Thursday, December 29, 2011

.......... ஜெய மோகன் நீங்கள் மிகவும் நல்லவர்.




எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு சாவர்க்கரின் படத்தைப் பாராளுமன்றத்தில் திறந்து வைத்துள்ளார் குடியரசுத் தலைவர், மரியாதைக்குரிய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். காந்தியைக் கொன்ற சதிக்கு தலைமை தாங்கிய இந்துத்துவத்தின் தந்தை சாவர்க்கருக்கு காந்திக்கு அருகில் பாராளுமன்ற மரியாதை இந்த வெட்கங் கெட்ட செயலுக்கு குடியரசுத் தலைவர் உடந்தை.*


1937- ல் இந்து மகா சபையின் அகமதாபாத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று சாவர்க்கர் - பேசியபோது, “ நமது இந்திய தேசத்திற்கு முகமதியர்கள் மிகப்பெரிய ஆபத்தாக விளங்குவார்கள் என்று இந்துக்களை நான் எச்சரிக்கிறேன். இந்தியா ஒரு படித்தான ஒற்றைத் தேசமல்ல. இந்துக்கள் எனவும் முஸ்லீம்கள் எனவும் இரு இரு தேசங்கள் அதற்குள் உள்ளன” சாவர்க்கர்.*

டாக்டர் மூஞ்சே, சீரி சாவர்க்கர் போன்ற இந்துக்கள் வாளின் பலத்தையும் வன்முறைக் கோட்பாட்டையும் நம்புபவர்களாக இருக்கலாம். இந்து ஆதிக்கத்தின் கீழ் முஸல்மான்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு அவர்கள் எண்ணிடலாம். நான் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்   காந்தி.*





ஜெயமோகன்....காந்தியைப் பற்றி உங்கள் கோமணம் உருக எழுதியது போதாதென்று இப்பொழுது  பசு நெய்யை நாக்கில் வழித்து சத்தியம் வேறு செய்துள்ளீர்கள். அ.மார்க்ஸ்,
அ. முத்துக்கிருஷ்ணன் இருவரும் பணம் பெற்று வேலை செய்கிறார்களென்று. அய்யா தாங்கள் யாரிடம் பணம் பெற்று எழுதுகிறீர்கள் நான் சொல்லப் போவதில்லை. திரைக்கு வசனம் எழுத நீங்கள் வருவதற்கு முன் தங்களை அறிந்தவன் நான். இப்பொழுது நாலு காசு சேர்ந்ததும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறீர்கள். சாரு எழுதிய வரிகளிலேயே நான் மிகவும் மதித்த வரிகள் அவர் உங்களை சரியாகக் கணித்தது மட்டுமே. உளறுவதற்கு ஒரு மடத்தை வட்டமெனத் தொடங்கினீர்கள். ஏன் கைக்காசு குறைகிறதா விழா எடுக்க. வேட்டி சட்டையுடன் உங்கள் விருதுகளை வாங்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் மீதும் எனக்கு ஒரு வாசகனாக மரியாதை குறைகிறது. போகிற போக்கைப் பார்த்தால். அ.மார்க்ஸிற்கும் விருது வழங்குவீர்கள். அந்த நாள் தொலைவில் இல்லை. பிறர் உங்களை ஏதேனும் ஒரு வரிகள் எழுதினாலே என்னை வசை பாடினார்கள் என்று பல பக்கங்களுக்கு முழக்கமிடுபவர் நீங்கள். ஆனால் நீங்கள் பிறர் குறித்து வைக்கும் ஆபாசங்கள் கேட்கச் சகியாதவை. நீங்கள் இதுவரை  உங்களைத் தவிர வேறு யாரையும் விட்டு வைத்ததில்லை. உங்களின் பெற்றோரின் மரணம் இன்னும் அவநம்பிகையின் பால் உங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் எழுத்தின் ஒவ்வொரு வரியிலும் நான் உணர்கிறேன். நீங்கள் கருணை பற்றி அறம் பற்றிப் பேசும்போதெல்லாம் அது ஏன் எனக்குக் கிட்டவில்லை  என்ற சுய எரிச்சலையே முன் வைக்கிறீர்கள். இது குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அவநம்பிக்கை மட்டுமே நீங்கள் கூறும் அறச்சக்கரத்தின் மையம். அதை நீங்கள் இந்துவத்துவத்தின் தேர்களுக்குப் பொருத்தவே நீங்கள் இன்னும் முயல்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் அங்கு உங்களை விட பழம் தின்று கொட்டை போட்ட எண்ணற்ற ஞானிகள்...நீங்கள் சொல்லும் அறக்குவியங்களான சடாதாரிகள் நிரம்ப உள்ளனர்.


