( 2 )
வசு,
எனது வேண்டுகோள் மிக எளிமையாக இருந்தது: //இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு?//
இதை இப்படியே நேசமித்ரன் வலைத்தளத்திலும் இட்டு அவரையும் வேண்டி இருந்தேன்.
அடுத்து, நீங்கள் என்னை விளித்து ஒரு பதிவு இட்டிருந்ததினால், அதை மதித்து அதிலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதில், விமர்சன எழுத்தில் ஈடுபடும் அளவுக்கு வலுவில்லை எனக்கு என்றும் எழுதி இருந்தேன். பிறகும் என்னை மொழிபெயர்க்கும் வேலைக்கும் விமர்சனத்துக்கும் தூண்டுகிறீர்கள்.
உங்கள் நூலகளையும் ரமேஷ் ப்ரேம் நூல்களையும் கட்டாயம் வாசிப்பேன். அவ்வளவுதான் என்னால் முடியும். நன்றி! வாழ்க!
( 1 )
" வலையுலகத்துல சண்டை போடுறது ஒரு விளம்பர வாய்ப்பு. அப்படித்தானா, வசுமித்ர? நேசமிதர?
ஆமா, இந்த 'மித்ர' என்பதற்கு என்ன அர்த்தமாவது இருந்துவிட்டுப் போகட்டும். The difference is between the 'வசு' and 'நேசம்'.
I call upon the knowledgeable people to help.
இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு? ”
அய்யா மேற்கண்ட 1 வரிகளுக்கும் இரண்டாவதாக நீங்கள் கத்தரித்தற்கும் இடையில் உள்ள வார்த்தைகள் வித்தியாசங்கள் ஒரு பொருட்டே இல்லையா. அய்யா...இதுதான் தாங்கள் மிக எளிமையாக கேட்டு பஞ்சாயத்துக்கு வந்த நிலைமையா...இதுதான் என்னை நேரடியாக முகஞ்சுருங்க வைத்து, அதோடு கடுப்பையும் ஏற்றிய பதிவு. இப்பொழுது கடுப்பின் அலவி சற்று அதிகம் ஏற்றுகிறது, முதலில் இது மிக மோசமாக கத்தரித்து ஒட்டிய பதில். அப்பாவித்தனமாக கேட்டேன் என்ற தோற்றத்தை இது வரவழைக்கிறது. மேற்கண்ட வார்த்தைகளின் தோரணைக்கும், இப்பொழுது நீங்கள் வெட்டி ஒட்டிய வரிகளுக்கும் உள்ள இரக்க சுபாவத்தை நீங்கள் காணலாம்.
முதலில் இது போன்ற விளம்பர யுக்திகளை நீங்கள் ஒரு வயதான எழுத்தாளராக அனுபவித்திருக்கலாம். எனக்கு அது பொருட்டில்லை. மேலும் மித்ர வார்த்தைக்கு மொழிபெயர்ப்பு குறித்து நீங்கள் சூசகமான கோக்குமாக்கு குத்தலை வைத்தீர்கள்.
அய்யா... மித்ர வார்த்தைக்கு இலக்கிய விசுவாசம் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு சிறு கேள்விக்கே மித்ர வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு வந்தீர்களே...நேசமித்ரன் இலக்கியம் தவிர்த்து எனக்கு ஆங்கிலம் தெரியாது, அதோடு ரத்தம் குடிப்பேன், பதில் சொன்னால் அடிப்பேன் என்ற வியாக்கியானத்தையெல்லாம் மிகுந்த கொண்டாடத்தோடும் வன்மத்தோடும் வைத்தார். அய்யா இதெல்லாம் உங்களுக்கு நேசத்தின் உச்சத்தை எடுத்துரைக்கும் நேசமித்ரன் அவர்களின் வார்த்தைகள்....இல்லையா....
அய்யா அவர் வைக்கும் வார்த்தைகள் என் வாழ்வில் ஒரு சிறிய மயிரிழையைக் கூட பிடுங்கி எறிய முடியாது. ஆனால் நான் பதிலுக்கு அந்தரங்கமாக இது போன்ற ஒன்றை விமர்சனம் என்ற பெயரில் வைத்தால் நாறி விடும். நேசமித்ரன் குறைந்தபட்சம் இரண்டு நாள் சாப்பிடாது உடல் இளைக்குமளவுக்கு கேள்விகள் எனக்கிருக்கிறது. நான் பேசியது இலக்கியம் என்றே நம்பிப் பேசினேன். அவர் எனது ஆங்கிலம் தெரியாத முட்டாள் என் கவிதையை புரிந்து கொள்ள முடியாது என்றார். அபோழுதெல்லாம் மித்ர நேசம் வரிகள் குறித்து நீங்கள் இன்னும் அழுத்தமாக கேள்விகளை முன் வைப்பேன் என்றே நம்பினேன். மிக்க நன்றி அய்யா.
