Wednesday, February 24, 2016

சிறுமி நேயா



அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா… குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா…
அப்பா…
நிஜமாகவே….

சரி மகளே 
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டுப் பிடிக்கவில்லை
வேறுவிளையாட்டுச் சொல்லித்தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


1 comment:

  1. கடுமையான மன உளைச்சளில் வந்தேன் வசு. இப்போது ஒரு பூங்கொத்தை ஏந்துவதுபோல சிறு புன்னகையை ஏந்திப் போகிறேன்.

    ReplyDelete

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...