//ரங்கநாயகம்மா
புத்தகம் குறித்து பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு
செய்தியை பகிர விரும்புகிறேன் ஓராண்டுக்கு முன்னால் இந்த
புத்தகத்தை
தமிழாக்கம் செய்து தருமாறு அலைகள் வெளியீட்டகம் பதிப்பாளர் நண்பர் பெ,நா,சிவம்
எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அந்த புத்தகத்தை முழுவதுமாகப்படித்தேன் அதில் அம்பேத்காரைப்பற்றி
விருப்பு வெறுப்பின்றி மதிப்பீடு செய்வதற்கு பதிலாக அவரைமட்டம் தட்டும் நோக்கத்துடனேயே
அது எழுதப்பட்டதாகத் தோன்றியதால் அதனை மொழி பெயர்க்க விருப்பமில்லை என்று சிவம் அவர்களிடம்
தெரிவித்து விட்டேன் அவரும் அதை ஏற்றுகொண்டு தமிழில் அதனை வெளியிடும் முடிவையே கைவிட்டு
விட்டார்//// - கி.இலக்குவன்
இதுகுறித்து தோழர் சிவத்திடம் பேசியபிறகு நான்
வைத்த குறிப்பிற்குப் பின்
பின் நீங்கள் எனக்கு விளக்கம் கொடுத்திருக்கும்
பதில்
//எனது
தரப்பிலிருந்து புரட்டல் எதுவுமில்லை என்பதை புரிய வைப்பதற்காக மேலும் ஒரு செய்தியை
எனது பகிர்வில் இணைக்க விரும்புகிறேன் அதனை மொழி பெயர்க்க விருப்பமில்லை என்று தெரிவித்து
விட்டு புத்தகத்தை திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று தொலைபேசி மூலம் தெரிவித்தேன்
அதற்கு திருப்பி அனுப்ப வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்து விட்டார் அந்த புத்தகம்
இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது இதிலிருந்து நான் கூறிய கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார்
என்று புரிந்து கொண்டேன் அவர் வெளியிடாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்//- கி.இலக்குவன்
ஆனால் நீங்கள் இந்தப் பதிலை இன்னும் அங்கு
சொல்லவில்லை.
தேனியில் எஸ்.வி.ஆருக்கு மார்க்சிய அறிஞர் பட்டத்தை தமுஎகச
கொடுத்தது குறித்தும், அங்கு நான் வைத்த கருத்துக்கு என்னை தமுஎகச வெளியே தள்ளியதும்,
பின் அது குறித்த அனுபவங்களை எழுதி, எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பினேன்.
அதைத் தொடர்ந்து தமுஎகச குண்டர்களான வெண்புறா சரவணன் மிகவும் மோசமான மொழியில் நடந்ததைத்
திரித்து ஒரு பதிவு எழுதினார். அதைக் கருப்புக் கருணா பகிர்ந்திருக்கிறார். அந்தப்
பதிவில் என்னை நாய் என்கிற அளவில் நக்கலும் நையாண்டியுமாக வைத்து நடந்த உரையாடலையும்
படித்திருப்பீர்கள். அந்தப் பதிவின் கீழ்தான் உங்களது இந்த விளக்கத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
இதன் மூலம் ஒரு அவதூறுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நீங்களும் வினை புரிந்திருக்கிறீர்கள்.
நூல் வந்து நான்கு மாதங்கள் ஆகி, மூன்றாம் பதிப்பும் கண்டும்
விட்டது. கடுமையான விவாதங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் உங்கள் குறிப்பை
வைக்காத நீங்கள், தேனியில் நடந்த விசயத்தை தமுஎகச குண்டர்கள் திரித்து நையாண்டி செய்கிற
குறிப்பிட்ட அந்தப் பதிவில் வைக்க வேண்டிய அவசியம் என்ன.
நானும் சிபிஎம் என்கிற சக தோழமையா?
