Tuesday, October 18, 2016

சி.பி.எம் குண்டர்கள் குறித்து தோழர்! அ.மார்க்ஸ் கூறியிருப்பது...




"தொண்ணூறுகளில் மார்க்சியத்துக்கு ஏற்பட்ட சரிவு மானுட வரலாறு சந்தித்த ஒரு மிகப்பெரிய சோகம்" என்று சொல்லிய அ.மார்க்ஸ் “எல்லாப் பிரச்சினைகளையும் நாம் மார்க்சியத்திற்குள் நின்று தீர்த்துவிட இயலாது. சில விசயங்களில் நாம் மார்க்சீயத்திற்கு முந்தி, அதாவது பின்னோக்கிப் போக வேண்டும். சில விஷயங்களில் மார்க்சீயத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்கு ஜான் ஸ்டுவார்ட் மில், தாமஸ் பெய்ன் ஆகியோரை நாம் மீண்டும் தேடிப்போகவேண்டியிருக்கிறது. குடும்பம் கல்வி, நிறுவனம், ஜாதி மதம் முதலான நுண் களங்களில் (micro levels) அதிகாரம் செயல்படுவதை விளங்க ஃபூக்கோ, தெரிதா ஆகியோரைப் பயின்றாக வேண்டும். மார்க்ஸ் எங்கெஸோடு நின்று விடாமல் காண்ட் முதல் ஹெய்டெக்கர் வரை நாம் உள்வாங்கியாக வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கிறார் தோழர்!அ.மார்க்ஸ்.

இதில் முக்கிய கேள்வி என்னவென்றால், இதுவரை அவர் குறிப்பிட்ட ஸ்டுவார்ட் மில் முதற்கொண்டு பூக்கோ, ஹெய்டெக்கர், தெரிதா நூல்கள் ஏதேனும் தமிழில் முறையாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை, அ.மா பேசிய பின்நவீனத்துவவாதிகளின் நூல்கள் தமிழில் வந்துள்ளவனா?

அத்தோடு விடாமல் இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் ஆகியோரின் சுயசரிதையை படித்த அ.மார்க்ஸ்  ஓர் இந்தியக் கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள், நான் என்றும் மக்கள் ஊழியனே  என்ற இரு நூல்களை முன்வைத்து, இவர்களுடைய எழுத்துக்களில், ஜாதிப் பிரச்சினை குறித்த கரிசனம் அதற்குரிய முக்கியத்துவத்துடன் காணாப்படாமல் இருப்பத தனக்கு ஏமாற்றத்தைத் தந்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும் நந்திகிராம் விசயத்தில் தோழர்! அ.மார்க்ஸ் சி.பி.எம் மின் குண்டர்களை(அ.மார்க்ஸ் குண்டர்கள் என்றே சொல்லுகிறார்) முன்வைத்து ஒரு வேண்டுகோளை வைக்கிறார். அந்த வேண்டுகோளை அவர் வந்தடைந்த விதத்தை நாம் இனி சுருக்கமாகக் காணலாம்.

நந்திகிராமில் டாட்டாவுக்கு சிறிய கார்த் தொழிற்சாலையைக் கட்ட 997 ஏகர் நிலம் வழங்கியது. அதற்கு முன்  பாதிக்கப்பட்ட மக்களையோ கூட்டணிக் கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல் புத்த தேவ் பட்டாச்சார்யா முடிவெடுத்தார். மக்கள் புத்தாவை சந்தித்துக் கேள்விகேட்க அவர் ஒன்றுமில்லை என மளுப்பியிருக்கிறார் புத்தா. முன் சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மண் சேத் கையெழுத்திட்ட நிலப்பறிப்பு ஆணையை மக்கள் அவர்முன் வீசியெறிந்தனர். புத்தா வெட்கித் தலைகுனிந்திருக்கிறார். அந்த ஆணையைக் கிழித்தெறியுங்கள் அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் வராது என்றார். எத்தனை எதிர்ப்புகள் கலவரங்கள் வந்தாலும் டாடாவுக்கு ஒதுக்கப்பட்டதை திரும்பப் பெறமுடியாது எனப் பிடிவாதமாக இருந்தது சிபிஎம் அரசு. அங்கே பிரதான எதிர்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சுசி(suci) என்கிற இடதுசாரி அமைப்பு, மாவோயிஸ்டுகள் எல்லோரும் களம் இறங்கினார்கள். இதை விவாசயிகளின் பிரச்சினையாக அங்கிகரிக்க மறுத்தது சிபிஎம் அரசு.

மாவோயிஸ்டுகள், மதவாதிகள் எல்லோரும் சேர்ந்து பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள் என்றே சிபிஎம் சொல்லியது.

" "மதவாதிகள்" என புத்தா சொன்னது. ‘ஜமாத் -ஏ- இஸ்லாமி ஹிந்த்’ எனும் அமைப்பை. நந்திகிராமில் 60 சதம் மக்கள் முஸ்லீம்கள். அவர்களுடைய அமைப்புதான் 'ஜமாத்- ஏ -இஸ்லாமி அமைப்ப. இடதுசாரிக் கூட்டணியை முப்பது ஆண்டுகாலமாக ஆதரித்துவரும் அமைப்பு அது. பாதிக்கப்பட்டது முஸ்லீம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நடத்துகிற போராட்டம் மதவாதப் போராட்டமாகிறது. இப்படியான அவதூறுகள் செய்வதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட விதிவிலக்கல்ல என நிரூபித்திவிட்டார் புத்தா.

பல எழுத்தாளர்களும், இடதுசாரிகளும் இதற்கெதிராகப் போராடினார்கள். ஆனால் ஆரம்பம் முதலே கட்சிக்காரர்கள், குண்டர்கள் ஆகியோரின் துணையோடு போராடும் விவசாயிகளை எதிர்கொண்டது சி.பி.எம் அரசு. மார்ச் 14 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் கொல்லப்பட்டனர்.  இதைக் கண்டித்து சுமித் சர்க்கார் போன்ற நடுநிலையான அறிஞர்கள் மேற்குவங்க அரசு கொடுத்த விருதுகளை எல்லாம் திருப்பி அளித்தனர்.

மேலும்" வன்முறையை விதைத்தார்கள். வன்முறையை அறுவடை செய்கிறார்கள் எஎன்று நரேந்திர மோடி 'ரேஞ்சில்' திமிராகப் பதிலளித்துள்ளார் புத்தா" என அ.மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.



இப்படிப் பல பிரச்சினைகளை, குண்டர்களை வைத்து அடக்கியாண்டதாக எழுதியுள்ளார் தோழர்!அ.மார்க்ஸ்.

அத்தோடு  தோழர்!அ.மார்க்ஸ் ;
“முப்பதாண்டு கால அதிகார மமதையின் மொத்த வெளிப்பாடாகவே இன்று புத்தா (புத்த தேவ் பட்டாச்சார்யா) காட்சியளிக்கிறார். ஆள்கிற மாநிலங்களில் குண்டர்களாகவும், வன்புணர்ச்சியாளர்களாகவும் தமது அணிகள் மாறியுள்ளது குறித்து ஒரு உள் நோக்கிய சுயவிமர்சனம் சி.பி.எம் கட்சிக்குத் தேவை” என முடித்திருக்கிறார்.

இங்கு சிபிஎம் குறித்து இவ்வாறாக எழுதிய அ.மார்க்ஸை, மார்க்சிய அறிஞர் என்றோ, தீர்க்கதரிசி என்றோ  சொல்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை என்று தமுஎகச குண்டர் ஒருவர் கூறியிருக்கிறார். 




No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...