Saturday, February 19, 2011
இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்.
Tuesday, February 8, 2011
தேகம் - நாவல்* விமர்சனம்.
Thursday, December 2, 2010
நந்தலாலா: இலக்கியவாதிகளின் அம்மணத்தைக் கூவிச் சொல்லும் குழந்தை.
Monday, November 29, 2010
நந்தலாலா : தாய்மைச் சுமை

படம் முடிவடைகிறது.
என்னால் இசை பற்றிப் பேசமுடியுமென்றால் அது இளையராஜாவைத் தவிர்த்து பேசமுடியாத காரியம். அவரின் ரசிகன் நான். ஆனால் இந்தப்பட்த்தில் அவர் செய்திருப்பது இசை அல்ல. வந்தேன் பேர்வழி போனேன் பேர்வழி. அவ்வளவே. அவர் இசையமைத்து முழுமனதுடன் நான் வெறுத்த இசையமைப்பாய் இப்படத்தையே காரணம் காட்டுவேன். (பரதன் இயக்கிய ஆவாரம் பூ திரைப்படத்தின் அறிமுகப்பாடலும் தளபதி பட்த்தின் கதை நாயகன் அம்மாவைப் பார்த்ததும் வரும் பின்னணி இசையையும் நினைத்து நானே என்னைத் தேற்றிக் கொண்டேன்)
Monday, October 4, 2010
ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள். ராஜன் கொலை வழக்கு.

- தஸ்தயேவ்ஸ்கி
மகனை அரசுக்கு பறிகொடுத்து, காணமுடியாது பதறி, உண்மையில் மகன் என்னவானான்...எனத் தேடி ,கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் பரபரப்பும் மகிழ்ச்சியுமாய் அலைந்து, ரகசியங்களால் ஓய்ந்து, இறுதியில் தன் மகன் அரசால் கொல்லப்பட்டான் என்றறிந்து, அவனுடலின் ஒரு துளிச்சாம்பல் கூட கரைக்கக் கிடைக்காது வீறிட்டலறும் குரலுடனும், தன் மகனைக் காக்கமுடியாத இயலாமையால் ஆன்மாவின் குற்றவுணர்ச்சிக்கு பதில் சொல்லமுடியாத துக்கத்திலும் தன் மகனின் இழப்பை பதிவு செய்திருக்கிறார். டி.வி. ஈச்சரவாரியர்.
இந்நுலின் வார்த்தைகளை நம்மிடம் வைப்பதற்காக அவர் கூறிச்செல்லுகிறார்
‘என்னிடம் அழுது தீர்ப்பதற்கான கண்ணீர் இன்னும் மிச்சமிருக்கிறது. உயிரின் துடிப்புகள் இன்னும் இந்த பலவீனமான உடலில் மீதமுண்டு. அதனால்தான் இதையெல்லாம் எழுத்த் தோன்றியது. நான் மனவருத்தம் கொள்ளச் செய்திருப்பதாக யாராவது நினைத்தால் சாபமேற்ற இந்தத் தகப்பனை பொறுத்துக்கொள்ள வேண்டும்.’
தொடர்ந்து
தன் மகனை பூட்ஸ் கால்களால் அதிகாரத்தின் மமதையும் அதனால் விளைந்த திமிராலும், ஆணவத்தாலும் தன் மகனை எத்திக்கொன்ற காவல் துறை ஆய்வாளாரான புலிகோடனைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஏற்படும் தன் மனதின் குரலை....
”டெலிவிஷனில் புலிகோடன் நாராயணனின் உருவத்தைப் பார்க்கும் போது, தெளிவான கருத்துக்களுடன் முறுக்கி விடப்பட்ட மீசையைத் திருகியபடி அவர் பேசும் தோரணையைப் பார்க்கும் போது மனதுக்குள் மின்னல்போல் ஒரு பகையுணர்வு தோன்றுவதுண்டு. என் மகனுக்கு நேரிட்ட அந்த துர்லபமான நிமிடங்கள் அப்போது என் மனதில் அலையடித்து மேலெழும். மனம் என்னையறியாமலேயே ஒரு கோபத்துடன் இழப்புகளைக் குறித்து கணக்கெடுப்பு நடத்தும். மறந்து விட்ட்தாக நினைத்துக்கொண்டிருப்பவை அதிகமாக மனதிற்குள் எழும்.”
அரசு தன்னைத் தானே தின்று வளர்வதோடு மட்டுமில்லாது குடிகளின் உதிரத்தை அதிகார நாக்கால் உறிஞ்சும் அதன் ரத்தவெறியை மகனை இழந்த தகப்பன் பதிவு செய்திருக்கிறார். நாம் இன்னும் இந்தப் பூமியில் வசந்த்த்தை நோக்கியும், வாழ்வதற்கான கனவுகள் வரவேண்டி துயிலுக்காகவும் காத்திருக்கிறோம்.
நீதி தன் கால்களில் அணிந்திருக்கும் கனத்த பூட்ஸ்களால் அப்பாவிகளின் விரைகளை நசுக்கும்போது.....பார்வையாளனாய் இருக்கும் மனநிலையையை நானே என் மீது காறியுமிழ வேண்டியிருக்கிறது.
இலக்கியம் செய்யவேண்டிய தார்மீகப் பதிவென இந்நூலைத்தான் நான் கூறுவேன்.
ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்
பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர்.(மலையாளம்)
தமிழில்; குளச்சல் முகமது யூசுப்.
காலச்சுவடு வெளீயீடு
விலை. 100
Monday, September 13, 2010
அம்மணமானவர்களுக்கு அந்தரங்கம் தேவையில்லை...

