இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சிபிஐ(எம்)கட்சியானது எங்காவது எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் எனச் சுட்டி எழுதியிருக்கிறதா,
அல்லது தமுஎகச எழுதியிருக்கிறதா என்று பார்த்தால் ஆச்சரியம். சிபிஐ(எம்), தமுஎகச அவரை
திடீரென மார்க்சிய அறிஞராக கண்டுபிடித்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. இப்படி
திடீர் தீடீர் மார்க்சிய அறிஞர்களும், திடீர் தீடீர் மார்க்சிய பேரறிஞர்களும்
தமுஎகவுக்குக் கிடைப்பது வரவேற்கத்தக்கதே. நரி இடம் போனால் என்ன, வலம் போனால்
என்ன, மேல விழுந்து பிடுங்காம இருக்கிற வரைக்கும் சரிதான் என்ற பழமொழிகளை
தமிழ்ச்சமூகம் காணததல்ல.
மேலும் மார்க்சிய அறிஞர்கள் பட்டம் கொடுத்தது
போய், கொம்பன்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்தவராக எஸ்.ஏ.பெருமாளை
அடையாளப்படுத்தியிருக்கிறார் ஒரு தமுஎகச குண்டர்.(அப்படியென்றால் எஸ்.ஏ.பெருமாள்
கொம்பாதி கொம்பனாக இருக்க வேண்டும். ஆனால் அவரோ மேடையில் ஒரு கருத்தைச் சொல்லவிடாமல்,
போ போ என விரட்டியது ஏன் எனத் தெரியவில்லை) அவர் எப்படி தோழரானார் என்று அவரது பின்புலத்தை ஆய்ந்துப் பார்த்தால் தெரிகிறது. அவர் பண்ணையார்
என்று தெரிந்தது. ஊரே வணங்கும்
அரண்மனைக்காரர் குடும்பம் என்று தெரிகிறது. அந்த மனநிலை தோழரான பிறகும் நீடிப்பது
என்பது நாம் வர்க்கக் குணாம்சம் என்பதன் அடிப்படையில புரிந்துகொள்ள
வேண்டியிருக்கிறது.
எஸ்.ஏ.பெருமாள் அவர்களை, ‘புத்தகம் பேசுது’ ஒரு பேட்டி எடுத்திருக்கிறது. அசல் ‘மார்க்சியப் பேட்டி’ என்றால் அதுதான் பேட்டி. அவர் தன் பத்தாவது வயதில் தலைப்பாகை கட்டி நீதிபதியாக (நாட்டாமையாக
பரிவட்டம்) மாறியதிலிருந்து தொடங்குகிறது. (உடனே இதை பழைய பேட்டி என்று
கூறி உடனே முற்போக்கு குண்டர்கள்
ஓடிவரவேண்டாம். அவரை ஆளுமையாக வடிவமைத்த விசயமே அந்த பரிவட்டத்தில் தான் இருக்கிறது. ‘அந்த
பேட்டியையாவது’
நிதானமாகப் படித்துவிட்டு
வரலாம். தர்க்கப் பிழையோடு பேசலாம்) அவரது
வேட்டை அனுபவத்தையும், பறவைகள் மேல் அவருக்கு இருந்த அன்பைப்பற்றியும் அவர்
கூறியிருப்பது வாசகர்களின் கவனத்திற்கு.
கேள்வி; பள்ளிக்கூட வாழ்க்கை, சக நண்பர்களுடனான உறவு
பற்றி...
பதில்: ஓடத்தெரிந்த வயதிலிருந்து கையில் கவண்கல்
எடுத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிவிடுவோம். எங்க சேக்காளிகளில் நானே பெரிய
வேட்டைக்காரன். மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் பறவையை குறிவைப்பதுதான்
எனக்குப் பிடிக்கும் அப்போதெல்லாம் எங்கள் காடுகளுக்கு வந்த விதவிதமான பறவைகள்
இப்போது அருகிப்போய்விட்டன. மழைக்காலங்களில் மறவன் குளம் கண்மாய்க்கு வரும்
வண்ணமயமான பறவைகள் இன்னும் என் கண்றெப்பைகளுக்குள் சிறகடித்துக்கொண்டிருக்கின்றன
விடிய விடிய வேட்டையும், வேட்டை குறித்த உரையாடலுமாக கழியும் என் பள்ளிக்கால
வாழ்க்கை. இராஜபாளையம்,சிப்பிப்பாறை நாய்களோடு காடுகளின் ஊடே
வேட்டையாடித்திரிந்திருக்கிறேன்.
