வணக்கம் நேசமித்திரன்....
எனது நேரடியான மடல் இது.
ஏதோ நான் உங்கள் படைப்புகளை விமர்சித்ததன் வாயிலாக தாங்கள் உற்சாகம் கொண்டு ஒரு கவிதையை எனக்கு விமர்சன சூசகமாய் அனுப்பியிருந்தீர்கள். என் அன்பு உங்களுக்கு. நேசமித்திரன்.... இன்றல்ல அன்றிலிருந்தே சொல்லித்தான் வருகிறேன். உங்களது எழுத்துக்கள் கோணங்கியின் ஒரு மட்டரகமான காப்பி. அழுத்திச் சொன்னால் கோணங்கி கழித்துப் போட்ட ஆகக் கடைசி குப்பை. இதைச் சொல்ல எனக்கு எந்த வருத்தமுமில்லை. இதை தனி மனிதராக உங்களை முன் வைத்துச் சொல்லவில்லை. இது உங்கள் படைப்புகள் குறித்தே. இதுவரை நீங்கள் சுயமாக எழுதி பொருட்படுத்தக் கூடிய இரு வரிகளைக்கூட நான் கண்டதில்லை. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. இந்த கவிதை போல் எழுதும் நாடகத்தை முடித்து வைக்கலாம். எனக்கு அதை போலியாய் செய்யக் கூட அறுவெறுப்பாய் இருக்கிறது.
இருந்தும் நீங்கள் இப்பொழுது எனை நோக்கி எழுதிய வசை சார் வரிகளில் மேற்கத்திய எழுத்தாளர்களின் பெயர்களை ஒப்பிக்கவில்லை. அந்தளவுக்கு மகிழ்ச்சியே. வசை வரும்போது எளிய தமிழ் கைகூடுவது இன்னும் மகிழ்ச்சியான ஒன்று. என் படைப்புகள் குறித்து நான் விவாதிக்க தயாராய் இருக்கிறேன். உங்கள் படைப்புகள் குறித்து விவாதிக்க என்னை அனுமதிக்கும் பட்சத்தில் மிகுந்த சித்த சுவாதீனத்தோடு உரையாடுவேன். நீங்கள் நடத்தும் வலசை உட்பட கல்குதிரையின் இன்னொரு ஒட்டு வாலாய் இருப்பது நான் ஏற்கனவே சொல்லியதே. அதில் தலையங்கம் கூட கோணங்கியின் வெட்டியெறியப்பட்ட நகமாய் இருப்பது இன்னும் ஆபாசம். ஒரு தலையங்கத்தைக் கூட கோணங்கியின் வரிகளோடு ஒப்பிப்பதென்பது அளவு கூடிய வருத்தத்தைத் தருகிறது. இன்னும் ஒன்று உண்மையில் கோணங்கியின் அடிப்பொடி என்பது கோணங்கியின் வாசகனாக உங்களை முன் வைக்கவில்லை. கோணங்கியை நான் வாசித்தவன் என வெறும் அரட்டைகளோடு அவரின் நட்பை தாங்கள் சார்ந்த நிரூபித்தலுக்கு சாட்சியாய் வைத்து மட்டுமே செய்கிறீர்கள்.. கோணங்கி குறித்தும் நாம் பேசலாம்.
கொலை தற்கொலையியல் குறித்து நான் உங்களைச் சந்திக்கும் முன்னேயிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே நீங்கள் என்னைக் கொலை..... செய்த புத்தகம் வெளி வந்த ஆண்டை நீங்கள் நோக்கலாம். மேலும் வெளி வரும் முன்னே அது 5 வருடங்களாய் கையெழுத்துப் பிரதியாகத்தான் என்னிடம் இருந்தது. உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன். இதையும் விவாதிக்கலாம். என் கவிதைகளை நீங்கள் புகழ்ந்து பேசியபோது இந்த சாவு கொலை இதுவெல்லாம் உறுத்தவில்லை. உங்களை கோணங்கியின் விசிலடிச்சான் குஞ்சென்றதும் எல்லாம் விமர்சனத்துக்கு வருகிறது. என் கவிதைகளில் இசையும் விறைப்பும் கண்ட நீங்கள் இப்பொழுது விமர்சித்ததும் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. “என்னவோ ஒரு இசைத்தன்மையும் விறைப்பும் இந்த வரிகளில்” இது என் கவிதைகள் குறித்து நீங்கள் உளறியதுதான். ஞாபகமிருக்கும் என நினைக்கிறேன்.