இவ்வளவு கேவலமாக மனிதர்களை எப்படி உங்களால் எடை போட முடிகிறது. காரணம் உங்களின் அவ நம்பிக்கை.  பணம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று முதலில். அ.மார்க்ஸ்சை மட்டும் சாடி வந்தீர்கள். இப்பொழுது முத்துக் கிருஷ்ணனையும் சேர்த்திருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த குஜராத் கலவரக் குறிப்புகள் எனக்கு நினைவுக்கு வந்து போகிறது. அவர்கள் காசு வாங்கினால் மகிழ்ச்சிதான். அதே போல் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கினால் அதையும் அந்நிய சதி என்பீர்கள். காசு எங்கு வாங்கினார்கள் என்று கேட்க, அல்லது நிரூபிக்கவாவது உங்கள் வாசக படை வட்டங்களை பயன்படுத்துங்கள். அவர்களும் எவ்வளவு காலந்தான் துதிகளையும் பஜனைகளையும் பாடுவது. 

பத்தாயிரம் பக்கங்கள் எழுதினாலும் டால்ஸ்டாய்...தஸ்யாயேவ்ஸ்கி...அறம்...தரிசனம் என நீங்கள் முக்கினாலும் உங்களை அறியமால் உங்கள் வாயில் வருவது நொண்டிநாய் என்றுதானே அய்யா...உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும். காந்தியம் பற்றி அவரின் தரிசனங்கள் பற்றி நீங்கள் எழுதிய வரலாற்றுக் குப்பைகளை..அதோடு உங்களது கற்பனையின் சீழை என்னவென்பது. கலாமுக்கு காந்தியைத் தெரியும் சாவர்க்கரைத் தெரியாது. ஆனால் கலாமை விட அவர் கையிலேந்தி வாசிக்கும் பகவத் கீதையைப் பற்றி சாவர்க்கருக்கும் உங்களுக்கும் நிறையத் தெரியும். ஒரு முறை பகவத் கீதையின் நிழலில்தான் எழுத வந்ததாகக் கூறீனீர்கள். நல்லது அய்யா.

அ.மார்க்ஸ், அ.முத்து கிருஷ்ணன் இவர்கள் வாங்கிய காசோடு, காந்தி அவர்கள் எவரிடம் காசு வாங்கினார் என்பதையும், சாவர்க்கர் யாரிடம் காசு வாங்கினார் என்பதையும் வரலாற்றைத் திரந்து இந்துத்துவ அற அரிப்பில்லாது ஒரு முறை  எழுதுங்கள்.


அப்துல்கலாமை ஞானி என்று அழைப்பது இஸ்லாம் பற்றி பேசத்தானா....அறிய முடிகிறது ஜெயமோகன். இந்து மத யாத்திரையில் அத்வானி வந்த ரதத்தை ஓட்டியவன் ஒரு முஸ்லீம். இதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த பெயர் தெரியாதவனுக்கும்... கலாமுக்கும் வேறு வித்தியாசங்கள் இல்லை. உங்களுக்கும்.  நாளுக்கு நாள் வெறி கூடும் உங்களது இஸ்லாமிய வெறுப்பை அறியமுடிகிறது.




* மேற்கண்ட குறிப்புகள் அ.மார்க்ஸ் எழுதியவையே வருடம் ஏப். 2003
அப்போதிருந்தே அ.மார்க்ஸ் காசு வாங்கியிருந்தால்...இந்நேரம்........

Thursday, September 15, 2011

தமிழர்....அரசு....தமிழகம்.......?


                                        


                             ஒரு மறுவாசிப்பு வேண்டி.........

புதிய வந்தேறியம்.

தமிழகத்திற்கு வாய்த்த அதிகார வகுப்பிலும்கூட இன்று தமிழரல்லாதார்மே பெரும்பான்மையா? மொழிவழியில் தமிழகத்தைக் கொந்திக் கூறாடி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், தமிழகத்தில் அரசு அதிகாரத்திலும் ஆட்சித் துறையிலுங்கூட தமிழரல்லாதோரே இன்னும் தனிக்கொற்றம் புரிந்து வருகின்றனர். 1995 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆளவந்தாராக விளங்கிய வந்தேறிகள் சிலரை அடியில் காண்க:*

                                            ஆட்சித் துறை இ..( I.A.S )

