Thursday, March 29, 2012

ஆழிப்பெருங்காட்டிலலையும் அடிமையின் நியுத முத்தங்கள்.





மயக்கத்தின் மாயமுயக்கத்தின் மூச்சிலொருவணங்கு
வெண்சடையுதறிச்  சீவனைப் பிழிந்தெடுக்குமொரு
சீல நதி
குருதியுள் ஆடும் பைசாச புத்ரியின்
எழிலவதனச் சுருக்கம் நீக்கியதில்
பிழையற்ற பிரபஞ்சப் புதிரசைத்த தர்மகீர்த்தியேடுகளில்
நாகார்ஜுன இளிவரல் நகைத்து
பௌத்த தூமணிகள்
திரிபீடக குதிரையேறி மழித்த தலை காற்றில் மேவ 
பயணஞ்செய் புத்த விகாரை
யாசோதாவெனும் வனைருளில் வெளிச்சமெனவொன்றைத் தேடி
இருளுக்குள்
பேயிருளுக்குள்
விழி அகற்றி வெண்பா அசையா கைக்கோல் கொண்டொருவன் ஓடுகிறான் ஹே புத்தா
யசோதரைஇயிருளிதுவெனனின்கனவொன்றிலுதித்தவொருபேக்காடு
காம்பீரியமதில் காமக்கோட்டி செலுத்தும் பாய்மரப்படகெனவானதுகான் என் நிதம்பச்சுற்று
பட்டுத்தொழில்கைக்குட்டையிலது கார்ப்பாசம் வெடித்தலையும் நியுத முத்தங்களூனக்கு
உவா நடைபோலனதொரு என் பித்தஞ்ச்செய் கனவுகளில் உழுபடையெனக் கிளர்த்தெழுந்தாய்
மோகத்தைச் சாறாக்கி குருதியை தூரிகைதொட்டு எழுதினாயென் காமத்தில் முதல்வரி
சாக்காட்டில் சுடலை பார்
கதறட்டும் உன் காமம் எழுதிசைக்கும்
அழிஞ்சில் குறியெனநின் காமம் செங்கழுநீர் துயரம்
ஊதம்பயிலமங்குசமிழக்க தெருவெழிய பீஜம்காட்டி அலையும் பாகனொரு உள்ளத்தில் பித்தலைத்து படர்கிரது அங்குச கனவுகள்
ஊமன்விழியிருளில் வெட்கும் வெளிச்சம்தனையிலக்கங்குறிதற்கிடுங்குறியென பாயுதென் பிழையெனும் நதி
நியோகமிதுகாணென
சிபந்நம் மர நிழலில்
கூந்தலுலர்த்தி அலையுமொரு வனக்கிறுக்கியானவென் காதலி
இது கேள்
நிரியாணம் யான் வேண்டேன்
நின் செஞ்ச்சுடர் காலில் ஒரு குறிகண்டேன்
நிதம்பச் சூழ்
மயக்கம்
லிங்கம் சிதறிவெடிக்குமொரு ஏகாந்தம்
தென்றல்துளையிட்டூதிய மெல்லிய விசிறல்
பித்தத்தைக்கரைத்துக்குடிக்குமென் செங்கணல் விழிகள்
கேள் கண்னே ரசவாதமென ஒரு மாயத்தை
உடலெங்குமேற்றியதை நிரந்தரித்தேன்

சாவெனக்குத்தூரமென்பேன்
அருகிலுன்னிழல்குடித்து மயங்கும் சிறுவன் யாம்.


No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...