சினிமாவில் நாங்கள் சாதிக்கப் போகிறோம்.. எங்களை வசைபாடுகிறார்
ஞாநி என ஞாநியை முன் வைத்து மற்றும் சாமானியர்களின் அறிவை முன்வைத்தும் எழுதிய ஜெயமோகனின்
கடிதத்தை உளவியல் நோக்கில் அணுகும்போது அவரது இருப்பு எதன் மேல் கட்டப்பட்டிருக்கிறது
என புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் உடலை அதன் அசைவுகளை, அசைவுகள்
தனக்கென்ன உருவாக்கும் சொற்களை முன்வைத்து ஒரு விமர்சனத்தை அல்லது விமர்சனத்துக்கு
ஒரு விமர்சனத்தை எழுதுவது கீழைத்தேய நாடுகளின் ஒரு அம்சம். ஜெயமோகன் ஏன் எப்பொழுதும்
மூலக்காய்ச்சலில் அவதிப்படுகிறார். ஏன் அவரது சொற்கள் நிலைகொள்ளாமல் பதட்டத்துடன் தவிக்கிறது
என்ற ஆராய்சிக்கு அவரே தனது எழுத்தில் சாட்சியங்கள் விட்டுச் செல்கிறார். முதல்கட்டமாக
இதை ஞானப்பால் குடிக்க தேடியலைந்த சுந்தரராமசாமியிலிருந்து தொடங்க வேண்டும்.
சுந்தரராமி தான் அருந்திய ஞானப்பாலை ஜெயமோகனுக்குக் கொடுத்ததோடு
அதை மற்ற பிள்ளைகளுக்கும் பாலை ஊட்ட எல்லாம் எனக்குத்தான் என்கிற வெறியுணர்ச்சி மெதுவாக
கிளை விட்டுப் படர மார்பை அறுக்கும் வேலையைச் செவ்வனே செய்கிறார். சுந்தரராமசாமியின்
இறப்பு அவருக்கு உண்மையில் உளவியல் ரீதியாக ஒரு நிம்மதி. அந்த நிம்மதியின் ஊடாக அவரடையும்
பதட்டங்களையும் உளவியல் நோக்கில் காணலாம். இது அடிப்படையில் இறப்பைத் தொழுது அதில்
தன்னை அடையாளம் காணும் ஒரு வகை ஈனத்தனமான புத்தியே. இறப்பின் இழப்பில் ஒரு சுகம் காணும்
மனநிலையை மட்டுமே தனக்கு ஆவேசம் தரும் உத்தியாக ஜெயமோகன் கருதுகிறார்.
இந்து மதத்தில் இறப்புதான் கடவுள். கேட்க வேண்டுமா. ஜெயமோகனுக்கு
தன்னைப் பெற்றவர்களின் துர் மரணம் குறித்த கேள்வி அவருக்கு ஆறாத ரணமாக புரையோடியிருக்கிறது.
அவரது ஆழ் மனம் அதற்கு ஒரு விடை இருந்தே தீரவேண்டும். என நம்புகிறது. காரணம் முதலில்
இது அவரது குடும்பத்தார் அடைந்த மரணம் இரண்டாவது நல்ல வாசிப்புள்ள பேதங்களை பிரித்தறிந்து
ஆராயும் மனத்தின் துர்மரணம். இக்கேள்விகளுக்கும் சந்தேகங்களும் லௌகீகம் பதில் சொல்லாது
என்கிற அவரது நம்பிக்கையே அவரை இந்து சாக்கடைக் குழியில் இறங்கிய வினை. இதுவே அவரை
சதா எழுதத்தூண்டும் ஒரு எழுத்தாளனாய் மாற்றியிருக்கிறது. போகும் இடமெல்லாம் ஞானக் கேள்வி, ஞானத்தேடல் எனச்
சொல்வது தனது பெற்றோரின் மரணம் குறித்த அவரது பதட்டம் மிக்க சந்தேகங்களையே.
இதற்கு விடையை ஒரு இடது சாரியால் விளக்கமுடியாது. நித்ய சைதன்ய நிதிதான் விளக்க முடியும். அவரால்
மட்டுமே முடியும் என்ற ஜெயமோகனின் கூற்றை, இங்கு சுந்தரராம சாமி கூறிய கூற்றொன்றை ஞாபகப்படுத்துவதன்
மூலம் நான் அறிந்து கொள்ளலாம். “என் குழந்தையை இழந்து நான் பரிதவிக்க நேர்ந்தால் கார்ல்
மார்க்ஸ்க்கு சொல்ல எதுவுமேயில்லை ஜே.கிருஷ்ண மூர்த்திக்கு நிறைய இருக்கிறது” இந்த
ஒட்டு மொத்த உளவியலே இந்து சனாதனத்தின் மேல் கட்டப்பட்ட மாயை. அதிலும் இதில் என் துக்கம்
விஷேஷம் எனக் கருதும் தனி மனித உளக்குறைப்பாடே.