ஆர் வரதராசுலு..................................முதலமைச்சரின் செயலர்................தெலுங்கர்
ஆதிஷேஷையா..................ப.............முதலமைச்சரின் இணைச்செயலர்.....தெலுங்கர்
ஃழீலாப்பிரியா....................ப.............ஆளுனரின் செயலர்.......................தெலுங்கர்
அரிபாஷ்கர்.......................ப.............தலைமைச் செயலர்........................தெலுங்கர்
சி,இராமச்சந்திரன்..............................தொழில்துறை செயலர்...................மலையாளி
ஜி.இராமகிருஃழ்ணன்........இ...................போக்குவரத்து ஆணையர்....................தெலுங்கர்
எம்.தேவராஜ்...................................... நகராட்சி இயக்குனர்.....................படுகர்
சுந்தரதேவன்.....................ப..............தேர்தல் ஆணையர் செயலர்.............படுகர்


எம்.அகமது...............................................................................மலையாளி
பி,சி.சிரியாக்.............................................................................மலையாளி
லீலா நாயர்...............................................................................மலையாளி
சாந்தஃழீலா நாயர்......................................................................மலையாளி
கே.ஏ மாத்யூ.....................ப.....................................................மலையாளி
சூசன் மாத்யூ..................................................................................மலையாளி
கே.சந்திரசூடன்..................ப.....................................................மலையாளி
.பி.சோசம்மா...................ப.....................................................மலையாளி
மாதவன் நம்பியார்..............ப.....................................................மலையாளி
வே.மாதவன் நாயர்................ப.....................................................மலையாளி
டி.ஜேக்கப்.............................ப.....................................................மலையாளி
பிந்து மாதவன்................................................................................மலையாளி

வி.கே.ஜெயக்கொடி.............ப.....................................................தெலுங்கர்
ஆதிஷேஃசன்........................ப.....................................................தெலுங்கர்
வரபிரசாதராவ்...................ப....................................................தெலுங்கர்
ராம்மோகன்ராவ்................ப.....................................................தெலுங்கர்
ஜி..ராஜ்குமார்.....................ப.....................................................தெலுங்கர்
ஆர்.பாஷ்கரன்.......................ப.....................................................தெலுங்கர்
ஜே.டி.ஆச்சார்யாலு......................................................................தெலுங்கர்
ஜி.ரங்காராவ்....................ப......................................................தெலுங்கர்
பிரபாகர் ராவ்.................................................................................தெலுங்கர்
வி.கே.சுப்புராஜ்..............................................................................தெலுங்கர்
.வி.ஃழெட்டி...................ப.......................................................துளுவர்
எம்.பி.பிரானேஃழ்.................ப.......................................................கன்னடர்
புஜங்கராவ்...........................ப.......................................................வடவர்
எச்.எம் பாண்டே..................ப.......................................................வடவர்
ஆர்.சி.பாண்டா....................ப.......................................................வடவர்
கே.சௌத்ரி.........................ப.......................................................வடவர்
உஜாகர் சிங்........................ப................................................வடவர்
எஷ்.கே.உபாத்தியாயா.......ப................................................வடவர்
பிரிஜேஷ்வர் சிங்..................ப................................................வடவர்
சுவரண் சிங்...................... ..ப................................................வடவர்
நிர்மல் சிங் ஹிரா................ப................................................வடவர்
அனுராதா கட்டி..............................................................................வடவர்
அஜித் பட்டாச்சார்யா..........ப............................................................வடவர்
மோகன் பியாரே..............................................................................வடவர்
என்.பி.குப்தா........................ப.........................................................வடவர்
நரேஃழ் குப்தா..................ப................................................வடவர்
ராக்கேஃழ் குப்தாஷ்...........ப............................................................வடவர்
சமீர் வியாஷ்......................................................................................வடவர்
ஹன்ஷ்ராஜ் வர்மா............................................................................வடவர்
குத்சியா காந்தி.............................................................................வடவர்
சி.கே.கரியாலி..............................................................................வடவர்
ஜோர் சிங் ஃழயிம்..........................................................................வடவர்
சத்பதி.........................................................................................வடவர்
தீபக் ஜெயின்................................................................................வடவர்
லதிகா படால்கர்............................................................................வடவர்
முனீர் ஹோடா.................ப...........................................................வடவர்
ஐஷ்பீர் சிங் பஜாஜ்............ப..................................................வடவர்
வால் ராவ்னா சைலோ.......ப.............................................................வடவர்
ரேமந்தகுமார் சின்ஃகா....................................................................வடவர்
சன்வத் ராம்..................................................................................வடவர்
ரவி வினய் ஜா................................................................................வடவர்
பவன் டெப்னா...............................................................................வடவர்
பிரவீண்குமார்.................................................................................வடவர்
ரமேஃழ்ராம் மிஷ்ரா..........................................................................வடவர்
தேபேந்திர நாத் சாரங்கி..................................................................வடவர்
அம்புஜ் சர்மா.................................................................................வடவர்
சசி சேகர்.....................................................................................வடவர்
பிரிஜ் கிஃழோர் பிரசாத்....................................................................வடவர்
ராஜிவ் ரஞ்சன்.................ப...........................................................வடவர்






