அல்குல் ; பெண்ணின்
இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு
வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ?
அல்= இல்லாமல்
போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல்.
(அல்குல் இல்லாதாரே
அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல்
இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள்.
கூதி ; அல்குலுக்கு
வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம்.
புண்டை;
பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண்
காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு.
புண் –பெண்,
பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள்.
அல்குல், வ்ல்வா
( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச்
சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள்.
பழம் ஆங்கிலத்தில்
கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக்
குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary
of slang..vol 2)
Cu V e the
என்பதன் பொருள் ஏற்கனவே இருக்கும் அகழியில் தோண்டப்படும் மற்ருமொரு பள்ளம். இச்சொற்கள்
கூதிக்கு ஒலி உறவும், பொருள் உறவும் உடையன, அல்குலைத் தாண்டி ழ்ழப்படும் யோனியைக் குறிப்பதாம்
அது.
அல்குலுக்கு
எகிப்திய மொழி கா-ட் kat. ஆங்கிலத்தில் கன்ட், ஜெர்மன் குண்டே டச்சுக்குண்டே பழம் பிரசியன்
குண்டே, பழம் நார்ஸ் குண்டே எகிப்திய சொல்லுக்கு அம்மா பெண் பெண் உறுப்பு என்று பல
பொருள். இந்த ka-t, cunt ஆகி இருக்கலாம்.
ஜெர்மன் மற்றும்
வட அய்ரோப்பிய மொழிகளில் வழங்கும் குண்டே, குண்டா ஆகியவை புண்டை என்னும் சொல்லாக இருக்கலாம்..
அதைவிடவும் அதற்கு இன்னும் நெருக்கமான மேலைச் சொல் தற்கால ஆங்கிலத்தின் புடெண்டா(
pundenta) பன்மை புடெண்டம்.
( pudendum)
இந்தச் சொற்கள்
பொதுவாய் அல்குலைக் குறிப்பன என்றாலும் அதை வெளிப்படுத்துவதில் தனித்தனிப்பொருள் தருவன.
அல்குல் இது
புலவர் கையாள்வது.
கூதி யோனி
– vegina இவை அல்குலின் ஆழத்தை விளக்குவதாம். அதற்கு உறை என்றும் பெயர். யோனியும் வெஜைனாவும்
yoni- vegina) ஒலி உறவுடையன.
இப்படி 58 பக்கங்களில்
நீள்கிறது ஆராய்ச்சி.
படிக்க;
அல்குல்-
தமிழ்நாடன். காவ்யா பதிப்பகம்.
அதற்கு கி.ரா.
ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
சிற்றுரையில்
நடிகன் எஸ் .எம் ராஜா. அப்புத்தகத்தை என் இல்லத்தார் படிக்கச் செய்வேன், தேவைப்படும்
எனில் விளக்குவேன். என்று நேர்மையாகவும் பதிந்துள்ளார்.
கொற்றவையின்
கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களில் எனக்கு சில எனக்கு உயர் முற்போக்கு அறிவைத் தந்தன.
முற்போக்குப் பெண்ணியம் என்பதில் தொடங்கி புண்டைப் பெண்ணியம் வரை அது நீண்டது. வாழ்த்துக்கள்.
இப்படித்தான் பல பெண்ணியங்கள் உள்ளது. ஆனால் சகலரும் சொன்னது குடும்பப் பெண்கள் அவர்களை
எப்படி இழுக்கலாம் என்று,,
இந்த
இடத்தில்தான் குடும்ப ஆண்கள், தங்கள் கொடியை ஏற்றியிருக்கிறார்கள். முற்போக்குப் பெண்ணியத்தில்
குடும்ப ஆண்கள் என்ற சொல் நான் கேட்டறியாதது. இதுவரை படித்தறியாது. ஒரு வேளை ஆணாதிக்கத்தில்
குடும்ப ஆணாதிக்கமும் சேர்த்தியா எனத் தெரியவில்லை அறிந்தோர் விளக்கவும்.
நீ
பேசினால் உன் குடும்பத்தை இழுப்பதா என்ற கேள்விகள் அதிகமும் புழங்கின. மிக்க மகிழ்ச்சி.
தனது மகன் குறித்தும் அவரின் இசை கடவுளால் அனுகிரக்கிக்கப் பட்டது நினைத்தே பார்க்கமுடியாது
என சான்றோன் எனக் கேட்ட தந்தையாய் அனிருத்தின் தந்தை புளங்காங்கிதம் அடைந்திருந்தார்.
அவரை இப்பாடலைக் கேட்பாரா என்று கேட்டால் அது குடும்ப ஆணை இழுப்பதாகுமா என்று தெரியவில்லை.
எனக்கு
மறுபடியும் சிக்கல் வரும் சொல்லாக இந்தக் குடும்ப பெண்கள் பதம். ஏன் குடும்ப ஆண்களை
இழுத்தது தவறா எனத் தெரியவில்லை.
குடும்பப்
பெண்கள் என்றால் என்ன.. ?
1
சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள பெண்கள்.
2
ஆணாதிக்க சமூகத்தில், அனைத்து கேடுகளையும் வீட்டுக்கு வெளியே விதைத்து விட்டு வீட்டுக்குள்
குடும்ப ஆணாய் வரும் அவனுக்கு புருஷ சிருட்ஷை செய்வதா…இல்லை, நவீனத்தில் புருஷன் காலணிகளைத்
துடைத்து புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி இன்முகத்தோடு டாட்டா காட்டி கதவோரம் நின்று
கணவனைப் பார்த்து சிரித்து வழியனுப்பி வைப்பதா..இல்லை அவனின் சொத்துடைமயா… ஆணாதிக்கப்
பார்வையில் நல்லொழுக்கமான பெண்கள் என்ற அர்த்தமும் சேர்ந்தே வருகிறது. இதையும் முற்போக்கு
குடும்ப ஆண்கள் உணரத்தலைப்படலாம்.
குடும்பப்
பெண்ணாக இல்லாமல் தனியாக இருக்கும் தனிப்பெண்களை அழைக்க என்ன பதம். அறிஞர்கள் உதவுவார்களா.
இச்சமயத்தில்
சிறுகூற்றாக,
புண்டைக்கு
வரலாறு, அறிவியல், புவியியல் மட்டுமல்ல இதிகாசமே உள்ளது. என்ன பிரச்சினை என்றால் அனைத்தும்
ஆண்கள் எழுதியது. அதனால் அப்படித்தான் இருக்கும்.
அதேசமயம்
ஆண்களின் வசை சொல்லான புண்டை என்ற ஒரு சொல், ஒட்டு மொத்தமாய் ஒரு பெண்ணின் முழு உடலையே
முன் வைப்பதோடு, சம்பந்தப்பட்ட உறுப்பில்தான் இனவாதம் மதவாதம் மொழி வாதம் என எந்த வாதமாக
இருந்தாலும் பெண்களுக்கு எதிராய் யுகங்கள் தோறும், யுத்தங்கள் தோறும் ஆண்கள் அவ்வுறுப்பில்
கத்தியைச் சொறுகுவதும், துவக்குகளைச் சொறுகுவதும், மின்சாரம் பாய்ச்சுவதாகவும் இருக்கிறார்கள்
என்ன செய்ய.
இப்பொழுது
அதை துணிந்து, அதன் இளி தொனி மாறாமல் அப்படியே இருவர் பாடுவதை எதிர்ப்பதை விடவும்,
புண்டை என நீ எப்படிச் சொல்லலாம் என்ற கேள்விகளே நீண்டது. இடக்கரடக்கலும், வித்தியாசப்படுத்தலின்
அரசியலும், பெண்ணியமும், வர்க்க அரசியலும் தெரியாது, கருத்துச் சொல்லியாய் இருப்பதும்,
தன் குறி ஒன்றே பிரதானம் என்ற நினைப்பே போதுமானது என நினைத்து தட்டத்துச் செய்பவர்களுக்கு
நான் என்ன சொல்ல.
உதாரணமாக
டி
ஆர் எழுதிய பாடலான….
ங்கொப்பன்
மவனே
ங்கொப்பன்
மகனே
டண்டணக்க
என்ற
பாடலை
புண்டை
மவனே
புண்டை
மவனே
- எனப்
பாடினால் அசிங்கமும் ஆபாசமுமாகத்தான் இருக்கும்.
கவிதைகளில்
புண்டை எனக் குறிக்கப்பெறாமல் போன காரணம், அது வசவுச் சொல்லாக மாறியதானாலேயே தவிர.
குறிக்கக் கூடாதென்பதற்காக அல்ல. இடக்கரடக்கல். (மலத்தை நெருப்பென்று கரந்தழைக்கும்
பழக்கம் பார்ப்பனர்களிடத்தில் உண்டு. பீயை பீ என்று கூறாது மலம் என்ற பொதுவழக்கும்
உண்டு.)
இன்னும்
ஈழத்தில் எத்தனையோ கவிதைகள் போருக்கு எதிராய் துவக்குக்கு எதிராய் நீண்டிருக்கின்றன.
கவிஞர் வைரமுத்து கூட தினந்தந்தியில் யோனிக்கு மானக்குழி என பெயர் ஒன்றை இட்டு எழுதியிருந்தார்.
இடம்
பொருள் ஏவல், இத்தோடு தொனியையும் சேர்த்து அறியாத அறிஞர் பெருமக்கள் தமிழ் கூறும்
நல்லுலகில் முற்போக்கு நிலைய வித்துவான்களாய் இருப்பது நான் அறியாததொன்றல்ல..
யோனி,
ஆனந்ததம், அல்குல், திதலையகம், மாண்வரியகம் என இலக்கியமும், சங்கப்பாடல்களும் சொல்வது,
அதன் தொனியில் பெண்ணை நோக்கிய நேரடி வசைக்கான அர்த்தத்தை சேர்காததானாலேயே. இன்னும்
சொல்ல வேண்டுமென்றால் அல்குல் யோனி இவ்விரண்டும் வசைச்சொல்லாக உருமாறியிருந்தால் அதை
எழுத மாட்டார்கள்.
(
இன்னும் சில விலக்கமாய் தமிழில் நிர்வாணத்துக்கு சொல்லே கிடையாது. அப்படியென்றால் தமிழில்
யாரும் அம்மணமாக இருந்ததில்லையா என்ற ஆய்வும் தேவையே.)
இடக்கரடக்கலுக்கு
எடுத்துக்காட்டாக;
தாயாகப்
போகிறவளே
உன்
யோனியைப் பிளப்பேன்
உன்
யோனியை விரிப்பேன்
தாயையும்
சேயையும் பிரிப்பேன்
சூல்
பையிலிருந்து குழந்தையைத் தனியே தனிப்படுத்துவேன்
சூல்பை
கீழிறங்கட்டும்
- இது
அதர்வ வேதத்தில் வருகிற மகப்பேற்றின் போது வரும் பாட்டு.
இதை
யோனி என்று மொழி பெயர்த்தவர்..நேரடியாக
தாயாகப்
போகிறவளே
உன்
புண்டையைப் பிளப்பேன்
உன்
புண்டையை விரிப்பேன்
என்ற
ரீதியில் மொழி பெயர்த்தால் தொனியும் அர்த்தமும் இணைந்து தரும் விளக்கம் என்னவென வியாக்யானிகள்
பொருத்திப் பார்க்கலாம். மடல் வாழைத் துடை இருக்க என்று எழுதிய வாலி சமூகத்தில் கவிஞராகவும்,
எப்படி.. எப்படி.. சமைஞ்சது எப்படி.. என்று எழுதியபோது ஆணாதிக்க வக்ரப் பேர்வழியாகவும்
மாறியது இந்த இடம் பொருள் ஏவல் சாந்த புரிதல்களினாலேயே.
இப்படி
இழுத்து வைத்து இலக்கியம், எழுதுமுறை, கூறு முறை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல்
நிறுத்தி வைத்து அவ்வுறுப்பைச் சுட்டினால் அவர்களை சவுக்கால்தான் அடிக்க வேண்டுமென்றால்
தமிழ் கூறும் நல்லுலகில் சங்கப் புலவர்கள் தொடங்கி பிட்டுக்கு வாங்கிய அடியோடு இறையனார்
இன்னும் பல கோடுகள் தாங்கி வரிப்புலியாய்த் திரிதல் வேண்டும்.
மற்றபடி
குடும்ப பெண்கள் என்று சொல்லி கட்டுரையின் பொருளை இரண்டிரண்டு வரியாக பிரித்தெடுத்தால்
தொனியும் அர்த்தமும் மாறத்தான் செய்யும். குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள்
இதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் என்று நானறிந்து அறிவுரை மழைகளை குழந்தை செல்வங்களுக்கு
வாரி வழங்கிக்கொண்டிருக்கும் குடும்ப ஆண்கள், என் மகள் அப்படிப் பேசினால் என் மகன்
இப்படிப் பேசினான் அய்யோ அழகு எனக் கொஞ்சும் குடும்பப் பெண்கள்… உங்கள் மகன் இப்படி
அறுவெறுப்பாக பேசுகிறானே என்ன செய்ய என்று கேட்பது ஒரு சமூகக் குற்றம். அழகாக பேசுகிறானே
என்றபோது உங்கள் தாய் தந்தையர்க்கான முகம் குமிழ் பூத்து நெக்கு விடும்போது உன் மகன்
இப்படியா என சுட்டிக் காட்டினால் குடும்பப் பெண்கள் கருத்துரிமை.
இத்தனைக்கும்
சுட்டிக்காட்டப்பட்ட அப்பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் எத்தனையோ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்கள்.
சம்பந்தப்பட்ட
அனிருத் சிம்பு இவர்களின் பாடல்களை கலைஞர்களாக இருக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள்
இதை எப்படி புரிந்து கொள்வார்கள் செயலாற்றப் போகிறார்கள் என்று கொற்றவை கேட்டதுமே குடும்ப
ஆண்கள் கொந்தளிப்பது மிகச்சரியாக இருக்கிறது. புண்டைப் பெண்ணியம், பொம்பளை என்ற ரீதியில்.
மகிழ்ச்சி. நிற்க.
உங்கள்
மழலைகள் தூங்கும் நேரம் தவிர அவர்களை வளர்ப்பது சமூகம். வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டுப்
போனால் சாலை மதில் சுவர்களில் தொங்கும் போஸ்ட்டர்களிலிருந்து அவர்களுக்கு சமுகம் கற்றுத்தரும்
சித்திரங்கள் ஏராளம். வாழ்க தமிழ்ச் சமூகம். என் மகன் இசையமைத்து ஹிட்டான பாடல் என
அவர்கள் பள்ளி விழாக்களில் ஆடச் சொல்லி உறுப்பின் பெயர் தெரியாது உங்கள் செல்ல மகள்
இடுப்பை அசைத்து ஆடும் போது என்ன செய்வீர்கள். பள்ளியைக் குற்றம் சாட்டுவீர்களா. அல்லது
படித்தவரைக் குற்றம் சாட்டுவீர்களா.
சிறு
விளக்கம்.
சிம்புவுக்குப்
பதிலாக அவர் குடும்ப ஆணான டி ஆர் முதலில் களத்தில் இறங்கி மைந்தனைக் காப்பாற்ற துடித்திருக்கிறார்.
மேலும்
சிம்பு டி ஆர் அனிருத் அவரது குடும்பப் பெண்களுக்காகப் பேசிய குடும்ப ஆண்களை மதிக்கிறேன்.
இனியாவது அவர்கள் பொதுவெளியில் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக
உள்ளேன்.
காதலியின்
சுண்டு விரல் போட்டோ போட்டு இன்னைக்கு இவகூட, அடுத்த நாள் இன்னொரு பெண்ணின் நகத்தைப்
போட்டு இன்று இரவு இவளோடு என்று குலாவும் போதும்..எனக்கு ஒருத்தி கிடைச்சிட்டா என்பதும்,
அதற்கு விருப்பக் குறிகளை அள்ளி வழங்கியதோடு, அடே நண்பா நானு நானு,… என நாக்கைத் தொங்கப்
போடுவதும், அக்குடும்ப ஆண்கள் அக்காதலிகளின் புகைப்படங்களைக் கூடப் போட துணிவில்லாது
இருப்பதும் கூட புண்டை ஆராய்ச்சிக்கு இடமளிக்கக் கூடும் என்ற பயத்தாலேயா.. அவ்வகை மாதிரிகளான
குடும்ப ஆண்களையும் மதிக்கிறேன்
தங்கள்
தோழிகளின் தோளில் சாய்ந்து தோழி எனக் கூடச் சொல்ல வராது அக்கா என்று பாத்திரவார்ப்பை
மாற்றுவது, அதே சமயம் இன்னொருவரின் அக்காவை அடியே உன்னை லவ் பண்றேண்டி எனச் சொல்லுவதும்
குடும்ப ஆண்களின் வழக்கம்தான்.
மீச்சிறு
குறிப்பு.
1
இரு ஆண்கள் புண்டையைப் பற்றி பாடியது இருக்கட்டும். ஒரு பெண் அதை எப்படி எழுதலாம் என்ற
கேள்வியை மறைத்துக்கொண்டு குடும்பப் பெண்கள் குடும்பப் பெண்கள் என்று குடும்ப ஆண்கள்
கூவியது மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில் முகநூலில் குடும்பமில்லாமல்தான் குடும்பப் பெண்களை
அவர்கள் வாழ்த்துவதும் வரவேற்பதும்.
2
கோவன் நேரடியாக முதலமைச்சர் ஜெயலலிதாவை உத்தமி உல்லாசி என்று பாடி, படம் போட்டுக் காட்டியதையும்
மகிழ்வுடன் கேட்டு, புரட்சி வாயை இழுத்து மூடி, பேசாமல் அமைதி காத்த முற்போக்கு
குடும்ப ஆண்களுக்கும் முற்போக்கு பெண்ணிய குடும்பப் பெண்களுக்கும் என் அன்பு. புரட்சியாளர்கள்
பேசினால் அது சாலத்தகும்.கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.
ம.க.இ.க
கோவன் பிரச்சினையில் உளவியலாய் நான் கற்ற கூறுகள் நான்கு.
1
அப்பாடலின் பாடபேதத்தை எதிர்த்தால் வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் பேசக்
கூடும்.
2
அவர்கள் நேரடியாக உங்கள் குடும்பப் பெண்களை பெயர் சொல்லி சந்திக்குக் இழுக்கக் கூடும்.
3
முற்போக்கு புரட்சிகர முகமூடிகள் கிழிந்து தொங்கும்.
4
மெய்நிகர் உலகத்தில் நீங்கள் சக ஆண்களுக்கு, அல்லது சக பெண்களுக்கு விட்ட தூதுக்களை
கணிணி அறிவோடு பிறாய்ந்து உங்கள் இல்லத்தில் வீசக் கூடும்.
இவ்வளவே.
இதில்
நனிகூர் அறிவுடையோர் கூறும் கூற்றாகச் சொன்னது அவர்களாவது ஒரு தடவை சொன்னான் இந்தம்மா
எத்தனை தடவை சொல்லுது… இணையத்தின் கொற்றவையின் புழங்கு வெளி சிறிது. அவர் எழுதிய எதிர்வினை
எத்தனை பேரை அண்டப் போகிறது. ஆண்சொல்லாடலில் கரைக்கப்பட்ட சிறு பெருங்காயம் அது.
முகப்
புத்தகத்தில் உங்கள் நாலு வயசுக் குழந்தை இயங்கத் தொடங்கி அவர் கொற்றவையை அறிந்திருந்தால்
இது குற்றமே. கணிணியே காணாத மக்களையும் அவர் தம் குழந்தைகளையும் சிம்பு அனிருத்
வகையறாக்கள் அண்டும் விதம் அவர்களின் திரைத் துறை ஒலிப்பெருக்கிகள் அவர்கள் இல்லத்தில்
ஒலிக்கும்போது முக நூலோ அல்லது வாட்ஸ் அப்போ அறியாத அக்குழந்தைகள் எழுந்து பாடி ஆடினால்
என்ன செய்வீர்கள். விளக்குங்கள் தகைமையுள்ளோரே.
ஒரு
பாடலின் இயங்கு வெளி குறித்து சிற்றறிவும், ஊடக விளம்பர மோகத்தின் பாய்ச்சலும் அறியாத
உங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
4
அனிருத்தின் தந்தையும் குடும்ப ஆணாகவும் உள்ள ராகவேந்தர் தன் மைந்தனின் இசை குறித்தும்
கடவுள் கடாஷத்தைக் குறித்தும் முன்னொரு சமயம் விதந்தோதிய சுட்டி.
வாழ்த்துக்கள்.
வசுமித்ர