கேட்ட கேள்விக்கு,
அவர் பதிலாய் வைத்திருப்பது. நான் பெரிய வேட்டைக்காரன் என்று வேட்டைக்காரப் பெருமைப்
பட்டத்தையும், அத்தோடு சூழலியல் கவலை கொண்டு பறவைகள் அருகிப்போய்விட்டன என்கிற
சூழலலியளாளர் பட்டமுமாக ஒரே கல்லில் இரண்டு பட்டங்களை அடித்து
வீழ்த்தியிருக்கிறார்.
பின் பல்வேறு புத்தக
அனுபவங்களைக் கூறி தோழர் ஜீவாவைச்
சந்திததாக பதில் சொல்லியிருக்கிறார். உண்மையில் பேட்டியின் உயிரோட்டமுள்ள பகுதி
இதுதான். அய்யா என்றழைத்த எஸ்.எ.பெருமாளை தோழர் ஜீவா ‘அய்யாங்கக் கூடாது, தோழர் என
அழையுங்கள்’ எனச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஆனால் அந்தத் தோழனைச் சந்தித்த
எஸ்.ஏ.பெருமாள், இன்று பேச வருகிறவர்களை வாப்பா போப்பா என்று விரட்டுகிறார். நிலபிரப்புத்து
குணாம்சத்திலிருந்து தோழமை உணர்வோடு இறங்கி வர அவர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
என்றே எண்ணுகிறேன்.
அதன் பின் அவர்
தன் புத்தக வாசிப்பின் பரந்த பரப்பளவைச் சொல்லி மகிழ்கிறார்.
‘பல நாட்கள் பத்து இருபது புத்தகங்களை எடுத்துக்கொண்டு
வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து படித்து முடித்த பிறகே திரும்புவேன்.
இன்றுவரையிலும் புத்தகம் வாசிப்பதன் மீதான என்னுடைய ஆர்வம் துளியும் குறையவில்லை. புத்தகங்கள்
இன்ரி என்னால் இயங்க முடியாது’
என்று
சொல்லியிருக்கிறார். படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது.
அடுத்ததாக, பெருமாளுக்கு இடதுசாரி ஆதரவாளரான ஞானசிகாமணி
என்பவர் பவ்யமாக ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார். புத்தகத்தை வாங்கியவர் அதை படிக்கலாமா? வேண்டாமா? என ஒன்றுபட்ட
கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வி.சுந்தரத்தைப் பார்த்து
யோசனை கேட்டிருக்கிறார். புத்தகத்தைப்
பார்த்த உடனே எம்.வி.சுந்தரம் அந்தப் புத்தகத்தைப் படிக்கக்
கூடாது, அந்தப் புத்தகம் International Communist Movement ஆல் தடை செய்யப் பட்ட புத்தகம்னு சொல்லியிருக்காரு. அதையும் மீறி,
பெருமாள் எம்.வி.சுந்தரம்
பேச்சைக் கேட்காமல்,
ரகசியமா அந்த புத்தகத்தைப் படித்திருக்கிறார். இண்டர் நேஷனல் கம்யூனிஸ்ட் மூவ்மெண்டாலையே தடை செய்யப் பட்ட
புத்தகத்தை ஒரு கொம்பன்களையெல்லாம் எதிர்த்த
கொம்பனாக இருந்தாலும் ரகசியமாத்தான் படிக்கவேண்டும் என லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு விதி இருக்கிறது போலும்.
