப்படுதலும், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள எண்ணற்ற காரியங்கள் செய்வதும், அதற்கு வழித்தடங்களை அமைப்பதும் ஏன். இவை எவ்வளவு நாட்களுக்கு தாங்கும்.
பொதுவாக நள்ளிரவில் யாரும் அழைக்கலாம் என்பது அன்பர்களின் விருப்பத்திற்கொன்றாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதை நான் மதிக்கிறேன்.எனவே அவர்கள் தங்களது தொலை தொடர்பு எண்களை பொதுச்சுவற்றில் அறிக்கையாக இடுங்கள். கண்காணிக்கும் விழிகள் காவல் காத்துக் கொள்ளட்டும். எதிர்கொள்ளுங்கள். இரவுக்கென்றே ஆக்கப்பட்ட சில  பிராணிகளும் இன்னபிற விலங்குகளும் உண்டு. ஓநாய்களும் உண்டு.
அவைகள் எதிர்கொள்கையில், விலங்கின்  கடைவாய்ப் பல் ஆழமாகப் பதியனிடுகையில் பத்திரிக்கையில் அறிவியுங்கள். உதவப் போராளிகளும் உண்டு.  இவ்வகையான போராட்டங்களில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அத்தோடு இலக்கியத்தையும், புரட்சியையும் சுதந்திரம் எனும் கருப்புப் போர்வையில் சுற்றி, சுயமரியாதையை கூட்டிக்கொடுக்கும் காரியத்தையும் முக்காடிட்டு செய்யத்தூண்டுவது எதனால் என்பதுதான் எனது கேள்வி.
எல்லா தகைமைகளையும் கொன்று விட்டு எச்சிலூறப் பார்க்கும் உங்களது விழிகளுக்கும், இடுப்புக் கீழ் தொங்கும் உங்கள் சதையும், உங்கள் துளையும் அறுத்தெடுக்கப்பட்ட  உறுப்பாய் அதே மேஜைக்கு அப்பபரிசோதனையாளனால் சூடாக பரிமாறப்படும் பொழுது எச்சிலொழுகிய உங்களது கண்களில் எவ்வகையான அறுவெறுப்புத் தேம்பிப் படறும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு அறுவெறுப்பாய் இருக்கிறது.  

அம்மா என்று அழைத்து அடுத்த நொடி படுக்கையைத் தட்டிப் போடும் அவ்வக்கிரங்களுக்கு உங்களது தொலை தொடர்பு எண்களை தயவு செய்து கொடுங்கள். அனைத்தின் சுதந்திரத்தையும் மெச்சுகிறேன். இரவை நானும் கூட வரவேற்கிறேன். அத்தோடு அம்மா அக்கா தங்கைகளுக்கும் அவர்களது எண்களைக் கொடுங்கள். அவர்களும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தான் அது எத்தகைய சுதந்திரம். நாம் அனுமதிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கும் வழங்க. அல்லது எடுக்க நாம் உதவ வேண்டும். முடிந்தால் முதற்கட்டமாக உங்கள் முகநூலில் உங்கள் தொடர்பு  எண்ணைப் பதியுங்கள். அதுவே இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கட்டும். இன்னும் குறிப்பாக முகநூலில் பேச வரும் ( குறைந்தபட்சம் வெறும் எழுத்து வடிவில் பேச வரும்) அன்பர்களை ஏன் உங்கள் பக்கங்களைக் கூடப் பார்க்க விடாமல் தடை செய்கிறீர்கள்.

