Monday, May 15, 2023

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

 




 
 
இடது” இதழ் வெளியிடாத கடிதம்.
(ஆகஸ்டு 9- 2017)
 
 (இடது’ இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதிஇடது இதழ் வெளியிடாத கடிதம்.)
 
 இதழின் பொறுப்பாசிரியர் ஓடை.பொ. துரை அரசன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவுக்கும்...
 
நடப்பு இதழான செப்டம்பர் 2016 இதழில் உங்களது தலையங்கத்தைப் படித்தேன். அதில் எஸ்.வி.ராஜதுரை குறித்து தேனியில் எஸ்.வி.ஆரை  மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கேள்வியை எழுப்பியது நான்தான். அது குறித்தான எனது விளக்கங்களையும் கேள்விகளையும் முன்வைத்தே இதை எழுதுகிறேன்.
 
தோழர்களே... கடந்த செப்டம்பர் 2016 ராஜதுரைக்கு தமுஎகச வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. என் வரையில் அது வரவேற்கத் தகுந்த ஒன்றே. விருதுக்கான தொகையை ராஜதுரை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அப்போதே அளித்தார். அதுவும் வரவேற்கத்தக்கதே. (அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயருக்கும்சாதி ஒழிப்புக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசங்களை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.) உங்களது தலையங்கத்தில் ராஜதுரையின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது மார்க்சிய ஈடுபாடு குறித்து எவரொருவரும் ஐயம் கொள்ள மாட்டார்கள் என்ற குறிப்பும் உள்ளது.
 
இதையொட்டியே எனது கருத்தையும்ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் அங்கு நடந்ததையும் விளக்க எண்ணுகிறேன். இதுகுறித்து தாங்கள் எனது முக நூல் பக்கத்திலோ,வலைப்பக்கத்திலோ படித்திருக்கும் பட்சத்தில்இக்கடிதம் கூறியது கூறலாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும். அதையும் கவனத்தில் கொள்கிறேன். அது குறித்து நீங்கள் ஏதும் அறியாத பட்சத்தில் இது உங்களுக்கு உதவும்.
 
ரங்கநாயகம்மா நூல் வெளிவந்துகிட்டத்தட்ட ஒரு மாதகாலம் சவ அமைதியே நிலவியவது. பிற்பாடு ஆதவன் தீட்சண்யா என்பவர் நூலின் மீதான அவதூறுகளை முதலில் தொடங்கி வைத்தார். நூலின் குறைந்த விலை  உட்பட அனைத்தையும் மிக மோசமான குறுக்குப் புத்தியுடன் விமர்சிக்கத் தொடங்கினார். ரங்கநாயகம்மா நூலை பீ” க்கு ஒப்பாகவும் அவரால் துணிந்து எழுத முடிந்தது. அவரது அவதூறுகளை மறுக்கும் முகமாக முகநூலிலும் வலைப்பக்கங்களுலும் நானும் கொற்றவையும் பதில் கொடுத்தோம். அத்தோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்கிற மறைமுகமான மிரட்டலையும் ஆதவன் விடுத்தார்.
 
அவர் நூலை முழுதாக படிக்காமலேயே (இது அவரது எழுத்திலேயே உள்ளது) அவதூறுகளை இட்டு நிரப்பத் தொடங்கினார். மேலும் ஆதவனது அவதூறுக்கு வக்காலத்து வாங்கும் முகமாக தமுஎகச தொண்டர்களும் களத்தில் இறங்கினார்கள். அப்படி அவர்கள் இறங்கியதானதுநான் சின்னத்திரைத் தொடர்களில் மானம் இல்லாமல்கேவலமாகச் சம்பாதிக்கிறேன் என்ற அரிய கருத்தை வழங்கும் வரை சென்றது. 
 
சம்பந்தப்பட்ட ஆதவன் ஒரு எழுதாளாராக இதில் பேசியதைவிடவும்தமுஎகச மாநிலக் குழுவில் ஒரு தலைவராக அவரை தமுஎகச தொண்டர்கள் முன்வைத்து பேசியிருக்கிறார்கள்  என்பதற்குஅவர்கள் முகநூலில் எதிர்வினையாற்றிய விதமே சாட்சி சொன்னது. அதற்கான ஆதாரங்கள் தேவையெனில் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். சம்பந்தப்பட்ட விழா குறித்த அழைப்பிதழில்  விருது கொடுப்பதோடு எஸ்.வி,ஆருடன் கலந்துரையாடல் என்று போட்டிருந்தார்கள். 
 
அதை நம்பியே நானும் பேசினேன். (ஆனால் அது கலந்துரையாடல் இல்லை. மேடையில் அவர் அமர்ந்திருக்ககீழிருந்து கேள்வி கேட்டுமேலிருந்து அவர் பதில் சொல்லும் வகையிலானதாக அமைதிருந்தது)  கலந்துரையாடலின்! முதல் கேள்வி தமுஎகசவின் மாவட்டக் குழுவில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் என்பவரால் கேட்கப்பட்டது. அவர் கேட்ட கேள்வி  ரங்கநாயகம்மா நூல் குறித்து இரு வேறு பார்வைகள் நிலவுகிறதே அது குறித்து உங்களது கருத்து என்ன ?” இதுதான் அவரது கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராஜதுரை தான் நினைத்தையெல்லாம் பேசினார். 
 