இண்டர்நேசனல்
கம்யூனிஸ்ட் இயக்கத்தாலேயே தடை செய்யப்பட்ட அந்தப் புத்தகம் என்ன புத்தகம் என்று நாம் பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்தே
போவோம். ( அந்த தடை செய்யப்பட்ட புத்தகம் எவ்வளவு பெரிய முக்கியமான புத்தகம் என தமுஎகசவின் ‘மார்க்சிய அறிஞர்’ மிகப் பெரிய
புத்தகமா எழுதியிருக்காரு. ) அதே புத்தகம் சம்பந்தப்பட்ட பெருமாளின் இன்னொரு கட்டுரையும் இருக்கிறது. அந்த
தடைசெய்யப்பட்ட புத்தகம் எவ்வளவு அற்புதமான முறைகளை கம்யூனிசத்துக்குக் கொண்டு
சேர்த்தது என தோழர் இ.எம். எஸ் வழியாக அவர் விளங்கிக்கொள்கிறார்.
ஆனால் பேட்டி எடுக்கும்
போது பெருமாளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக எம்.வி.சுந்தரம் சொன்ன நூல், (இண்டர்நேஷன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தால் தடை செய்யப்பட்ட அந்த நூல்) கட்டுரை வடிவில் எழுதுகையில்,
அது மார்க்சியத்துக்கு வளமை சேர்த்திருக்கும் விதத்தை இ.எம்.எஸ். சொன்ன விளக்கங்களைக்
கொண்டு விளக்கியிருக்கிறார் பாருங்கள். ஆஹா. வரலாற்றுத் தவறுகள் எத்தனை விதங்களில்தான் நிகழுமோ?
பெருமாளுக்கு தோழர்
பி.ராமமூர்த்தி camera reading(!) (இதுவரை நான் என் வாழ்வில் கேட்டிராத ரீடிங்காக இருக்கிறது. photo
reading ஐத்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்) பத்திச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதை பெருமாள் விளக்கும் அழகே, பெருமாளை யார்
என்று நமக்குத் தெள்ளத் தெளிவாகப் படம்
பிடித்துக் காட்டுகிறது.
அந்த கேமரா ரீடிங் என்றால் என்ன தெரியுமா? பெருமாள் சொல்றார்;
“முதலில்
வார்த்தையாகப் படிக்கணும், பிறகு வாக்கியமா படிக்கணும்,அதன் பிறகு பாரா,பாராவா
படிக்கணும், அப்புறம் பக்கம் பக்கமா
படிக்கணும்னு”
என அவர்
விளக்கியிருக்கிறார்.,
கேமாரா ரீடிங் என்கிற பெயரில் இப்டி ஒரு வாசிப்பு முறை இருந்திருக்கிறது என்பதை
நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் பொதுவாக இப்படித்தான
படிக்கிறார்கள். ஒருவேளை தோழர் ராமமூர்த்தி கவனமா படிக்கனும்னு சொன்னதை பெருமாள் தத்துவார்த்தமாக விளக்க எண்ணுகிறாரோ, என்னவோ? எது
எப்படியோ. அவர் கேமரா ரீடிங் பண்ணி படிச்ச புத்தகங்களையெல்லாம் மனக்கண்ணில்
எண்ணிப்பார்த்து எனக்கு ஆனந்தக்
கண்ணீரே வந்துவிட்டது.
மேலும் நூலில் மார்க்சிய
நோக்கு நிலையில் இருந்து, பாரதியாரை
பாராட்டுகிறேன் பேர்வழி என பெருமாள் எழுதிய குறிப்பைக் கீழே காணலாம்
“ பாரதியின் கிருதயுகம் -
இந்திய தத்துவ மரபில் கிருத, துவாபர, திரேதா, கலி என்று நான்கு
யுகங்கள் கூறப்படுகின்றன. மார்க்சியம் ஆதிப் பொதுவுடமைச் சமூகம்,அடிமைச்
சமூகம்,நிலப்புரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் ஆகியவற்றுக்கு அடுத்து
மீண்டும் பொதுவுடைமைச் சமூகம் வந்தே தீரும் என்று கூறுகிறது. இதையே வரலாற்றியல்
பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்கிறோம். பாரதி இந்திய சனாதனத்
தத்துவங்களையும், ஐரோப்பியத் தத்துவத்தையும் நன்கறிந்தவர். அவரிடம்
லோகாயதப் பார்வையும் அழுத்தமாய் இருந்தது. அதன் விளைவாகவே பாரதி தனது பாடலில் -
இடிபட்ட சுவர்போலே கலி வீழ்ந்தான்
கிருதயுகம் எழுகமாதோ”
என்று பாடுகிறார். மீண்டும் கிருதயுகத்தை எழுப்புகிறார்.
