Wednesday, October 19, 2016

‘மார்க்சிய தீர்க்கதிரிசி’! அ.மார்க்ஸின் ‘தீர்(த்த)க்க தரிசனங்கள்’!


 தீர்க்க தரிசனங்களும் தீர்த்த தரிசனங்களும்





“திரிபுவாதத்துடன் சமரசம் செய்துகொண்ட பின் இந்த ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் தொடர்ந்து ‘தாய்’ போன்ற நாவல்களையே மாதிரியாகக் கொண்டதாலும் இவர்களுக்கும், இவர்கள் சார்ந்த இயக்கத்திற்கும் புரட்சிகர நடைமுறை இல்லாமல் போனதாலும், திரிபுவாதத்தின் விளைவாக இவர்களது மனச்சாட்சி பிளவுண்டு போனதாலும், இவர்கள் படைத்த ‘சோஷலிச எதார்த்தவாத ஃபார்முலா’ நாவல்கள் (பஞ்சும் பசியும், மலரும் சருகும், தாகம்) உயிரற்றுச் செத்தே பிறந்தன. புரட்சிகர எழுத்துக்கள் அனைத்துமே கலை நியாயமற்றவை, வரட்டுத்தனமானவை என மார்க்சிய எதிரிகளால் தூற்றப்படுவதற்கும் இவை உதவி புரிந்தன.”

“எந்த வித ‘ரிஸ்க்’கும் இல்லாமல், அறையில் மார்க்ஸ் - லெனின் படத்தை மாட்டிக்கொண்டு, கட்சிப் பத்திரிகைகளைச் சந்தா கொடுத்து வாங்கிக்கொண்டு, மாதாமாதம் ஏதோ கொஞ்சம்  கட்சிக்குக் கொடுத்துவிட்டு, வரதட்சணை வாங்கிச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ‘லோன்’ போட்டு வீடு கட்டிக்கொண்டு, பிள்ளைகளை ஆங்கில வழிக் கான்வெண்ட்களில் சேர்த்துக்கொண்டு, எங்காவது நடக்கும் உண்ணாவிரதப் போராட்டங்களில் வாழ்த்துரை வழங்குவது ஒன்றையே புரட்சிகரப் பணியாக செய்து தானும் ஒரு புரட்சியாளன் என்கிற ஆத்ம திருப்தியுடன் ஒரு மத்திய தர வர்க்கக் கலாச்சாரம் இன்று திரிபுவாத அமைப்புக்களுக்குள் உருவாகியுள்ளது.”

“இந்தக் காலச்சாரத்தின் தூல வெளிப்பாடாக இன்று வெளிப்பட்டுள்ளது ‘தோழர்’, ‘தாய்’ மாதிரி சோஷலிச எதார்வாத பார்முலாக்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அரசியல் களத்தில் கிஞ்சித்தும் வெட்கமே இல்லாமல் திரிபுவாதத்தைக் கிரீடமாய்ச் சூட்டிக்கொண்டதைப் போல இதே கலாச்சாரத் தளத்திலும் திரிபுவாதம் தயக்கமற்று வெளிப்படத் துவங்கியுள்ளது.”

ராமசாமியும் அப்படி நினைத்துச் சுய இன்பக் களிப்பில் மிதந்தால் பின்னால் அவர் வருத்தப்பட நேரிடும்

“அசட்டுப் புரட்சி உணர்ச்சி தனுஷ்கோடியாருக்கு ரெம்பத்தான் தலைக்கேறிக் கிடக்கிறது. பிரெஞ்சு கோஷ்டியுடன் கதாநாயகன் மழையில் நனைந்துகொண்டு வருவதைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.”

“சாலையில் அந்த அந்தி நேரத்தில் மழையில் நனைந்து கொண்டு ஓடுகிற அனுபவம் மிகச் சுகமானதாக இருந்தது. ஆணும் பெண்ணும் இப்படி மழையில் நனைவது என்பது எவ்வளவு இனிமையான அனுபவமாக இருக்கிறது. ஷோசலிச லட்சியத்திற்காக இப்படி நாடு,மொழி, இனம் கடந்து அறிவாளிகளும் தொழிலாளிகளும் இணைந்து போரிடவேண்டும்.”