                                             காவல் துறை - .கா.(I.P.S)




கே.கே ராஜசேகர நாயர்......கா.ப...........காவல் தலைமை இயக்குனர்............மலையாளி
சர்மா...............................கா.ப...........கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
ஆர்.சி.பந்த்.......................கா.ப............கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
பெருமாள்சாமி...................கா.ப...........காவல்துறைத் தலைவர்(குற்றம்)...........தெலுங்கர்
குமாரசாமி........................கா.ப............காவல்துறைத் தலைவர்...................தெலுங்கர்
சந்திர கிழோர்...................கா.ப............காவல்துறைத் தலைவர் (சிறை)...........வடவர்
முகர்ஜி.............................கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
முன்ஃழினி........................,கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
பி.ஆர் தாப்பா....................கா.ப.............காவல்துறைத் தலைவர்...................வடவர்
என். பாலச் சந்திரன்...........கா.ப.............காவல்துறைத் தலைவர்........................மலையாளி
விஜயகுமார்......................கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........மலையாளி
பாலசந்திரன்....................கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
இராதா கிருஃழ்ண ராஜா.....கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
ராமராஜன்........................கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
கே.வி.எஷ் மூர்த்தி..............கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
லத்திகா சரண்..................கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........வடவர் 


விபாகர் சர்மா...................கா.ப.................................................வடவர்
அசோக் ஜிண்டா................கா.ப.................................................வடவர்
சஞ்சை அரோரா...............கா.ப..................................................வடவர்
ஜாங்கிட்.........................கா.ப..................................................வடவர்
அஜிஷ் பாங்ரா..................கா.ப..................................................வடவர்
ஆர்.என்.சவானி................கா.ப..................................................வடவர்
ரவீந்திரநாத்.....................கா.ப..................................................மலையாளி
பி.பாஷ்கர்........................கா.ப..................................................தெலுங்கர்
திலகவதி.........................கா.ப..................................................தெலுங்கர்
ரஞ்சித் சிங்......................கா.ப..................................................சௌராட்டிரர்



                                                           வழக்குமன்றத் துறை

கே..சுவாமி......................உயர்வழக்குமன்றத் தலைமை நடுவர்..............கன்னடர்
வெங்கடசாமி.....................உயர் வழக்குமன்ற நடுவர்............................தெலுங்கர்
ராமானுஜம்........................நடுவர்....................................................தெலுங்கர்
வி.ராமசாமி........................நடுவர்....................................................தெலுங்கர்
ராஜு......................................நடுவர்....................................................தெலுங்கர்
ஶ்ரீ ராமுலு.........................நடுவர்.....................................................தெலுங்கர்
சிவப்பா...................................நடுவர்.....................................................கன்னடர்
சிவராஜ் பாட்டீல்....................நடுவர்.....................................................கன்னடர்
அப்துல் ஹாதி........................நடுவர்.....................................................உருது
அலி அகமது...........................நடுவர்.....................................................உருது
சுப்பிரமணி.............................நடுவர்.....................................................மலையாளி
வெங்கிடாச்சலம்...............நடுவர்......................................................தெலுங்கர்
சீனிவாசன்.......................நடுவர்......................................................தெலுங்கர்
ஜெயராம் சவுதா....................நடுவர்......................................................கன்னடர்
ஜெய்சிம்ம பாபு.................நடுவர்......................................................கன்னடர்


இந்த அழகில் தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் செய்வது எங்கனம் ஆகும்?






நூல் : தமிழின மீட்சி
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்; குணா

தமிழக ஆய்வரண்
வெங்காலூர். 1995.

இதன் நீட்சியாக வாசிக்க.....

குணா
பாசிசத்தின் தமிழ் வடிவம்.
- அ.மார்க்ஸ்.
கோ.கேசவன்.

Wednesday, September 14, 2011

சென்னகரம்பட்டி கொலை வழக்கு.




" நீதி நம்பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உணர்வு பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. ஏனெனில், நமது போராட்டம் சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்த சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும் பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது. உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே; கற்பி,போராடு ஒன்றுசேர்"

அம்பேத்கர்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும்பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிழந்த அதே சாலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு நூறு மீட்டர் தொலைவில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையைச் செய்த அதே கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப் போக்கையும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றின் சாதியமனோபாவத்தை புரிந்து கொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் ( same plot) மேலவளவு கொலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ தலித் அமைப்புகள் தலித் கொலை நிகழ்வுகளையொட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களோடு நிறுத்திக்கொள்ளும் நிலையில், குறைந்தபட்ச நீதிக்கான எந்த உத்தரவாதமுமின்றி அரசின் கருணையிலேயே நடந்து நீர்த்துப் போய்விடுகின்றன.

