Saturday, September 13, 2014

விடியல் பதிப்பகத்தின் மோசடி.



விடியல் டிரஸ்ட், மற்றும் விடியல் பதிப்பகத்தின் மோசடி குறித்த ஓர் அறிவிப்பு.

வணக்கம்,

குறளி ஒரு சிற்றிதழாகத் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதை ஒரு பதிப்பகமாக முன்னெடுக்கும் வேலைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டப் பணியாக தோழர்கள் எஸ். பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ள சிலப் புத்தகங்களை பதிப்பிப்பது எனும் முடிவெடுத்தோம். எஸ். பாலச்சந்திரனும், கோவிந்தசாமியும் மொழிபெயர்த்து தற்போதைய அளவில் 2014 ல் குறளி வெளியீடாக , முதற்கட்டமாக வெளிவரும் புத்தகங்கள்:

பெட்ரோ பராமோ
எரியும் சமவெளி
ஜோதி ராவ் பூலே
முமியா சிறையும் வாழ்வும்
சூரியனைத் தொடரும் காற்று
இந்தியா; காலத்தை எதிர்நோக்கி
பாட்ரிஸ் லுமும்பா அரசியல் சிந்தனைகள்
போர் தொடர்கிறது
தெபாகா எழுச்சி
லுமும்பா இறுதி நாட்கள்
மார்டின் லுதர் கிங்,

ஆகிய 11 புத்தகங்கள் அக்டோபர் இறுதியில் வெளிவருகிறது. இது தவிர எஸ். பாலச்சந்திரன், வெ.கோவிந்தசாமி இவர்களது  மற்ற புத்தங்களுக்குமான உரிமையும் குறளி பதிப்பகத்திடம் உள்ளது.

தோழர்கள் இருவரும் புத்தக உரிமையை எங்களுக்கு வழங்கும்போது ஒரு  பைசா கூட பெறாமல் அவ்வுரிமங்களை எங்களுக்கு வழங்கினர். எங்களுக்கு உரிமம் கொடுத்தது போக சில புத்தகங்களை எங்களுக்கு முன்னமே என்.சி.பி.எச்க்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் உரிமம் கொடுத்துள்ளனர். நிற்க.

மேற்சொன்னப் 11 புத்தகங்களையும் செழுமைப்படுத்தி வெளியிடும் பணியில் குறளி பதிப்பகம் ஏராளாமான பணத்தையும், காலத்தையும் செலவிட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை செய்து, புத்தகங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்களாமே…நல்லது… நாங்கள் பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி, இவ்விரண்டு நூல்களையும் விடியல் பதிப்பக வெளியீடாக கொண்டு வருகிறோம்  எனத் தகவல் சொன்னார்.  எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

விடியல் சிவா உயிரோடு இருந்த காலத்திலேயே அவரோடு பிணக்கு ஏற்பட்டு தோழர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும் விடியலில் இருந்து வெளியேறி இருந்தனர். விடியல் பதிப்பகத்திலிருந்து விலகியபோது தங்கள் படைப்புக்களை வெளியிடக் கூடாது என்று எழுத்து மூலமாக கடிதமும் அறிவிப்பு, கொடுத்திருந்தினர். எனவே சிவா உயிருடன் இருந்தவரை அவற்றை வெளியிடவில்லை. பின்னர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும், அவர்களின் அறத்திற்கும் கொள்கைகளுக்கும் ஒத்து வரும் பதிப்பக சூழல் இல்லாத நிலையில்,  தங்களது மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்வதை தவிர்த்து வந்தனர். இச்சூழலில் விடியல் சிவா இறந்து விட்டார். விடியலை டிரஸ்டாக சுவீகரித்துக் கொண்ட ‘முதலாளிகளின்’ போக்கு எங்களுக்கும் உறுத்தலாக இருந்து வந்த நிலையில், தோழர் கொற்றவை மொழிபெயர்த்த ரோசா லுக்சம்பர்க் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் போனது. இந்நிலையில் பாலச்சந்திரனை சந்திக்க நேர்ந்தது.

இப்படிப்பட்டச் சூழலில் நாமே ஏன் பதிப்பகம் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டு வரக்கூடாது எனும் பேச்சின் முடிவில் உதயமானதே குறளி பதிப்பகம். இதில் ராஜாராமின் போக்கு விடியல் டிரஸ்டி-முதலாளி ராஜாராமின் பதிப்பக அபகரிப்புத் தாண்டி, தோழர் சிவாவின் உறவினரும் தோழருமான கல்யாணி குறித்து அவர் பேசிய ஆணாதிக்க ஆபாசப் பேச்சுக்கள்  செய்திகளாக எங்களுக்கு வரவே, இனி விடியலோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம்.

பால் ஃப்ராலிச் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரோசா லுக்சம்பர்க் – அவரது வாழ்க்கையும், பணிகளும் எனும் புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். விடியலுக்கு அதைக் கொடுப்பதாக சிவா இருக்கும் போது முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவின் மறைவுக்குப் பின்னர், ராஜாராமின் ‘உண்மை’ குணங்கள் தெரிய வருவதற்கு முன் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை விடியலுக்கு மெயில் அனுப்பியிருந்தார் கொற்றவை. விடியல் ராஜாராம் மற்றும் ராமச்சந்திரனின் அதிகாரப் போக்கு பிடிக்காமல் போனதன் விளைவாக அப்பதிப்பகத்திற்கு தருவதாக இருந்த லுக்ஸம்பர்க் புத்தகத்தையும் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என முறைப்படி அறிவித்தார் கொற்றவை. மேலும் அப்புத்தகத்தில் ஆங்காங்கு திருகுவேலைகள் செய்யாதீர்கள் என்பதையும் சொன்னோம். எங்களது இந்த முடிவுக்கு விடியல் பதிப்பகத்தின் புத்தகவிற்பனையாளர் ராமச்சந்திரனின் அணுகுமுறையும் கூடுதல் காரணம். (அப்புத்தகத்தையும் அவர்கள் இதுபோல் திருகு வேலைகள் செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது)

பின்னணி இப்படி இருக்க, பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. யுவான் ரூல்ஃபோவின் படைப்புகளை செழுமைப்படுத்தி புதிய இணைப்புகளோடு வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று விடியல் டிரஸ்டி ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டையும் விடியல் பதிப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அது எப்படி முடியும் அதற்கான உரிமத்தை தோழர் பாலச்சந்திரன் குறளி பதிப்பகத்திற்கு வழங்கி இருக்கிறாரே என்றோம். அதற்கு விடியல் டிரஸ்டி ராஜாராம் அம்மொழிபெயர்ப்புக்கு பாலச்சந்திரன் உரிமை கோரமுடியாது என்று சொன்னதோடு அது ‘கூட்டு உழைப்பு’ என்றும், அது போல் பலவேலைகள் நடந்திருக்கிறது அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார். அதற்கு  நாங்கள் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றதும் ‘வேலைகள் முடிந்து விட்டது வரும் செவ்வாய் புதனில் புத்தகம் வெளி வரும்’, (வரும் செவ்வாய் புதன் 16.09.2014, 17தேதிகளில் வெளிவருகிறது) அவர் பேசினால் நாங்க சமாளிச்சுக்கிறோம் என தெரிவித்தார். பாலச்சந்திரனிடம் நாங்கள் பேசியபோது - அவர் இது ஒரு  முறையற்ற செயல், கயமைத்தனம் அயோக்கியத்தனம் எனக் கூறியதோடு தோழர் கோவிந்தசாமியிடம் கலந்தாலோசித்ததன் படி, வழக்குத் தொடருவதே சரியான வழி என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு மொழிபெயப்பாளர் ராஜாராம் சொன்ன வி.நடராஜ் அவர்களை பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மாதிரியான செயல் இது எனக் கேட்டதற்கு அவர் இவ்வேலையை கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) சொல்லித்தான் செய்கிறேன் அவர்தான் இதைச் செய்யச் சொன்னான் எனக் கூறியுள்ளார் எரியும் சமவெளி தொகுப்பில் பாலச்சந்திரன் மொழிபெயர்த்த 15 கதைகளை அப்படியே எடுத்தாள்வதோடு. மேலும் இரு சிறுகதையைச் சேர்த்து வெளியிடப் போகிறோம். இது கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை)  சொல்லியே நடக்கிறது. மேலும் இதை அவர்கள் புதிதாகச் செய்து தரச்சொன்னாலும் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படையாகத் தெரியும் அம்சம் எஸ் பாலச்சந்திரனின் உழைப்பை சுரண்டும் நோக்கமே. இதில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம். மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன் எம். (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) மூவரும் சேர்ந்து செய்யும் சதியெனவே கொள்கிறோம். சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மேல தொடுப்போம் என்பதை குறளி பதிவு செய்கிறது. மேலும் அவர் பாலச்சந்திரனிடம் இதைச் சொல்லும் போது எங்களது பார்வைகள் பதிவுகள் பதிப்பகத்திற்காக சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நூல்களையும் உங்களிடம் கேட்டு நீங்கள் கொடுக்கவில்லை, அதனால் இதை விடியலில் கொண்டு வருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பெயர்தான் புரட்சிகரப் பதிப்பகமா…தோழர்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனுக்கே தெரியாமல் பதிப்பை மறுபதிப்பு செய்வது என்பது திருட்டுக்கு நிகரானது. அதை விடியல் பதிப்பகம் செய்திருக்கிறது தோழர்களே.
                                            
