I
அம்மா நான் எனது சதையை பிய்த்துத் தின்னட்டுமா
இல்லை மகளே இது தேசத்தின் உப்பு
நாம் டாட்டாவுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்
அம்மா வயிற்றில் மிருகம் இருக்கிறதா
ஆம் மகளே அதன் பெயர் பசி
அம்மா
தாகமாயிருக்கிறது
எனது மார்பில் கீறி
உதிரமொரு துளி அருந்தட்டுமா
இல்லை மகளே
அஃது
அம்பானியுடையது
அவர் பலி ஏற்கும் கடவுள்
அம்மா நாம் உயிர் வாழவேண்டுமா
ஆம் மகளே
நாம் இந்த தேசத்தின் சொத்து
அம்மா நாம் அடிமையா
ஆம் மகளே
நாம் பிரதமரின் செல்லக் குழந்தைகள்
ii
அம்மா நான் யார்
நீ
இந்த தேசத்தின் சொத்து மகளே
பசிக்கிறது அம்மா
கேட்காதே தேசத்திடம்
தவிக்கிறது அம்மா
தேசத்திடம் கேட்காதே
அம்மா நான் செத்து விடுவேனம்மா
வேண்டாம் மகளே
உயிரைக் கையில் பிடித்துக்கொள்
அடிமைகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதியில்லை
என்னதான் அம்மா நான் செய்யவேண்டும்
நீ வளர்ந்து பெரியவளாகும் போது
உன் பிள்ளைக்குக் கதைச் சொல்
என்ன கதை அம்மா
அதுதான் மகளே
நம் கதையை
கதையில் உனது பெயர் என்ன அம்மா
என் பெயர் அடிமை மகளே
நம்மைக் கொல்லும் பூதத்தின் பெயர் என்ன அம்மா
அதை
பிரதமரிடம் கேள்
No comments:
Post a Comment