அதனால்தான் பாரதி முற்போக்காளர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கிறார்”
இதுதான் எஸ்.ஏ.பெருமாளின்
மார்க்சிய நோக்கு. இந்த நோக்கு அப்படியே அம்பேத்கரின் மீதும் பாய்ந்திருக்கிறது.
நிற்க.
சாதியப் பிரச்சினைக்குத்
தீர்வு... நூலில் ரங்கநாயகம்மா,
அம்பேத்கரின் பிறந்த நாள் குறித்து எழுதியதற்கு, ஆதவன் தீட்சண்யா அம்பேத்கரின்
பிறந்த நாளை கண்டுபிடித்திருக்கிறார் ரங்கநாயகம்மா! இதுதான் அவரது சாதனை என
நக்கலும் நையாண்டியும் வைத்தார். அம்பேத்கரே தன் பிறந்த நாளைச் சொல்லவில்லை எனக்
கொதிதெழுந்து அதை ஒரு பிழை என முன்னிருத்தி அதுகுறித்து தான் ஒரு கட்டுரையே எழுதியிருப்பதாக
கூறினார். ஆனால் வசதியாக தான் முன்னுரை எழுதிய அம்பேத்கர் டைரிக்குறிப்புகள்
நூலில் இருந்த அம்பேத்கரின் பிறந்த தேதி குறித்து எதையும் சொல்லவில்லை.
மேலும்
அம்பேத்கரின் தொகுப்பு நூல்களில் இருந்த குறிப்பையும் படிக்கவில்லை. ஆனால்
அம்பேத்கரின் தொகுப்புகள் ஏழாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது என பக்க எண்ணிக்கையை
மட்டும் முன்வைத்து தான் ஒரு அம்பேத்கரியலாளன் என்கிற சித்திரத்தைத் தரமுடிகிறது. ஏமாற்றமுடிகிறது.
ஆனால் சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொன்ன தீர்வுகள் என்ன? அவரது பொருளாதார
பார்வை என்ன ? என்ற கேள்விகளுக்கு மட்டும் அவர் எதை நக்கிப்பார்த்தாலும் விடை
வராது. ரங்கநாயகம்மா நூலைப் படிக்காமலேயே குற்றம் சொல்ல வேண்டும் என்கிற நோக்கில்
அவர் வைத்த வாதங்கள், எவ்வளவு வன்மமும், ஆபாசமும் நிறைந்தது என்பதை என்னால் அப்போதே
உணரமுடிந்தது. அவர் மூளை முழுக்க தான் மட்டுமே அம்பேத்கருக்கு அத்தாரிட்டி என்கிற மூடத்தனமான அகந்தையைத் தவிர வேறு
எதுவும் இல்லை. மணப்பதைத் தின்றாலும் வெளியே வரும் போது நரகலாகத்தானே வரும்.
எஸ்.ஏ.பெருமாள்,
அம்பேத்கரின் பிறந்த தேதியைச் சொல்லி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் தலைப்பே
‘ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள்’ என்று இருக்கிறது. ‘பீம்ராவ் அம்பேத்கர் 14.4.1891
இல் பிறந்தார்’ என வருடம் தேதி மாதம் வரைக்கும் போட்டிருக்கிறார். இதே போல் நான்
பல தவறுகளைச் சுட்டிக்காட்டிய போதும், அறிவை மறுக்கும் அகங்காரங்கமும், நக்கலும் நையாண்டியும் வெளிப்பட்டத்தைத் தவிர ஆதவனிடம்
வேறு எதுவும் நிகழவில்லை.