இது விசயமாக. மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனும், குறளி பதிப்பகமும் வழக்கு தொடரும் என்று ராஜாராமிடம் தெரிவித்தபோது, ராஜாரம் “நீங்க  வழக்கு தொடர்ந்துக்கோங்க” என்று அதிகாரத் தொணியோடு முடித்துக்கொண்டார்.

விடியல் பதிப்பகத்திற்கு டிரஸ்டி-முதலாளி ராஜாராம் தலைமை ஏற்ற பிறகு இது அவர்களின் கைவந்த கலையாக மாறிவிட்டது. தோழர் முருகவேளின் 
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் புத்தகத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பு என்ற பெரியரில் போப்பு என்பவரை வைத்து ஆங்காங்கு அடித்தல் திருத்தல் வேலை செய்து தலைப்பில் உள்ள ‘ஒப்புதலை’ நீக்கிவிட்டு மோசடித்தனத்துடன் வெளியிட்டது.

இதில் மாபெரும் அறுவெறுப்பு எனச் சொல்லத்தக்கது என்னவெனில், ஏற்கனவே முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழெட்டுப் பதிப்புகள் கண்ட ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ’ மொழிபெயர்ப்பை ஆங்காங்கு சில்லறை வேலைகள் செய்து பதிப்பித்ததோடு பின்னுரையில் சிவா உயிரோடு இருந்த பொழுது திருத்த நினைத்தார். இப்பொழுது இறந்துவிட்டார். அதனால் திருத்த முடியவில்லை, அவரது ஆத்மா சாந்தியடையும் விதமாக இம்மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என்ற தொனியில் அப்புத்தகத்தை போப்பு என்பவரின் மொழிபெயர்ப்பாக வெளியிட்டது.

இப்போது அதே போல் தோழர் எஸ் பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பை நாங்கள் வெளியிடுகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்ற வார்த்தைகளை விடியல் ட்ரஸ்டி ராஜாராம் முன் வைக்கிறார்.

முருகவேளுக்கு செய்த அதே மோசடியை தோழர் பாலச்சந்திரன் விசயத்திலும் செய்யத் துணிந்த விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளை அதன் ஆதிக்கப் போக்குகளை முறையாக வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்வோம். பத்திரிக்கைகளுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் விடியல் பதிப்பகத்தின் மோசடிகளை எடுத்துரைப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன். அப்புத்தகத்தில் தனக்குதவியர்களின் பெயர்களை அவர் எழுதியதற்கு, அதைக் கூட்டுழைப்பு எனச் சொல்லும் டிரஸ்டி ராஜாராம் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர்களின் திருகுவேலையாக, சம்பந்தப்பட்ட புத்தகத்தில் வேறொருவரை வைத்து ஆங்காங்கு சில வார்த்தைகளை மாற்றி வெளியிட்டால் அந்த அயோக்கியத்தனத்தையும் சான்றாராதரத்துடன் வெளிக்கொணருவோம்.

நம்மை போன்ற சிறு பதிப்பகங்களில் செழுமை படுத்த உதவுவோர் பெரும்பாலும் சக தோழர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை பதிப்பகங்கள் என்றால் ‘பதிப்பாசிரியர் (எடிட்டர்)’ இருப்பார். ஆனால் சின்ன சின்னத் திருத்தங்கல் சரி பார்த்தல்கள் மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு இணையாக முடியாது. அதன் காரணமாகவே உரிமம் மொழிபெயர்ப்பாளரிடமே இருக்கும்.  அப்படி இருக்கையில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் எனும் ராஜாராமின்  தொனியில் தெரிவது முதலாளித்துவ அதிகாரம், சட்டத்தை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும் எனும் ஓர் அகந்தை.  

தோழர்களே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதற்கான அறிவூட்டும் படைப்புகளைக் கொண்டுவருவதாக மார்தட்டிக்கொள்ளும் விடியல் பதிப்பகம், இப்போது உழைப்பாளிகளைச் சுரண்டி, மொழிபெயர்ப்பாளரின் தக்க அனுமதி இன்றி மோசடி செய்து காசு பார்க்கும் இழி நிலைக்கு இறங்கி விட்டது. இந்நிலைக்கு உடந்தையாக மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன்.எம் (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) உடந்தையாக இருக்கின்றனர் என்பதை அறிய எங்களிக்கு அதிர்ச்சி அளித்தது. (நடராஜை வைத்து கொண்டு வரவிருக்கிறோம் என்று ராஜாராம் சொன்னதை அடுத்து, அவரையும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் என்று ஆலோசித்தோம். பாலச்சந்திரன் தொடர்பு கொண்டு கேட்க -  கண்ணன் சொல்கிறார் நான் செய்கிறேன் என்று நடராஜ் பதில் அளித்திருக்கிறார்…).

நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு தக்க எதிர்வினையாற்ற இருக்கிறோம் என்பதை குறளி பதிப்பகம் அறிவிக்கிறது.

கூட்டு முயற்சி என்ற அபத்தமான வார்த்தையை வைத்து, விடியல் பதிப்பகமானது இவ்வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறது என்பதை இதன் வாயிலாக பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் அறிவித்துக்கொள்கிறோம். விடியலின் இந்த மோசடிக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது எனும் வேண்டுகோளையும் இதன் மூலம் வைக்கின்றோம்.

விடியல் டிரஸ்ட்- விடியல் பதிப்பகத்தின் மோசடிக்கெதிராக குறளி பதிப்பகம் களம் இறங்கிப் போராடும். பதிப்புலகில் தொடர்ந்து வரும் விடியல் பதிப்பகத்தின், உழைப்புச் சுரண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

Related Links

வியாபாரிகளிடம் சிக்கியுள்ளதா விடியல் பதிப்பகம்? - http://tinyurl.com/kvqk3xm

விடியல் பதிப்பகத்தின் விசமத்தனம் - HTTP://WWW.KEETRU.COM/INDEX.PHP/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24651-2013-08-19-18-17-58


Wednesday, June 18, 2014

மகளை எழுத்தாளாராக்குவேன் என கனவு காணும் ஜெயமோகனுக்கு...





ஜெயமோகனுக்கு...