அவர் எழுத்து என நீங்கள் எதைச் சொல்கிறீர்கள். கோணங்கியின் பின்னொட்டான கழிவுக் குப்பையையவா அப்படிச் சொல்லுகிறீர்கள்...இல்லை அய்யா அது சந்தேகத்துக்கு இடமின்றி பெருங் குப்பைதான்... அதில் இரு வரிகளை எங்கே பிரித்து மேற்கோள் காட்டமுடியும் என்று பதிலும் சொன்னேன்.
மேலும் அறிவார்ந்தவர்களை துணைக்கழைத்தீர்கள். அய்யா நீங்கள் குறிப்பிட்ட அந்த அறிவார்ந்த சீமான்களுக்காக இப்பொழுது வரை காத்திருக்கிறேன். உங்கள் அழைப்புக்கு ஒருவரும் செவி சாய்க்காவிட்டாலும், ஒரு ஆங்கிலம் தெரியாத முட்டாளாக காத்திருப்பேன். அழையுங்கள். அவர்களுக்கும் எனது வேலைப் பளுவோடு பதில்களை முன் வைக்கிறேன்.
அய்யா நீங்கள் என்னை மதித்து பதிலளித்தனால்தான் பதில் சொன்னீர்கள், நானும் அவ்வாறே சொன்னேன்.
நீங்கள் பயணம் படிக்க நேரமில்லை என்பதாகச் சொன்னீர்கள் என்றே அப்பொழுது புரிந்து கொண்டேன். இப்பொழுது விமர்சன எழுத்தில் ஈடுபாடே இல்லை என புரிந்து கொள்கிறேன். சிறிய கேள்விகளை பெரும் உழைப்பு என்று நினைக்க வேண்டாம். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை மிகுந்த பெருமையுடன் நேசமித்ரன் அறிவித்தார். அவர் ஆசிரியராக இருக்கும் வலசை இரண்டில் வெளிவந்த அந்த டயனா கவிதை மொழிபெயர்ப்பு கவிதைக் குப்பையை முன் வைத்து எனது ஆங்கில அறிவை சோதித்துக் கொள்ள நினைத்தேன். மேலும் நீங்கள் அதை மொழி பெயர்த்தால் குறளியில் வெளியிடுவேன் என்று சொன்னேன்.
அய்யா விமர்சனத்துக்கு வராவிட்டாலும்....ஒரு மொழிபெயர்ப்பாளாராக எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்ற உரிமையில் நான் உங்களிடம் வைத்த கேள்வி அது. சோர்வு தந்திருப்பின் மன்னிக்க. மேலும் என் தளத்திலும் நேசமித்ரன் தளத்திலும் நாங்கள் அழைக்காமல் வந்தது போலவே சம்பந்தப்பட்ட மொழி பெயர்ப்பாளர் சக்திச் செல்வி யார் என நேசமித்ரனிடம் கேட்டு அவருக்கும் கேள்விகளை முன் வையுங்கள். உங்களுக்கு வேலைப் பளு என்றால் இக்கேள்வியை நான் நேசமித்ரன் அவர்களுக்கும் சக்திச் செல்விக்கும் உங்களின் வழியாக அனுப்புகிறேன். பதில் கிடைக்குமா...
மொழிபெயர்ப்பும் விமர்சனமும் வேலை என்று நீங்கள் கருதினால் இந்த விவாதத்திற்கே நுழைந்திருக்க வேண்டாமே, ஒரு வயதான எழுத்தாளராக நீங்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்கும் வேலையைச் செய்திருக்கலாம்.
என் படைப்புகளைப் படியுங்கள். ரமேஷ் பிரேம், மற்றும் ரமேஷ் பிரேதன் படைப்புகளையும், அதோடு பிரமிளின் படைப்புகளையும் மறுவாசிப்பு செய்யுங்கள். நல்ல ஆரோக்கியம் உங்களுக்குக் கிட்டட்டும்.
அன்புடன்
வசுமித்ர.
வசுமித்ர.
No comments:
Post a Comment