நல்லது நேசமித்திரன்... என் கவிதைகள் குறித்து உங்களது விமர்சனத்தை அறிய ஆவலாய் உள்ளேன். வேண்டுமென்றால் விலாசம் அனுப்புங்கள். தொகுதிகளை அனுப்பி வைக்கிறேன்.
மேலும் புத்தனின் சுயமைதுனத்தைப் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். எனக்கு மிக ஆபாசமாகத் தோன்றுவது இதுதான் நேசமித்திரன். ஒரு வசை கவிதையைக் கூட சொந்தமாக யோசிக்க முடியாத மூளை மிகவும் சிரமப்படுத்துகிறது. மேலும் நான் புத்தனின் மதுக்குடுவை குறித்துஉங்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். தொலபேசியில் அப்பொழுது நீங்கள் அடைந்த உற்சாகம் சொல்லி மாளமுடியாதது. அது எங்கு கடன் வாங்கப்பட்டது, அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்டது என, என் கவிதைகளிலிருந்தோ... என் படைப்புகளிலிருந்தோ ஒரு இரண்டு வரியை சுட்டினால் நான் எழுத்துப் பணியை விட்டு விலகுகிறேன். ஆனால் இதே வாய்ப்பை உங்கள் படைப்புகளின் வாயிலாக எனக்கு நீங்கள் தரவேண்டும், என நம்புகிறேன்.
எனக்குத் தெரிந்து என்னிடம் பௌத்தம் குறித்து கற்றுக்கொள்ள உங்களுக்கு நிறைய இருக்கிறது. உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வரி கூட இல்லை.மேற்கண்ட கூற்று என்னுடையதல்ல. இதுவும் தங்களுடையதே. இது நீங்களாக சொன்ன கூற்றுதான். எல்லாவற்றையும் பேசத் தயாராய் இருக்கிறேன். விவாதிக்கலாம். என் படைப்புகள் உட்பட.
மேலும் கோணங்கியைக் கண்டால் நேரில் மதுவருந்திய பற்களோடு இளித்து விட்டு பின்னால் பொறணிகளை முன் வைப்பவன் நானல்ல. நீங்கள் வைத்த இளிப்புகளையும் எழுதுகிறேன். பேசலாம்.
இதையும் ஒரு செய்தியாகவே கூறுகிறேன். பௌத்தம் குறித்தும் கவிதை குறித்தும் நேரடியாக உரையாட நாள் குறியுங்கள். நீங்கள் மேற்கண்ட உங்கள் வசையில் குறித்த நீட்ஷேவையும் சேர்த்து பேச காத்திருக்கிறேன்....
ஏனெனில் பௌத்தம் குறித்து ஓரு எளிய அளவுக்குத் தெரிந்த நான் உங்களுக்கு இதையும் சுட்டுவது வருத்தமாக இருக்கலாம்...ஏனென்றால் இரண்டாயிர வருட தமிழ் இலக்கியத்தில் பௌத்தம்தான் உரையாடலையும் வாதிடலையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறது...அறிந்திருப்பீர்கள்...வாதிடவும் விவாதிக்கவும் மிகுந்த அன்புடன் காத்திருக்கிறேன்....
கூடிய விரைவில் ஒரு நாளைக் குறிக்கும் பட்சத்தில் வசதியாய் இருக்கும்.
வணக்கம் வசுமித்ர !தங்கள் சொற்களுக்கும் அழைப்புக்கும் நன்றி .உங்களோடு பேச நேரம் இருக்கும்போது நிச்சயம் அறிவிக்கிறேன்.அதுவரைக்கும் உங்களுக்கு என் அன்பு !
ReplyDeleteநிச்சயமாக நேசமித்திரன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteகுறைந்த பட்சம் ஒரு 6 மாத காலம் ஆகுமா...
சொன்னால் மகிழ்வேன்...எனக்கும் வேலை இருக்குமல்லவா...