Thursday, October 3, 2013

குற்றமும் தண்டனையும் – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.




பதுங்கி
பின்
முன்னேறும் ஒரு குற்றத்திற்கு
நீங்கள் பெயரிட்டு அடையாளம் வைக்கிறீர்கள்
அடையாளமென உங்கள் பெயர் முன்னே நகர்கிறது

நகங்களை மண்ணில் ஆழமாகப் பாய்ச்சி
ஒரு சதைத் துணுக்கை கவ்வுகையில்
பற்களில் வழிகிறது செவ்வண்ணத் துரோகம்
நிலையான
கனவுகளுக்காக
நாற்காலியொன்றை நகர்த்தும் கைகளில்
நீங்கள் திணிக்கும்
ஒற்றை ஆயுதம்
வாழ்வை அதன் பூரணத்துவத்துடன் நகர்த்துகிறது
இன்னும் நிலையாக
கொண்டு செல்லாத சொல்லாக
செய்ய முடியாத குற்றங்களாக.







அந்த ஓநாய் நீங்கள்தான் மிஷ்கின், ஒநாயின் நிழல்தான் இளையராஜா. மனிதனின் அற்ப குணங்களை உள்ளுணர்ச்சியால் தள்ளி, எறியமுடியும் என்பதுடன் அதைக் கடந்தும் தீரவேண்டியிருக்கிறது என்கிற உங்களது நம்பிக்கை வியக்க வைக்கிறது. கடந்து போகும் நிகழ்வுகளில் நீங்கள் கண்டெடுத்த குற்றத்தையும் தானே அடையும் தண்டனையும், உங்களைத் தேர்வு செய்து கொள்ள உங்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறது. குற்றமும் தண்டனையும் நாவலை மிகக் கவனமாகப் படிக்க உங்களது இந்த படைப்பு எனக்கு உதவியிருக்கிறது. மிக்க நன்றி மிஷ்கின். உங்களுக்கு என் வணக்கம். முடிந்தால் திரைக்கதையை நாவல் வடிவமாக முன் வையுங்கள். இலக்கியத்திற்கும் அது தன் பங்களிப்பை வழங்கட்டும்.

2 comments:

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...