ரங்கநாயகம்மா குறித்து அவர் பேசியதன் சுருக்கத்தை அளவு கருதி இங்கு சுருக்கித் தருகிறேன் . அவர் பேசியதாவது; “ரங்கநாயகம்மாவின் நூலை தெலுங்கில் யாருமே கண்டுகொள்ளவில்லைஎவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத நூல் அது,  அந்த நூலை சத்யமூர்த்தி போன்றவர்களே மறுத்துவிட்டார்கள்நக்சல் பாரிகளும் ஏற்றுக் கொள்ளவில்லைரங்கநாயகம்மா போன்றோரை நாங்கள் குகைமார்க்சியர் என அழைப்போம்அம்பேத்கர் நூல்களை முழுதாகத் தொகுக்கவில்லைமார்க்சின் நூல்களையும் முழுதாகத் தொகுக்கவில்லைஅம்பேத்கர் கூறியதான மார்க்சியத் தத்துவம் பன்றிகளின் தத்துவம் என்பதற்கு மாவோ காலத்தில் வரலாறு இருக்கிறது” என்று உளறி முடித்தார். 
நடந்தது இதுவே. இதில் தங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுமாயின்சந்தேகங்கள் இருப்பின் கூட்டத்தை கூட்டிய சம்பந்தப்பட்ட தமுஎகசவிடம் நீங்கள் அவர் என்ன பேசினார் என்று பதில் கேட்டுப் பெறலாம்.
 
கேள்விக்கு பதில் சொல்கிறேன் எனத் தொடங்கிஅவர் பேசிய அனைத்தும் உளறல்களே. அவரது உளறல்களில் எனக்கு பல கேள்விகள் எழுந்தது. தெலுங்கில் யாருமே ஒரு நூலைக் கண்டு கொள்ளாவிட்டாலோசத்யமூர்த்தி போன்றோர் பதில் சொல்லி விட்டாலோ நக்சல்பாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ ஒரு நூலின் பெறுமதி இல்லை என்றாகி விடுமாஇல்லைஇவர்களைக் கேட்டுத்தான் சம்பந்தப்பட்ட விசயங்களைஆய்வுகளை எழுத வேண்டுமாஎன்ற கேள்வி முதல் கொண்டுஅம்பேத்கரையும் தொகுக்கவில்லைமார்க்சையும் தொகுக்கவில்லை என்ற பதிலின் மூலம் ராஜதுரை என்ன சொல்லுகிறார் என்று எனக்கும் விளங்கவில்லைஅங்கிருந்தவர்களுக்கும் விளங்கவில்லை. ஒருவேளை தொகுக்கப்படாத அரைகுறை நூல்களை வைத்துத்தான்இத்தனை காலத்தை மார்க்சின் பெயரால் ஓட்டினோமோ என்கிற சந்தேகம் மட்டும் வந்தது. மேலும் இதை அடியொட்டி எனக்குப் பல கேள்விகள் எழுந்தன.
 
அக்கேள்விகளை பேசும் முகமாக நான் மேடை ஏறப்போனதும்ஒருங்கிணைப்பாளரான ஆதவன் பதறி நிலைகுலைந்து வேகமாக வந்து (இதில் மிகைக் கூற்று எதுவும் இல்லை. எஸ்.வி.ஆருடன் மேடையில் ஆதவன் அமர்ந்திருந்தாலும்கிழிருந்து நான் எத்தனை முறை தண்ணி குடித்தேன். எப்படி நடந்தேன் கழுத்தை எப்படிச் சாய்த்து வைத்திருந்தேன் என தான் கவனித்ததாக முகநூலில் எழுதியிருக்கிறார். அவரது அடிப்பொடிகளில் ஒருவர் நான் என்ன வகையான உடை உடுத்தியிருந்தேன் என்று கூட சிலாகித்து எழுதியிருக்கிறார். 
 
மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் என் குறித்து இத்தனை எழுதியிருக்கிறார் என்றால்அவரது ஒட்டுமொத்த கவனமும் என் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி கவனம் குவிகிறதென்றால் அதற்கான அச்ச உணர்ச்சியை எஸ்.வி.ஆரின் உளறல்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்...இல்லையா) என்ன பேசப் போகிறீர்கள் என்று கேட்டார்.  நான் உங்களைக் கேட்டுத்தான் பேச வேண்டுமா என்றேன். என்ன விசயம் சொல்லுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார். நான் உங்களிடம் சொல்ல முடியாது ராஜதுரையிடம் தான் கேட்க வேண்டும்அவருடன்தானே கலந்துரையாடல் என்று அழுத்தமாகச் சொன்னேன். உடனே வேகமாக ஓடிப் போய்  மைக்கைப் பிடித்த ஆதவன் இது எஸ்.வி,ஆருக்கு விருது வழங்கும் மேடைஇதை ரங்கநாயகம்மா நூல் மேடையாக யாரும் மாற்ற வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பை எனக்குத் தெரிவிக்கும் விதமாகச் சொன்னார். இதுகுறித்து எந்த எச்சரிக்கையும் பார்வையாளர்களுக்கு சொல்ல வில்லை. இதை இதை கேட்கலாம் என்ற குறிப்புகள் எதும் வழங்கப்படவில்லை. ஆனால் நான் பேசுவேன் என்றதும் பதறி நிலைகுலைந்து எச்சரிக்கை விடப்பட்டது.)
 