உண்மையில் சுந்தரராமசாமிக்கு சொல்ல மார்க்ஸிடம் வார்த்தைகள் மட்டும் இல்லை.
அதற்கு மேலும் நிறைய இருக்கிறது. ஏனென்றால் குழந்தை பெற்று அதை வறுமைக்கும் நோய்க்கும்
தின்னக் கொடுத்த மார்க்ஸ்க்கு வார்த்தைகளும், குழந்தை இறந்த பொழுதின் வலியும் தெரியாதா
என்ன. இங்குள்ள முரண் என்னவென்றால் குழந்தை பெற்றுக்கொள்ளாது துறவு என்ற கோட்பாட்டை
வைத்து முன்னகரும் ஒரு சாமியாருக்கு இல்லற வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல விசயங்கள் இருக்கிறதென்றால்
ஒரு குடும்பஸ்தனுக்கு அதை விட அதிகம் இருக்கும்.
ஆனால் ஜெயமோகனுக்கு
ஏன் சாமியார்கள் சொல்ல வேண்டும். கற்பிதங்கள் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் பதில்களுக்கும்
கற்பிதங்கள்தான் பதில் அருள முடியும். மதவாதிகள் தங்களுடைய சொந்த குணாதிசயங்களைத் தாங்கள்
கடவுள் என்றழைத்த ஒரு மேலான வடிவத்தின் மீது புகுத்தி வெளிக்காட்டினார்கள் என்ற எபிக்குரஸ்சின்
கூற்றையே இங்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். ஜெயமோகன் அவர்களுக்கு கடவுளும் கலையும்
மதங்களாகத்தான் படுகின்றது. அவரைப் பொறுத்த வரையில், இவை இரண்டுமே சாமான்யர்களுக்கு
புரிபடாது,. ஞானத்தைத் தேடும் சாமியார்களும் கல்வியறிவை நுணுக்க உனர்வோடு கற்ற மதக்
கல்வியாளர்களுக்கு மட்டுமே இது புரியும். உண்மையில் இது ஒரு சனாதனச் சிக்கல்.
ஜெயமோகன் போன்றோருக்கு எல்லாம் கலைகளாய்த் தெரிவதன் மர்மம்
என்ன. கலை என்றால் என்ன என்கிற சிறிய கேள்விக்கு இருநூறு பக்கங்களில் அன்பர் ஜெயமோகன்
பதில் அளிப்பார். அதை ஒரு வரியில் சுருக்கலாம். எல்லாம் ஆத்மீக அனுபவம். இதுதான் அவரது
எழுத்துலக கட்டுமானம். தற்கொலை கூட ஒரு கலைதான் என ஜெயமோகன் சொல்கிறாரென்றால் அவர்
முயற்சித்திருக்க வேண்டும்.
மற்றவர்களின் தற்கொலையிலிருந்து அவருக்குச் சொல்ல ஒரு வார்த்தை
இருக்கிறதென்றால் அது இயலாமை என்கிற வார்த்தையாகத்தான் இருக்கும். ஏனெனில் அது அவர்
முயற்சித்த தற்கொலையல்லவா, ஞானிகளின் முயற்சியல்லவா. பொற்பட்டு நூலறிந்த ஒரு புத்திமானின்
உலகல்லவா. நிற்க.
சினிமா ஒரு கலை என்றால். மற்ற எவைகள் கலைகள் இல்லை. முறையாக
கழிப்பறையில் அமர்ந்து அமர்ந்து, சிகரெட் பிடித்தபடி ஒருவன் நாசுக்காக பேளுவது கூட
ஒரு கலை வடிவம் என்றே ஜென் மரபு கூறுகிறது.
ஒரு நிஷ்காமிய கர்மிக்கு எல்லாம் கலையாகப் படவேண்டும். தான் செய்யும் கொலைத்
தொழிலைக் கூட ஒரு கடமையாகப் பார்க்க வேண்டும்.