( பக்கம் 5,6 )

அரசு தரப்பு சாட்சி எண் ; 10

பெயர்; டாக்டர்.லதா கணேசன்
/பெ: கணேசன்
கிராமம்: மேஜர்.மதுரை
சாதி: இந்து பிள்ளைமார்.
வயது:50 ஆண்டுகள்
நாள்: 28.3.2008

முதல்விசாரணை : அரசு தரப்பில்


நான் தற்போது மேலூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறேன். 1992ம் ஆண்டு அரசு மருத்துவமனை மேலூரில் உதவி மருத்துவராக பணி புரிந்தேன். 6.7.92ம் தேதி பாண்டி கணேசன் என்பவர் காவலர் 566 என்பவர் கொடுத்த வேண்டுகோளை பெற்று அன்று காலை 10.30 மணிக்கு ஒரு ஆண் அம்மாவாசி என்பவரின் பிரேதத்தை சடலக்கூறாய்வு செய்தேன். மேற்படி மேலூர் காவல் நிலைய சம்பந்தப்பட்டது. மேற்படி பிரேதத்தில் ஒரு கருப்பு மச்சம் வலது மார்பகத்திற்கு கீழ் காணப்பட்டது. மற்றொரு மச்சம் தொப்புளுக்கு கீழ் காணப்பட்டது. மேற்படி இறந்து போன நபருக்கு வயது சுமார் 50 வயதிருக்கும். மேலூர் காவல் நிலைய குற்ற எண்.468/92 வழக்கு சம்பந்தப்பட்ட பிரேதம் மேற்படி ஆரோக்கியமான பிணம், கண்கள் திறந்திருந்தது. நாக்கு வாய்க்குள் இருந்தது.8,8/32 இருந்தது. முகவாய் இருக்கமாக இருந்தது. பிணவிறைப்பு தன்மை கைகால்களில் காணப்பட்டது. அவர் உடலில் கீழ்க்கண்ட வெளிக்காயங்கள் காணப்பட்டது.


1. 18செ.மீx6செ.மீx 6 செ.மீ அளவில் ஒரு வெட்டுக்காயம் கழுத்தின் முன்பகுதியில் காணப்பட்டது. அதில் கழுத்தின் சதைகள் மற்றும் மூச்சுக் குழாய் உணவு குழாய் வெட்டப்பட்டிருந்தது. செர்விகல் வெஷ்டிபுலா தைராய்டு கார்ட்டிலேஜ் - ம் வெளியே தெரிந்தது.

2. இடது கன்னத்தில் 10செ.மீ x 2செ.மீ x 2செ.மீ அளவில் வெட்டுக்காயம் காணப்பட்டது.


3. இடது பக்க பின் தலையில் டெம்பரல் ரிஜின் பகுதியில் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அது கபாலத்தின் அடிப்பாகம் வரையில் நீண்டிருந்தது. இடது காது வழியாக நீண்டிருந்தது.20x6x6 செ.மீ அளவில் காணப்பட்டது.

4. கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு வெட்டுக்காயம் 15 x 5 x5செ.மீ அளவில் காணப்பட்டது. அது இடது பக்க தாடை எலும்பு வரை நீண்டிருந்தது.

5. ஒரு வெட்டுக்காயம் 5x2x2 செ.மீ அளவில் பின்பக்கத்த்ஹில் (ஆர்சிபிட்டல்) காணப்பட்டது. அதே இடத்தில் மற்றொரு வெட்டுக்காயம் 3x2x1 செ.மீ அளவில் காணப்பட்டது. வஒரு வெட்டுக்காயம் பிராமன்ஷ் மேல் காணப்பட்டது. மற்றொன்று கீழ் காணப்பட்டது.


6. 5வது காயத்திற்கு கீழ் 6வது காயம் காணப்பட்டது.

7. சிதைந்த காயம் ஒன்று தோள்பட்டையிந் இன்புறம் இடது பக்க தோள்பட்டையில் காணப்பட்டது.3x2x1செ.மீ அளவில் இருந்தது.

8. மற்றொரு வெட்டுக்காயம் 6x4x2செ.மீ அளவில் வலது காதின் கீழ் காணப்பட்டது.

9. தோள்பட்டை மார்ஜினில் எலும்பு எல்லையில் 3x2x1செ.மீ அளவில் ஒரு சிதைந்த காயம் காணப்பட்டது.

