வணக்கம் அய்யா....
உங்கள் பெயரில் ராஜாவும் சுந்தரமும் பின் ஒரு ராஜாவும் இருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இது எனக்கு எந்த வேறுபாட்டையும் தரவில்லை. நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். நேசமித்ரன் எனக்கு வைத்த வசைகள் எளிய தமிழில் இருந்தது எனக்கு மகிழ்ச்சி. மேலும் இவ்வகை எழுத்து முறையையும் அவருக்கு நான்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் கோணங்கியையும் காப்பாற்றியிருக்கிறேன். இனி அவர் எழுதப்போகும் எழுத்துக்கள் குறித்து ஆர்வமாக உள்ளேன்.மிகச்சிறந்த முறையில் வாசகர்களையும் காப்பாற்றியிருக்கிறேன். என்னால் தொண்டு செய்து மாளவில்லை.
அன்பு ராஜ சுந்தரராஜன்... ரமேஷ் பிரேம் படைப்புகளை நீங்கள் படித்திருக்கும் பட்சத்தில் என் படைப்பு குறித்து நீங்கள் தாரளமாக விசாரிக்கலாம் .கோணங்கியின் கழிவுக்குப்பை என்றதும் நேசமித்ரனுக்கு வந்த பதட்டத்தில் “டீச்சர் கிள்ளி வைக்கிறான்” என்ற ஒப்பீட்டைப் போல்தான் இது. நீங்கள் அறிவுஜீவிகளை துணைக்கழைப்பதால் அவர்களின் தொடர்பு குறித்தும் யோசித்திருப்பீர்கள். ஏதேனும் ஒரு அறிவு ஜீவி என் படைப்புக்கும் பிரேம் ரமேஷ் படைப்புகளுக்கும் உள்ள காப்பி...அல்லது ஒற்றுமை...அல்லது ஜெராக்ஸ் என்று நிரூபித்தால் எனக்கு உபயோகமாய் இருக்கும். மேலும் இதற்கு நீங்கள்தான் துணை செய்யவேண்டும்.
அறிவு ஜீவிகளை உதவிக்கு அழைக்கும் உங்களது நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் நான் கட்டப்பஞ்சாயத்துக்கு ஆள் திரட்டுபவன் அல்ல. பாடிகார்ட் முனிஸ்வரர்களை நான் அறவே வெறுக்கிறேன். வார்த்தைகளை விட வேறு வன்முறை அஸ்திரம் இருந்தால் சொல்லுங்கள்.
எனது விளம்பரப் ப்ரியம் குறித்து தாங்கள் அறிந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும் இங்கு உங்கள் விளம்பரத்தை பதிவு செய்வதையும் நான் புரிந்து கொள்கிறேன். பல இலக்கியங்கூட்டங்களுக்கு போனவன் அதாக்கும் அப்டியாக்கும் என்று மார் தட்டி நின்ற நேசமித்ரன் முன் நின்று இதை விமர்சியுங்கள். நீங்கள் அப்படி நிறைய கூட்டங்களில் பங்கேற்றிருப்பின், அது விளம்பரம் வேண்டாது அக்கூட்டங்களுக்கு நீங்கள் செய்த உதவியாகவே நினைக்கிறேன். நிற்க.
நீங்கள் என் கவிதைகளைப் படித்ததுண்டா ராஜ சுந்தரராஜன். நான் கோணங்கியைப் படித்திருக்கிறேன். நீங்கள் கோனங்கியைப் படித்திருந்தால் நேசமித்ரனின் படைப்புகள் என்று சொல்லும் அந்த கழிவுக் குப்பை குறித்து விவாதிக்கலாம். நான் மிகுந்த தைரியத்தோடு உள்ளேன். மேலும், பேச ஒரு ஆள் கிடைப்பது கூடுதல் பலமில்லையா...
நேசமித்ரனின் ஆரம்ப கட்ட எளிய வரிகள் கொண்ட சில கவிதைகளைத் தவிர, அவர் கோணங்கியை கொலைக்குத்து குத்தத் தொடங்கியது முதல், வலசை முதல் தலையங்கத்திலிருந்து... கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவன் ( பொம்மைக்கும் அதுவும் கார்டூன் பொம்மைக்கும் டப்பிங் ) என்ற கழிவு வரை தொடங்கி...வலசை ரெண்டில் க்ளெனன் மீன்கள் முதற்கொண்டு இப்போது கோணங்கி குறித்து அவர் எழுதியிருக்கும் அனைத்து வரிகளும் கோணங்கியை நுகர்ந்து பார்த்து வாசம் பிடிபடாமல் கழிவாய் இறக்கி வைத்தவையே....ஒட்டுமொத்தமாக அவை ஆகச்சிறந்த கழிவென்பதால் இரண்டு வரிகளைக் கூட தரம் பிரிக்கமுடியவில்லை.
விரிவாக உரையாடலாம்.
என் கவிதைகளை நீங்கள் படித்திருந்தால் அது குறித்து நான் பேச நிறைய இருக்கிறது.
அதோடு நேசமித்ரன் எழுத்துக்கள் கழிவுக் குப்பையல்ல என்றால் அது குறித்தும் விமர்சனம் செய்து, உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
சிறு குறிப்பு; எனக்கு ஆங்கிலம் தெரியாது என்ற நேசமித்ரனின் அகந்தையை வரவேற்கிறேன். ஆங்கிலம் தெரிந்தவன்தான் சிற்றிலக்கியவாதி என்றால், அவன் எழுதுவதுதான் கவிதையென்றால்...ஆங்கில அகராதி, அறிவியல் அகராதியும் கவிதையே...நிகண்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்...
நான் நிறைய கேள்விகளை வைத்த பின்னும் அதை எதுவுமே கவனிக்காது மேற்கோள்களை நான் வைப்பதாக தாங்கள் சொல்வது உங்கள் மீது எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணுகிறது.
மேலும் வலசை இரண்டாவது இதழில் பக்கம் 190 ல் புலனுறுதல் - எல். டயனா என்ற பெயரும்...ஆசிரியர் பற்றிய குறிப்பில் கீழே டயானா என்றும் குறிக்கப்பட்ட ஒரு கவிஞரின் மொழி பெயர்ப்பு உள்ளது.
அய்யா...அதை மொழிபெயர்த்தது...ஆங்கிலம் மற்றும் சீனம் ஜப்பான் மலேசியா சிங்கப்பூர்களில் எல்லா இடங்களிலும் கோபால் பல்பொட்டி போல் கிடைக்கும் ஆங்கிலம் அறிந்த சக்தி செல்வி அவர்கள். அது அவர்கள் மொழிபெயர்த்ததுதானா என்று கேட்டுச் சொல்லுங்கள். ( ஏனென்றால் மார்க்குவெஸ் சிறப்பிதழ் என் கைவசம் இல்லை. நேசமித்ரனிடம் இருக்கலாம்.)
What It’s Like
Do you know what it’s like,
To look in the mirror and not see you,
To feel that you are someone else,
To feel that you have the wrong body.
Do you know what it’s like,
To be not able to tell your parents,
To be not able to tell your bothers and sisters,
To be not able to tell your friends.
Do you know what it’s like,
To be asked how was your weekend,
To fear hearing your name shouted on the street,
To fear going out to the store as yourself.
Do you know what it’s like,
To realize that you still have lipstick on when you hand the teller your check,
To realize that you still have some nail polish on when you reach for a cup of coffee,
To realize that you still have a barrette in your hair at the store.
Do you know what it’s like,
To be transsexual.
அய்யா இதுதான் அந்த ஆங்கிலக் கவிதை. உங்களுக்கு ஆங்கில அறிவு இருக்கும் பட்சத்தில் இதை மொழிபெயர்ப்பதோடு, சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளருக்கும், எவ்வித விளம்பரமில்லாமல் உதவ வேண்டும் என மிகுந்த கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு தலையங்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்று வயதான எழுத்தாளரான உங்களுக்குத் தெரியும். அவர் எழுதிய தலையங்கம் குறித்தும் பேச அன்போடு காத்திருக்கிறேன். அய்யா நான் கோணங்கியின் கழிவுக் குப்பை என்று நேசமித்ரனின் எழுத்துக்களைச் சொன்னேன். அதை இல்லையென்று நீங்கள் நிரூபிக்கலாம். மேற்கோள்களை வேறு காட்டவேண்டுமா... ஒட்டுமொத்தக் கழிவில் நான் சிறந்த கழிவைப் பிரிக்கும் வேலையைப் பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று தாங்கள் அறியாததா.
அய்யா.... நீங்கள் அழைத்த அறிவு ஜீவிகளின் பட்டியலில் கோணங்கி இருந்தால் இது குறித்து அவரையே கேட்கலாம். என் படைப்புகள் குறித்து ரமேஷ் பிரேதன் விமர்சனமே செய்திருக்கிறார். அப்படியென்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியனே கண்டு பிடிக்கமுடியாத ஒன்றை நேசமித்ரன் கண்டு பிடித்திருக்கிறாரா நண்பரே.