தான் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் நாலு துட்டு
சம்பாதிக்க காரணமாக இருக்கும் ஒரு தொழிலை கலையென அவன் கூறக்கூடாது. அப்படிக் கூறுவானாகில்
அதன் கலைத்தன்மையை மட்டும் முன்னிறுத்துவதாக அல்லாமல், அதன் வெளிறிய ஜிகினா முகப்பை
மட்டுமில்ல, கலை என்ற வார்த்தையை அதன் தன்மையை
உள்ளார்ந்து கூறும் அவன், அதன் அழுகிய விசயங்களையும் எடை போடவேண்டும்.
கலைகள் ஆழ்ந்த இருப்பிலிருந்து, ஒருவனைத் தானே தன்னிறைவு
செய்வதல்ல. கலை சமூகத்தின் இருப்பையே கைக்கொண்டு அதை உண்டு வளர்வதாக இருக்கவேண்டும்.
இது என் வரையறை. சமூகத்தைக் கணக்கில் கொள்ளாத கலையை பொருட்படுத்த வேண்டிய அவசியமேயில்லை. (விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன) இன்னொன்று கலை
கலை என கழைக்கூத்தாடும் ஒரு கலைஞன் தனது படைப்புகள் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டால்,
அந்த விமர்சனமும் ஒரு கலை என்கிற புரிதலோடு அணுக வேண்டும். அந்த நபர் இருக்கிறானே நாய், புழு, நாலாந்தரம் என
ஆரம்பித்து அதையும் கலை என அழைக்கக் கூடாது.
இவர் இயங்கும் திரைத்துறையில் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படம்
எடுக்கப் படுகிறது என விதந்தோதுவதற்கு முன் அன்பர்கள் இக்கேள்வியை முன் வைக்க வேண்டும். அதே துறையில் நடிப்புக்கென ஒரு பெண் தன்னைத் தயார்படுத்தி
பல தடைகளை தாண்டி வரும்போது அவள் எத்தனை பேரால் சீரழிக்கப்படுகிறாள். அதையும் கலை எனச்
ஜெயமோகன் சொல்லுவாரா. அவன் மிகவும் கஷ்ட்டபட்டு அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்தான் எனக்
கூறுவாரா. பாலா வின் பரதேசி விளம்பரத்தில்
அடிப்பது போல் அவர் கம்பை இப்படி அப்படி சுற்றி நடித்துக் காண்பித்தார் என விளக்கவுரை
எழுதும் ஜெயமோகன், அங்குள்ள முரணைச் சுற்றிக் காட்டியிருக்க வேண்டும்.
அடிவாங்குகிறவன் சரியாக வலியை நடித்துக் காட்டத் தெரியாவிட்டால்.
அந்தப்பாத்திரத்தை துயரனாக, பிறர் அவன் மீது இரக்கப்படும் விதமாகக் காட்ட இயக்குனர்
விரும்புவதாக இருந்தால் தன் கையிலிருந்த அந்தத் தடியை இணை இயக்குனரின் கையில் அத்தடியைக்
கொடுத்து இயக்குனர் பாலா கீழே குத்தவைத்து
அமர்ந்து தன்னை அடிக்கச் சொல்லி அது போல் வலியை வெளிப்படுத்தி அலறி நடித்து நடிப்பிலக்கணத்தை
சொல்லித் தந்திருக்க வேண்டும். உண்மையில் அங்கு அவர் அடிப்பவனின் வெறியைத்தான் வெற்றிகரமாக
நடித்துக் காண்பித்திருக்கிறார்.
போகிற போக்கில் சாமான்யர்களுக்கு ஒரு மயிரும் புரியாது என்ற
நிலைப்பாடே ஜெயமோகனின் ஒட்டுமொத்த இலக்கிய வெளிப்பாடாகவும் இருக்கிறது. அவர் பணியாற்றிய
படங்கள் அனைத்தும் நுண்ணுணர்வு நிரம்பிய கலை இலக்கியவாதிகளுக்காகவா எடுக்கப் பட்டது.
சாமானியன் பார்க்காவிட்டால் வணிக வெற்றி ஏது.
ஜெயமோகனின் உள வக்கிரம் தற்கொலையியல் சார்த்தது. அது மட்டுமே அவரை வழிநடத்தவும் செய்கிறது. இவர்
சினிமாவில் வியந்து பார்க்கிற ஆளுமைகள், கலைஞர்களைப் பற்றி அப்படங்களில் பணியாற்றிய
பெண்களில், எவரேனும் ஒரு பெண் எழுத்தும் ஒரு கலை என பேனாவை எடுத்து தனது அனுபவங்களை
எழுதினால். சம்பந்தப்பட்ட இந்த கலைஞர்கள் அனைவரும் எந்த இடத்தில் இருப்பார்கள் என ஜெயமோகன்
தனது ஆழமன உந்தியிலிருந்து சில பல கேள்விகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் ஜெயமோகன் ஒரு குளவி. அது கொட்டினால் அது தானும்
குளவியாக வேண்டியதுதான். இப்டிக் கொட்டிக்
கொட்டியே குளவியானதில் முதன் பலி நாஞ்சில் நாடன்.
இரண்டாவது பெரும்பலி தேவதேன். இன்னும் பலிக்கு ஆட்களை தன் விஷ்ணுபுர அறைகூவல்
மூலம் அழைத்துக்கொண்டே இருக்கிறார். பூமணி இனி என்னாவாறோ. தேவதேவனின் கவிதைகளைப் படித்துவிட்டு
அவர் அடைந்த கவி அனுபவங்களை உரைநடையில் படித்தேன். சுவாமி நித்தியானந்தா தேவதேவனிடம்
தோற்று மண்ணைக் கவ்வ வேண்டி வரும். தேவதேவனின் அம்பாள் தரிசனத்தையும் அதன் ஞான முகூர்த்த
அனுபவங்களையும் கவிதையின் இறுகிய கதவுகளை ஞானத்தால் தீட்டப்பட்ட சாவி கொண்டு அவர் திறக்கும்
அழகையும் ஒவ்வொரு வரியிலும் வாசகர்கள் கண்டுணரலாம். தேவதேவன் எழுதி பாதரசம் வெளியிடாக
வந்திருக்கும் அக்கட்டுரைத் தொகுதியில் தேவதேவனின் பெயரை எடுத்து விட்டு நித்தியானந்தா
என்றும், கவிதை என்று குறிப்பிட்டிருக்கும்
இடங்களிளெல்லாம் கடவுள் என்றும் போட்டல் போதும் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அத்
தெய்வீகக் கட்டுரைகளில், கவி மண்டப ஞானம், கவிப் பாயிரம், கட்டுரை கௌஸ்தூபம், இவையனைத்தையும்
தேவதேவனுக்கு ஜெயமோகன் அவர்கள் கற்றுக்கொடுத்த வழியான ஞானமார்க்கம் எல்லாம் முறைப்படி
காவியத்தன்மையோடும் அற எழுச்சியோடும் உள்ளோடிப் புரையோயிருக்கிறது. அன்பர்கள் தவறாது
வாசிக்க.
இதில் ஜெயமோகன் வைக்கும் முக்கிய புகார் நானும் மற்ற எழுத்தாளர்களும்
வணிகவெற்றிகள், காசு பணங்கள் அடைந்திருக்கிறோம்.
நாளை வரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் அந்தச் சாலையை பெரிது பண்ணி தரப்போகிறோம் என அச்சாலையில்
போக அவரது கூட்டாளி நாஞ்சில் நாடனை சகஇலக்கியவாதி எஸ்.ராமகிருஷ்ணனை, இரா.முருகனை அவர்
அழைத்ததில் வியப்பில்லை. இதிலும் கொடூரம் என்னவென்றால் அவர்கள் போட்ட அந்த நைந்த பாதையில்
போய்க்கொண்டுதான் ஜெயமோகன் இத்தனை வரிகளை எழுதுகிறார். பாவம் கொடூரன். விட்டுவிடலாம்.
ஆனால் அச்சாலையில் போக பாஸ்கர் சக்தியைச் சேர்ப்பது. பாஸ்கர்
சக்தியின் மேலுள்ள அன்பினால் அல்ல, அது ஞாநிக்கு
எதிராக வைத்த குறு வாள். நயவஞ்சகமும், எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்த
வர்ம அடி வீரனைப் போல் நடந்திருக்கிறார் ஜெயமோகன். அவர் சினிமாவுக்கு மற்றவர்களை அழைத்துச்
செல்லப் போவதாக சொல்லும் அந்த வழி ஈ…. கேரளத் தேசத்திலே எம்.டி.வி சமைத்த யானை போகும்
வழி போல் அல்ல, அது ஜெயமோகன் தனது அகம்பாவத்தால்
தமிழ்நாட்டுத் திரைத்துறையில் அமைக்கும் பன்றி( பன்னி) போன வழி. அதுவும் நகரப்பன்றி(பன்னி). உணவுக்கு ஆதியில் அது உண்ட உணவை மறந்து விட்டு,
வாழ்வின் துயர்மிகு கணங்களில் எங்கோ பிறழ்ந்து
மனிதக் கழிவைத் தின்னும் நிர்பந்தத்திற்கு ஆளான அப்பன்றி போன வழி அது.அந்தவழியில்
ஒரு நாளும் போகமுடியாது நன்பர்களே.