10. வலது சுண்டு விரலில் நுனிப்பகுதி காணப்படவில்லை.


பிரேத உட்புற பரிசோதனை செய்தபோது

1. கேரோடிட் ஆர்ட்டிரேட் இரண்டு பக்கத்திலும் காணப்படவில்லை. அதன் கீழ் பகுதி வெட்டப்பட்டு வெளிப்புறமாக தெரிந்தது. செர்விகல் வெஷ்டிபுலா வெளியே தெரிந்தது.

2. தோரா க்க்ஷ் நுரையிரல் வெளிறி காணப்பட்டது. இருதயம் வெளிறி இருந்தது. இருதயத்திந் அறைகள் காலியாக இருந்தது.

3. வயிற்றில் சுமார் 200. மி.லி அளவில் சரியாக ஜீரணம் ஆகாத உணவு காணப்பட்டது. பகுதியாக ஜீரணித்த உணவு.

4. சிறுகுடல் காற்றில் உப்பி காணப்பட்டது. சிறு நீர் பையில் நீர் இல்லை. காலியாக இருந்தது.

5. லேரின்க்ஷ், கிலாட்டிஷ், ஒரு பகுதி காணப்படவில்லை.

6 தைராய்டு கார்ட்லிக்ஷ் இருந்தது. ஹைராய்டு எலும்பு காணவில்லை. கணையம் கல்லீரல் வெளிறி காணப்பட்டது.

7. இடது பக்க முன் மண்டை எலும்பு உடைந்து இருந்தது.டெம்பரல் எலும்பு. முன்பக்க மண்டை எலும்பு இடதுபக்கம் உடைந்து இருந்தது.மூளையில் எவ்வித காயமும் இல்லை.அது வெளிறி காணப்பட்டது.

மேற்படி நபர் அவருக்கு ஏற்பட்ட உயிர் காக்கும் உறுப்புக்களில் ஏற்பட்ட காயத்தினாலும், அதனல் ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியினால் பிரேத பரிசோதனைக்கு முன் 10லிருந்து 11மணி நேரத்திற்கு முன்பாக இறந்திருக்கக் கூடும் என கருத்து தெரிவித்து பிரேத பரிசோதனை சான்று அ.சா..10 வழங்கினேன்.

( பக்கம் 117, 118)

நூல்: சென்னகரம்பட்டி கொலை வழ க்கு.
தொகுப்பு: பொ.இரத்தினம்( வழக்குரைஞர்)
விடியல் பதிப்பகம்
புத்தக வெளியீட்டகம்.




சாதி, தன் கருத்துக்களால் காவு வாங்கிய ஒரு உயிரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் மேற்கண்டது. தலித்துக்கள் ஆதிக்க சாதியிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாது அரசிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில்தான் சாதியம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை அரசே ஊதிப் பற்ற வைக்கும்போது, மேற்கண்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள்தான் இனி ஆளும் அரசின் சட்டப் புத்தகங்களாய் இருக்க முடியும்.


பரமக்குடி.........?



Thursday, July 14, 2011

வாசகப் பதாகினி சூழ் பீதசாலம் கோணங்கி அவர்களுக்கு...….




தார்மீகத்தில் வழியும் உப்புக்கத்தியின் குதிர்வாடைக்குள்ளிருந்து பெருகும் புளித்த சொற்களின் ஏகாந்த சொற்குருகில் விளைந்த ததாக சொப்பனச் சொல்லொன்றுங்களுக்கு.....


மறுவாசிப்பென்னும் புலிக்குகைக்குள் நீண்டு நெடிய தன்மசாதனப் புதிரில் நெளியும் இக்கடிதத்தை தங்களின் மேலான தலைக்கு மேல் கேள்விக்குறி நீளும் தற்கோலமாய் வைத்தெழுதுகிறேனய்யா. அதாகப்பட்டது பிரேளிகை சுவாசத்திலிருந்து பிருத்துவி முளைத்துத் துயிலும் பிரேதகத்தை தாங்கள் மைபூசிய செவ்விழிநீரறியும் ஊரறியும் உற்றாரும் தானறியும் சேவற்கொண்டைப் பித்தில் குடிபுகுந்தலையும் பிலுக்கு. முனைஞர் கூடியிழுத்த தீச்சுடர் வெறியேறிய காந்த சொரூப நித்திலப் பைங்கிளியின் உன்மத்த ரேகைதனை இழுத்திழுத்து உறையும் பனிக்காட்டின் மலிர்நிறை. என் கவனங்கொள் குடிபுகுந்த கொல்விழிகள் கண்டது தாத்பரியத்தின் தூரிகை சமைத்த எழுத்துருக்களை.


அச்சிட்ட மை காயும் நம்பலோடு உறைந்த நதியை இழக்கும் செவ்வரளிப் பூச்சூடிய நங்கை கிளர்ந்து மூலாதாரப் பொதிகலைத்து நேர்கோட்டில் சுருண்டிருக்கும் சதை கிழியும் உருப்பெருக்கி சுவாதிஷ்டானமுணரும் காட்டுக்குருவியின் இறக்கை மடிப்பில் துயிலும் பெருங்கிழவன் நணுகராகி உறை மறுத்து மணிப்பூரகமறுத்து அந்தர வாடையில் சொக்கிய குமரியின் அநாகதம் தூண்டி தலைகீழ்க் குத்தென விரைந்தொழுகும் விசுக்தியாய் நிலைகொண்டு ஆக்ஞை பிரதிபலிக்கும் கிழவனொருவன் பெருமூச்சு கோடரியைத் தலைகீழ்ப் பாய்ச்சலால் விரைந்து மூச்சடைத்து முயக்கம்பெற்று பித்தேறி செஞ்சடை சிதற உடுக்கையில் ஒலிக்கும் சஹஸ்ரஹாரம். அதாகப்பட்ட எழுத்துருவை வெட்டிக் கட்டி மறுமையிட அஞ்சி சொம்பல் துலக்கம் பெற குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்து வெள்விழி குறுக்கி பீளை வடியும் தூக்கத்தை மென்று கடைவாய் இறுக்கி கொட்டாய்தனில் கொட்டாவி விட்டுறையும் நாட்கூறில் நாங்கூழ் பாய்ச்சி நாகக்கோளிரண்டில் இருசுடைவளைந்து சூழும் பரிவேடம் திளைத்த வான்மீன் கிளர்ந்தொழியும் பெருந்தூமகேது பாயும் நட்டவிசியில் மையழித்து தெருபைரவன் குரல்வளையிருக காகிதத்தை கிழிக்காது கணிணிப்பெருமூச்சேக்கத்துக்குத் தின்னக்கொடுத்த கட்டுரையிது. கதையிது.


வாசகன் தாமதச் சொல்லில் குடிபெயர்வான்.நெஞ்சில் இறங்கும் கூரான கத்தியிறக்கும் பணித் தட்டான்போல் ஒரு வார்த்தை. பதினாறு ஆட்டைக் குமரனும், சீர்பன்னீர் ஆட்டைக் குமரியுமாகி ஒத்த மரபினும் ஒத்த அன்பினும் கற்பக நல்மர நல்பயனாகிய இருட்டில் கண்டான் வாசகன் எழுத்தாளன் ஏடறிவித்தவன் ஏமாற்றுக்கார இலக்கியம் செய் வித்தையை.




இதுவும் அது:


பதுமகோமளை கண் விழித்தாள் பற்றியெறிந்தது காணீர் போர்ச்சூடமுரசின் பத்திருபதுபாகங்களெனச் சிறு தோல். கருங்கையெனும் சதைக்குமிழுடைய தாங்களது சோம்பல்த் திறவால் வந்தவினையிதுவெனக்குமுறியிருகப்பற்றியிழுத்தயிழுப்பிலொழுகாத்தவக்கோலச்சுதி.


கல்குதிரைஇரண்டாயிரத்திரண்டிலொழிந்த வேனிற்காலங்களிழதழில் தாங்கள் மையிட்ட அச்சில்தலைப்பிட்டு வந்ததொரு தலையங்கம் தலையங்கமான சிறுகதையான காப்பிய வரிகொள்ளாத கானுறை வேங்கைச்சிறுபுலி வரிகள். பெண் - இசை - பித்தமொழி என்ற தலைப்பு இரண்டாயிரத்தி ஏழில் மைகாத்து அதே கதை தலையங்கத்தை சிறுகதையல்லாத வடிவென வரிகள் மாற்றி கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் என மாற்றி அச்சிட்டு வாசகத் தலையில் பத்திருபது மிளகாய் பச்சையாய் அரைத்தூற்றி வாசகவிழி சிவந்த கதை இதுவை விளங்குங்கள் பெரியோய்.






சிறுகுறிப்பு:


கல்குதிரை 2002
வேனிற்காலங்களின் இதழ்
பிரிவுத் தலைப்பு : பித்த கலாந்தம்
தலைப்பு : பெண் – இசை – பித்தமொழி


இப்பிரிவின் கீழ் வந்த அவரது எழுத்தைத் தலையங்கம் எனலாம்.