குற்றவாளிகளை கைது செய்யலாம்
முறுக்கிய கயிற்றில் அவர்களின் துரோகத்தை எழுதி தூக்கிலிடலாம்
வழியும் கண்ணீரை தூயகைகளால் ஏந்திப்பிடிக்கலாம்
நொறுங்கும் எலும்புகள் புகைய எரியூட்டலாம்
சிதைத்தீயை பாவ நதியால் நனைத்து
அஸ்தி கரைக்கலாம்
நண்பர்களே...
மாறாய்
ஒரு குற்றத்தை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த
நல்லவனின் முகமூடியை கிழித்தெறிய
நீங்கள்
கடவுளாகவேண்டும்
வலதுகையில் உலகை அழிக்க வல்லமை கொண்ட ஆயுதம் வேண்டும்
இடது கையில் குருதியேந்த திருவோடு வேண்டும்...
எல்லாவற்றையும் விட குற்றங்கள் என்ற பதமுடைய வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்கவேண்டும்
துரோகத்தின் மணத்தை உள்நாக்கால் இழுத்து நுரையிரலை நிரப்பியிருக்கவேண்டும்
ஆம்...
நீங்கள் உங்களுக்கெதிராய் முதலில்
புகார் செய்யவேண்டும்
உங்களிடமே
ஈவுஇரக்கமற்று...
கண்ணீர் சிந்தாது.
Saturday, June 19, 2010
காமத்துப்பால் 2

23
வண்ணத்துப்பூச்சிகள்
சபிக்கும் இவ்விரவை
தனிமையின் பெருந்துயர் பற்றி என்மொழியில்
உனக்கொரு கவியெழுத பயன்படுத்துவேன்
அது தன்
இறக்கைகளை அடித்துக்கொண்டு
நிறமற்ற
என் காமத்தின் அனாதைதனத்தை
மொழிபெயர்க்கும்.
24
மின்னும்
இருமுலை நோக்கி
பின்னும்
இரு கண்கள்
நிதம்பமதிர
ஒளிப்பறை கொட்டும் சூரியன்
வெந்துருகும் விரல்களை உதறி
ஆவியெனத்தழுவ
என்முகத்தில்
மின்னும் இருமுலை நோக்கி
பின்னும் இரு கண்கள்
25
வானத்தைத் தானமிடும் கரங்கள் உனக்கு
சகி
ஆகாயம் பார்க்க ஒருமுறை
புணர்ந்தால் என்ன
அதன் விழிநீரை
மழைநீரென
என்னால் மொழிபெயர்க்க இயலாது
26
மழைக்கால
தானம் வேண்டி கரங்கள் நீட்ட
உள்ளங்கைக் கடுங்குளிரில்
பதிக்கிறாய்
நிதம்பவெப்பத்தை
என் கண்ணே...
27
வெப்பம் இளகும்
முன்னொரு கடும்பொழுதில்
என்னுடலை மொழிபெயர்க்க
வந்து விழுகிறது
உன்
அந்தரங்கச்சொற்கள்.
28
காமம் மிகு இரவில்
வானம்
தன்
ஒளியணைய
என்விழியில் மலர்வது
கண்ணே...
உன் யோனி
வெட்கம் தரையில் சிந்த
உன்னிதழில் மலர்வது
யென்குறி.
29
நிதம்பத்தை ஆகாயாத்தில் அழுத்தியுன் உறுதி தந்தாய்
மண்ணில் குறி பதித்து
என் உறுதி நான் தந்தேன்
நாமிருவர் புணர்கையில்
நம்மை வேவு பார்த்தது யார்.
30
உனதுடலின்
கூட்டுத்தொகை
புணர்ந்த வெளிச்சம்
எனதுடலின் கூட்டுத்தொகை
களைப்பின் இருள்.

31
ஒருமுறை
கோபத்தில் உனை நீயும்
கடுங்கோபத்தில்
எனை நானும் புணர்வதாய் சத்தியம் செய்தோம்
உரசிய கைகளில்
பற்றிய வெப்பத்தை
நாம் மீறி
நாமே புணர்ந்தணைத்தோம்.
32
ஒரு
காட்டைத்தணிக்கும்
காற்றைக் கண்டு
கைகொட்டிச் சிரித்தாய்
காடறியும் கண்ணே
புணர்ச்சியில்
நீ
கண்மூடும் பேரழகை.
33
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
கையளித்த
பீஜமும்
யோனியும்
கல்லறையில் கண்மூடி
தியானத்திலிருக்கின்றன
தோழி
வா
நாம் புணர்வோம்
இன்னொரு கல்லறை தேடி.
34
புணர்ச்சியில் பெருகும் வார்த்தைகளை
தனித்தனியே
எழுதிப்பார்த்தோம்
நல்லது....
நாம் புணரவே செய்திருக்கிறோம்.
35
இறப்பில் சுருங்கியும்
பிறப்பில் விரிவும்
கொள்ளும் கண்கள்
புணர்ச்சியில் தன்னை மறந்து
மூடிக்கொள்கின்றன.
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை” ரூமி வ சு மி த் ர “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...
-
அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...
-
அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவரு...
-
சு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...
-
கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...
-
இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...
-
நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...
-
இலக்கியம், அகந்தையை வளர்க்க உதவி செய்யும் ஒரு கருவி என்றால் அதை என் காலில் போட்டு மிதிக்கவே விரும்புகிறேன். வணக்கம் நண்பர்...
-
“தன்னெஞ்சறிவது பொய்யற்க” தமுஎகச தேனியில் வைத்து எஸ் வி ராஜதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதானையாளர் விருதை வழங்கியது. ராஜதுரை...