அன்புள்ள ஜெயமோகன் உங்களது நாலந்தர எழுத்து வல்லமை இதற்கு மேல் செல்ல முடியாது என்பதற்கு நீங்கள் பெண்களின் கூட்டறிக்கை குறித்து எழுதிய பதிலே சாட்சி. பெண்கள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாது தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என வகைபிரித்துப் பேசியிருக்கிறீர்கள். அவ்வறிக்கையில் வசைகள் அவதூறுகள் எங்கு உள்ளன என குறிப்பிட்டால் இன்னும் பேசலாம். உண்மையில் வாழும் மனிதர்களின் உடற் குறைபாடுகளை உங்களளவுக்கு கேவலமாகப் பேசும் பிறிதொரு எழுத்தாளப் பிறவி இத்தமிழில் இல்லை என்றே நான் சொல்லுவேன்.

கார்ல்மார்க்ஸ் தொடங்கி கமலாதாஸிலிருந்து வளர்ந்து மனுஷ்யபுத்திரனை நொண்டிநாய், அதுவும் வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் காலச்சுவடு நாய் என எழுதிய நீங்கள் இதை வசை என்று அழைக்காமல் என்னவென்று சொல்லுவீர்கள். இதுகுறித்து ஒருமுறை நான் உங்களுக்கு கடிதம் எழுத நீங்கள் என்னை மனநலம் பேணுமாறு எழுதினீர்கள். அப்படியென்றால் யாருக்கு மனநிலை தவறியிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த இந்துத்துவ கோவணாண்டிகளின் தாடி மயிரும் பட்டொளியாக ஒளிரும் காட்சியாகப் படும்போது கார்ல்மார்ஸின், மாவோவின் அந்தரங்க உறுப்பின் தேட்டத்தை விசாரித்தீ்ர்கள்.

எனக்கு இவ்வகை விசாரணைகள் புதிதல்ல. உங்களை ஒத்த சில இலக்கிய தூயத்துவ மடாதிபதிகளை, இலக்கியத்தில் மொழியினால் ஆன சாத்தியங்களை முவைத்த காரணத்திற்காக, நகுலன் மகாத்மாவென்றும் அவர் சாப்பிடும் பிராந்தியில் கம்பன் கம்பூன்றி தெளிவாக நடந்து வருகிறான், தேவதேவனின் கண்களில் ஞான ஒளி மின்னுதடா சர்வேசா, அவருடைய தாடியில் தொங்குடதா தமிழ்கூறும் நல்லுகம் தேவதச்சனின் வெற்றிலை மணத்தில் மணக்குதடா தத்துவ முத்து என தலை முதல் உள்ளங்கால்கள் வரை வர்ணிப்பதும் நான் கவனித்து வருவதுதான்.

ஆனால் இதே வர்ணனை சிலாக்கியங்கள், மார்க்சிய தத்துவ ஆசிரியர்களை விமர்சிக்க வரும்போதும் மட்டும், வறட்டு வறட்டுனெ கவட்டையைச் சொறிந்து கொண்டு விமர்சிப்பதையும் கவனிக்க முடியும். கேட்டால் கலை இலக்கியம் அந்தரத்தில் தொங்கும் பொற்கனி, அதை உள்ளொளி முள்ளெலி, ஆன்ம சுத்தி, இன்னபிற பெருங்காயங்களோடு நெஞ்சில் கைவைத்துப் படிக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் படிக்கவே ஞான வெள்ளெழுத்துக் கண் வேண்டும் என்கிற உளறல்களையும் அறிந்தே வருகிறேன்.

கவிதையை, படைப்பை விட்டுவிட்டு எழுத்தாளனின் தாடி மயிர், குடிக்கும் பிராந்தி. போடும் குசு, வெற்றிலை மணம், பட்டுவேஷ்டி, ஒட்டுக்கோமணம் பற்றியே இங்கு இலக்கிய ஞானபீடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதை செவ்வனே செவ்விலக்கிய அமைப்பாக்கி, விஷ்ணு புர பஜனை மடத்தை தோற்றுவித்தது தாங்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் சீரிய பார்வை, விசாலமான நெற்றி, கூர்த்த நாசி நிமிர்ந்த நன்னடை கொண்டவர்களுக்கே அந்தரங்க எழுத்து கைகூடும். உடற்குறை உள்ளவர்களுக்கு, சில்லறைகளுக்கு எந்த எழுத்தும் வராது. உங்களது விமர்சனங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளனின் உடலை தடவித்தான் வருகிறது. அவ்வகை விமர்சன முறையை நான் கைக்கொண்டால் உங்கள் காதை முன் வைத்தே ஒரு லட்சம் பக்கங்கள் எழுத முடியும். அத்தகைய காது அது. ஆனால் அதற்குள் இருக்கும் சிலந்திக் கூடுகளை கலைக்க எனக்கு விருப்பமில்லை. எவ்வுயிர்களும் இவ்வுலகில் வாழவேண்டும் என்பதே என் நிலை.

எழுத்தாளானர் சார்பு நிலை அற்றவன் எனில் நித்ய சைதன்ய நிதியின் மயிர்கள் எங்கெல்லாம் மின்னியிருக்கிறது என நீங்கள் எழுத வேண்டும். உங்கள் படைப்புகளை வாசித்தவர்களிடமே பேசுகிறேன் என்ற இன்னொரு உளறலையும் வைக்கிறீர்கள். உங்கள் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து எழுதிய ஒரு மாணவன் இருக்கிறானா... அல்லது மாணவி இருக்கிறாளா.. அல்லது உங்களது விஷ்ணு புர பஜனை மடங்களில் அழுக்குச் சட்டையோடும் ஏதேனும் சில்லறைகள் தட்டுப்படுகிறதா. அவ்வாறு வரும் ஒரு நபரின், உங்கள் வாசக வாசகியின் பெயரைச் சொல்லுங்களேன். அந்நபரைப் உங்களது நபரைப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் யார் நீங்கள் உங்கள் வாசகர்களாக கருதும் நபர்கள் யார் அவர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்கள், எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று திறந்த மனதுடன் உங்களால் உரையாடமுடியுமா.

அவ்வறிக்கை சமகால இலக்கியத்தில் மிக மோசமான ஆணாதிக்க மனநிலையோடு இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றிய அறிக்கை. அதில் சில்லறைத்தனங்கள் இருக்கிறதென்றால், அது உங்களைப் பற்றிய அறிக்கை. அதில் நோட்டையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அறிக்கையாளர்களுக்கு எவ்வகையில் எவருக்குப் பதில் அளிப்பது என்கிற தேர்வே அதைச் செய்திருக்கிறது.

அதில் உங்களது அடிப்படைப் புரிதல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கூறுவது இன்னும் வருத்தமாக இருக்கிறது. அக்கப்போர்கள் என்றால் என்னவென நீங்கள் கூட்டும் விஷ்ணுபுர பஜனை மடத்திற்கு வந்தால் தெரியும். நான் எல்லாவற்றையும் விவாதிக்க உங்களின் வாசகனாகவே வருகிறேன், ஆனால் சப்பளக்கட்டைகள் நாம தேய நாமக்கட்டிகள் இவை எதுவும் கொண்டு வரமாட்டேன். அனுமதிப்பீர்களா... நீங்கள் எழுதியுள்ள இப்பதிலில் எனக்குப் பீதியை ஏற்படுத்தியது உங்களது மிகப்பெரிய தூய உலகியல் கனவென நீங்கள் சொன்னது. உங்களது மகள் எழுத்தாளாரக வேண்டும்... அச்சா..