ஆதவனின் அவதூறை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும், தான் பிறந்த சாதியை முன்வைத்து, தான் போட்ட பிறவிப் போராளி வேசம் கலைகிறது என்ற பதட்டத்தில்
கொதித்து எழுந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்ற மிரட்டலையும் வைத்தார்.
இத்தகைய சுயசாதி மனநிலையோடு ஒருவர் அம்பேத்கரைப் படித்திருப்பாரா என்பது சந்தேகமே.
அம்பேத்கரைப் படியுங்கள் என்று நாம் சொல்வது கூட நம்மீது வன்கொடுமை தடுப்புச்
சட்டம் பாய வாய்ப்பை அளிக்கும் என நினைக்கிறேன்.
அம்பேத்கரையும்
படிப்பதில்லை, தான் சார்ந்த அமைப்பில் இருப்பவர்கள் எழுவதையும் படிப்பதில்லை.
ஆனால் அம்பேத்கருக்கு அத்தாரிட்டி அய்யா ஆதவன் தீட்சணயாதான். இதுவரை ரங்கநாயகம்மா நூல்
குறித்து... படிக்கிறேன், முழுவதுமாகப் படிப்பேன் என்பதைத்தாண்டி வேறு எதுவும்
இல்லை. (போதாக் குறைக்கு எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞர். நான் அவரைப் படிச்சிருக்கேன்,
அதனால் அவர் மார்க்சிய அறிஞர் எனச் சொல்கிறேன் என்றார், சரி என்ன படிச்சீங்க,
மார்க்சிய அறிஞராக அவர் என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்
என்று கேட்டால் பதில் வசைகளும், அவதூறுகளும், வசுமித்ரவை விஷமித்ர என்பதும், தன்
அடிப்பொடிகளையும் குண்டர்களையும் முக நூலில் ஏவிவிட்டு தாக்குவதுமே.
எஸ்.வி.இராஜதுரையோ "என்னை நான் மார்க்சிய அறிஞர்னு சொல்லலை தமுஎகச தான் அப்படிச் சொல்லுது" என்கிறார்.
சரி தமுஎகச பதில் சொல்லும் என்று திரும்பினால் சுவெங்கடேசன் அவரை மார்க்சியப் பேரறிஞர்
என கூட்டத்தை உற்சாகப்படுத்த மேடையேறிப் பேசுகிறார், உடன் இருக்கிற முற்போக்குக்
குண்டர்களோ தமுஎகச எங்க அமைப்பு நாங்கள் யாருக்கு என்ன விருது வேண்டுமானாலும்
கொடுப்போம் என்கிறார்கள். எஸ்.வி.ராஜதுரையோ அதுகுறித்து எந்த வார்த்தையும் பேசாமல்
அமைதியாக இருக்கிறார். கூட்டத்தில் ஒரு கருத்தை வைத்தால், அது அராஜகம். மரியாதை கெட்ட செயல்கள் என்கிறார்கள்.
சரி தமுஎகசவுக்கு அராஜகத்துக்கும் கலந்துரையாடலுக்கும் வித்தியாசம் தெரியாது.
கருத்தை வைப்பதே அவர்களைப் பொறுத்த மட்டில் ஆபாசம். பல கருத்தரங்குகளில்,
கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட எஸ்.வி.ஆர், அவர்கள் என்னை வெளியே போ எனச்
சொல்லுகிறபோது அதை உற்சாகப்படுத்துகிறார். தமுஎகச மாநிலச் செயலாளர், மாநிலத்
தலைவர் என அனைவரும் அமைதி காக்கின்றனர். இதுதுதான்
கருத்துச் சுதந்திர நிலைமை.
தோழர்
எஸ்.வி.ஆர் அவர்களே...