உண்மையில்கேட்ட கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல்கிட்டத்த 3040 நிமிடங்கள் ரங்கநாயகம்மா நூல் குறித்து பேசுகிறேன் என இஷ்டத்துக்குப் உளறிஅதை ரங்கநாயகம்மா மேடையாக மாற்றியது ராஜதுரைதான். அதுகுறித்து கேள்வி கேட்கப் போன எனக்கு எச்சரிக்கைக் குறிப்பு! இருப்பினும் அக்குறிப்பை மதித்து மேடையேறிய நான் ராஜதுரையின் பங்களிப்புகள் குறித்து எனது புரிதலை வைத்துவிட்டு அவரை மார்க்சிய அறிஞர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதுஅந்நியமாதல்இருத்தலியம் சார்த்தர் என அவர் ஒரு தலைமுறை சீரழியத் துணை போனவர் எனச் சொன்னேன். (மேடையில் நான் என்ன பேசினேன் என்பதற்கு காணொளி ஆதாரம் எனது முக நூலில் உள்ளது) சொல்லி முடித்ததும் பதற்றத்துக்குள்ளான ராஜதுரை (உண்மையில் அவர் பதற்றப்படவே செய்தார். நேரில் கண்டதன் மூலமாகத்தான் இதைச் சொல்கிறேன் ) வேகமாக மைக்கைப் பிடித்து முதலில் பேசியது,   “என்னை நான் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை தமுஎகச தான் அப்படிச் சொன்னது” என்று  கூறினார். (இந்தச் சொல்லுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் பரிசாகக் கிடைத்தது. இதன் உளவியல் குறித்தும்இதனடிப்படையில் அங்கிருந்த தமுஎகச தோழர்களின் வாசக குணம் எப்படி அமைந்திருக்கிறது என்பது குறித்தும் ஒரு நூறு பக்கம் தனியே எழுதலாம்) அப்பொழுதே அவர் கூட்டத்தை என்ன மனநிலைக்குத் திருப்புகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து  வசுமித்ர போன்றவர்கள் என்னை மார்க்சிஸ்ட் இல்லை என அவதூறு செய்யலாம்...அவரின் வயதென்ன...” என்றெல்லாம் பேசத் தொடங்கினார். உண்மையில் நான் மதித்த ராஜதுரையா அப்படிப் பேசுவது என்ற அதிர்ச்சியே என் மனதை முதலில் தாக்கியது. 
 
ஒரு புத்தகம் குறித்து தன் கருத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரியாத ராஜதுரையா இவர்! நான் மார்க்சிய அறிஞர் இல்லை என்று சொன்னதற்கு அவர்  நான் மார்க்சிஸ்ட் இல்லை என இவர் சொல்லலாம் ” எனத் திரித்தது உட்பட எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம்.
 
மேடையில் ஒரு நபர் தன்னை மார்க்சிய அறிஞர் இல்லையென்று சொன்னால்அது எப்படி என வினாத் தொடுக்க முடியாதுஅதற்கான விளக்கங்களையோபதில்களையோ சொல்லமுடியாதுதன்னை முன்னிலைப்படுத்தி நிறுவும் ஒரு நபரையா இத்தனை வருட காலம் படித்து வந்தோம் என்ற உணர்வை எனக்கு தந்தது. எல்லாவற்றிற்கு மேலும்நீங்கள் தேர்வு செய்த நபரை இவன் அசிங்கப்படுத்துகிறான் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே” என்ற உளவியல் தூண்டுதலைத்தான் மறைமுகமாக அவர் கூட்டத்தை நோக்கி வீசினார். 
 
வீசிய வேகம் வேலையும் செய்தது.  அவர் உளறிய பின் அந்த உளறல்கள் குறித்துக் கேள்வி கேட்க மேடையை நோக்கித் திரும்பியதும்தமுஎகச தொண்டர்கள் சூழ்ந்தனர். அங்கிருந்த எஸ்.ஏ.பெருமாள் என்பவர் ஒரு தெரு நாயை விரட்டுவது போல்  அதான் பதில் சொல்லியாச்சுல போ போ போப்பா”  என்று ஆரம்பித்தார். அதற்கு நான்  என்னங்க என்னமோ நாய் மாதிரி விரட்டுறீங்க” என்று இரண்டு எட்டுக்கள் முன்னே வைத்ததும் சற்று பின் வாங்கி  போப்பா போப்பா” என்றார் உடனே மோகன் குமாரமங்கலம்சிவாஜி போன்ற தோழர்கள் என்னை இழுத்து வெளியே கொண்டு போய் விட்டனர்.
 