ஏன் அவர்கள் வேறு துறையை தேர்ந்தெடுத்தால் உங்களது ஆகப்பெரிய தூய உலகியல் கனவு கலைந்து விடுமா. வார்த்தைகளை இடம் தேர்ந்து சுட்ட நினைத்திருக்கிறீர்கள் ஜெயமோகன். இன்னும் சொல்லப் போனால் உங்கள் மகள் அளவுக்கு சுரணையுள்ள மகள்கள்தான் அவ்வறிக்கையை எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை பெயரில் ஒரு மலையாள மொழிபெயர்ப்பை எடுத்தாண்டு, கவனக்குறைவு என்று சொல்லிவிட்டு சொல் புதிதை மூடினீர்கள். அவர் இன்று வரை எழுதிய நாலு வரிகளையாவது கவனத்திற்கு கொண்டு வரமுடியுமா.

உங்களது உளவியல் மிக மோசமான ஆண்நோய்க்கூறு தாக்கிய ஒன்று. இந்நோய் உங்களை உங்களிடமிருந்தே அரித்துக்கொண்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியதுதான்.. உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உங்களது மகனும் மகளும் இயங்குவார்களானால் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் கல்லூரிகளில் கூட என் குழந்தைகளை சேர்க்க நான் அச்சம் கொள்ளுவேன். வக்கிரம் எழுத்தாகும் போது அது எவ்வகையில் செயலுரும் என்பதை நானறிவேன். நீங்கள் அறிவுத்தளத்தில் உரையாடிய அனைத்து மனிதர்களும் உன்னதங்கள் என்றா சொல்லுகிறீர்கள்.. இதை விட வேறு நகைச்சுவை எதுவும் இல்லை ஜெயமோகன் விஷ்ணு புர மடத்திற்கு வந்து பட்டுக்கோவணம் கட்டிய அந்நபர்களை நீங்கள் அறிவாளிகள், அறிவாயுதங்கள்: என்றே அழைத்துக்கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

குழாயடிகளில் நீங்கள் கண்டது உங்களுக்கு வெறும் வசையாக இருக்கலாம் அந்தளவிலான பேச்சுக்கும் ஒரு தூய மதிப்பு இருக்கிறது. என்னசெய்வது உங்களது வீட்டில தெருக்குழாயில் தண்ணீர் படிக்கும் வசதி இல்லை. அப்படி இருந்திருந்தால் உங்களது மகளும் மனைவியும் குழாயடிச் சண்டை குறித்த சிந்தனைகளை உங்களுக்குக் கற்றுத் தருவார்கள். மிக கனத்த உங்களது மனத்தை நான் புண்படுத்த விரும்பவில்லை ஜெயமோகன் ஏனாயில் அது வக்கிரத்தால் அழுகிக்கொண்டு சீழ்பிடித்து பிதுங்கிக்கொண்டிருக்கிறது. சில்லறை உலகில் இல்லாது முற்றும் துறந்து அம்மணமாகும் ஞான உலகத்தை நோக்கிய உங்களது பெரு உலகுக்கு என்னால் வரமுடியாது. மேலும் அது அவமானகரமான செயல்.

கும்பல் சில்லறை என்றால் விஷ்ணு புர மடத்தில் பட்டுவேட்டி கட்டிய அந்த கோமணங்கள் யார்.. அவர்கள்தான்.. முழுமுற்றும் அறிந்த அறிவுப் பேராயுதங்களா.. அங்கெல்லாம் சில்லறை உலகு குறித்துப் பேசாமல்... வேறு என்ன பேசுகிறீர்கள்.


அவ்வளவே.

கூடிய விரைவில் இன்னும் விரிவாக எழுதுவேன். விரிவஞ்சி குறுக்கியிருக்கிறேன்.



Monday, April 7, 2014

லஷ்மி சரவணக்குமாரைக் கட்டிக்கப் போற பெண், மற்றும் லஷ்மிசரவணக்குமாரால் வாழ்நாள் தோழர் என அறிவிக்கப்பட்ட கார்க்கி அவர்களுக்கு..





//இந்த இடத்துல லஷ்மின்னு இல்ல, வேற யார் இருந்தாலும் எனக்கு கோவம் வந்திருக்கும் ண்ணா... ஆனா லஷ்மிங்கறதால தான் அந்த ஸ்டேடஸ் போட்டேன்அதற்கு தான் ண்ணா முதல்லயே சொல்லியிருந்தேன். எனக்கு எந்தவொரு பிரச்சனையும் தெரியாதுன்னு. ஒருவேளை நான் அப்போ அவனோட இருந்திருந்தா, கண்டிப்பாக எதிர்ப்பு சொல்லியிருப்பேன். ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னுஇனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு//

என்பதோடு பொது வெளியில் பதில் சொல்லுங்கள் எனச் சொன்னீர்கள். நான் பொதுவெளியில்தான் உரையாடுகிறேன்.. உரையாடியபடியே இருக்கிறேன். உங்கள் உரையாடலுக்காக காத்திருக்கிறேன்....



உரையாடலம் வாங்க.....

Sunday, April 6, 2014

பத்துமணிப் போராளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் விதமாக....






உளவியல் குறிப்பு. 1

வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளையில் இறந்தகால மரபு ஒரு பேய்க்கனவைப் போல் அழுத்திக்கொண்டிருக்கிறது.
-லூயி போனாபார்ட்டின் பதினெட்டாம் புரூமோர்.


பேச்சை விரும்புகிறவனாக நான் இருக்கிறேன். புண்ணைக் கீறி சீழைப் பிதுக்கியெடுப்பது போல் சில வார்த்தைகள் என்னிடம் உண்டு. என்ன செய்யமுடியும், செலுத்தப்பட்டவைகளை வெளியே எடுப்பதென்பது நலமான செயல். அவைகள் உடலிலேயா தங்கி மூளையை துருப்பிடிக்கச் செய்யும் கரியை தன்னகத்தே கொண்டிருக்கலாம். அனுமதிக்கக் கூடாது. நான் சிந்திப்பதென்பது வசைகளை ஆராய்வதற்கல்ல. ஆனால் அவை எழுதவற்கான உளவியல் முனைப்பு அவர்களுக்கு எங்கு தொடங்கியது என்பதுதான்.

உள்ளொதுங்கிய அல்லது விடைத்த, மற்றும் புடைத்த உறுப்புக்களின் மேல் கொள்ளும் அவா நிரம்பியவர்கள், காமத்தை நேரடியாக தங்கள் மூளையில் ஒரு கையால் திணிக்கிறார்கள். அதேசமயம் ஆர்வமும் ஆச்சரியம் கொள்ளும்படியாக தங்களது இடதுகையால் அவ்வுறுப்புக்களை, அன்பின் பெயரால் தங்களது பிரியமானவர்களின் வாய்களில் திணிப்பதோடு, தங்கள் வாய்களிலும் திணித்துக்கொண்டு அலைவதேன் என்ற கேள்வியை முன் வைத்து நகர விரும்புகிறேன்.
துளைகளையும், ஒரு துண்டுச் சதைகளின் மீதும் அளவற்ற அவர்களது அவாவின் உந்தலில் அதை சோதனை செய்யும் ஒரு உறுப்பாய் மாற்றி பரிசோதனைக் கூட மேஜையில் வைக்கிறார்கள்.  அவர்கள் நிகழ்த்தும் பரிசோதனைக் கூடத்தில் அவர்களே ஒரு பரிசோதனை உயிராய் இருக்க அவர்களை சம்மதிக்காச் செய்யாத கருத்து எதுவாக இருக்கும். இதன் நோக்கம் இதுவென்று தெரிந்தும், விருப்பத்தை அறிவித்து மினுங்கும் கண்களோடு தங்கள் வாயை அருகே கொண்டு சென்று தங்களது விருப்பத்தையும் கழுத்தின் கீழ் தொங்கும் இரும்புச் சங்கிலியையும் அவர்கள் வசம் ஒப்படைக்கும் மனப்போக்கையும் காண்கிறேன்.