“மாற்றுக்
கருத்துக்கள் கொண்டிருப்பவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கோ, அவர்களைத் தம்
இயக்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள வைப்பதற்கோ சுயமரியாதை இயக்கத்தினர் அஞ்சத்
தேவையில்லை-நமது கருத்துக்களில் நமக்கு உறுதியான நம்பிக்கை இருக்குமானால்” எனப் பெரியார் சொன்னதை பாலகோபாலிடம் கூறி மகிழும்
நீங்கள், உங்களுக்கு மார்க்சிய அறிஞர் விருது கொடுத்த தமுஎகவுக்கும் சொல்வீர்களா? (அழுத்தம் எஎன்னுடையது)
அடுத்து பெருமாள்
தனது நூலில் அம்பேத்கரின் போதாமைகளைச்(!) சொல்லியும், அவரை வசைபாடியும்(!) எழுதியிருக்கிறார்.
வேறு வழியில்லை நாசூக்காச் சொன்னாலும் நக்கிப் பார்க்க வேண்டியதுதான் தவறில்லை.
‘அவர் (அம்பேத்கர்) உருவாக்கிய இந்தியக் குடியரசின் அரசியல்
சட்டம் பல முற்போக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும், அது முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை பாதுகாப்பதாகவே இருந்தது. அவர்களது சொத்துரிமையையும்
அது பாதுகாத்தது. எனவே அரசியல் சட்டம் இந்திய சமுதாயத்தில் சோசலிச அமைப்பை
உருவாக்காமல் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பையும், அவர்களது தனிச்சொத்துரிமைகளையும்
இன்றளவும் பாதுகாத்து வருகிறது. இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச்
சொத்துரிமை உண்டு என்றாலும் சொத்து இன்னும் கிட்டாத நிலை நீடிக்கிறது.
பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் சொந்த நிலமின்றி விவசாயக் கூலிகளாய்,
நாட்டின் பல இடங்களில் கொத்தடிமைகளாய் வதைபடுவதைக் காணமுடிகிறது”
மேலும்
தலித்துகளுக்கு உதவும் பல அமைப்புகளை பெருமாள் மிகக் கேவலமாய்! விமர்சித்திருக்கிறார்.
“இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி உள்ள பகுதிகளில்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொடுமைகள், தாக்குதல்கள் இல்லை( ஆம் மேற்கு வங்கம் இந்தியாவில்
இல்லை. சிபிஐ(எம்) பொலிட் பீரோவில் ஒரு தலித் உறுப்பினர் கூட சுத்தமாக இல்லை) அது
பெருமளவு குறைந்துள்ளது என்பதை நன்கு காணமுடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக
தாழ்த்தப்பட்ட மக்களைத் திசை திருப்பவும் அவர்களை செங்கொடி இயக்கத்தின் பின்னால்
வரவிடாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நிதி
நிறுவனங்களும், சில கிறிஸ்தவ மிஷின்களும், தன்னார்வக் குழுக்கள் மூலம் சாதி
வெறியூட்டிச் சீர்குலைத்து வருகின்றன.”
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடுவதாகப் பாசாங்கு
பிரச்சாரம் செய்து கலை நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்தி அவற்றை வீடியோ
படமெடுத்து அனுப்பிப் பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இவற்றால் சில
பேர் வசதி படைத்தவர்களாக முடியுமே தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும்
கிடைக்கப் போவதில்லை.”
அடையாள அரசியல்
குறித்து பெருமாள் மிகச் சரியாகவே இனம்கண்டு உரைத்திருக்கிறார். ஆனால், இது அவதூறு! என்றோ, அம்பேத்கருக்குச் செறுப்பு மாலை போட்டிருக்கிறது என்றோ ஆதவன் உட்பட தமுஎகச மற்றும்
அவரது அடிப்பொடி குண்டர்கள் கூறிக் கைதட்டி நகைப்பார்களா? மேலும், அருணன் சுட்டிய
அ.மார்க்ஸ் வகையறாக்கள், தோதாத்ரி சுட்டிய எஸ்.வி,ஆர் வகையறாக்கள் இங்கு நினைவுக்கு வந்தால் ஒன்றும் செய்யமுடியாது.
மேலும்று, அ.மார்க்ஸ் அவர்களும் அம்பேத்கருக்கு செறுப்பு மாலை போட்டிருக்கிறார்.
