ஒரு
மனிதன் கயிற்றின் முன் நிராதரவாக நிற்கிறான்
கழைக்கூத்தாடியைப்
போல் நீதி அங்கும் இங்கும் ஊசாலடிக்கொண்டிருக்கிறது
பார்வையாளர்களுக்கு
நடந்து
போகும் மனிதனை விட
கயிறே
பார்வையை நிறைத்திருக்கிறது
ஒரு
மனிதன் முறுக்கிய கயிற்றுக்குத் தன் தலையைக் கொடுக்கும் போது
தான்
மனிதனாக பிறந்ததற்கு இது வேண்டும் என நினைக்கலாம்
தான்
கடந்து போகாத பாதையில்
தன்
தடத்தைப் பதித்தவனின் முகத்தை நினைக்கலாம்
அரசு
ஒரு கழுதை
அதற்கு
உண்ணக் காகிதகங்கள்தான் வேண்டும்
என்கிற
பழமொழியை நினைவு கூறலாம்
தலையை
மூடிய கறுப்புத் துணிக்குள் ஒளிமிகுந்த வார்த்தைகளை அவன் யோசித்துக்கொண்டிருக்கலாம்
அரசு
என்ற ஒரு சொல் உண்மையில் குமட்டலை ஏற்படுத்துகிறது
அரசு
நீதியின்
பெயராலோ சத்தியத்தின் பெயராலோ அல்ல
சக
மனிதனின் பெயரால்…
இருக்கவேண்டும்
அவ்வளவு
நிச்சயமான தன்மையுடன்
மனிதர்களிடம்
பேசவிரும்பாத அரசு
விசாரிக்கவும்
ஆணையிடவும் விரும்பும் அரசு
எப்படி
மனிதர்களை ஆளும் தகுதி கொண்டதாக இருக்கமுடியும்
இறுதி
நொடியில்
மறுக்கவே
முடியாத நினைவைப் போல்
அவனது
விழிகளை ஈரப்படுத்திக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்
தன்
நிழலைப் போல விட்டுச் சென்ற
அவனது
குழந்தைகளுக்கு காரணம் சொல்லும்
தூக்குத்
தண்டனைக் குறிப்பேடுகளில்
தூக்குத்
தண்டனை என்பது
நீதியின்
பெயரால் என்ற வார்த்தையால் இணைக்கப்பட்டு
அவர்களுக்குச்
சொல்லக் கூடாது
கடவுளின்
பெயரால்
என்ற
வார்த்தைகளையும் நீக்கவேண்டும்
முடிவாக
ஒரு
மனிதனைத் தூக்கிலிட விரும்பிய அரசு
அவர்கள்
வாழும் இம் மண்ணில்தான் இருக்கிறது என்பதையும்…
இறுதியாக
கயிற்றின் முன் நிற்பவன்
தன்னைப்
போலவே இருக்கும் மக்களுக்குச் நினைவூட்ட விரும்புவதெல்லாம் ஒன்றேதான்
மக்களே…. அரசு உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறது
அமைதியாயிருங்கள்
பிணத்தைப்
போல அவ்வளவு விரைப்பாக