எனது 35 வருட வாழ்க்கையில் உறவுகளைச் சீர்படுத்துவதில் நிலைபேறவடைது குறித்து  நான் கண்டுணர்ந்தது ஒன்றேதான்.
பத்திருபது வருடங்கள்...  உண்டு, உறங்கிய, ஆணையோ பெண்ணையோ இன்னும் குறிப்பாக தான் மெய்யுறு புணர்ச்சியை நிகழ்த்திய அவ்வுடலின் புணர்ச்சிக்கு மிக உகந்த உறுப்பை, பரிசோதனைக் கூடத்தில் கண்ணைக் கூசசெய்யும் விளக்கின் கீழ், அறுக்கப்பட்ட சதையாய் ஒருவன் வைப்பதும், அதை ஆவலோடு காயம்பட்ட மிருகத்தின் விழிகளால், எச்சிலூற கவனிக்கும் ஏனையோருக்கும் நான் சொல்வது ஒன்றேதான். இருப்பின் பிரச்சினை காரணமாக சுயத்தையே முழுக்க சந்தேகப்படுதலும், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள எண்ணற்ற காரியங்கள் செய்வதும், அதற்கு வழித்தடங்களை அமைப்பதும் ஏன். இவை எவ்வளவு நாட்களுக்கு தாங்கும்.
பொதுவாக நள்ளிரவில் யாரும் அழைக்கலாம் என்பது அன்பர்களின் விருப்பத்திற்கொன்றாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதை நான் மதிக்கிறேன்.எனவே அவர்கள் தங்களது தொலை தொடர்பு எண்களை பொதுச்சுவற்றில் அறிக்கையாக இடுங்கள். கண்காணிக்கும் விழிகள் காவல் காத்துக் கொள்ளட்டும். எதிர்கொள்ளுங்கள். இரவுக்கென்றே ஆக்கப்பட்ட சில  பிராணிகளும் இன்னபிற விலங்குகளும் உண்டு. ஓநாய்களும் உண்டு.
அவைகள் எதிர்கொள்கையில், விலங்கின்  கடைவாய்ப் பல் ஆழமாகப் பதியனிடுகையில் பத்திரிக்கையில் அறிவியுங்கள். உதவப் போராளிகளும் உண்டு.  இவ்வகையான போராட்டங்களில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அத்தோடு இலக்கியத்தையும், புரட்சியையும் சுதந்திரம் எனும் கருப்புப் போர்வையில் சுற்றி, சுயமரியாதையை கூட்டிக்கொடுக்கும் காரியத்தையும் முக்காடிட்டு செய்யத்தூண்டுவது எதனால் என்பதுதான் எனது கேள்வி.
எல்லா தகைமைகளையும் கொன்று விட்டு எச்சிலூறப் பார்க்கும் உங்களது விழிகளுக்கும், இடுப்புக் கீழ் தொங்கும் உங்கள் சதையும், உங்கள் துளையும் அறுத்தெடுக்கப்பட்ட  உறுப்பாய் அதே மேஜைக்கு அப்பபரிசோதனையாளனால் சூடாக பரிமாறப்படும் பொழுது எச்சிலொழுகிய உங்களது கண்களில் எவ்வகையான அறுவெறுப்புத் தேம்பிப் படறும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு அறுவெறுப்பாய் இருக்கிறது.  

அம்மா என்று அழைத்து அடுத்த நொடி படுக்கையைத் தட்டிப் போடும் அவ்வக்கிரங்களுக்கு உங்களது தொலை தொடர்பு எண்களை தயவு செய்து கொடுங்கள். அனைத்தின் சுதந்திரத்தையும் மெச்சுகிறேன். இரவை நானும் கூட வரவேற்கிறேன். அத்தோடு அம்மா அக்கா தங்கைகளுக்கும் அவர்களது எண்களைக் கொடுங்கள். அவர்களும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தான் அது எத்தகைய சுதந்திரம். நாம் அனுமதிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கும் வழங்க. அல்லது எடுக்க நாம் உதவ வேண்டும். முடிந்தால் முதற்கட்டமாக உங்கள் முகநூலில் உங்கள் தொடர்பு  எண்ணைப் பதியுங்கள். அதுவே இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கட்டும். இன்னும் குறிப்பாக முகநூலில் பேச வரும் ( குறைந்தபட்சம் வெறும் எழுத்து வடிவில் பேச வரும்) அன்பர்களை ஏன் உங்கள் பக்கங்களைக் கூடப் பார்க்க விடாமல் தடை செய்கிறீர்கள்.

உத்தமகுணங்கள் கொண்ட ஆண்கள் இரவில் மட்டுமல்ல, பகலிலும் நடுப்பகலிலும் தயாராக இருக்கிறார்கள். நான் இரவுக்காக மட்டும் அல்ல பகல், நடுப்பகல், நள்ளிரவு வரை அவர்களை நீங்கள் வரவேற்பதற்காக... உங்களுக்கு என் அன்பின் ரத்தினக் கம்பளத்தை விற்கிறேன்.  எல்லாவற்றையும் பேசியும் மட்டுமல்ல, எழுதியும் கடக்கலாம். எனவே முகநூலில் யாரையும் தடை செய்யாதீர்கள். அனுமதி அளியுங்கள். பகலும் காமத்தைக் கடந்ததுதான் அன்பர்களே.
துரதிருஷ்டம். சொல்லி அழக்கூட திராணியின்றி, எத்துணையற்று தனியே அழும் மனநிலை வாய்க்கவா இத்தனை போராட்டம். இதைத்தான் அவர்கள் காதல், நட்பு, இன்னபிற உறவுகளோடு பொருத்திக்கொள்கிறார்களா.
அறுவைச் சிகிச்சை என்பது சதையின் வெற்றிடத்தை ஆராய்வதல்ல, உண்மையில் ஆராய்சியாளன் தான் தேடிய சிந்தனையில் அது ஒளிந்து இருக்கிறது.
எந்த வசையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றென இருந்ததில்லை, என்பதை நான் அறிவேன். சிந்திக்க முடியாதவர்களின் மூளை என்ன விதமாக இயங்கும் என்பதையும், ஓய்வுபெற்ற மனிதனின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்றழைக்கப்படுவதையும் இக்கணத்தில் பொருத்துகிறேன். அடிமைகள் சுதந்திரமாக இருப்பதற்கு முதலாளிகளின் அனுமதி தேவையெனும்போது அங்கு அடிமை தான் அடிமை எனும் அடையாளத்தையும் கூட இழக்கிறான். 

சிறுகுறிப்பாக
நள்ளிரவில் உங்களுக்கு  அழைப்பு வந்து சமூகத்தை சீர்திருத்தும் காரியங்களைச் செய்ய உங்களுக்கு உதவ உங்கள் குடும்பத்தார்களையும் அழையுங்கள். அவர்கள் எண்களையும் பகிருங்கள். இது போன்ற அழைப்புக்களில் நாம் மட்டுமல்ல நம் குடும்பமும் விழித்திருக்கச் செய்யவேண்டும். இத்தகைய உன்னத காரியங்களை அவர்களும் கண்டுகளிக்க வேண்டும். புரட்சி ஓங்குக.

இன்னமும் உரையாடக் காத்திருக்கிறேன்.

உரையாடலாம் வாங்க.

Friday, April 4, 2014

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்......




இந்த வக்கிர நோய்  எங்கு தொடங்கியது, எப்படி தொடங்கும், எவர்கள் சந்தித்தால், இந்த நோய் தொற்றி முற்றும் நிலைக்குப் போகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்... இவக்கிரத்தைத் தூண்டியவர்களை, உற்சாகமூட்டி இதில் குளிர்காயும் பழைய நண்பர்களையும் நான் அறிவேன். இலக்கிய வியாதிகளென என்னை அறிந்தவர்கள் எக்காளம் கொட்டி தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டால், என்னால் இனி குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கமுடியாது என்பதை இக்கணம் அறிவிக்கிறேன். எதையோ பேசுவது போல்... எங்கையோ ஒரு உரையாடலைத் தொடங்கி... கடைசியில் இங்கு வந்து முடிவதன் மர்மம் அறிகிறேன் நண்பர்களே...அவ்வாறு அறியப்பட்டவர்களே...

நான் பிறந்த ஊரான, போடிநாயக்கனூர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. காடு மேடெல்லாம் சுத்துனாலும் கண்டமானூரான் கவுட்டுக்குள்ளதான்னு... அந்தப் பழமொழியின் சூத்திரம் எனக்குப் புரிய இத்தனை நாளாகிவிட்டது. நான் கொஞ்சம் மந்தம்தான். ஆகவே.... இவ்வக்கிரத்திற்குத் துணைநின்ற, நண்பர்களாக நான் நினைத்தவர்கள்.. சேர்ந்து  உண்டு உறங்கியவர்கள்...மற்றும், இதன் பின்னால் இருக்கும் நோய்க்குறிகள் அனைத்தையும் எழுத ஆவலாக உள்ளேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

எவன் குடும்பம் எப்படிப் போனால் என்ன..  என் குடும்பம்.. என் பெயர்... என் மானம்... என் மரியாதை என காத்துக்கொள்ளும் அவர்கள் பற்றி,  எனக்கு இனி துளிக் கவலையில்லை என அறிவிக்கிறேன். என்னைப் பேச வைத்து அழகு பார்த்து நீதியும் சொல்லும் அவர்களுக்கு அவர்களைப் பற்றிச் சொல்ல எனக்கு வாய்த்த இந்நல்வாய்ப்பை நான் நழுவவிட மனம் இல்லை.

இதில் முக்கியமான விசயமாக நான் கருதுவது ஒன்றே ஒன்றேதான். திரு கார்க்கி மனோகரன் அவர்கள் வழக்குத் தொடரவேண்டும். அவதூறு என நிருபீக்க வேண்டும். அப்படி  இல்லாத பட்சத்தில் நான் வழக்குத் தொடர்வேன். அது சம்பந்தப்பட்ட ரகசிய வியாதி பீடித்தவர்களை... சில பல குடும்பங்களை, குடும்பமல்லாத இணைப்பில் வாழும் நபர்களின் பெயரை,  வழக்கில் இணைத்துத் தாங்கி நிற்கும்.

இதற்கு மேல் அமைதியாய் இருப்பதென்பது எனக்கு நானே அளித்துக் கொண்டும் தண்டனையாக உணர்வதோடு, எனக்கு நானே சொல்லிக் கொண்ட... இது அடுத்தவர் வாழ்க்கை.... அந்தரங்கம்... சுயமரியாதை... கருணை..இரக்கம் என எண்ணத்தூண்டும் எனது வாசிப்பை, எனது சுயமரியாதையை தள்ளி வைத்ததோடு மட்டுமல்லாது அதன்  மீது காறி உமிழ்ந்துவிட்டு இதன் பின்னால் இருக்கும் நண்பர்களாக அறியப்பட்ட அந்த நல்லிதயங்களின் பெயர்களை நானே நேரடியாக இதை வழக்கில் சேர்த்து எழுதுவேன்.  நெடுஞ்சாண்கிடையாக வழக்கில் வந்து விழுங்கள் என அன்போடு வரவேற்கிறேன். 

எந்தப்பக்கம் சுண்டினாலும் பூ விழும் நாணயம் கள்ள நாணயமென அறிவிப்பேன். இனி தலையும் விழும். மேற்கண்ட வழக்கிற்காகக் காத்திருக்கிறேன். வாழ்க்கை பன்முகம் கொண்ட இட்லி. அஃது வெந்துவிட்டதா எனக் குத்திப் பார்க்க எனது சுட்டுவிரலால் அழுத்தத் தலைப்பட்டுவிட்டேன்.

சிறு குறிப்பு;
இனி இவ்விவாதம் குறித்து


இது எனக்குத் தெரியாது...
இதை நான் வாசிக்கவில்லை...
அய்யோ அப்படியா...
எனக்குத் தெரியாதே....
எனக்கு இருபக்க நீதியும் தெரியாது....
எல்லோருமே நண்பர்கள் இதில் நான் யாரைப் பேசுவது..
பொதுப்பதிவு
தனிப்பதிவு
உள்பதிவு நடுப்பதிவு.....எனச் சமாளிக்கும் வேலைக்கு ஆள் நானில்லை.

முடிவாக.... மேற்கண்ட சொத்தைப் பற்களால் கட்டப்பட்டிருக்கும் கள்ள மௌன வாய்களுக்கு வெளியே தொங்கும், அவ்விறுகிய பூட்டுக்களின் வாயை சாவியால் அல்ல, நான் அறிந்த அ(ர)றத்தால் ராவித் திறப்பேன் என்பதை மிக்க பணிவன்புடன் அறிவிக்கிறேன். கூச்சங்கள் அழிக.

தொடங்கிவிட்டு..... இவ்விவாதத்தில்  எண்ணெய்யை தள்ளி நின்று ஊற்றும் அவ்வாத்மாக்களுக்கு, இனி என் வரிகள் அறம் பாடுமென சொல்லிக்கொள்கிறேன். ஆமென். எனது வீட்டில் நடந்த விசயங்களைக் கேட்க ஆவலாக இருக்கும் அவர்களுக்கு, அவர்களோடு இருந்து என் வீட்டில் என்ன நடந்தது எவரெவர் நியாயவாதிகள் என வெளிச்சமிடுவதில் எனக்கு சந்தோஷம் தான். அது என் சுயசரிதையின் வேண்டாத பக்கங்களாய் இருந்தாலும், சொல்ல எனக்கு ஒரு தொல்லை இல்லைதான். உண்மைகளை கூச்சங்களின் மேலோ, நட்பென்னும் நடிப்பின் ஊத்தைத் தனத்திலோ இனி பொத்த முடியாது. நாறத்தொடங்கினால் தொடங்கட்டும்.

கவலைகள் ஒழிக.


Monday, February 17, 2014

அபிலாஷ்..நேசமித்ரன்...மற்றும்... சில வியாதிகளை முன் வைத்து....






இலக்கியம், அகந்தையை வளர்க்க உதவி செய்யும் ஒரு கருவி என்றால் அதை என் காலில் போட்டு மிதிக்கவே விரும்புகிறேன்.

வணக்கம் நண்பர்களே.... அபிலாஸின் மௌனத்தை முன்வைத்து என் சொற்களை நான் திறக்கிறேன். ஏற்கனவே அந்தரங்கம் பற்றின எனது புரிதலைப் பலமுறை வைத்துள்ளேன். இனியும் இந்த மோசமான மௌனத்தின் முன், அதை... சில சந்தர்ப்பங்களை வைத்துத் திறக்கவே விரும்புகிறேன்.

சம்பவம் ஒன்று.

திருவாளர் நேசமித்ரன் அவர்கள்... சொல்ல ஒரு சொல்லுமின்றி என்னை முகநூலில் முடக்கி அவரது கலைத்தாகத்தை வெளிப்படுத்தியது குறித்து.

நண்பர் நரனிடம் என்னைக் கடவுள் அளவுக்குத் தூக்கி வைத்துப் பேசி பின் நேசமித்ரன் எழுதியது குப்பை என்று சொன்னதும் அவருக்கு நான் சாத்தானாக மாறிய கதையைப் பற்றியது. வலசையில் வந்த எல் டயானா கவிதையை மொழிபெயர்த்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. இதை அவரது இலக்கிய ஆத்மா மன்னிக்கட்டும். என் ஆளுமை குறித்து எனது வாழ்நாள் தோழியிடம் நேசமித்ரன் அவர்கள் பேசிய உண்மை உரைகளை இனி கொற்றவையும் எழுதுவாரென்றே நினைக்கிறேன்.