அதுவும் மதவாத செறுப்பு மாலையைப் போட்டிருக்கிறார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில்
பார்ப்பன மேலாதிக்கமே இருக்கிறது என்ற கருத்தை வைத்து போட்ட செறுப்பு மாலைகள்:
‘மதம் மக்களின்
அபின்’ - என்கிறது மார்க்சியம். கபீர், புத்தர் ஆகியோரது மதரீதியிலான சிந்தனைகள்
மீது சிறுவயதுமுதல் இறுதிவரை நாட்டங் கொண்டிருந்த அம்பேத்கர, மதம் பற்றிய மார்க்சியக்
கருத்தாக்கத்தை வெளிப்படையாகக் கண்டித்தார். புத்த மதத்துடன் மார்க்சியத்தை ஒப்பிட்டு
மார்க்சியத்தை மார்க்சியத்துக்கு சரியான மாற்று புத்தமதம் என்றார். ரஷ்யாவில்
வறுமையை ஒழிக்கமுடியவில்லையே என்றார். தன்னால் இந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை
விளைந்தது என்றால் தன்னிடமிருந்த மத உணர்வே அதற்குக் காரணம் என்றார். வெறும்
சோற்றுப் பிண்டமாக மட்டுமே மனிதன் வாழ்ந்துவிடமுடியாது என்ற அம்பேத்கர் மனிதனுக்கு
மத நம்பிக்கை அவசியம் என்றார். பகவத் கீதையைக் கூட அவர் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டார்.
முஸ்லீம் மதத்தைக் காட்டிலும் புத்த மதத்தை ஏற்ருக்கொண்டதற்கு அது ஒரு பாரதீய மதம்
என்று காரணங்காட்டினார். சீக்கிய மதம் கூட பரவாயில்லை, ஏனெனில் அது இந்துப்
பண்பாட்டிற்கு உட்பட்டது என்றார். மதமாற்றத்தின் மூலம் முஸ்லீம்களின் எண்ணிக்கை
பெருகிவிடலாகாது என்றார். மதமாற்றம் நாட்டிற்கு தீங்கிழைக்காத வகையில் அமைய வேண்டும்
என்றார். இசுலாமியர்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு நாட்டு ஒற்றுமைக்குப்
பாடுபட அறிவுரை வழங்கினார் “இந்து - முஸ்லீம் ஒற்றுமை சாத்தியமில்லை:
முஸ்லீம்களுக்கு தேசப்பற்று கிடையாது. ஒரே நாடாக இருந்தால் இந்துக்கள் முஸ்லீம் தயவில்தான்
வாழவேண்டும்” என்று கூறித்தான் பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினையைக் கூட ஆதரித்தார்.
தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமைகளுக்கு ஆதாரமாக உள்ள இந்து சனாதனத்தைத்
தோலுரித்ததில் கூர்த்த அறிவுடைமையைக் காட்டிய அம்பேத்கர் முஸ்லீம் மதம் மற்றும்
நாட்டுப் ப்ரிவினை குறித்த அணுகல்முறை ஆகியவற்றில் முரண் கொண்ட பார்வை
கொண்டிருந்தது புலப்படும்.....” (அழுத்தம் என்னுடையது)
இது அ.மார்க்ஸ் அம்பேத்கரிடம் கண்ட முரண்கள் மேலும் அந்த முரண்களை அ.மார்க்ஸ் மட்டுமே சரியாக விளக்கமுடியும். வேறு யாராலும் அதை விளக்கமுடியாது. ஏனென்றால் அவர் மட்டுமே பின்நவீனத்துவவாதி.