அதையும் விளக்குங்கள்.
குறிப்பு; தயவு செய்து அவரை இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு, அடிக்கிறேன்... பிடிக்கிறேன்... ரத்தம்... வன்முறை, ரத்தப்பலி, ( குறைந்த பட்ச வசையில் கூட மனுஷ்யபுத்திரனையும் காப்பியடித்து அவருக்கும் உலை வைக்கும் காரியம் அது) உட்டாலக்கடி பம்பா...விட்டாலக்கடி ஜிம்பா என்று எழுதி இதையும் சொற்செட்டு என்று அவர் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
காத்திருக்கிறேன்.
என் கவிதைகள் குறித்து உங்களது விமர்சனம் என்ன....உதவுங்கள்.
வசு,
ReplyDeleteஎன் நோக்கம் உங்களையோ அல்லது நேசமித்ரனையோ சார்ந்து பேசுவது இல்லை என்று அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முந்திய என் பின்னூட்டத்தில் அப்படி ஒன்றும் இல்லை என்றே நம்புகிறேன்.
'வலசை' முதழ் இதழ் ஓர் அச்சலாத்தி. இரண்டாம் இதழ் சற்றுத் தேறி வந்திருக்கிறது. எனவே இனி வரும் இதழ்கள் உருப்பட, தமிழ்ச் சமுதாயத்துக்கு உதவ, வாய்ப்புண்டு. இதுதான் என் வாசக உணர்வு. (விமர்சனம் செய்ய, நேரம் ஒதுக்கி, அதற்குள் மூழ்கி வெளிப்பட வேண்டும். அவ்வளவு சக்தி இல்லை எனக்கு).
கோணங்கி மேல் எனக்கு ஓரளவுக்கு மரியாதை உண்டு. அவர் சாதித்திருக்கிறார் என்பதே என் முடிபு. நேசமித்ரன் கோணங்கியை நகல் எடுப்பதாக நான் எண்ணவில்லை. வாசித்தறிந்த தகவல்களைக் கவிதைகளாகத் தொகுக்கும் நேசமித்ரனின் craft எனக்கு உவப்பானதில்லை. ஒரு மூத்த இலக்கியவாதி என்னும் தகுதியில் அதைப் பலமுறை அவருக்கு நானே சுட்டி இருக்கிறேன். வளரும் கலைஞர்களை நேரடியாகத் தாக்கக் கூடாது என்பதால், சற்றுச் சுற்றி வளைத்துக் கூறி இருப்பேன்.
உங்களுடய ஓரிரண்டு கவிதைகளுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். நீங்கள் தொகுப்பு வெளியிட்டு இருந்தால் அதை வாங்கி வாசிக்காமல் இருந்தது என் குற்றமே. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
ரமேஷ்-பிரேதன் எழுதத் தொடங்கிய காலத்தில் அவர்களை வாசித்திருக்கிறேன். எனக்கு அவர்களது எழுத்து பிரேமிளின் படிமங்கள் நீர்த்துப்போய் ஆனதினால் எனத் தோன்றியதால், தொடர்ந்து வாசிப்பதை விட்டுவிட்டேன். அவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டி வந்திருக்கலாம். எனக்குத் தெரியாது. நான் 1983-இல் இருந்து 2004 வரை, என் பிழைப்புக்காக, வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் அலைந்து திரிந்ததால் இலக்கியம் எதுவும் வாசிக்கவில்லை. ஆகவே அறிந்தவன் போலக் கருத்துக் கூறக் கூசுகிறேன்.
என் விளம்பர மோகத்தைப் பற்றியும் கோடிகாட்டி இருக்கிறீர்கள். நல்லது, அது சாக்கில் எனது "நாடோடித் தடம்" வாசித்துவிட்டீர்களா என்று ஆர்வத்தோடு வினவிக் கொள்கிறேன். இல்லை என்றால், அருள்கூர்ந்து ஒரு பிரதி வாங்குமாறு வேண்டுகிறேன் (டிஸ்கவரி புக் பேலஸில் கிட்டுகிறது). 'தமிழினி' பதிப்பகத்தார் எனது "முகவீதி" கவிதைத் தொகுப்பு வெளியிட்டதில் இழப்புக்கு உள்ளானார்கள். "நாடோடித் தடம்" விற்பனை வழியிலாவது அதை ஈடு கட்டட்டும்.
நன்றி.