எனது வலைத்தளத்தில் அன்பர் நேசமித்ரனுக்கு நான் எழுதிய அனைத்தும் அப்படியே உள்ளது எதையும் நீக்கவில்லை. அவை காலம் காலமாக மின்னிக்கொண்டே இருக்கும்.அதையிட்டு எனக்கு அருமையான கட்டுரை எனப் பாராட்டிய நண்பர்கள் திரு நேசமித்ரன் செய்யும் அயோக்கியத்தனங்களை அவர் கவிதை என எழுதும் குப்பைகளை என்னிடம் சொன்னார்கள். அப்பொழுதும் அழுத்தம் திருத்தமாக இதை அவருக்கு நெருக்கமான நண்பர்களாகிய நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை என்பதைத்தான். அதற்கு அவர்கள்.... ”எங்க வசு எதாச்சும் சொன்னா எனக்கு யவனிகா ஸ்ரீராமைத் தெரியும் கோணங்கியைத் தெரியும் என்கிறான் இதில் நாம் என்ன செய்யமுடியும்” என்பதைத்தான். அதற்கடுத்த பின்தான் எனக்கு கடுப்பு அதிகமாகியது. எழுத்தாளர்களை அடியாட்களாக இவர் மாற்றிக்கொண்டே இருக்கும் அயோக்கியத்தனத்தைத்தான் முன் வைக்க வேண்டும் என நான் முன் வைத்தேன். அதற்கு அடுத்து தொடர்ச்சியாக எனது வலைத்தளத்தில் நான் எழுதிய கடிதங்களே சாட்சி. வாயடைத்து இப்பொழுதுவரை எந்தப் பதிலும் சொல்லாத அவரின் மௌனம்தான் இலக்கிய மௌனம் இப்பொழுது அபிலாஷின் மௌனமாக திரிந்திருக்கிறது.



இந்த மௌனத்தைக் கிழித்தபடி வேறொரு பெண் பேசினார் ”வசு நல்லாயிருக்கீங்களா என்றார்( அப்பெண் பெயரை இடுவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை அவருக்கும் இதில் சிக்கல் இல்லை என்றால் அதையும் இடுவதில் தயக்கமில்லை)    “ நான் நேசமித்ரனிடம் ஏன் என்னிடம் வலசைக்கு கவிதை கேட்கவில்லை என்று கேட்டேன்...அதற்கு அவர் நீங்கள் ஆதிரன் வசுமித்ர அவர்களின் தோழராக உள்ளீர்கள்... பின் எப்படி உங்கள் கவிதைகளைப் போடமுடியும் என்று கேட்கிறார்..இது எவ்வளவு மோசமான மனநிலை என்றார்.  அதற்கு நான் பதிலாக அப்பொழுது முதல் வலசையில் உங்கள் கவிதை நீங்கள் யார் நண்பர் என்று கருதி உங்கள் கவிதையைப் போட்டார் எனக் கேட்டேன். அதற்கு அவருடன் பழகியதை நினைத்தாலே அறுவெறுப்பாக இருக்கிறது என்றார். அடிக்குறிப்பாக இன்னொன்றும் சொன்னார். அவனெல்லாம் பாருங்க.... ஒரு குழந்தையக் கல்யாணம் பண்ணிட்டு குழந்தைச் சிறப்பிதழ் போடுறான் என்ன சொல்றது வசு என்றார். நான் அதை அவரிடமே சுட்டிக் காட்டுங்கள் என்றேன். அதற்கு அவர் இது எதுக்கு வசு என்றார் நான் பதிவிடமுடியாதைப் பற்றி நாம் பேசுவது நல்லதில்லை என்றேன். அதற்கடுத்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நேசமித்ரன் கவிதை என அறியப்பட்ட குப்பைக்கு வியந்து அந்தப் பெண் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்....எனக்கு ஆயாசம் மிஞ்சியது.

இன்று வரை கோணங்கியும் யவனிகாவும் நேசமித்ரனின் யோக்கியங்களைப் பற்றி நல்ல தமிழில்தான் என்னிடம் பேசிக்கொண்டிக்கிறார்கள். நான் வைத்த எந்தக் கேள்விக்கும் இதுவரை நேசமித்ரனிடம் இருந்து பதில் வரவில்லை. டயானக் கவிதையை மொழிபெயர்த்தவரும் என்னிடம் உரையாடினார். அது அவர் மொழிபெயர்த்த கவிதையில்லையாம். அதைச் செய்தது திருவாளார் நேசமித்ரன் தானாம். அதோடு இந்த விவாதத்தை முன் வைத்து நான் எழுதியபோது அந்த டயானாவை மொழிபெயர்த்தவர் நேசமித்ரனை பலமுறை அழைத்துப் பார்த்தும் போனை எடுக்காது இருந்திருக்கிறார் நேசமித்ரன்.  காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவரும் இப்போது நேசமித்ரனின் குப்பைகளுக்கு ஆமென் போட்டுக்கொண்டிருக்கிறார்.


இரண்டாவது சம்பவம்

நண்பர் லஷ்மி சரவணக்குமார் எழுதியது. எனது வாழ்வையும் எனது வாழ்நாள் தோழி கொற்றவையின் வாழ்வையும் பற்றி ஒரு துளி அறியாது ஒரு வசை அனுமானத்தை முகப்புத்தகத்தில் முன் வைத்து,  உடனே அதை நீக்கிவிட்டார். அந்த வசையைக் கவனித்த கொற்றவை என்னிடம் பேசியபோது. அது அப்படி இருக்காது.  லஷ்மி சரவணக்குமாருக்கு இப்படி எழுதும் அவசியமமும் இல்லை.... தேவையும் இல்லையே என்றேன். அதற்குக் கொற்றவை, இல்லை அது நம்மைப் பற்றி எழுதப்பட்ட விசயந்தான் என்றார். இடையே தொலைபேசியில் அழைத்த நண்பர் சுதீர் செந்தில் அதை உறுதிபடுத்தினார். பின் நான் லஷ்மி சரவணக்குமாருக்கு நான் பலமுறை போன் செய்தேன் பலமுறை என்றால் கிட்டத்தட்ட அறுபது தடவைகளுக்கு மேல் போன் செய்தேன் நண்பர் எடுக்கவில்லை.

விளைவாக மனம் கசியும் குற்றவுணர்ச்சியில் லஷ்மி சரவணக்குமார் மன்னிப்புக் கேட்டார். நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்றேன். லஷ்மி சரவணக்குமார் மனம் நொந்த நிலையில் மறுத்தார். பரவாயில்லை வாருங்கள் என அழைத்தேன் வந்தார். இருவரும் கொற்ற்வை சமைத்து வைத்த அன்றைக்கான மதிய உணவை உண்டோம்.  ஏன் லஷ்மி இதைச் செய்தீர்கள். எங்கள் வாழ்வைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால் என்னிடமோ கொற்றவையிடமோ கேட்டிருக்கலாம் இல்லையா என்றேன். அதற்கு நான் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்தேன் நண்பா அதனால் அப்படிச் செய்துவிட்டேன் என்றார். அதற்கு உங்கள் மனநிலை குழப்பத்திற்கு எங்களது வாழ்க்கையைத்தான் அசிங்கப்படுத்துவீர்களா எனக் கேட்டேன். லஷ்மி மிக வருத்தமாய் உணர்ந்தார். அத்தோடு அவ்வுரையாடல் முடிவு பெற்றது.

அதன் பின் கொம்பு இதழில் அடிமைகளை வாங்கவும் விற்கவும் இங்கு அணுகவும் என்ற தலைப்பின் கீழ் கோமதிநாயகம் என்ற புனைப்பெயரிம் நான் ஒரு கற்பனைப் பேட்டியை வரைந்திருந்தேன். இப்பொழுதும் சொல்கிறேன் அதில் ஒரு சொல் கூட இன்னும் மாறவில்லை அது குறித்து நான் இப்பொழுதும் தெளிந்த மனநிலையில் உரையாட எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன்.