மேலும் மதத்தை அபின் என மார்க்சியம் கூறுகிறது, அதற்கு எதிராக அம்பேத்கர் முரணாகச்
சிந்தித்திருக்கிறார் எனச் சொன்ன அ.மார்க்ஸ், புத்தம் சரணம் எழுதும் போது அதன்
முன்னுரையில் ‘.....கார்ல் மார்க்ஸ் சொன்னது போல இந்தத் துன்பம் நிறைந்த உலகில்
மக்களுக்கு ஒரு மதம் தேவைப்படுகிறது. சொல்லி அழ, வேண்டிக்கேட்க ஒரு இறைவன்
தேவைப்படுகிறான். இதன் விளைவாக உருப்பெற்றதே மஹாயன நெறி..’ என பல முரணான
கருத்துக்களை வைத்துள்ளர்.
எப்பொழுது
எந்தப் பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டுமோ அப்போதெல்லாம் அந்த பாடத்திட்டத்தின்
கீழாக எழுதும் தன்மையை மட்டுமே மையமாக வைத்து இயங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ். இதுதான்
இவர்களது நடைமுறைவாதம். அதிலும் இவர்கள் மட்டுமே திறந்த மனதோடு ஒரு பிரதியை
அணுகுவதாகவும், மற்றவர்கள் காழ்ப்புணர்ச்சி, வன்மம் இத்யாதிகளோடு இயங்குகிறார்கள்
எனவும் சொல்ல வைக்கிறது. அதற்கு காரணம் அந்த நடைமுறை வாதத்தின் உளவில் கூறுகளே.
தோழர்களே, எஸ்.ஏ.பெருமாளை
ரசிக்கவைத்து சிரிப்பூட்டிய கவிதையை முன்வைத்து முடிக்கிறேன்.
‘பாகவதரின்
பாட்டைவிடக்
கொசுவின் பாட்டுப்
பிரமாதம்
ஏனென்றால்
பாகவதரின்
பாட்டுக்குக்
கைதட்டாதவர்கள்
கூட
கொசுவின் பாட்டுக்குக்
கைதட்டுகிறார்கள்.’
வசுமித்ரவை
கொசுமித்ராவாக, குசுமித்ராவாக.... இன்னும் பல அறிவார்ந்த பட்டப்பெயர்களை எழுதிய
தோழர்களுக்கு நன்றிகள், அதற்கு விருப்பக் குறியிட்டு அவரை உற்சாகப்படுத்திய தமுஎகச
குண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாற்றுப் பெயர்களில் உள்ள அரசியலையும் உணர்கிறேன். தமுஎகச குண்டர்களுக்கு குசுவோ பீயோ வராது போல. அந்த வார்த்தைகளைக் கண்டு ஏன் இவ்வளவு அறுவெறுப்பான முகச்சுருக்கம் விழுகிறது எனத் தெரியவில்லை. ஆனால் குசுவோ மலமோ வராமல் இருந்தால் அவர்கள் முகம் எப்படிச் சுருங்கும் என நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
எனக்கு வழங்கிய பெயர்களைப் படித்து நான் சிரித்துக்கொள்கிறேன்.
ஆனால் எஸ்.வி.ஆருக்கு மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்ததைப் பார்த்து ஊரே
சிரிக்கிறது என்பதையும் சொல்லிக்கொண்டு முடிக்கிறேன்.
ஒட்டுமொத்தமாக
தமுஎகச குண்டர்களின் அணுகுமுறையில் நான் வியந்து பார்ப்பது, அவதூறுகளை முன்வைத்து அவர்கள் பேசுவதும்.
அதை ஆதாரத்தோடு எடுத்துப் போட்டால் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், உகாண்டாவிலேம், எத்தியோப்பியாவிலே, பாசிசத்திலே, மோடி என்ன சொன்னார் தெரியுமா.... என மூட்டையக் கட்டிக்கொண்டு வேறு திசை நோக்கி நகர்வதும்தான்.
அன்பானவர்களே...நான் வைத்த கருத்தும், கேள்வியும் இதுதான்
எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞரா?
இந்தக் கேள்விக்கு சிபிஐ(எம்), தமுஎகச தரப்பிலிருந்து அறிவார்ந்த பதில் ஏதுவும்
வரவில்லை என்பதை கவனப்படுத்துகிறேன்.
* தமிழகத்தின் முக்கிய மார்க்சிய அறிஞர் எனச்சொன்னது நானில்லை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment