Saturday, June 19, 2010
காமத்துப்பால் 2
23
வண்ணத்துப்பூச்சிகள்
சபிக்கும் இவ்விரவை
தனிமையின் பெருந்துயர் பற்றி என்மொழியில்
உனக்கொரு கவியெழுத பயன்படுத்துவேன்
அது தன்
இறக்கைகளை அடித்துக்கொண்டு
நிறமற்ற
என் காமத்தின் அனாதைதனத்தை
மொழிபெயர்க்கும்.
24
மின்னும்
இருமுலை நோக்கி
பின்னும்
இரு கண்கள்
நிதம்பமதிர
ஒளிப்பறை கொட்டும் சூரியன்
வெந்துருகும் விரல்களை உதறி
ஆவியெனத்தழுவ
என்முகத்தில்
மின்னும் இருமுலை நோக்கி
பின்னும் இரு கண்கள்
25
வானத்தைத் தானமிடும் கரங்கள் உனக்கு
சகி
ஆகாயம் பார்க்க ஒருமுறை
புணர்ந்தால் என்ன
அதன் விழிநீரை
மழைநீரென
என்னால் மொழிபெயர்க்க இயலாது
26
மழைக்கால
தானம் வேண்டி கரங்கள் நீட்ட
உள்ளங்கைக் கடுங்குளிரில்
பதிக்கிறாய்
நிதம்பவெப்பத்தை
என் கண்ணே...
27
வெப்பம் இளகும்
முன்னொரு கடும்பொழுதில்
என்னுடலை மொழிபெயர்க்க
வந்து விழுகிறது
உன்
அந்தரங்கச்சொற்கள்.
28
காமம் மிகு இரவில்
வானம்
தன்
ஒளியணைய
என்விழியில் மலர்வது
கண்ணே...
உன் யோனி
வெட்கம் தரையில் சிந்த
உன்னிதழில் மலர்வது
யென்குறி.
29
நிதம்பத்தை ஆகாயாத்தில் அழுத்தியுன் உறுதி தந்தாய்
மண்ணில் குறி பதித்து
என் உறுதி நான் தந்தேன்
நாமிருவர் புணர்கையில்
நம்மை வேவு பார்த்தது யார்.
30
உனதுடலின்
கூட்டுத்தொகை
புணர்ந்த வெளிச்சம்
எனதுடலின் கூட்டுத்தொகை
களைப்பின் இருள்.
31
ஒருமுறை
கோபத்தில் உனை நீயும்
கடுங்கோபத்தில்
எனை நானும் புணர்வதாய் சத்தியம் செய்தோம்
உரசிய கைகளில்
பற்றிய வெப்பத்தை
நாம் மீறி
நாமே புணர்ந்தணைத்தோம்.
32
ஒரு
காட்டைத்தணிக்கும்
காற்றைக் கண்டு
கைகொட்டிச் சிரித்தாய்
காடறியும் கண்ணே
புணர்ச்சியில்
நீ
கண்மூடும் பேரழகை.
33
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
கையளித்த
பீஜமும்
யோனியும்
கல்லறையில் கண்மூடி
தியானத்திலிருக்கின்றன
தோழி
வா
நாம் புணர்வோம்
இன்னொரு கல்லறை தேடி.
34
புணர்ச்சியில் பெருகும் வார்த்தைகளை
தனித்தனியே
எழுதிப்பார்த்தோம்
நல்லது....
நாம் புணரவே செய்திருக்கிறோம்.
35
இறப்பில் சுருங்கியும்
பிறப்பில் விரிவும்
கொள்ளும் கண்கள்
புணர்ச்சியில் தன்னை மறந்து
மூடிக்கொள்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை” ரூமி வ சு மி த் ர “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...
-
அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவரு...
-
அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...
-
சு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...
-
கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...
-
இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...
-
நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...