ஆனால் கோமதிநாயகம் எழுப்பிய எந்த கேள்விக்கும் அதில் உள்ள உரையாடலுக்கும் எழுத்து மூலமாக பதில் வரவில்லை. இன்னும் அதில் மௌனமே நிரப்பட்டிருக்கிறது. ஆசிரியர் வெயில் வசு கள்ளமௌனம் என்றால் என்னவென்று இப்பொழுது புரிகிறது என்றார். நிற்க

அதற்கடுத்து வெயிலுக்கு கோமதிநாயகம் குறித்த உரையாடல்கள் போனில் தொடங்கியது. நண்பரும் சில நேரங்களில் அண்ணனுமான கோணங்கி வெயிலிடம்  போன் செய்து யாரந்த கோமதி நாயகம் என்று கேட்க அதற்கு வெயில் ஏண்ணே எனக் கேட்க கோணங்கி அட சொல்லுடா என்க வெயில் நம்ம வசுதான் என்று பதில் உரைத்திருக்கிறார். அதற்கு கோணங்கி மகிழ்ந்த சிரிப்பொழியுடன்... டேய்... நினைச்சன்டா.... நினைச்சன்டா.... என சிரித்து முடித்த ஓசையுடன் தொலைபேசி அணைந்திருக்கிறது.

அடுத்து நண்பர் லஷ்மி சரவணக்குமார் வெயிலுக்கு போன் செய்து யாரு நண்பா அந்தக் கோமதிநாயகம் எனக் கேட்க வெயில் ஏன் என்ன விசயம் எனக் கேட்க அதற்கு லஷ்மி... இல்ல நான் ஒரு அவசரமான இடத்துல இருக்கேன்..உடனடியா பதில் வேணும் சொல்லு சொல்லு என்க வெயில் வசுதான் என்க லஷ்மி ஓகே எனப் போனை வைத்திருக்கிறார். அதன் பின் உரையாடல் தொடரவில்லை.

சம்பவம் மூன்று
அதன்பின் வக்கிரத்தால் மெழுகப்பட்ட திருவாளர் நேசமித்ரன் கடல் கடந்து உதிரித் தொழில் செய்து இலக்கியத்தை வளர்க்கும் அந்த ஆத்மா ( அழுத்தம் என்னுடையது) வெயிலுக்குப் போன் செய்திருக்கிறது. போன் செய்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துகும் அதிகமான உரையாடலைச் செய்திருக்கிறது. அவ்வுரையாடலில் கோமதிநாயகம் எழுப்பிய கேள்விகளையோ பதில்களையோ பற்றி எதுவும் சொல்லாமல், அவன் என்ன பெரிய இவனா எனத் தொடங்கி அவனைப் பத்தித் தெரியாதா அவன் பொண்டாட்டியை அவன் அடிக்கிறதில்லையா எங்களுக்கு எல்லாம் தெரியும்..அவன் என்ன பெரிய இவனா இங்க நாங்க உசுரைக் கொடுத்து இலக்கியம் வளர்க்கிறோம் என்ற ரீதியில் அது தன் நிதானத்தை இழந்து வாந்தியை எடுத்திருக்கிறது. அதற்கு வெயில் கோமதிநாயகத்தின் கருத்துக்கு மறுவினை செய்யுங்களேன் என்றதற்கு மறுத்ததோடு நீங்கள் பேசிய இவ்வுரையாடலை கோமதிநாயகத்திடம் சொல்லலாமா எனக் கேட்டதற்கு அது எதுக்கு வேஸ்டா என பம்மி பின் மறுபடியும் அவதூறுகளை முன் வைத்திருக்கிறது.

இதுவே கோமதிநாயகம் தமிழுக்குக் கொடுத்த கொடை. இன்னும் நேசமித்ரன் எனும் வக்கிரம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.


அன்பான அந்த வக்கிரத்திற்கு நான் சொல்லுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்,. கேட்பதற்கு என்னிடம் நாலைந்து கேள்விகள் உள்ளன. கேட்டால் அசிங்கப்பட்டு முச்சந்தியில் நின்று தலையைச் சொறிய அவரும் அவருக்கு உடந்தையான சிலரும் ஆளாக நேரிடும் என மௌனம் காத்தேன் இனி காப்பதற்கு ஏதுமில்லை. அத்தனையும் நிறை அம்மணமாக்கும் மனநிலை கொண்டே இதை முன் வைக்கிறேன்.


என்னைப் பற்றியும் கொற்றவை பற்றியும் இலக்கியம் தாண்டி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது கேஷ் ஹிஸ்டரி செய்ய வேண்டும் என்றால் ஒரு மேடையை அமைத்துத் தாருங்கள். அதை செலவிலேயே செய்து தருகிறேன். அதே மேடையில் அவர்களின் கேஷ் ஹிஷ்டரியையும் தூசுதட்டிக் கொண்டு தயார் செய்து வரலாம்.

இப்பொழுது நேசமித்ரனிடம் கேட்க ஒரு கேள்வி.

கோமதிநாயகமாகிய நான் வைத்த உரையாடல்களுக்கு எந்த இலக்கிய பதிலையும் தராது கோமதிநாயகத்தின் குடும்பத்தை மட்டுமே வைத்து உரையாடும் நீங்கள் இப்பொழுது செய்த இரண்டாம் திருமணத்தில் மணப்பெண்ணின் வயது என்ன... (அவரது நெருங்கிய தோழிகள் அதை அவரிடம் சொல்லக் கூசி, வேறு வழியில்லை என்று என்னிடம் கூறியதுதான்.).

உங்கள் மனைவிக்கு எத்தனை வயது நேசமித்ரன்... அவரது பெயர் என்ன... இதுவரை நீங்கள் பிற மகளிர்க்கு அண்ணனாய் தம்பியாய் இன்னும் பல போர்வைகளைப் போர்த்தி செய்யும் இலக்கிய கள்ளத்தன மொழிபெயர்ப்பு உதவிகளை உங்கள் மனைவிக்கு கணவனாய் ஒரு முறையாவது செய்திருக்கிறார்களா.. அந்த அப்பாவிப் பெண்ணிற்கு எழுதக் கூட்டி வாசிக்கத் தெரியுமா அவரின் புகைப்படத்தைக் கூட நான் பார்த்ததில்லை நேசமித்ரன். அறியத் தருவீர்களா.


இறுதியாக நண்பர் அபிலாஷ்க்கும்.... இதே கேள்விகளை முன் வைப்பதோடு, என் குடும்பத்தின் மீதான அக்கறையை..அதன் மேல் உள்ள இவர்களது சந்தேகங்களைத் தீர்க்க நானும் கொற்றவையும் அவர்களின் இல்லங்கள் தேடிச் சென்று விளக்க ஆவலாய் உள்ளோம். இந்த பிப்ரவரியின் இறுதி கால அவகாசத்தில் எங்களது விடுமுறை நாட்களை சம்பந்தப்பட்ட நண்பர்களின் மனைவிகளோடு கழிக்க எண்ணுகிறோம்.... அழைப்பீர்களா.....நண்பர்களே.

அழைக்காவிட்டாலும் அழையா விருந்தாளியாகச் சென்று, சம்பந்தப்பட்ட நேசமித்ரனின் பெயர் தெரியா அவரது மனைவியிடமும்...அபிலாஷ் அவர்களின் மனைவி காய்த்ரி ராமச்சந்திரனிடமும் நிச்சயம் நாங்கள் உரையாடுவோம்.

நண்பர் வெயிலுக்கு...இனி நீங்கள் அறிந்த தகவல்களை தெரியச் செய்யலாம். காத்திருக்கிறேன்.



“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...