Sunday, April 6, 2014

பத்துமணிப் போராளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் விதமாக....






உளவியல் குறிப்பு. 1

வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளையில் இறந்தகால மரபு ஒரு பேய்க்கனவைப் போல் அழுத்திக்கொண்டிருக்கிறது.
-லூயி போனாபார்ட்டின் பதினெட்டாம் புரூமோர்.


பேச்சை விரும்புகிறவனாக நான் இருக்கிறேன். புண்ணைக் கீறி சீழைப் பிதுக்கியெடுப்பது போல் சில வார்த்தைகள் என்னிடம் உண்டு. என்ன செய்யமுடியும், செலுத்தப்பட்டவைகளை வெளியே எடுப்பதென்பது நலமான செயல். அவைகள் உடலிலேயா தங்கி மூளையை துருப்பிடிக்கச் செய்யும் கரியை தன்னகத்தே கொண்டிருக்கலாம். அனுமதிக்கக் கூடாது. நான் சிந்திப்பதென்பது வசைகளை ஆராய்வதற்கல்ல. ஆனால் அவை எழுதவற்கான உளவியல் முனைப்பு அவர்களுக்கு எங்கு தொடங்கியது என்பதுதான்.

உள்ளொதுங்கிய அல்லது விடைத்த, மற்றும் புடைத்த உறுப்புக்களின் மேல் கொள்ளும் அவா நிரம்பியவர்கள், காமத்தை நேரடியாக தங்கள் மூளையில் ஒரு கையால் திணிக்கிறார்கள். அதேசமயம் ஆர்வமும் ஆச்சரியம் கொள்ளும்படியாக தங்களது இடதுகையால் அவ்வுறுப்புக்களை, அன்பின் பெயரால் தங்களது பிரியமானவர்களின் வாய்களில் திணிப்பதோடு, தங்கள் வாய்களிலும் திணித்துக்கொண்டு அலைவதேன் என்ற கேள்வியை முன் வைத்து நகர விரும்புகிறேன்.
துளைகளையும், ஒரு துண்டுச் சதைகளின் மீதும் அளவற்ற அவர்களது அவாவின் உந்தலில் அதை சோதனை செய்யும் ஒரு உறுப்பாய் மாற்றி பரிசோதனைக் கூட மேஜையில் வைக்கிறார்கள்.  அவர்கள் நிகழ்த்தும் பரிசோதனைக் கூடத்தில் அவர்களே ஒரு பரிசோதனை உயிராய் இருக்க அவர்களை சம்மதிக்காச் செய்யாத கருத்து எதுவாக இருக்கும். இதன் நோக்கம் இதுவென்று தெரிந்தும், விருப்பத்தை அறிவித்து மினுங்கும் கண்களோடு தங்கள் வாயை அருகே கொண்டு சென்று தங்களது விருப்பத்தையும் கழுத்தின் கீழ் தொங்கும் இரும்புச் சங்கிலியையும் அவர்கள் வசம் ஒப்படைக்கும் மனப்போக்கையும் காண்கிறேன்.

எனது 35 வருட வாழ்க்கையில் உறவுகளைச் சீர்படுத்துவதில் நிலைபேறவடைது குறித்து  நான் கண்டுணர்ந்தது ஒன்றேதான்.
பத்திருபது வருடங்கள்...  உண்டு, உறங்கிய, ஆணையோ பெண்ணையோ இன்னும் குறிப்பாக தான் மெய்யுறு புணர்ச்சியை நிகழ்த்திய அவ்வுடலின் புணர்ச்சிக்கு மிக உகந்த உறுப்பை, பரிசோதனைக் கூடத்தில் கண்ணைக் கூசசெய்யும் விளக்கின் கீழ், அறுக்கப்பட்ட சதையாய் ஒருவன் வைப்பதும், அதை ஆவலோடு காயம்பட்ட மிருகத்தின் விழிகளால், எச்சிலூற கவனிக்கும் ஏனையோருக்கும் நான் சொல்வது ஒன்றேதான். இருப்பின் பிரச்சினை காரணமாக சுயத்தையே முழுக்க சந்தேகப்படுதலும், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள எண்ணற்ற காரியங்கள் செய்வதும், அதற்கு வழித்தடங்களை அமைப்பதும் ஏன். இவை எவ்வளவு நாட்களுக்கு தாங்கும்.
பொதுவாக நள்ளிரவில் யாரும் அழைக்கலாம் என்பது அன்பர்களின் விருப்பத்திற்கொன்றாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதை நான் மதிக்கிறேன்.எனவே அவர்கள் தங்களது தொலை தொடர்பு எண்களை பொதுச்சுவற்றில் அறிக்கையாக இடுங்கள். கண்காணிக்கும் விழிகள் காவல் காத்துக் கொள்ளட்டும். எதிர்கொள்ளுங்கள். இரவுக்கென்றே ஆக்கப்பட்ட சில  பிராணிகளும் இன்னபிற விலங்குகளும் உண்டு. ஓநாய்களும் உண்டு.
அவைகள் எதிர்கொள்கையில், விலங்கின்  கடைவாய்ப் பல் ஆழமாகப் பதியனிடுகையில் பத்திரிக்கையில் அறிவியுங்கள். உதவப் போராளிகளும் உண்டு.  இவ்வகையான போராட்டங்களில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அத்தோடு இலக்கியத்தையும், புரட்சியையும் சுதந்திரம் எனும் கருப்புப் போர்வையில் சுற்றி, சுயமரியாதையை கூட்டிக்கொடுக்கும் காரியத்தையும் முக்காடிட்டு செய்யத்தூண்டுவது எதனால் என்பதுதான் எனது கேள்வி.
எல்லா தகைமைகளையும் கொன்று விட்டு எச்சிலூறப் பார்க்கும் உங்களது விழிகளுக்கும், இடுப்புக் கீழ் தொங்கும் உங்கள் சதையும், உங்கள் துளையும் அறுத்தெடுக்கப்பட்ட  உறுப்பாய் அதே மேஜைக்கு அப்பபரிசோதனையாளனால் சூடாக பரிமாறப்படும் பொழுது எச்சிலொழுகிய உங்களது கண்களில் எவ்வகையான அறுவெறுப்புத் தேம்பிப் படறும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு அறுவெறுப்பாய் இருக்கிறது.  

அம்மா என்று அழைத்து அடுத்த நொடி படுக்கையைத் தட்டிப் போடும் அவ்வக்கிரங்களுக்கு உங்களது தொலை தொடர்பு எண்களை தயவு செய்து கொடுங்கள். அனைத்தின் சுதந்திரத்தையும் மெச்சுகிறேன். இரவை நானும் கூட வரவேற்கிறேன். அத்தோடு அம்மா அக்கா தங்கைகளுக்கும் அவர்களது எண்களைக் கொடுங்கள். அவர்களும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தான் அது எத்தகைய சுதந்திரம். நாம் அனுமதிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கும் வழங்க. அல்லது எடுக்க நாம் உதவ வேண்டும். முடிந்தால் முதற்கட்டமாக உங்கள் முகநூலில் உங்கள் தொடர்பு  எண்ணைப் பதியுங்கள். அதுவே இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கட்டும். இன்னும் குறிப்பாக முகநூலில் பேச வரும் ( குறைந்தபட்சம் வெறும் எழுத்து வடிவில் பேச வரும்) அன்பர்களை ஏன் உங்கள் பக்கங்களைக் கூடப் பார்க்க விடாமல் தடை செய்கிறீர்கள்.

உத்தமகுணங்கள் கொண்ட ஆண்கள் இரவில் மட்டுமல்ல, பகலிலும் நடுப்பகலிலும் தயாராக இருக்கிறார்கள். நான் இரவுக்காக மட்டும் அல்ல பகல், நடுப்பகல், நள்ளிரவு வரை அவர்களை நீங்கள் வரவேற்பதற்காக... உங்களுக்கு என் அன்பின் ரத்தினக் கம்பளத்தை விற்கிறேன்.  எல்லாவற்றையும் பேசியும் மட்டுமல்ல, எழுதியும் கடக்கலாம். எனவே முகநூலில் யாரையும் தடை செய்யாதீர்கள். அனுமதி அளியுங்கள். பகலும் காமத்தைக் கடந்ததுதான் அன்பர்களே.
துரதிருஷ்டம். சொல்லி அழக்கூட திராணியின்றி, எத்துணையற்று தனியே அழும் மனநிலை வாய்க்கவா இத்தனை போராட்டம். இதைத்தான் அவர்கள் காதல், நட்பு, இன்னபிற உறவுகளோடு பொருத்திக்கொள்கிறார்களா.
அறுவைச் சிகிச்சை என்பது சதையின் வெற்றிடத்தை ஆராய்வதல்ல, உண்மையில் ஆராய்சியாளன் தான் தேடிய சிந்தனையில் அது ஒளிந்து இருக்கிறது.
எந்த வசையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றென இருந்ததில்லை, என்பதை நான் அறிவேன். சிந்திக்க முடியாதவர்களின் மூளை என்ன விதமாக இயங்கும் என்பதையும், ஓய்வுபெற்ற மனிதனின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்றழைக்கப்படுவதையும் இக்கணத்தில் பொருத்துகிறேன். அடிமைகள் சுதந்திரமாக இருப்பதற்கு முதலாளிகளின் அனுமதி தேவையெனும்போது அங்கு அடிமை தான் அடிமை எனும் அடையாளத்தையும் கூட இழக்கிறான். 

சிறுகுறிப்பாக
நள்ளிரவில் உங்களுக்கு  அழைப்பு வந்து சமூகத்தை சீர்திருத்தும் காரியங்களைச் செய்ய உங்களுக்கு உதவ உங்கள் குடும்பத்தார்களையும் அழையுங்கள். அவர்கள் எண்களையும் பகிருங்கள். இது போன்ற அழைப்புக்களில் நாம் மட்டுமல்ல நம் குடும்பமும் விழித்திருக்கச் செய்யவேண்டும். இத்தகைய உன்னத காரியங்களை அவர்களும் கண்டுகளிக்க வேண்டும். புரட்சி ஓங்குக.

இன்னமும் உரையாடக் காத்திருக்கிறேன்.

உரையாடலாம் வாங்க.

No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...