Tuesday, April 24, 2012

ஆனந்ததம்




ஆஹா...
அற்புதம்
மிதக்கும் அல்கல்
விழி விரித்த
அல்லெனச்சொல்ல 
அல்குல் ஆனந்தம்
உதித்தெழ மலரும் அல்லி
ஆனந்ததம்
ஆஹா
அற்புதம்
அம்

கூசிச்சுருங்கி பெருங்காற்றை உள்ளிழுத்து உப்பியெழும்
வைரச்சூரி
பெருங்காட்டில்
சிகைவிரிக்கும பைநாகப் படம்
தமனகவாசனைச்சுருள்
புணர்ச்சியிருளில் பொங்கிக் கசங்கி
பொசுங்கிய குங்கிலியம்
சந்தன உறுமல்
சதிர்ச்சொல்

கனாக் கண்
கண்
காணாக் கண்
கண்டுதித்த அரவச்சேர்க்கை
பித்தம்
கிழிக்கும் சித்தக் கனா

கனா.... 
காண்

மயக்கம்
மேவிப்படரும்
வழிதப்பியலையும்

கரி
துதிக்கை இழுத்துப் 
பிடி
கரியதிர
பிடியதிர
சேர்ந்ததிரும் காட்டின்
கிழக்கைக் கிழிக்கும்
திசை முயக்கப் புலரி

இணைவிழைச்சு
இணைந்தும்
இணைந்த காலையில் வியர்த்தும்
வியர்த்தலால்
உடலொலி கிளர பிரிந்தும்
பின்
காற்றின் கரங்கள் இறுகிச்சேர்க்க
விழைந்தும்
செவ்விழி நீண்டகண்டும்
பாவை
தம்
பாவைக்குள் பார்க்கும் பைத்தியச் சொல்

உடையுதறி நிழழுதறி உதித்தெழும்
பறவைக்கரசு
அலகென்ற கூர்வாளால்
அது கொத்திக் கிழிக்கும்
வீரியனின் ஒற்றை விழி

நடுகல் விதைத்து
நடுங்கல்
நடுங்குதலொலிக்கும் கொலுசுப்பறை
சன்னதம் காண் கிழவா
கிழத்தியின்
ரூபத்தில்
காண்
காணொரு சூன்யம்

அம்மா
வெனச் சொல்ல
ஆரம்பிக்கும் இடம்.

5 comments:

  1. வணக்கம் நிலா....Awesomeனா என்ன...தமிழ்ல்ல அத எப்டிச் சொல்லுவாங்க....

    ReplyDelete
  2. அற்புதமான முடிவு என்று அர்த்தம் வசு,
    உண்மையில் இறுதி வரிகளில் திளைத்து தான் போனேன் நானும்.

    ReplyDelete
  3. வசுமித்ர,
    தங்கள் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது. இதைப்பற்றிய கற்பனைக்கான சாத்தியங்கள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை சாத்தியங்களிலும் புகுந்து வெளிப்படுகிறது கவிதை ! கடைசி வரிகளை பெண்மைக்கான வந்தனமாகவே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் வேல் கண்ணன். நன்றி குருச்சந்திரன்.

    ReplyDelete

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...