எங்களை உள்ளே வரவிடாமல் ஞாநியைப் போன்றவர்கள் கைகளை நீட்டி
தடுக்க நினைக்கிறார்கள் என்று கூறும் ஜெயமோகனைப் பார்த்து இன்னொன்றும் கூற வேண்டியிருக்கிறது.
ஜெயமோகன் கூறியது போல் பாலகுமாரனும், சுஜாதாவும் ஆரம்ப காலத்தில்
ஜெயமோகன்களது வரவு கண்டு…. இலக்கியம், நவீனம்,
ஞான மார்க்கம், வல்லாரை லேகியம்னு கூவிக்கிட்டு இந்த துறையே தெரியாம, மூக்க
நுழைச்சு, கைகாலப் புடிச்சு வதந்தியக் கிளப்பி வசனமும் எழுதத்தெரியாம, எழுதுனா அத எங்க
கட் பண்ணனும்னு தெரியாம, வந்துட்டாங்கய்யா சில எழுத்தாளனுங்க… போச்சு எல்லாம் வேஸ்ட்.
நாங்க போட்ட குறுக்குப் பாதை நெடுக்குப் பாதை எல்லாம் போச்சு…..
எனச்சொல்ல அவர்களுக்கு அனைத்து தகுதியும் உண்டு. நீங்கள் பல எழுதிய சில படங்கள் வணிக வெற்றி என்றால்
பாலகுமாரன் சுஜாதா வசனமெழுதி வெற்றியோ வெற்றி பெற்ற திரைப்படங்கள் அள்ளிச் சேர்த்தவசதிகளை
என்ன கணக்கில் கூறுவது. பூச்சியை யானைக்கால்
கொண்டு நசுக்கி எறிவதற்குச் சமம் இது.
அவர்கள் அமைதியாக இருந்தார்கள். திரைத்துரையில் இப்பொழுது
தங்களுக்கு என்ன இடம் எனத் தெரிந்து தங்களது வேலைகளைச் செய்தார்கள் உங்களைப் போன்ற
சுவர்க்கோழிக்ள் உள்ளே சென்றதும்தான் ஊளைத்தனங்கள் அதிகமாயிற்று. படத்தில் வசனங்களைச்
சுட்டினால் அது என் வேலை அதை வைத்து என்னைக் குதறுகிறார்கள் என்பது. பின் வெளியே வந்து முகப்புத்தகத்திலும் தனது அடிமைகளிடமும்
நான் தாஸ்யெவ்ஸ்கியைப் போல் படமெடுத்தேன் அவர்கள்தான் ராம நாராயணனைப் போல் படம் பிடித்தார்கள்
என உளறுவது.
//என்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் தமிழ் சினிமாவில் இன்றுவரை
தரமான படங்களில் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு,
நீர்ப்பறவை ,கடல் என நான் பணியாற்றிய படங்கள் எல்லாமே விருதுகள் பெற்றவை. கடல் தவிர
பிற படங்கள் வணிக வெற்றிகளும் கூட. ஆனால் தமிழ்ச்சினிமாவில் நான் ‘வீழ்ச்சி’ அடைந்திருப்பதாகச்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.//
எங்கே போயிற்று…அன்பர்களே ஜெயமோகன் பணியாற்றிய “சிந்துச் சமவெளி” என்கிற திரைப்படம். மறந்துவிட்டதா.
தரமான படங்கள் என்றால் அன்பர்கள் விளக்கம் கேட்கக்கூடாது. ஜெயமோகன் எழுதும் படங்கள்
எல்லாம் தரங்கள் நிறைந்தவை. போதாக்குறைக்கு அவர் சொல்லுவது. அவை விருதுகள் பெற்றவை.
எந்த விருதுகள் யார் கொடுத்தது. ஜெயமோகன் போன்றவர்கள் அடிக்கடி கொத்திக் குதறும் சாகித்ய
அகாதெமி விருதுகளை விட தான் பணியாற்றிய சினிமாக்கள் வாங்கிய விருதுகள் உத்தமம் என நினைக்கிறாரா
ஜெயமோகன். இந்த அசிங்கத்தை எங்கு சென்று எந்தப் பொற்பட்டு நூலால் துடைப்பது.