அரங்கில் இருந்த  தமுஎகச மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன்மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மார்க்சிய அமைதி! காத்தனர். மேலும் மார்க்சிய அறிஞருக்கே! உரிய மௌனத்தை ராஜதுரை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதுவரை அவர்கள் பேசி வந்த  கருத்துச் சுதந்திரத்தின் கடைவாய் நகைப்பை நான் அன்று முழுதாக உணர்ந்தேன்.
 
அதற்கு மேல் அங்கு தமுஎகச தொண்டர்கள் என்ற பெயரில் எழுத்தாளர்களும்ரசிகர்களும்விசிலடிச்சான் குஞ்சுகளும் (ரஜினி கமல்ஹாசனுக்கு மட்டுமல்லபுரட்சிகரம் என்ற பெயரில் எஸ்.வி.ராஜதுரைக்கும் அப்படிப்பட்டோர் உண்டு)  ராஜதுரைக்கு பாதபூஜையே செய்யத் தொடங்கினர்.  பாதபூஜை எனச் சொல்லும் போது உங்களுக்கு எரிச்சல் வரலாம் தோழர்களே என்ன செய்வது. சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் மேடையில்  எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது தவறு அவரை மார்க்சியப் பேரறிஞர் எனச் சொல்லியிருக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதுகுறித்து தமுஎகச தொண்டர் ஒருவர் கூறியது,  “சு.வெங்கடேசன் அப்படிச் சொல்லியது கூடியிருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்தவாம்.” எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அரங்குக்கு வெளியே தமுஎகச தொண்டர்கள் நடந்த விதம் அதை விட மோசம். எங்க அமைப்பு யாருக்கு வேணா விருது கொடுப்போம் என்று தொடங்கி இஷ்டத்துக்கு பேசியது. (நான் விருது குறித்து எந்த வினாவையும் தொடுக்கவில்லை. மார்க்சிய அறிஞராக அவரின் பங்களிப்புகள் எவை என்பதுதான் என் கேள்வி)அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர்களில் எவரும் எஸ்விஆரைப் படித்தது இல்லை என்று. நிற்க.
 
இதுதான் அங்கு நடந்தது. ஒரு சிறிய கூட்டம் போட்டாலேஅதை பொதுவெளியில் புரட்சிகர அனுபவமாக அனைத்து தளங்களிலும் விளக்கி எழுதும் தோழர்கள்சம்பந்தப்பட்டக் கூட்டம் குறித்து விரிவாக எதையும் முன்வைக்கவில்லை. போனோம் வந்தோம் என்ற பாணியில் பதிவை வைத்து அமைதி காத்தது. தேனியிலிருந்து ஒரு வாரத்திற்குப் பின் சென்னை வந்த நான் அதுகுறித்து எழுதியதும்மறுபடியும் வசைகளை முன்னெடுத்தது. ஆனால் இன்றுவரை எஸ்.வி.ராஜதுரை ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் எவை என்ற எனது கேள்விக்குப் பதிலே வரவில்லை. இக்கேள்வியை நான் தமுஎகசவுக்கு வைத்தும் பதில் இல்லை. பாரதிபுத்தகாலயம் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை முடக்கியதோடுகேள்வி கேட்பது அத்துமீறல் எனச் சொல்லிஅதன் முகநூல் பக்கத்தில் நான் நுழைய தடை விதித்தது. இதுகுறித்தும் அறிவுசார் சமூகம் தன் வாயை இறுக மூடிக்கொண்டது. 
 
நாங்கள் மார்க்சிய அறிஞர் என பட்டம் கொடுக்கவில்லை என்ற வியாக்கியானங்கள் தூள் பறந்தது. அப்படி நாங்கள் சொல்லவில்லை என மழுப்பியது. ஆதரத்தோடு எடுத்துப் போடவும் வசைகளை அள்ளித் தெளித்தது. இதையெல்லாம் விட மிக மோசமாய்புதிய புத்தகம் பேசுது இதழ் வாழ்த்துகிறோம் என்ற பெயரில்விருது வாங்கியவர்களின் பெயர்கள்புத்தகங்களின் பெயர்களைக் குழப்பி அடித்துப் போட்டிருந்தார்கள். இதற்கிடையேஇப்பொழுது தங்களது இடது இதழின் தலையங்கத்தில்ஒரு தகவலாக அதை நீங்கள் போட்டிருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரம் குறித்து உங்களது அக்கறையும் கவனமும் மதிப்பளிக்கக் கூடியது. அதே சமயம். ஒரே ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்தன் மூலம் நாங்கள் ஆதிக்கச் சாதியாவதும்நான் கேவலமான வேலை செய்பவனாகவும் மாறிய அற்புதங்கள் குறித்து எனக்கு இன்னும் ஆச்சரியம் நீங்கவில்லை. 
 
மேலும்தோழர் துரைஅரசனுக்கு நான் முகம் தெரியாதவனும் அல்ல. கூட்டம் குறித்த செய்திகள் தேவையிருப்பின் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. ஆனால் அதே சமயம் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என நீங்களும் அழுத்தம் திருத்தமாக கூறவில்லை. இதுஎனது கேள்வியை உங்களுக்குள்ளும் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. (அதே சமயம் கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது போல் மார்க்சியத்தில் அவரளவுக்கு உயரத்தை எட்டியவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தமுஎகசவின் தேர்வு பொருத்தமானது என்றே இடது” கருதுகிறது.” என்று உங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள். (தமுஎகசவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவன் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளது குறித்தும் அதில் தனக்குக் கேள்விகள் இருப்பதாகவும் சொல்கிறார். அக்கட்சியின் வெகுஜன அமைப்பில் இருப்பவரே சொல்லிவிட்டார் அதனால் வேறு அத்தாட்சி தேவையில்லை. எனவே சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சிதான் என முடிவுக்கே வரலாம்..இல்லையா?.) 
 
எஸ்.வி.ஆர் ஒரு மனித உரிமை போராளி என்ற குறுவட்டை இடது வெளியிட்டிருப்பதால்ராஜதுரை குறித்து உங்களுக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். சாய்வுகள் இருக்கலாம்.  இது என் சந்தேகமே. இருப்பினும் இது நியாயமான சந்தேகந்தான். 
செம்மலரில் எஸ்.வி ஆர் ஒரு திரிபுவாதி என எழுத இடம் கொடுத்தவர்கள்இப்பொழுது அவர் மார்க்சிய அறிஞர்தான் என விளக்கம் ஏதும் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கிறார்கள். நீங்கள் அவருக்கு தனி படமே எடுத்துள்ளீர்கள். அதை நான் மதிக்கும் வேளையிலும் சந்தேகம் வருவது நியாயந்தான் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மேலும் ராஜதுரை மார்க்சிய அறிஞரா என கேள்வி எழுப்பப்பட்டது தவறுஅது மிக  மோசமான கருத்துவிவாதிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் உடையது  என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில்ராஜதுரை அறிஞராக மார்க்சியத்துக்கு அளித்த பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலமே அதை நிறுவமுடியும்ஆனால்நீங்களும் அவர் மார்க்சிய ஈடுபாட்டில் ஐயம் கொள்ளமுடியாது. அறிவுப் பங்களிப்புகள் செய்தவர்கோவை ஞானியே அவரது உயரத்தைச் சொல்லிவிட்டார் என்ற கருத்தையே முன்வைத்து நகர்கிறீர்கள். ஆனால் இடையிலுள்ள ஒரு வார்த்தைதான் என் சந்தேகத்தை ஆழமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. 
 
அதுஎஸ்.வி.ஆரின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும்” அப்படி எந்த வாதம் பிரச்சினைகளாக உள்ளது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். 
அந்த சில கருத்துக்கள் மார்க்சியத்துக்கு வலு சேர்ப்பவையாமார்க்சியத்தை வேறு திசைக்கு நகர்த்துபவையா என நீங்கள் விளக்க வேண்டும். உங்கள் குறிப்புகளில் உள்ள சுட்டல்களுக்குப் பொருந்திமார்க்சிய அறிஞராக துடித்துக்கொண்டிருக்கும் நபர்கள்அறிவுசார் சொத்தை அடைய விரும்புபவர்கள்அதன் மூலம் தங்களது அடையாளப் பிரச்சினையைஇருத்தல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளத் துடிப்பவர்கள்  எண்ணற்றோர் என்பது நீங்கள் அறியாததல்ல. 
 
தோழர்களேஉங்களது தலையங்கத்துக்கு எதிர்வினையாக எனது கருத்தையும் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன். கோவை ஞானி எஸ்.வி,.ஆர் குறித்துச் சொல்லியுள்ள கருத்து அவரது கருத்து மட்டுமே. கோவை ஞானி சொல்லிவிட்டதானலேயே எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என இடது கருதலாம். அது அதனுடைய கருத்து. ஆனால் அதை வைத்து அவரை மார்க்சிய அறிஞர் என்று என்னால் அளவிடமுடியாது. 
 
அப்படி அமைய வேண்டும் என்றால் எஸ்.வி.ஆர் ஒரு அறிஞராக இத்தனை வருடங்கள் மார்க்சியத்திற்கும் தத்துவத்திற்கும் அளித்த பங்களிப்புகள்கொடை என்ன. இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்திய எஸ்.வி ஆரின் மொழிபெயர்ப்பு நூலான சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் என்ற நூலில் தனது முன்னுரையில் எஸ்.வி.ஆர் மார்ஸெல்லோ முட்டோவை இளம் மார்க்சிய அறிஞர் என்கிறார்அருண் பட்நாயக்கை மார்க்சிய அறிஞர் என்கிறார். ஆனால் வால்ட்டர் பெஞ்சமினை மார்க்சிய சிந்தனையாளர் என்றே வகைப்படுத்துகிறார். எனவே யாரை மார்க்சிய அறிஞராக முன்மொழியமுடியும் என்கிற தேர்வும் அவருக்கிருக்கிறது. 
 
மார்க்சிய அறிஞர் யாரென என்னைக் கேட்கும் பட்சத்தில்ராஜதுரை  குகை மார்க்சியர்’ எனச் சுட்டிய தோழர் ரங்கநாயகம்மாவை உதாரணம் காட்டுவேன். மார்க்சிய அறிஞராக அவர் செய்த பங்களிப்புகளாக கீழ்க்கண்ட பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறேன்.
 
1  For the solution of the ‘caste’ question, Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must. [Pages: 400. Paperback. 1/8th demmy size. Rs. 80.]
 
2  House Work and Outside Work. [Pages: 104. Paperback.1/8th demmy size. Rs. 30.]
 
3  An Introduction to Marx’s ‘Capital’ (in 3 volumes). [Pages: 1972. Hardbound. 1/8th demmy size. Rs. 360.]
 
4.  Caste and Class: A Marxist Viewpoint. [Paperback. 1/8th demmy size. Rs. 60.]
 
இவைகளிலிருந்து நான் யாரை மார்க்சிய அறிஞர் என்ற பதத்தின் கீழ் அடையாளப்படுத்துவேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதில் ஒருவேளை உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின்மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்திற்கு யார் பொருந்துவார்இல்லை அப்பதத்தின் பெறுமதிகள் என்ன என்று நீங்கள் எனக்குச் சுட்டினால் மேற்குறித்து நாம் விவாதிக்கலாம்.  மார்க்சிய அறிஞரான! ராஜதுரை ஒரு நூலை (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு…..) விமர்சித்த முறையை வைத்துப் பார்த்தால்அவர் வெறுமனே அறிஞர் என்று அழைப்பதற்குக் கூட தகுதியற்றவர் என்பதே என் கருத்து. விமர்சனங்களில் நட்புச் சோரம் போவதோதெரிந்தவர் அறிந்தவர் என்ற முகதாட்சண்யங்களைத் தாங்களும்விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். 
 
ராஜதுரையின் அளவுகோலின்படிஒரு நூலை யாரும் கண்டு கொள்ளாததானாலேயே அதைப் பொருட்படுத்தத் தேவையில்லைஎன்ற வாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை. இதை உறுதியாக என்னால் கூறமுடியும். தேனி தமுஎகச பொறுப்பாளர்கள் கூட எஸ்.வி.ஆரைப் படித்தது இல்லை என்பதை அவர்கள் பேச்சில் உணர முடிந்தது. நிலைமை இப்படியிருக்கராஜதுரை ரங்கநாயகம்மாவின் நூல் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை ஏதும் அறியாத ஒரு கூட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கிறார்.  இதுதான் ஒரு மார்க்சிய அறிஞர்! நூலை அளவிடும் முறையாஒரு தர்க்கத்திற்காக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதிகம் விற்ற நூல்தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா?  
 
முடியுமெனின்  ஒரு விவாதத்திற்காகதெலுங்கில் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை...நூல் தெலுங்கில் 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஆனால்  ராஜதுரையின் நூல் இரண்டாம் பதிப்பு வருவதற்கே இருபது வருடங்கள் ஆகிறது! தமிழில் ரங்கநாயகம்மா நூல் நான்கு மாத காலங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. முதல் பதிப்பில் 500 பிரதிகள்இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள்மூன்றாவது பதிப்பில் 2000 பிரதிகள் போட்டு அதுவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதுவா ஒரு நூலை மதிப்பிடும் அளவுகோல்.
 
இரண்டாவதுகண்டுகொள்ளப்படாத அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் விமர்சித்துவிட்டார்கள் (கண்டுகொள்ளப்படாத நூலை முதலில் ஏன் சத்யமூர்த்தி விமர்சிக்க வேண்டும்நூல் எழுதவேண்டும்!) என்று சொல்வதன் மூலம்  என்ன சொல்ல வருகிறார் ராஜதுரை. சத்யமூர்த்தி போன்றவர்கள் மார்க்ஸ் தேவையில்லை என்று சொன்னால்உடனே ராஜதுரை அவரே விமர்சித்துவிட்டார் என்று சொல்லி மார்க்ஸைப் புறக்கணியுங்கள் என்று சொல்வாராசத்யமூர்த்தியே  விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் ராஜதுரைக்கு சத்தியமூர்த்தி தத்துவ வழிகாட்டி போலவும்அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்து நகர்வதன் அர்த்தம்  என்ன இதற்குப் பெயர்தான் மார்க்சிய அறிஞரின்  வாதமாஇப்படி அவருக்கு உகந்தவர்கள் யாரேனும் விமர்சித்துவிட்டால் அந்த நூலைப் படிக்கவேண்டியதில்லையா?
 
மூன்றாவது களப்பணி செய்யவேண்டும்சும்மா கம்யூட்டர் முன்னால் தட்டிக்கொண்டிருந்தால் போதாது அவர் ஒரு குகை மார்க்சியர்” என்று உளறுவதன் மூலம் ரங்கநாயகம்மா கம்யூட்டர் முன்னால் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார் என்கிற சித்திரத்தை அங்கு வந்திருந்த தோழர்களுக்கு அவர் உணர்த்த விரும்பிய விதம் மிகுந்த மோசமான ஒன்றென இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன். 
 
மார்க்சிய அறிஞராக அவர் அம்பேத்கரையாவது படித்திருக்கிறாரா என்றால்அதுவும் எனக்கு சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ராஜதுரை படித்த அம்பேத்கரை அவரது வார்த்தைகளிலேயே இங்கு முன்வைக்கிறேன். 
 
 “புத்தரா கார்ல் மார்க்ஸா என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றிதனது இறுதி நாட்களில் எழுதி முடித்த  புத்தரும் அவர் தம்மமும்’ நூலிலும் கூடபுத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருப்பதைக் காணலாம்.” என ராஜதுரை எழுதியிருக்கிறார். 
 
அவர் குறிப்பிட்ட அந்த கட்டுரையில்புத்தரும் அவர் தம்மமும் நூலில் அம்பேத்கர் அப்பணியைச் செய்திருக்கிறாரா என்று பாருங்கள். புத்தரை மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியை அம்பேத்கர் எந்த நூலில் எந்தக் கட்டுரையில் கூறினார் என்பதை நீங்களே படித்துப் பார்த்துக் கூறுங்கள். 
 
இடது பத்திரிக்கைக்கு எனது கேள்விகள்.
 
1.எஸ்.வி.ஆர்  ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச்  செய்த பங்களிப்புகள் என்ன?
 
2.மார்க்சிய அறிஞர் என்ற வரையறைக்கு இடது இதழ் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?
 
3.மொழிபெயர்ப்புகளே மார்க்சியத்துக்கு அறிஞராக மாறும் தன்மையைக் கொண்டதாகிவிடுமா?
 
4. ஞானி சொல்லிவிட்டார் என்றால் அதை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டு,   அந்த பட்டத்தின் கீழ் இடது ஆசிரியர் குழு அவரை மார்க்சிய அறிஞராக கருதுகிறதா?
 
சிறுகுறிப்புஎஸ்.வி. ராஜதுரை அவர்களின் மார்க்சிய ஈடுபாட்டை நானறிவேன். அவரது பணிகளையும் நான் மதிக்கிறேன். அதே சமயம் அவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்வது மார்க்சிய அறிஞர்களை கொச்சைப்படுத்த வாய்ப்பளிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் சிறிது நாட்கள் சென்றால் கோவை ஞானிஎஸ்.என்.நாகராசன்அ.மார்க்ஸ்எஸ்.ஏ.பெருமாள் (இவரை மார்க்சிய அறிஞர் என அவரது கட்சியே சொல்கிறதுஅதோடு இவர் கேரளாவில் பிறந்திருந்தால்   மாஷே’ என்றும்பெருமாள் மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவார் என தமிழ்ச்செல்வனே சொல்லிவிட்டார். இந்த மாஷே கேமரா ரீடிங் பற்றி எழுதிய தத்துவ முத்துக்களையும் நீங்கள் அவரது நூல்களில் காணலாம். எல்லாம் தமிழக மார்க்சியர்களின் தலையெழுத்து!)இவர்களும் மார்க்சிய அறிஞர்களாகிவிடுவார்கள். 
 
 இப்படிப்பட்ட மார்க்சிய அறிஞர்கள்முகநூலில் தோழர் ரங்கநாயகம்மாவுக்குச் சூட்டிய பட்டங்கள்மற்றும் சில அறிவார்ந்த விமர்சனங்களில் சிலவற்றை ஒரு பார்வைக்காக கீழே வைக்கிறேன். அது நிலவி வரும் விமர்சன அறிவுச் சூழலைஉங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தும் வல்லமை கொண்டவையாக இருக்கும் என நம்புகிறேன்.
 
ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கருக்கு செருப்பு மாலை  போட்டிருக்கிறதுரங்கநாயகம்மாவின் நூல் நரகல். ரங்கநாயகம்மா ஒரு மார்க்சியப் பொறுக்கிசெறுப்பால் அடிப்போம்வன்கொடுமை சட்டத்தின் மூலமாக மிரட்டல்ஆதிக்க சாதி,  என்.ஜி.ஓ.புத்தகம் மூலம் நிறைய பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார்கள்டெல்டும்டே தலித் காவலன்னு கம்பு சுத்தினார்இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுது ஏன் வரவேண்டும்மொழிபெயர்ப்பைத் தவிர்த்திருக்கலாம்மார்க்ஸ் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்பரிதாபத்திற்குரிய மார்க்ஸ்,மார்க்ஸ் தேவையில்லைமார்க்ஸ்க்குப் பின்னாடி வந்த அத்தனை பேரும் தேவை,  ரங்கநாயகம்மா ஒரு காலம்னிஸ்ட்ரங்கநாயகம்மாவுக்கு மார்க்சியம் தெரியாதுஎலும்புக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற்போல் இருக்கிறதுகாழ்ப்புணர்ச்சி கொண்ட எழுத்துக்கள்அபத்தமான நூல்,  மார்க்ஸியத்தோட சாரம்சத்தை மார்க்ஸ்க்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டார்,கள்ள மௌனம் காக்கிறார்கள்முட்டாள்தனமாய் எழுதப்பட்ட புத்தகம்ரங்கநாயகம்மா ஒரு பூனைமொழிபெயர்க்கத் தகுதி இல்லாத புத்தகம்தத்துவப் பரதேசிகள்மண்டை சூம்பிப்போய் கண்டபடி உளறுபவர்கள்ரங்கநாயகம்மா ஒரு குகை மார்க்சியர். அந்த நூலை யாருமே பொருட்படுத்தவில்லை,தேர்ட் ரைட் பாலிமிக்ஸ்கம்யுனிஸ்ட் என்றதும் வரலாற்று பொருள் முதல்வாதம்இயங்கியல் பொருள் முதல்வாதம் என்று சொல்லி, 'வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் தோய்த்துஎழுதுவார்களே அப்படியொரு பழைய கபாலி எழுத்து இதுமுற்றிலும் காலாவதியான நூல்,ரங்கநாயகம்மா நூலைப் படித்தால் ரத்தம் கக்கி சாவான்ரங்கநாயகம்மா யாருக்கோ வப்பாட்டி.
 
தோழர்களே... மார்க்சியத்துக்கு தமிழகத்தில் பல அறிஞர்கள் தேவைப்படும் சூழல் இங்கு நிலவுகிறது அதை நாம் வரவேற்போம். ஆனால் அதற்காகமார்க்சியத்துக்கு அறிஞராக எந்தப் பங்களிப்பையும் செய்யாதுதன் மனம் போன போக்கில் அந்நியமாதல்இருத்தலியம்,சார்த்தரியம்வைணவ மார்க்சியம்மேலை மார்க்சியம்கீழை மார்க்சியம்மண்ணுக்கேற்ற மார்க்சியம்தேசத்துக்கு ஏற்ற மார்க்சியம்நாட்டுக்கேத்த மார்க்சியம்தெருவுக்கேற்ற மார்க்சியம்பின்நவீனத்துவ மார்க்சியம்என்று வகைபிரிப்பவர்களை எல்லாம் மார்க்சிய அறிஞர் என்றால் அது மார்க்சியத்துக்கே கேட்டை உண்டாக்கும் என்பதை நினைவு படுத்துகிறேன்.
 
நன்றி
வசுமித்ர
 
11- 26 -2016 அன்று இக்கடிதத்தை இடது பத்திரிக்கைக்கு அனுப்பினேன். 
 
Jun 302017 அன்றுவிமர்சனத்தை வெளியிட்டீர்களா என்று தோழர் கணகுறிஞ்சிக்கு பதில் கேட்டிருந்தேன். பதில் வரவில்லை. பின் இடது இதழைக் கண்டதும் எனது விமர்சனம் வெளிவராதது கண்டு தோழர் ஓடை பொ.துரையரசனை செல்லில் அழைத்துகடிதத்தை வெளியிட விருப்பமில்லையா எனக் கேட்டதற்குஅந்த நூலுக்கு ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!) விமர்சனக் கூட்டம் நடத்தி அதன் பின் வரும் விமர்சனங்களோடு எனது விமர்சனத்தையும் இணைத்து வெளியிடுவதாகச் சொன்னார். கூட்டம் நடந்தபாடில்லைஅதற்கு மேலாக நான் இடது தலையங்கம் குறித்துதான் என் கேள்வியை கடிதத்தின் வாயிலாக வைத்தேன். கடிதம் வராமலேயே போகும் வாய்ப்பு இருப்பதால் இங்கு பொதுவெளியில் முன்வைக்கிறேன்.
 
 
பின்குறிப்பு;
 
இந்து கலாச்சாரக் காவலர்களுக்கு சற்றும் சளைக்காத புரட்சிகர வசைகளை எழுதிய தமுஎகச தோழர்கள்மார்க்சிய அறிஞர்கள்நவீன பௌத்த பிக்குணிகள்தலித்திய அம்பேத்கரிய அறிஞர்கள் குறித்து நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ரங்கநாயகம்மா புத்தகத்திற்குப் பின் இவர்கள் அடைந்த பதட்டங்கள்அச்ச உணர்ச்சிகளின் உளவியல் குறித்து தனியே எழுத வேண்டும் என்கிற ஆவல் உள்ளது.
 
 
---- 
( மீள்)
 
இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தை தனியாருக்குத் தாரை வார்க்க தனது உளவு வேலையைச் செய்திருக்கிறார் ராஜதுரை. மார்க்சிய அறிஞர்மார்க்சியப் பேரறிஞர் என்று கூவியவர்கள் எல்லாம் கூவிய வாயால் எங்கு என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் பூஜ்யம்.
 
தனக்கென்று எந்த அடையாளமில்லாது அலையும் சிலர்தங்களது அடையாளத் தேவைக்காக அமைப்பைப் பயன்படுத்தி சாதிச்சங்கம்-மதவாத அமைப்புகளுக்குள் ஒளிந்துகொண்டு தங்களது அறியாமையை படைப்புகள் என பந்தி விரிக்கும் வரை இது நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாது.
 
உரையாடல் தொடரும்...
 
-               வசுமித்ர

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...