_இல்லை,.. நீங்கள்
உங்கள் குறிப்பில் சொன்னது போல் நூல் அம்பேத்கரை மட்டம் தட்டுகிறதா?
தட்டியிருந்தால் எங்கு
என்ன விளக்கங்களில் தட்டியிருக்கிறது?
நூல் வந்து இத்தனை மாதங்களாகியும், உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்
நூலைப் படிக்காமலேயே அவதூறுகள் செய்ததை அறிந்த நீங்கள், இதுவரை எந்த விமர்சனத்தையும்
முன்வைக்கவில்லை. அது ஏன்?
இதையெல்லாம் செய்யாமல், உங்கள் சிபிஎம் குண்டர்களுக்கும்,
தமுஎகச குண்டர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் அந்தக் குறிப்பை அங்கு வைத்துள்ளீர்கள்.
இதன் மூலம் வாசகர்களுக்கு, ரங்கநாயகம்மா நூல் அம்பேத்கரை மட்டம் தட்டுகிறது என்ற உங்களது
தட்டையான பார்வையின் கீழ் ஒற்றைக் குறிப்பாக வைத்து, நூலைப் புறந்தள்ளுமாறு ஒரு ‘குறிப்பை’ விட்டுச் சென்றிருக்கிறீர்கள்.
உடனே ஆஹா பார்த்தீர்களா! எங்கள் ஆள் அப்பொழுதே இப்படிச் சொல்லியிருக்கிறார் என உங்கள்
கருத்தை எடுத்து குண்டர்கள் சிலாகித்து இன்னும் எலி பூனை விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.
தோழர்...நீங்கள் கலந்து கொண்ட அந்த அவதூறில், தமுஎகச சிபிஎம்
குண்டர்கள் யாரேனும் ரங்கநாயகம்மாவின் நூல் குறித்துப் பேசியிருக்கிறார்களா? அவர்கள்
படித்து விட்டுத்தான் பேசியிருக்கிறார்களா,
என்பதை ஒரு மொழிபெயர்ப்பாளாராகவும், அவதூறில் பங்கு கொண்டவராகவும் நீங்கள் சொல்லலாம்.
இல்லையேல். தமுஎசக வின் குண்டர்களின் அவதூறு கும்மியில் நீங்களும் உங்கள் பங்குக்கான கைதட்டலை வைத்துச் சென்றுள்ளீர்கள்
என்பதே என் இறுதி எண்ணமாக இருக்கும்.
மேலும் அந்த அமைப்பில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு சில கேள்விகளை வைக்கிறேன்.
1. எஸ்.வி.ஆர்
மார்க்சிய அறிஞரா?
2.மார்க்சிய
அறிஞர் என்றால் மார்க்சியத்துக்கு அவர் அளித்த பங்களிப்புகள் என்ன?
3. ரங்கநாயகம்மா அம்பேத்கரின் எழுத்துக்களை மேற்கோள்காட்டியே விவாதமும் விமர்சனமும்
செய்கிறார். இதில் மட்டம் தட்ட என்ன இருக்கிறது. எப்படி மட்டம் தட்டியிருக்கிறார் என்பதை
திறனாய்வாக வைப்பீர்களா லக்குவன்.
4. வர்க்க அரசியல் பார்வையிலிருந்து அம்பேத்கரை எப்படி விமர்சிப்பீர்கள். முன்பு
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அம்பேத்கர் பற்றி வைத்த விமர்சனங்கள் என்ன?அதன் பின்னர் ஏற்பட்ட
மாற்றங்கள் எதனை அடிப்படையாகக் கொண்டது?
5. அடையாள அரசியலை ஏற்றுக்கொள்வீர்களா?
6. சாதி ஒழிப்புக்கு அம்பேத்கரிடம் தீர்வு இருக்கிறதா?
7. அம்பேத்கரின் பொருளாதாரம் குறித்து உங்கள் பார்வை என்ன?
No comments:
Post a Comment