உத்தமகுணங்கள் கொண்ட ஆண்கள் இரவில் மட்டுமல்ல, பகலிலும் நடுப்பகலிலும் தயாராக இருக்கிறார்கள். நான் இரவுக்காக மட்டும் அல்ல பகல், நடுப்பகல், நள்ளிரவு வரை அவர்களை நீங்கள் வரவேற்பதற்காக... உங்களுக்கு என் அன்பின் ரத்தினக் கம்பளத்தை விற்கிறேன்.  எல்லாவற்றையும் பேசியும் மட்டுமல்ல, எழுதியும் கடக்கலாம். எனவே முகநூலில் யாரையும் தடை செய்யாதீர்கள். அனுமதி அளியுங்கள். பகலும் காமத்தைக் கடந்ததுதான் அன்பர்களே.
துரதிருஷ்டம். சொல்லி அழக்கூட திராணியின்றி, எத்துணையற்று தனியே அழும் மனநிலை வாய்க்கவா இத்தனை போராட்டம். இதைத்தான் அவர்கள் காதல், நட்பு, இன்னபிற உறவுகளோடு பொருத்திக்கொள்கிறார்களா.
அறுவைச் சிகிச்சை என்பது சதையின் வெற்றிடத்தை ஆராய்வதல்ல, உண்மையில் ஆராய்சியாளன் தான் தேடிய சிந்தனையில் அது ஒளிந்து இருக்கிறது.
எந்த வசையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றென இருந்ததில்லை, என்பதை நான் அறிவேன். சிந்திக்க முடியாதவர்களின் மூளை என்ன விதமாக இயங்கும் என்பதையும், ஓய்வுபெற்ற மனிதனின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்றழைக்கப்படுவதையும் இக்கணத்தில் பொருத்துகிறேன். அடிமைகள் சுதந்திரமாக இருப்பதற்கு முதலாளிகளின் அனுமதி தேவையெனும்போது அங்கு அடிமை தான் அடிமை எனும் அடையாளத்தையும் கூட இழக்கிறான். 

சிறுகுறிப்பாக
நள்ளிரவில் உங்களுக்கு  அழைப்பு வந்து சமூகத்தை சீர்திருத்தும் காரியங்களைச் செய்ய உங்களுக்கு உதவ உங்கள் குடும்பத்தார்களையும் அழையுங்கள். அவர்கள் எண்களையும் பகிருங்கள். இது போன்ற அழைப்புக்களில் நாம் மட்டுமல்ல நம் குடும்பமும் விழித்திருக்கச் செய்யவேண்டும். இத்தகைய உன்னத காரியங்களை அவர்களும் கண்டுகளிக்க வேண்டும். புரட்சி ஓங்குக.

இன்னமும் உரையாடக் காத்திருக்கிறேன்.

உரையாடலாம் வாங்க.

Friday, April 4, 2014

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்......
இந்த வக்கிர நோய்  எங்கு தொடங்கியது, எப்படி தொடங்கும், எவர்கள் சந்தித்தால், இந்த நோய் தொற்றி முற்றும் நிலைக்குப் போகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்... இவக்கிரத்தைத் தூண்டியவர்களை, உற்சாகமூட்டி இதில் குளிர்காயும் பழைய நண்பர்களையும் நான் அறிவேன். இலக்கிய வியாதிகளென என்னை அறிந்தவர்கள் எக்காளம் கொட்டி தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டால், என்னால் இனி குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கமுடியாது என்பதை இக்கணம் அறிவிக்கிறேன். எதையோ பேசுவது போல்... எங்கையோ ஒரு உரையாடலைத் தொடங்கி... கடைசியில் இங்கு வந்து முடிவதன் மர்மம் அறிகிறேன் நண்பர்களே...அவ்வாறு அறியப்பட்டவர்களே...

நான் பிறந்த ஊரான, போடிநாயக்கனூர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. காடு மேடெல்லாம் சுத்துனாலும் கண்டமானூரான் கவுட்டுக்குள்ளதான்னு... அந்தப் பழமொழியின் சூத்திரம் எனக்குப் புரிய இத்தனை நாளாகிவிட்டது. நான் கொஞ்சம் மந்தம்தான். ஆகவே.... இவ்வக்கிரத்திற்குத் துணைநின்ற, நண்பர்களாக நான் நினைத்தவர்கள்.. சேர்ந்து  உண்டு உறங்கியவர்கள்...மற்றும், இதன் பின்னால் இருக்கும் நோய்க்குறிகள் அனைத்தையும் எழுத ஆவலாக உள்ளேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

எவன் குடும்பம் எப்படிப் போனால் என்ன..  என் குடும்பம்.. என் பெயர்... என் மானம்... என் மரியாதை என காத்துக்கொள்ளும் அவர்கள் பற்றி,  எனக்கு இனி துளிக் கவலையில்லை என அறிவிக்கிறேன். என்னைப் பேச வைத்து அழகு பார்த்து நீதியும் சொல்லும் அவர்களுக்கு அவர்களைப் பற்றிச் சொல்ல எனக்கு வாய்த்த இந்நல்வாய்ப்பை நான் நழுவவிட மனம் இல்லை.