“நல்லவேளை இணைந்து மழையில் நனையவேண்டும் என்று எழுதாமல் போனாரே. இதென்ன குடிகாரனின் உளறல் போலிருக்கிறதே என்கிறீர்களா? இதுவும் ஒரு போதைதான். திரிபுவாத போதை. சுயவிமர்சனப் பார்வையுடன் தனுஷ்கோடி ராமசாமி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. மாறாக புரட்சிகர நாவல் எழுதிவிட்டதாக மீசையை விடைத்துக்கொண்டு திரிய முற்பட்டால் நாம் ஒரே ஒரு வார்த்தைதான் சொல விரும்புகின்றோம்.”

“அசடு.”

- அ.மார்க்ஸ்


மேலும் தமுஎகசவின் தற்போதைய மார்க்சிய அறிஞரான! எஸ்.வி.ஆர் நூல்கள் குறித்தும் ‘மார்க்சிய தீர்க்கதரிசி’ எழுதியிருக்கிறார்.

“பெரியாருக்கும் காந்திக்கும் உள்ள உறவையும் கூட ரெம்பவும் balanced ஆக அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வகையில் கீதா- ராஜதுரை நூற்களின் போதாமை இங்கே சுட்டிக்காடப் படவேண்டிய ஒன்று. பழைய தமிழ் சினிமாக்களைப் போல ஒரு கதாநாயகன் இவர்களுக்கு எதிராக ஒரு வில்லன், துணைவில்லன் என்பதாக 1925-1947 - கால அரசியலை நாம் பார்த்துவிட இயலாது. பெரியார் கதாநாயகன், அம்பேத்கர் துணை கதாநாயகன், காந்தி முதன்மை வில்லன், கம்யூனிஸ்டுகள் துணைவில்லன்கள் என்கிற ரீதியில் கீதா- ராஜதுரையின் கதையாடல் அமைந்துள்ளது.”

“அல்தூசரைப் பற்றிய ராஜதுரையின் புத்தகமெல்லாம் படு அபத்தம்”

“காலச்சுவடு ‘தமிழ் இனி’ கும்பமேளா நடத்தியபோது நிறப்பிரிகை மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தது. அமைதியான முறையில் அரங்கத்திற்கு வெளியே துண்டறிக்கை விநியோகித்துத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை அரங்கில் கண்டித்த ஒரே நபர் ராஜதுரைதான் என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். நிறப்பிரிகைக்கு எதிராக அன்று ராஜதுரையைக் காலச்சுவடு நிறுத்தியதை காலம் மறக்காது”

இதுதான் இந்நாளைய மார்க்சிய அறிஞரான! எஸ்.வி.ஆர் குறித்து எதிர்கால மார்க்சிய தீர்க்கதரிசி சொன்னவைகள் இவைகள்.


இந்த ‘மார்க்சிய தீர்க்கதரிசியும்’!, நாளைய ‘மார்க்சிய அறிஞருமான’! அ.மார்க்ஸ் சி.பி.எம் குண்டர்கள் குறித்தும், எஸ்.எஃப்.ஐ தலைவர்கள் குறித்தும் தீர்க்க தரிசனத்தோடு எழுதியது தொடரும்.....

சிபிஎம் கட்சியும், தமுஎகசவும் அ. மார்க்ஸை தங்களது அமைப்பின் மார்க்சிய அறிஞராகவும்! மார்க்சிய தீர்க்கதரியாகவும்! மாற்றும் வேலையை, பாரதி புத்தகாலய மேலாளர் சிராஜுதினுக்குக் கொடுத்திருக்கிறது போல.! இப்பணியை திறம்படச் செய்யும் அன்னாரின் பணியை நாம் முகநூலில் காணலாம்.





No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...