இது எளவு வீட்டில் பிணமாக இருந்தாலும் நான்தான். கல்யாண வீட்டில்
மாப்பிள்ளையாக இருந்தாலும் அது நான் தான் என
பழமொழியை ஒத்ததாக இருக்கிறது. வணிக வெற்றி
அடைந்தால், கலைப்படம் எடுத்தால்? …ஞானம் ஞானம்
என்ற வாசகங்களை தான் போன போக்கில் உளறுவது ஏன் ஜெயமோகன். அது எங்களுக்கு யானை யானை
என்றுதான் கேட்கிறது.
கட் அவுட் வைத்து எழுத்தாள பாலாபிஷேகம் செய்யும் அக் கேரளத்
தேசத்தில் ஷகிலா என்ற நடிகையும் இருக்கிறார். அவரது மார்ப்புக்கூட்டின் வடிவத்திற்கு
உங்கள் மம்முட்டியும் இன்னபிற நடிகர்களும் கொந்தளித்து கேரள அரசிடம் முறையிட்டு படங்களைத்
தடை செய்யச் சொன்னது ஏன். கலாச்சார கோபமா. இல்லை வியாபார நோக்கம். வணிக வெற்றி, தரமான
படங்கள் என உளறுவதை விட்டு விட்டு அவைகளை ஜெயமோகன் தான் பணியாற்றும் திரைப்படங்களில் காட்டலாம்.
இத்தனை கலைத்தாகமுள்ள ஜெயமோகன் “நபர் வாங்குசொல்வது போல்
ஊளையிடும் நாய்” என இவரால் குறிக்கப் பெற்ற திருவாளர் மனுஷ்யபுத்திரன் இப்பொழுது முகப்புத்தகத்தில்
சகட்டு மேனிக்கு நாய்களின் மேல் விருப்பம் கொண்டுள்ளதாக கூவுகிறார்.
நடுநிசி நாய்கள்
பட்டப்பகல் வெளிச்சத்தில்
கண் சுருங்கும்
ஆந்தைகள் துயிலும்
ராவுகள் குலையும்
அந்தோ பரிதாபம் இலக்கிய உலகம்.
// ஒருவகையில் அந்த எல்லைச்சுவரை உடைத்தவர் பாலு மகேந்திரா.
இன்றுதான் மெல்ல மெல்ல இலக்கியவாதிகளுக்கும் சினிமாக் கலைஞர்களுக்கும் நடுவே ஓர் ஆக்கபூர்வமான
உறவு உருவாகி வருகிறது.வசந்தபாலன், சசி,மணி ரத்னம்,பாலா போன்றவர்கள் அதில் இன்று ஓர்
முன்னோடி இடத்தை வகிக்கிறார்கள். ஓர் உரையாடல் நிகழ ஆரம்பித்திருக்கிறது //
இதுதான் சம்பந்தப்பட்ட (மலப்) புழு கட்டுரையில் பாசாங்கின்
உச்சம். அய்யா பாலு மகேந்திராவிடம் வேலை பார்த்தாயிற்று. வசந்தபாலனிடமும், பாலாவிடமும்
வேலை பார்த்தாயிற்று..இனி சசியா…
அவரிடம் இப்பொழுதே வாய்ப்புக் கேட்டு ஒரு கொட்டேஷனையும் நீட்டியாயிற்று.
உண்மைதான் அன்பர்களே. ஜெயமோகன் எங்கு நீங்க
இருக்கிறாரோ அங்கு இலக்கியம் அறம் கலை, ஞானம் என அனைத்தும் அதன் தார்மீக உரையாடல்களோடு
நீக்கமற நிறைந்திருக்கும்.
இடதுசாரிகளை போகிறபோக்கில் கமிஷார்கள் ஸ்டாலின் கொடூரர்கள்
என வாய்வலிக்காது சொல்ல வரும் ஜெயமோகன் அவர் பணியாற்றிய இயக்குனர்கள் நடிகர்களை அடிப்பதை,
முகத்தில் விழும் அறைகளை அவர்களின் அலறல்களை என்னவென்று வகைப்படுத்துவார், பாலாவும்
வசந்த பாலனும் அடித்தவர்களின் எண்ணிக்கையை, வாங்கியவர்களின் மரண வலியை நான் விளக்கத்
தயாராக உள்ளேன். அது குறித்து ஜெயமோகன் எழுத வேண்டும். எழுதுவாரா.
No comments:
Post a Comment