இதில் முக்கியமான விசயமாக நான் கருதுவது ஒன்றே ஒன்றேதான். திரு கார்க்கி மனோகரன் அவர்கள் வழக்குத் தொடரவேண்டும். அவதூறு என நிருபீக்க வேண்டும். அப்படி  இல்லாத பட்சத்தில் நான் வழக்குத் தொடர்வேன். அது சம்பந்தப்பட்ட ரகசிய வியாதி பீடித்தவர்களை... சில பல குடும்பங்களை, குடும்பமல்லாத இணைப்பில் வாழும் நபர்களின் பெயரை,  வழக்கில் இணைத்துத் தாங்கி நிற்கும்.

இதற்கு மேல் அமைதியாய் இருப்பதென்பது எனக்கு நானே அளித்துக் கொண்டும் தண்டனையாக உணர்வதோடு, எனக்கு நானே சொல்லிக் கொண்ட... இது அடுத்தவர் வாழ்க்கை.... அந்தரங்கம்... சுயமரியாதை... கருணை..இரக்கம் என எண்ணத்தூண்டும் எனது வாசிப்பை, எனது சுயமரியாதையை தள்ளி வைத்ததோடு மட்டுமல்லாது அதன்  மீது காறி உமிழ்ந்துவிட்டு இதன் பின்னால் இருக்கும் நண்பர்களாக அறியப்பட்ட அந்த நல்லிதயங்களின் பெயர்களை நானே நேரடியாக இதை வழக்கில் சேர்த்து எழுதுவேன்.  நெடுஞ்சாண்கிடையாக வழக்கில் வந்து விழுங்கள் என அன்போடு வரவேற்கிறேன். 

எந்தப்பக்கம் சுண்டினாலும் பூ விழும் நாணயம் கள்ள நாணயமென அறிவிப்பேன். இனி தலையும் விழும். மேற்கண்ட வழக்கிற்காகக் காத்திருக்கிறேன். வாழ்க்கை பன்முகம் கொண்ட இட்லி. அஃது வெந்துவிட்டதா எனக் குத்திப் பார்க்க எனது சுட்டுவிரலால் அழுத்தத் தலைப்பட்டுவிட்டேன்.

சிறு குறிப்பு;
இனி இவ்விவாதம் குறித்து


இது எனக்குத் தெரியாது...
இதை நான் வாசிக்கவில்லை...
அய்யோ அப்படியா...
எனக்குத் தெரியாதே....
எனக்கு இருபக்க நீதியும் தெரியாது....
எல்லோருமே நண்பர்கள் இதில் நான் யாரைப் பேசுவது..
பொதுப்பதிவு
தனிப்பதிவு
உள்பதிவு நடுப்பதிவு.....எனச் சமாளிக்கும் வேலைக்கு ஆள் நானில்லை.

முடிவாக.... மேற்கண்ட சொத்தைப் பற்களால் கட்டப்பட்டிருக்கும் கள்ள மௌன வாய்களுக்கு வெளியே தொங்கும், அவ்விறுகிய பூட்டுக்களின் வாயை சாவியால் அல்ல, நான் அறிந்த அ(ர)றத்தால் ராவித் திறப்பேன் என்பதை மிக்க பணிவன்புடன் அறிவிக்கிறேன். கூச்சங்கள் அழிக.

தொடங்கிவிட்டு..... இவ்விவாதத்தில்  எண்ணெய்யை தள்ளி நின்று ஊற்றும் அவ்வாத்மாக்களுக்கு, இனி என் வரிகள் அறம் பாடுமென சொல்லிக்கொள்கிறேன். ஆமென். எனது வீட்டில் நடந்த விசயங்களைக் கேட்க ஆவலாக இருக்கும் அவர்களுக்கு, அவர்களோடு இருந்து என் வீட்டில் என்ன நடந்தது எவரெவர் நியாயவாதிகள் என வெளிச்சமிடுவதில் எனக்கு சந்தோஷம் தான். அது என் சுயசரிதையின் வேண்டாத பக்கங்களாய் இருந்தாலும், சொல்ல எனக்கு ஒரு தொல்லை இல்லைதான். உண்மைகளை கூச்சங்களின் மேலோ, நட்பென்னும் நடிப்பின் ஊத்தைத் தனத்திலோ இனி பொத்த முடியாது. நாறத்தொடங்கினால் தொடங்கட்டும்.

கவலைகள் ஒழிக.


இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...