“ விடியலின் வலிமை அது
வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்திய தத்துவ மரபில்
நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ முதல் சமீபத்தில்
வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை
மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள்
பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான்
சொல்லலாமில்லையா? ”
- ஜெயமோகன்
ஜெயமோகன் உங்களின் நினைவுப்பிழை
எந்தளவுக்கு முட்டாள்த்தனமானது என்பதை என் நினைவில் இருந்து சொல்கிறேன். உங்களது
காரியக் கிறுக்கிற்கு உதவி செய்யும் முட்டாள்தனங்களையும், வக்ரத்தின் அடிப்பூச்சுக்களையும் தொடர்ச்சியாக அறிந்த எனக்கு எந்த நினைவுப் பிழையும் கிடையாது.
உங்களது விஷ்ணுபுரம் எனும் நூலை
குறைந்தபட்சம் 7 முறை வாசித்தவன் நான். ஒரு மிகப்பெரிய உழைப்பை சாதாரணமாக
எண்ணிவிடக்கூடாது என்ற என் நினைவு எனக்கு 22 களிலேயே வயதிலேயே இருந்தது. இப்பொழுது
எனக்கு 33 வயது. அன்பரே உங்களைச் சந்தித்த போது விடைத்த காதுடன் எனக்கு உளுந்தவடை
உபசரிப்புடன் தேநீரும் அளித்து மூன்று நாள் என்னுடன் தங்கி உரையாடுவோமா எனக்
கேட்டவர் நீங்கள். உங்களை சென்னை நோக்கி தொலைக்காட்சி தொடருக்கு வசனம்
எழுதுவீர்களா எனக் கேட்டதும் நான்தான். இன்று நீங்கள் நிற்கும் இடம் உங்கள்
உழைப்பினால் மட்டுமென்றால் நேரிடையாகக் கேட்கிறேன். அதற்குள் சதிகளே இல்லையா.
டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தூய யேசுகள் தேவ குமாரர்கள் என அரிப்பெடுத்து
வசனங்களை நூல்களாக எழுதி வரும் நீங்கள், அவர்கள் அறம் என எதைக்
கூறுகிறார்கள் என ஒரு முறையாவது யோசித்ததுண்டா...
உங்களை தூக்கிச் சுமந்த தமிழினி
வசந்தகுமாரிடம் நீங்கள் விடியல் பற்றிக் கேட்டிருந்தால் அவர்
சொல்லிய்டிருப்பாரே. அறிவு கெட்டுப் போனதோடு நாறி, இந்த்துவத்துப் புழுக்களை நிரப்பிக்
கொண்டு அலையும் உமது மூளையில், நினைவு என்பது சார்பும், காசும் உள்ளவரை தானே
அய்யா. இதற்கு நாஞ்சில் நாடனும் வேறு வேலை
பார்த்துக் கொடுக்கிறார்.
நிற்க. விஷ்ணுபுரத்தை களவாட நீங்கள் ஒட்டுமொத்தமாக தமிழில் பயன்படுத்திய நூலின் தலைப்பையே தப்பும் தவறுமாக சொல்லியிருக்கிறீர்கள். அதன் தலைப்பு இதுதான். இந்தியத்
தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும். அந்த நூலை விடியல் பதிப்பிக்கவில்லை.
பதிப்பித்தது சென்னை புக்ஸ். பொ.வேல்சாமி தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆவலில் கரிச்சான் குஞ்சுவின் கண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தியம் செய்து
மொழியாக்கம் செய்து பதிப்பிக்கப் பட்ட நூல் அது. எல்லாவற்றையும் மறக்கும் உமக்கு
எத்தனை ஞாபகப் பிழை என தெளிவாக நீங்கள் சொல்லலாம். மேலும் உங்களது ஞாபகப் பிழை விடியல்
சிவாவின் எத்தனை வருட உழைப்பை கேலி செய்கிறது தெரியுமா உங்களுக்கு. தான் திருடி
பிறறையும் நம்பமாட்டான் என்பதற்கு நீங்கள் முழு உதாரணம்.
உங்களைத் தாங்கி நிற்கும் தமிழினி
வசந்தகுமார், மற்றும் நுண்மான் நுழைபுல நாஞ்சில் நாடன், இப்பொழுது குப்பைகளை
மறுபதிப்பு செய்யும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர்கள்....உங்களுக்கு இவ்விசயத்தில்
நண்பர்களாக இல்லாமல் இடது சாரியாக அவர் பதில் எழுத வேண்டுமென்று
எதிர்பார்க்கிறேன்.
அதோடு தமிழினியின் வலிமை, இளமை,
குறைந்தபட்ச நேர்மை, இன்னும் பல மைகளையும், பின் உயிர்மைகளையும், கிழக்குப்
பதிப்பகத்தின் வலிமைகளையும் கவிதா பதிப்பகத்தின் பணமை....... நாம் பேசலாம்.
நீங்கள் சொன்னபடி விடியல் பதிப்பகம் வெளியிட்ட
நூல்களுக்காக சிவா பெருமிதப்படவேண்டும், இது உண்மைதான். சிவா வேறு விடியல் வேறல்ல.
ஆனால் நீங்கள் பெருமைப்பட பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பாதங்களும் இன்னும் எண்ணற்ற
நாற்றமெடுத்த வார்த்தைகளும் உள்ளது. இதை உங்களை வாசித்த ஒரு வாசகனாகத்தான்
எழுதுகிறேன். ஒரு வாசகனாக அதை எழுத உங்களுக்கு உரிமை இருப்பது போல் தமிழினியையும்
உயிர்மையையும் கிழக்கையும் ஒரு வாசகனாக கேள்வி கேட்பதற்கு எனக்கு உரிமை
இருக்கிறது.
வாசகனாக
வசுமித்ர
சிறு குறிப்பு; விடியலில் வெளிவந்த மொழியாக்கங்கள் தாண்டி அது
வெளியிட்ட உள்ளூர் படைப்பாளிகளின் ஆக்கங்கள் குறித்து நான் பேசுவதற்காக
காத்திருக்கிறேன். அதைவிட இன்னும் விரிவாக. உள்ளூர் படைப்பாளிகளுக்கு சொறிந்து
கொடுக்கும் பதிப்பகங்கள் குறித்தும் நாம் பேசலாம் ஜெயமோகன்.