அதே அது


இருள்வமௌத்திகம் ( சிறுகதைகளும் குறுநாவலும்)
என்று பிரசுரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதே தலையங்கம் “ கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் ” என்ற தலைப்போட்டு சிறு வாக்கியங்களை எழுத்துக்களை மாற்றி வெளிவந்திருக்கிறது. இதை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. இதுதான் மாந்த்ரீக எழுத்தா. வாசக பாவம் சும்மா விடாது.

Sunday, May 22, 2011

இறுகக் கட்டிய சொல்.




ஒரு வலி நிரப்பும் எழுத்தை

அதன் இறுகக் கட்டிய சொற்களை
மனப்பாடம் செய்யும் மாயாவியை
கவிதையெனக் கண்டுகொண்டேன்

மாயாவிக்கு நேர்ச் சொல்லென
கவிதை
பெண்பாலை
சூனியக்காரியென வரைந்து வைக்கிறது

ஒவ்வொரு ஆண்மகனும் தனது நிழல் விழா குறியிடத்தில்
அடிமையின் பெயரை வரைந்து வைக்கிறான்

கவிதை
தன் நிதானமில்லாத கால்களால்
நரம்பிறுக
வீசியெறிய முடியாத சொற்களை
கங்குகளென ஊதி
வனமெங்கும் வேர்களில் தீயைப் பற்றவைத்தபடி அலைகிறது
சரியும் பூக்களை
தன்
சிறுகுறிப்பில் வரும் சிறுமிகளுக்கு வாரியிறைக்கிறது

அது
சொல்ல முடியாதபடிக்கு
தன்னைக்
கவிதையென்று நம்பி
மாளமுடியா வலியில் கோணியழும்
தனது முகத்தை நிராதரவாய்
கண்ணாடியில்
வரைந்து வைக்கிறது

பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகளெனவும்
ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்களெனவும்
ஒருமுறை
வசுமித்ர உறுமியது

கோரைப் பற்களில்
இளங்குருதி சொட்ட
கவிதைகள் புன்னகைக்கும் போது
அது தனது மத்தகத்தைக் கருணையில் அறைந்து தாழ்த்துகிறது

கவிதைகள்
தன்னை விளக்க முடியா சொற்களில்
அடகு வைக்கும்போது அர்த்தங்கள்
நுரைகொப்பளிக்கக் கொதிக்கிறது

கவிதையைத் தானமிடுவதென்பது
சாபத்தை ஏவி விடுவதுதான்
சமர்ப்பித்தலென்பது
கல்லறையில் சொற்கள்
தன் தாப  நாவை உளியென
பொறி பறக்கச் செதுக்குவதுதான்

கவிதை
அருந்தும்
பருகும்
தீய்க்கும்
உமிழும்
சாத்தானின் இரட்டை நாவை பிரதியெடுத்து உள்ளிழுக்கும்
சதா உறுமியலையும்

வசுமித்ர
அதுவாகிறபோது
கவிதை தன் சாட்டையை வீசியடிக்கிறது
வரலாறு தன் கண்களை இறுகப்
பொத்திக்கொண்டு அம்மணத்தைத் திறந்து அமர்கிறது

குறியற்ற கவிதை
குறியை
அறுத்தெறிந்த கவி
பளுக்கக் காய்ச்சிய இரும்பென
அம்மணம் குளிர்ந்தடங்குகிறது

வரலாற்றை மொழிபெயர்ப்பதென்பது
ஆண்களை மொழிபெயர்ப்பதுதான்
ஆண்கள்  
தங்களது
அவர்களது விரைத்த குறிகளால்தான்
வரலாற்றை எழுதுகின்றனர்
ஆம்
ஸ்கலிதம்தான் வரலாறு
ஸ்கலிதம்தான் அரசியல்
ஆண்களின் வரலாறு
ஆண்களின் அரசியல்
மற்றும்
ஆண்களால் துடைத்தகற்ற முடியாத கறை

சொல்
வசுமித்ர
கருந்துளைதான்
சூன்யம்
சூன்யம்தான் யோனி

யோனியின் மத்தகம் அடக்க
இனியிருக்கப் போவதில்லை
நீண்ட அங்குசம்
யோனியறிதல் தன்னையறிதல்

கவிதை
தன் சொற்களை ஏவி  விடுகிறது
பரவட்டும் தீ

தீ..............................................



Saturday, May 21, 2011

எனது நாடு எவ்வளவு சிறியது : எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ்



அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச் சண்டைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

மொழிபெயர்ப்பு
எஸ்.வி.ராஜதுரை.
வ.கீதா.

நூல்: மண்ணும் சொல்லும்.

மூன்றாம் உலகக் கவிதைகள்

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...